https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 12 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 211 * சகுணப்பல்லிக்கு அருகில் *

ஶ்ரீ:




பதிவு : 211 / 291 /  தேதி :- 12 அக்டோபர்    2017


சகுணப்பல்லிக்கு அருகில்  *



தனியாளுமைகள் - 37”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-12

ஒரு சந்தர்ப்பத்தில் தலைவர் என்னிடம் “மாணவர் தேர்தலில் நாம் இப்பொது ஈடுபடுவதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்” என்றார். நான் எனது அபிப்ராயத்தை சொல்லி “அரை டவுசர் பையனகளின் அரசியல்”  என்றேன் . தலைவர் வெடி சிரிப்பாக தான் ஆமோதிப்பதை வெளிப்படுத்தினார் . ரஹ்மான் பரிதாபநிலைக்கு வந்துவிட்டான் . நான் தலைவரிடம், கல்லூரி தேர்தலில்கூட பணியாற்ற வேண்டாம் என சொல்லிவிட்டால் பின் வேறு எங்குதான் அவர் தனது களத்தை கண்டடைவது என்றேன்.






இளைஞர் இயகத்தில் , தலைமையின் வழிகாட்டுதல் என இல்லாமல், தெளிவின்மையால் ஒரு தேக்க நிலையில் இருந்துகொண்டிருந்தது . அமைப்பின் பணி என யாருக்கும் எதையும் முன்வைக்க முடியாமை , தெரியாமை அல்லது விரும்பாமை ஓரு காரணமென்று இருக்கலாம் .களப்பணியை அவர்கள் இதுவரை செய்து பழக்கமில்லாதவர்கள் . அல்லது அது அவசியமற்றது என்கிற உளப்பதிவில் இருந்திருக்கலாம் . நுண்மைக்கோரும் அரசியலதிகாரத்தை குடிமைச் சமுகத்திலிருந்த பெறுவது பற்றியோ அல்லது அதன் முறைமைகளைப் பற்றியோ அவர்கள் தெரிந்துகொண்டிருப்பதாக நான் அறியவில்லை, ஆனால் அதை எவ்விதம் எதிர்மறையாக கையாண்டால் பலன்கள் தங்களைத் தேடிவந்தடையும் என்பதை எங்களைவிட அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள்  . அதிகாரத்திற்கு வருபவர்கள் எவரும் அதை செய்ய வந்தவர்களே . 

குடிமை சமூகத்திலிருந்து எனக்கான அரசியல் விழைவுள்ளவர்களை அடையாளம் காண்பதும் அவர்களை செயல்பாட்டு தளத்திற்கு அழைத்து வருவதும் எனது முதன்மை வழியாக இருந்தது. அதற்கு என்னுடைய நிரவாகத் தலமையை அவர்களிடம் தெளிவாக வெளிப்படித்தான் அதை செய்ய இயலும் . அங்கு நிர்வாகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தலமை இருப்பதாக காட்ட இயலாது. அது அவர்களை குழப்பவே செய்யும் . அதை செய்வதற்கு தனித்த அடையாளங்கள் இன்றியமையாதவைகள். ஆனால் அதை நான் முன்னெடுப்பதில் தங்களுக்கு மாற்றுக்கருத்திருப்பதாக ஒரு தோற்றத்தை அவர்கள்  ஏற்படுத்தும்போது . எனக்கு அவர்கள்  மாற்று தரப்பாகிறார்கள் . அவர்கள் எந்த கருத்தியலும் இல்லாதவர்கள் .

அதிகார அமைப்பிற்கு முரண்பாடுள்ளவர்களாக அவர்கள் தெரிவதால் . நான் செயல்படும் களத்திலிருந்து எழுந்துவரும்எனது அசலான எதிர்ப்புகள் , என் செயல்பாட்டை தடுக்க நிர்வாகிகளுக்குள் நிலவும் பூசலை அறிந்து கொண்டு அவர்கள் அனைவரும் நிர்வாக எதிர்நிலைகளை நாடுவதால், அவர்களுக்கு களப்பணி என ஒன்று தேவைப்படுவதில்லை . நான் பலம்பெற களத்தில் என் கருத்துக்களுக்கு ஒத்திசைவுள்ளவர்களை தேடி செல்லும் போது , எதிர் விசையுள்ளவர்கள் இங்கு ஒரே அணியாக திரண்டுவிடுகிறார்கள். அது எப்போதும் பலம்பெற்றதாக இருந்து கொண்டுயிருப்பது . 

பாலன் தலைவராக இருந்தவரை இப்படிப்பட்ட ஒரு குறுங்குழு வலுவாக எழவேயில்லை . அவர்கள் வைத்திலிங்கம் அதிகாரத்திற்கு வந்தபோதுதான் புது பரிமாணத்தை அடைந்தார்கள் . அது அப்போதும் மரைக்காயர் தரப்பாக இருந்துகொண்டிருந்தது . அவர் அனைத்தின் குரலாக இருந்தார் . 1991 தேர்தல் அதுவரை இருந்துவந்த சமன்பாட்டை குலைத்திருந்தது. அதிகாரத்திற்கு வந்த வைத்திலிங்கம் அதை சரியாக கையாலாததால் பாலன் தலைமையில் அது சிதைந்து போனதுடன் அவர் கட்சியிலிருந்தே வெளியேறும் சூழலை ஏற்படுத்திவிட்டது . பாலனுக்கு பிறகு அந்த விளையாட்டில் மிச்சப்பட்டவர்கள் கட்சி அமைப்பிற்குள் வந்துவிட்டார்கள் .

நான்தான் எனக்கென எந்த திட்டமும் இன்றி உள்நுழைந்தேன் , ஊழ் என்னை அவர்களுக்கு எதிரில் கொண்டு நிறுத்தியது . அது தற்செயலானது . பாலன் தொடங்கி பின் விடுபட்ட பூசல் இங்கும் வந்தும் தொடரும்படியாகிவிட்டது . அவர்கள் என்னை நன்கு அறிந்திருப்பதால் . எனக்கு எதிர்நிற்பதால் நான் எனது செயப்பாடுகளினாலோ . மூர்க்கமான எதிர்ப்பினாலோ அவர்கள் வளரும் வாய்ப்பை தருவேன் என எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் . எனது நிலை என்ன என்பதை வல்சராஜ் தெளிவுபடுத்தாத்தால் , நான் செயல்படாது என்னை முடக்கிக் கொண்டேன். இளைஞர் காங்கிரஸ் செயல்பாடுகள் ஸ்தம்பித்திருந்த நேரம் , அடுத்தது என்ன என்ன என்கிற ஒரு திட்டமும்மின்றி காலம் போய்க்கொண்டிருந்தது . அப்போது எதர்பாராது நிகழ்ந்த எனது பால் விலை உயர்வு போராட்டம் அனைத்தையும் மாற்றி அமைத்ததுவிட்டது .  அரசியலில் பல விஷயங்கள் தற்செயலாகவே நடந்து நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டு செல்கின்றன, அதைப்போல ஒன்றுதான் நான் தற்செயலாக எனக்கு விருப்பமில்லாத ஒரு விஷயத்தை ரஹ்மானுக்கு ஆதரவாக பேசப்போக அதில் நானே ஈடுபடும்படியாகிவிட்டது . அதன் தொடர்ச்சியாக எனக்கு கிடைத்த வாய்ப்பே அந்த பால் விலை உயர்வு எதிப்பு போராட்டம் 

பரிதாபகரமான நிலைக்கு வந்த ரஹமானை காப்பாற்ற நான் பேசியது என்னை அந்த கல்லூரித் தேதலில் ஈடுபடும்படியாக கொண்டு விட்டது . தலைவர் தனக்குள்ள அரசியல் நெருக்கடி வேறு பரிமாணம் எடுத்துவிட போகின்றது என கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் . அரசியல்ல வண்முறையை சட்டரீதியாக எதிர்கொள்வதைப் போல 

சோர்வடையச் செய்வது ஒன்று பிறிதில்லை . ஊசுடு பங்கூர் மற்றும் கிருமாம்பாக்க கலவரம் அதை குருவிநத்தத்தில் நிகழ்ந்த படுகொலை போன்றவை , பெரிய சட்டப்போராட்டமாக உருவெடுத்திருந்தது . அந்த காலகட்டத்தில் . அதில் சம்பந்தப்பட்ட பொதுஜனம் மற்றும் அப்பாவி கட்சிக்காரர்கள் . அடுத்தடுத்து நிகழும் சிக்கல்களால் மனது குழைத்துப்போயிருந்தனர் . உள ரீதியாக அவர்கள் பாதிக்கப்படும்போது முன்னாள் mla அனைவரயும் தலைவரை பார்த்து முறையிட அழைத்து வந்துவிட்டால் ,அன்றைய பொழுது அனைவருக்கும் உணர்ச்சிப்பெருக்கை தாண்டி கொதிநிலைக்கும் சிலசமயம் போய்விடுவதுண்டு . வெறும் வாய்சமதங்கள் ஒரு கட்டத்திற்கு மேலே எடுபடுவதில்லை . 

தலைவர் மாணவர் தேர்தல் அதைப்போல ஒன்றை கொண்டுவந்துவிடப்போகிறது என அஞ்சுகிறார்நானோ ரஹமானோ தலைவருக்கு மிக அணுக்கமாக இருப்பவர்கள் , சிக்கல் எங்களை மையங்கொண்டால் அது பெரிய அரசியல் அநர்தத்தில் கொண்டுவிடும்.ரஹமானின் சிறுபிள்ளைவிளையாட்டை கண்டு தலைவர் பெரிதும் அஞ்சுகிறார் . அவன் ஒருவித சகுணத்தடையை  உணரச் செய்யும்  பல்லிப்  போல சூழ்நிலையையோ நேரத்தையோ அறியாது குறுக்கே பாய்பவன் . எப்பவும் அவர் நாற்காலியில் ஒரு அங்கம்போல அமர்ந்திருப்பவனாக தலைவர் கருதுகிறார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசுகூடுகை 76 அழைப்பிதழ்