https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 25 அக்டோபர், 2017

புரிதலின் விழைவு

ஶ்ரீ:


பதிவு / 303 தேதி - 24-10-2017


சரிநிலைகள் பற்றிய புரிதல்கள்



"ஒருபோதும் தொடர்ச்சியான, தர்க்கபூர்வமான ஒரு கோட்பாட்டை அல்லது நிலைப்பாட்டை உருவாக்க முயலக்கூடாது. எந்நிலையிலும் எந்த முத்திரைக்கும் அஞ்சி எல்லாரும் சொல்லும் அரசியல்சரிகளைச் சொல்பவனாக ஆகிவிடக்கூடாது. புறக்கணிப்போ வசையோ எதுவானாலும் அதுவும் ஒரு இயல்பான விளைவே என ஏற்றுக்கொள்ளவேண்டும். மனசாட்சியின் குரலாக, ஒரு வெறும் சாட்சியின் தரப்பாக மட்டுமே என் அரசியல் ஒலிக்க வேண்டும். அது முரண்பாடுகள் கொண்டதாக, வெறும் மனப்பதிவாக, சல்லிசாக இருந்தாலும் பரவாயில்லை. அப்படி ஒரு குரலுக்கு கோட்பாட்டாளர்களுடன் விவாதிக்கும் திராணி இருக்காது. அதற்கு கொள்கைகளின் சாராம்சமும் இருக்காது. ஆனால் அதற்கு ஒரு பங்களிப்பு உண்டு. கோட்பாட்டாளர்கள் விளக்காத பலவற்றை அது எளிமையாகச் சொல்லிவிட முடியும். அந்தக் குரலுடன் பலசமயம் எளிய வாசகர்கள் அடையாளம் கண்டுகொள்ளக்கூடும். பலசமயம் அது எவருமே சொல்லாமல் விட்டுவிட்ட சிலவற்றைச் சொல்லக்கூடும். அதன் விமரிசனத்துக்கு ஆளாகும் எல்லா தரப்பும் அதை எதிர்க்கும். முத்திரை குத்தும். அவதூறு செய்யும். ஏளனம் செய்யும் அதுவே அன்றாட அரசியலின் வழி. ஆனாலும் அது ஒலித்துக் கொண்டேதான் இருக்கும், காரணம் அதற்கு வேறு வழி இல்லை." திரு. ஜெயமோகன் அவர்களின் "சாட்சி மொழி : சில அரசியல் குறிப்புகள்


அரசியல்சரி நிலை பற்றிய ஒரு சாமனயனின் யதார்த்த பார்வையை முன் வைக்கிறது . அனைத்து புரிதலுமே நம்மை ஒரு திடுக்கிடலில் இருந்து விலக்கும் பொருட்டே . நாம் செய்யும் அனைத்தும் , பிறிதொருவரிடமிருந்து என்பதை விட நம்மிடமிருந்து நம்மை என்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...