https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 20 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 218 * பிரமாண்டத்தின் நுட்பம் *

ஶ்ரீ:




பதிவு : 218 /  298 / தேதி :- 19 அக்டோபர்    2017


*   பிரமாண்டத்தின் நுட்பம்   *




வாய்ப்புகளில் புரியாமை - 04 ”
கருதுகோளின் கோட்டோவியம் -01


மாணவர்களுக்கும் பால் விலை உயர்விற்கும் ஏதாவது தொடர்புள்ளதா   . நீ எப்போதுதான் இதுபோல சம்பந்தமில்லாது  பேசுவதை நிறுத்தப்போகிறாய் எனத்தெரியவில்லை என கடிந்து  கொண்டார்  . சட்டென என்னை நோக்கி ஏன் இவர் போராடட்டும் இளைஞர் காங்கிரஸ் தூங்கிக்கொண்டிருக்கிறது என பத்திரிகைகள் கிண்டல் செய்வது அவருக்கு தெரியாததா என்றார் . எனக்கு திக்கென்றது . கடைசியில் வழமைபோலஎன்னை இழுத்து  இதில் விட்டான். ஊழ் தனது களத்திற்கு காய்களை தெறிவு செய்ய துவங்கிவிட்டது என அப்போது நான் அறிந்திருக்கவில்லை.




நம்பிக்கை மனம் சார்ந்தது ,அது சிறுவயதில் பிறிதொருவர்  சொல்லிச் சொல்லி ஊட்டி   உருவாகிவருவது . புத்தி தர்க்கத்தினால் ஆனது அனைத்தையும் முயற்சித்து முயற்சித்து  பின்னாளில் அறிபவைகளிலிருந்தும் அடையும் திறப்புகளினாலும்  ஸ்வமுயற்சியால் புரிதலாக எழுந்து வருபவை அதனால் , அது நம்பிக்கையை சார்ந்த தொள்மனதை சிதைக்க எப்போதும் அத்துடன் மோதியபடி இருக்கும் . மனதிற்கும் புத்திக்குமான தருக்கத்தில் பிறிதொன்று இரண்டுக்குமான சமாதானங்களை சொல்லி எப்போது நிகர்நிலை பேணும் . நம்பிக்கை வெற்றிபெறும் தோரும் , தர்க்கம் தனக்கான நேரத்திறகு காத்திருப்பது . அந்த தர்க்க புத்தியை சரியான கோட்பாட்டில் நிறுத்தி  நம்பிக்கையை வெல்லாதுபோனால் இரண்டும் அழிந்தநிலை நம்மை பேதலிக்க செய்வது . 

தலைவருக்கு இளைஞர் காங்கிரசில் நடைபெறும்  உள்சிக்கல் வல்சராஜின் அனுகுமுறையால் உருவாகி வருகிறது என்பது , பெரும்பாலும் தெரிந்திருக்க வாயப்பு குறைவு . நான் அவற்றை பொதுவெளியில் கொண்டுவர விரும்பவில்லை . இத்தகைய சூழலில் ,கூடுகைக்கோ போராட்டத்திற்கோ சட்டெனெ ஒருவரை தலைமைதாங்க சொல்லிவிட முடியாது என அவருக்கு தெரியும் . மேலும் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு போராட்டம் என வருகின்ற போது அதை இப்படி மாற்றி என்னிடம் கையளிப்பாரென நான் எண்ணியிருக்கவில்லை . அது நான் சற்றும் அறியாத தருணத்தில் எல்லாம் சட்டென ஒருங்கிவிட்டன . 

நான் தலைவரிடம் இயக்கத்தின் உள்குழுப்பத்தை சொன்னால் சரியாக வராது . அதை எனது போதாமையகவே எடுத்துக்கொள்வார் . மேலும் அது குறிப்பிட்ட சிலரின் தவறுகளை சொல்லாது அதை நிரூவ முடியாது . நான் அவர்களிடம் குறைகாண்பதை சொல்லியாக வேண்டும் . யாரையும் யாரிடமும் குறை சொல்லி பேசுவதென்பது என் வழமையல்ல . அது திறமையற்றவனின் ஆடும் களம் . தலைவரை எனக்கு அணுக்கமாக வைத்து அதை சொல்லப்போனால் நான் அவர்களை அஞ்சுகிறேன் என்கிற பிழை புரிதலுக்கு அது கொண்டு செல்லும் . ஆகவே அமைப்பு ரீதியாக வல்சராஜ் அமைத்துள்ள ஏற்பாடுகளை சொல்லி சிறுதுகாலத்தில் அது தயாரானதும் ஏதாவது செய்யலாம் இப்போதைக்கு அது அசாத்தியமில்லாதது என்றேன் . 

அவர் என்னிடம் “நடப்பது ஏதும் எனக்கு தெரியாது என்று நினைக்கிறாயா” என்றார் . இனி பேசுவது ஆபத்து . நான் அமைதியானேன் . “வல்சராஜ் என்ன செய்வார் என எனக்குத்தெரியும் . நீ இதற்கான ஏற்பாடுகளைச் செய்” என்றார் . நான் தலைவரிடம் போராட்டத்திற்கான திரளை இணைப்பதில் உள்ள நடைமுறை சிக்கலை சொன்னேன் . அவர் சமாதானமாகி “பெரிய அளவிலெல்லாம் தேவையில்லை ஒரு நூறு பேர் கூட்டு மற்றதை பிறகு பார்க்கலாம் , இது நமது எதிர்ப்பு அவ்வளவு மட்டுமே” என்றார்.

ரஹ்மான் முகம் கருத்துப் போனான் . இருந்தும் வெளிகாட்டிக்கொள்ளாமல் எனக்கு வாழ்த்து சொல்லி எழுந்து சென்றான் . நான் எனது அணுக்கர்களை அழைத்து தலைவர் சொன்னதை சொல்லி ஆகவேண்டுயதை ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டு . வல்ராஜை தொடர்பு கொண்டேன் . தலைவரின் முதுவை அவருடன் சொன்னதும் . சிறப்பாக நடத்தச்சொல்லி வாழ்த்தினார்.

போராட்டம் நிகழ்ததுவதில் அப்போதைய எனது சிக்கலே காங்கிரஸ் நடத்தும் போராட்ட முறைமைகளில் உள்ள பிரம்மாண்டமான முன்னெடுப்புக்கள்  . ஆட்சியில் இருந்த அமைப்பென்பதால் கம்யூனிஸ்ட் கட்சிகளைப்போல தொட்டதற்கெல்லாம் காங்கிரசின் தலைமை போராடி கொண்டிருப்பதில்லை . அது எதிர் கொள்ளும்  அரசியல் மற்றும் மொது சமூகம் சம்பந்தப்பட்ட சிக்கல்களை சரி செய்து கொள்ள துணைநிலை ஆளுனர் ,மத்திய உள்துறை அமைச்சகம் போன்றவைகள் நல்ல தொடர்பில் இருப்பது ஒரு காரணம். போராட்டங்களின் வழியாக அமைப்பை ஒருங்குவது மற்றும் பங்கெடுக்க வைப்பதன் வழியாக தொடர்புறுத்தும் திறன் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ள திறமை எங்களுக்கு இல்லை . அத்தகைய அனுபவங்களைப் பெறும் வாய்பபை கொண்ட அமைப்பல்ல இது . 

காங்கிரஸ் இயக்கம் போராடும் வாய்ப்பை அடையும்போது அது யானை நகர்வதுபோல எதையும் மிக பிரம்மாண்டமாக செய்து பழகிவிட்டது . அதனுடைய அத்தனை நிகழ்வுகளும் மிகவும் செலவேறியவை . அனைத்து தொகுதிகளின் கூட்டமைப்பின் கூட்டம் இத்தியாதிகளென போட்டு காய்த்துவிடுவார்கள் . எப்பாவாவது அது கூட்டும் மிக பிரம்மாண்டமான திரள், அன&வருக்கும் தெளிவாக சில செய்திகளை சொல்லிவிடும். அதன் பிறகு அது எதிர்த்த எந்த கட்சியும் நீண்டநாள் ஆண்டதில்லை என்பது புதுவையின் வரலாறு.

காட்டையே உண்ணனும் திறனுள்ள யானையால் மலரின் தேனை அறிந்து  நுகர முடியாது என சொல்வதுண்டு.  இயற்கையின் பிரம்மாண்டங்களின் நுட்பங்களை  பற்றிய பிழைப்புரிதலிது . கால்களை பரப்பி செவி அசைக்காது மிக நுட்பமாக தொட்ச்சிணுங்கியின் பூவை மட்டும் மிக லாவகமாக பறித்து  தன் கடைவாயில் வைத்து ரசித்து உண்ணுவதைப் பற்றி தன் கட்டுரையில் திரு.ஜெயமோகன் சொன்னதை நினைவுறுகிறேன் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...