https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 2 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 202 * எப்போதாவது பின்னால் *

ஶ்ரீ:




பதிவு : 202 /  281 / தேதி :- 02 அக்டோபர்    2017


* எப்போதாவது பின்னால்  *



தனியாளுமைகள் - 28 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-07


கட்சி அரசியலென்பது என்பது இதற்கு நேர் எதிர்மறையானது . அதன் துவக்கமே பிறிதொருவரின் மீதுள்ள வெறுப்பு அல்லது காழ்ப்பில் துவங்குவது . அதை எதிர்கொள்ளும் அமைப்பாக அதை விருப்பு வெறுப்பு கொண்ட இரட்டை விளிம்புகளில் நிற்கும் திரளாக அவர்களை  பேணுவது இன்றியமையாதது . ஆகவே வெறுப்பில் துவங்கும் இது ,அந்த ஒத்த கருத்துடைய குறுங்குழுவால் இயக்கப்படுவது . பின்னர் கோஷ்டிகளாக அவை கிளைப்பதை தவிற இயலாது. அதன் உயிர் மூச்சே அந்த ஒற்றைபடை எண்ணங்கொண்ட  குறுங்குழுவை போராட்டகளச் செயல்பாடுடையதாக வளர்த்தெடுப்பதே





“உள்நிகழ்வுகளை, உச்சகட்ட தளங்களை அறியும் வாய்ப்புள்ள ஒருவன் காணும் அரசியலே வேறு. அந்த அரசியலை அவன் எழுத ஆரம்பித்தால் அதை நிரூபிப்பதற்கே வாழ்நாள் முழுக்க பாடுபடவேண்டும். அதனால் எந்தப் பயனும் இல்லை. அந்த தரிசனத்தை அவன் தன் வரலாற்றுப்பார்வையாக ஆக்கிக்கொண்டான் என்றால் அதுவே அவனுக்கு வலுவான ஆயுதமாகும். அவ்வளவுதான் செய்ய முடியும்” என்கிறார் திரு.ஜெயமோகன் தனது தேர்ந்த அரசியல் புரிதலை  “சாட்சி மொழி” கட்டுரைத் தொகுப்பொன்றில். இது யதார்த்த சத்தியம் என்பதை எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன் .

இந்தப்பதிவு மூலமாக நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க விழையவில்லை என்றாலும்  , அரசியலில் பல பரிமாணங்கள் உள்ளதை அறிந்திருந்தேன் , அவற்றை நுணுகி ஆராய்ந்து பிற மனித மனதுடன் நமது மனம் எவ்வாறு நம்மையும் அறியாது உரையாடி சில முடிவுகளை எடுக்க வைக்கிறது என்பதை அவதானிக்கும வாய்ப்பாக அதை பார்க்கிறேன்  . அரசியலின் உட்கூறுகள் வெறும் தலைவர் தொண்டர் என்கிற ஒற்றைப்படை அமைப்பை அது கொண்டதல்ல . கொந்தளிக்கும் சமூகம் போன்ற அணுசரணையில்லாத திரள் ஒன்றைக் கட்டி மேய்ப்பது.

அமைப்பு ரீதியாக எதையும் செய்வதை தலைவர் கைவிட்டு பல காலமாகியிருந்தது  . இளைஞர் அமைப்பை கண்ணன் , பாலனிடமிருந்து தலைவரால் வென்றடுக்க முடியவில்லை . அதற்கு தலைமுறை இடைவெளி மட்டுமல்ல காரணம் . அவரது அணுகுமுறையும் பேசும் முறைமைகளும் இளைஞர்களை ஈர்ப்பதாக இருந்ததில்லை என்பதும் பிறிதொரு காரணம் . 

யாதார்த்த வாதத்திற்கு எதிரான இளைஞர்கள் கனவுலகில் வாழ்பவர்கள் , லட்சியமும் ஊக்கமும் சூழ புது முயற்சிகளில் முயங்குபவர்கள் அதற்கு ஒத்திசையும் தலமையைதான் நெருங்குவார்கள் . அரசியல் நிகழுலகத்தின் விழுமியங்கள் வேறுவகையானவைகள் . லட்சிய , ஒழுக்க நெறிகளுக்கு எதிர்நிலையில் உள்ளவை , அரசியலில் ஈடுபடும் ஒருவர் அதை உணருவும் ஒரு கணம் அவரது வாழ்வில் நிகழ்ந்தே தீரும் .அப்போது எவரும் அடைவது திடுக்கிடலும் அதைத்தொடர்ந்து அது ஏற்படுத்தும் தன்னைப்பற்றிய கசப்பையும் உணர்வும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையின்மையையும்தான் .

புதுவையின் அரசியல்  திராவிட கலாச்சாரத்தின்  சீரழிவிலிருந்து தப்பிக்கவில்லை. தமிழக அளவில் இல்லாது போனாலும் ,  அதன் தாக்கம் எல்லா அமைப்பிலும் உணரப்பட்டது .தலைவர் சண்முகத்தின் காலத்திற்கு முன் பின் என பிரித்துக்கொள்ளலாம் . எங்களைப் போன்ற சிலர் அவரது அரசியலின் பிற்பகுதியில் வந்து சேர்ந்தவர்கள் . திராவிட கலாச்சார அரசியல் வேறூன்றி இருந்த காலத்தில் அதற்கு எதிர்நிலையில் அரசியலை வென்றெடுக்க முயற்சித்வர்கள்.

“அப்படியானால் திராவிட இயக்கத்தை ஓர் எதிர்மறைச் சக்தியாக, அழிவு சக்தியாகக் கருதுகிறேனா? இல்லை. அது ஒரு வரலாற்று நிகழ்வு. அதன் காரணத்தையும் விளைவுகளையும் புரிந்துகொள்ள முயல்கிறேன். திராவிட இயக்கம் எனது பார்வையில் ஒரு ‘பரப்பிய’ இயக்கம் (Populist movement) பரப்பியம் என்ற சொல் ஒரு மார்க்சிய கலைச்சொல். அதற்குப் பொருள் ‘ஆழமான கொள்கையும், சமூகத்தைப் புரிந்து கொள்ளும் கோட்பாட்டு முறையும் இல்லாமல் சமூகத்தைப் புரிந்து கொள்ளும் கோட்பாட்டு முறையும் இல்லாமல் சமூகத்தில் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகளைப் பயன்படுத்திக் கொண்டு அரசியலதிகாரத்தைப் பிடிக்க முயலும் இயக்கம்’ என்பதாகும். திராவிட இயக்கத்தைப் போல இந்த வரையறை கச்சிதமாகப் பொருந்தும் இன்னொரு இயக்கம் இந்தியாவில் இல்லை”

“திராவிட இயக்கம் பேசிய எந்த ஒரு கொள்கையைம் கோட்பாட்டையும் அது உருவாக்கவில்லை. அவற்றை தீவிரமாகவும் ஆத்மார்த்தமாகவும் அது முன்வைக்கவும் இல்லை. அது அனைத்தையும் பிற சமூக, அரசியல் இயக்கங்களில் இருந்து எடுத்துக் கொண்டது. அவற்றை வெகுஜன கோஷங்களாக மாற்றி மக்கள் முன் வைத்தது. அதனூடாக அதிகாரத்தை நோக்கி நகர்ந்து. அதிகாரம்தான் அதன் இலக்காக இருந்ததே ஒழிய அந்தக் கொள்கைகள். அல்ல. ஆகவே அதிகாரத்தின் பாதையில் தேவையான இடங்களில் அதை உதறி உதறி அது முன்னகர்ந்தது. எது அதன் சாரமாக நமக்குத் தோன்றியதோ அதையெல்லாம் அது அதிகாரத்திற்காக உதறியது." என்கிறார் திரு. ஜெயமோகன்  தனதுசாட்சி மொழிகட்டுரைத் தொகுதியில் .

அத்தகைய ஒரு கோட்பாட்டை திரவிட கட்சிகள் சமூகத்திடமிருந்தேதான் அதை பெற்றிருக்க வேண்டும் . இல்லாவிட்டால் அது சமூகத்தில் இந்த அளவு எடுபட்டிருக்க வாய்ப்பில்லை . அதைத்தான் திரு. ஜெயமோகன் திராவிட இயக்கங்களை நிராகரிக்கும் போது , அந்த இயக்கத்தின் மீது கசப்படையாது  “அது ஒரு வரலாற்று நிகழ்வு. அதன் காரணத்தையும் விளைவுகளையும் புரிந்துகொள்ள முயல்கிறேன்” என்கிறார்.திராவிட காட்சிகளை போல உணர்சியில் எவற்றையும் ஒற்றைபடையாக்கிக்  கொள்ளும் வித்தையை , காங்கிரஸ் பெரியவர்கள் அறிந்ததில்லை . தெரிந்திருந்தாலும் அதை மடமையென திகைத்து வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள் .

இளைஞர்களுக்கு பார்வைக்கு அவர்கள் பார்க்கும் அந்த  ஒற்றைப்படை  அணுகுமுறையே அரசியல் என்பதை புரிந்திருந்தார்கள் . காங்கிரஸின் செயல்முறைகள் திராவிட பாணியிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தன . ஊர்பெரியவர்கள் பெரும்பாலும் தொகுதி தலைவர்களாக இருப்பதால் . இளைஞர்களுடன் ஒருவித இடைவெளி எல்லா இடங்களிலும் உணரப்பட்டிருந்தன . அவர்களால் இளைஞர்களுடன் இயைந்து செயல்பட முடியவில்லை . எதை வேண்டுமாயினும் செய்து விட்டு அதை அரசியலென்பதெல்லாம் அவர்களுக்கு உடன்பாடில்லை  . 

தலைவர் சண்முகம் ; எனது செயல்பாட்டிலிருந்து எனது பயணம் எந்த மாதிராயானது , எதை நோக்கியது என்பதை என்னைவிட அவரே மிகச்சரியாக புரிந்திருந்தார்.அதை ஒரு கட்டத்தில் நானே உணர்ந்ததும் , அவரது ஆதரவில் மட்டும் என்றில்லாது  பெரும்பாலும்  எதிர்பிலிருந்து எனக்கான பாதையை நான் கண்டடைந்தேன் . எனது அணுகுமுறையை அவரது ஆசியை விட வசையை பெற்றே நான் எனது அனுகுமுறையை வகுத்துக்கொண்டேன் . ஏனெனில் நான் அவரது பின்னால் எப்போதும் இருந்ததால் , எனது அரசியல் அடிபடாது இருந்ததது . ஆனால் நான் பட்ட அடிகள் வேறுவிதமானவைகள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்