https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 28 ஜூன், 2025

“வெய்யோன்” பகுதி 6 பேசு பொருள் “விழிநீரனல்” என் உரையாடலின் எழுத்து வடிவம்.

 



வெண்முரசு கூடுகை. 83 . வெண்முரசு நாவல் வரிசையில் ஒன்பதாவது நாவல்வெய்யோன்பகுதி 6 பேசு பொருள்விழிநீரனல்என் உரையாடலின் எழுத்து வடிவம்

எளியோரின் கண்ணீரால் உருவாகும் வஞ்சம் என்கிற  சாமான்ய இதற்கு அர்த்தம் பொருந்தாது என நினைக்கிறேன்.மகாபாரத விடுபடல் மற்றும் உள்ளடுக்குகளை Sub text வழியாக முன்வைக்கவே வெண்முரசு எப்போதும் முயல்கிறது. இந்தப் பகுதி முழுவதும் கர்ணனின் உளவியல் பற்றியது. மிக நுட்பமாக Sub text வழியாக சொல்லிச் செல்கிறது.





Sub text என நான் புரிந்து கொள்வது சிக்கலான அரசியல் ரீதியில் கர்ணனின் இடம் , நட்பென வரும் போது மட்டுமே அது விரிகிறது. துரியனுக்கு முத்தவனாக தார்தராஷ்டன் வரை உள்ள அவனுக்கான அங்கீகாரம். சகுனி கர்ணனுக்கு தரும் இடம். அனைத்திற்கும் வெளியே கர்ணன் தன்னை வைத்துள்ள இடம். அத்தனை இடத்திலும் ஊடுபாவாக சொல்லப்படாத ஒரு சொல் கர்ணனை செலுத்துகிறது அல்லது தடுக்கிறது . அது என்ன என்று கேட்டுக் கொண்டால் விலகும் திரை 

நாக அன்னை அவனது மறைந்துபோன உண்மை மற்றும் வஞ்சக நிழல்களை வெளிக்கொண்டு வருகிறார்.விழி அதை மறக்கும் கண்ணீர் அதனால் அனையாத அனல். மனம் இயங்கு முறை அதன் விசை மனித எல்லையை கடந்தது. அதை சார்ந்த நுட்பமான உளவியல் பற்றியது இந்தப் பகுதி.தாயால் கைவிடப்பட்டவன் என்கிற ஒன்றை கடந்து தன்னை தொகுத்து கொள்ள இயலாமை என்கிற மிக எளிய உளச்சிக்கலில் கர்ணன் இருகின்றான என கேட்டுக் கொண்டால் அதற்கு ஆம் இல்லை என இரண்டும் பொருந்தி வரும் . மகாபாரதத்தில் தாயாலும் தந்தையாலும் சமூகத்தாலும் கைவிடப்பட்ட பிள்ளைகளின் வரிசை மிகப் பெரியது. அவர்கள் அனைவரும் முக்கிய ஆளுமைகள் .வியாசர் , துரோனர் ,அம்பை சத்தியவதி ,மானசாதேவி பராசரர் யயாதியின் மகன்கள் (புரு தவிர) கண்ணனே கூட ஒருவகையில் கைவிடப்பட்டவனே .ஆனால் அவர்கள் யாரும் நிலையழியாமல் வென்று முன் செல்கிறார்கள் செல்கின்றனர்

கர்ணனின் வன்மம் அல்லது உளவஞ்சம் அது என்பதால் அதை சார்ந்து அலைக்கழிப்பு என்பது என்ன? அதிலிருந்து வெளி வர அவன் முயல்வது அவனது ஆழ்மனதிற்கு எதிரானது. ஒரு வகையில் மூர்க்கமானதும் கூட. காரணம் கர்ணன் எப்போதும் பிறரின் ஆட்டக் காய்,தன்னளவில் முழு திறன் இருந்தாலும் அது சமயத்தில் உபயோகமற்றுப் போகும் என்கிற தீயூழ் பெரும் பலவீனம்.அவனது குரு கர்ணனின் குலத்தை கேட்டு வலியுறுத்துவது கூட இந்த உளச் சிக்கலில் இருந்து அவனை மீட்டு வெளிக் கொண்டு வர ஆனால் அவன் வர மறுக்கிறான் . குருவின் சாபம் பெருவது இங்கு . உலகில் ஒருவர் கடக்க இயலாதது மனம் மற்றும் அதன் இயங்கு விசைக்கு ஆதாரமான விதை. சில வகை விதைகள் முளைப்பதை தாமதப்படுத்தி தனது கருக்கொண்ட மாபெரும் விருட்சத்திற்கு ஏற்ப வேர்களை ஆழத்தில் செலுத்துகிறது. அது போல் கர்ணனின் வஞ்சம் அவனிறியாத ஆழம் கொண்டது. “ரீங்காரமென்பது சொல்லென ஆகாத ஒலிஎன்பது கர்ணனின் ஆழுள்ளத்தில் இருக்கும் அவனறியாத அல்லது அறிந்து கொள்ள விரும்பாத வெளிவர வாய்ப்பிருந்தும் ஏற்க மறுத்த வஞ்சம்.

முதல் பகுதியில் துரியன் அன்றில் வாழும் மிக எளிய, விரிந்து உள்ளம் கொண்டவனாக தன்னை முன்னிறுத்தும் இடம். உணர்வு பெருக்கின் அடிப்படையில் செயல்படுபவன். இந்தப் பகுதியில் வாரி கொடுப்பவனாக தன்னை முன்னிறித்தி அடைய நினைக்கும் பெருமை எளிய மனதை ஆனால் அதை தீவிரமாக செய்பவனாக காட்டப்படுகிறான். இந்திரப்பிரஸ்தத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் நவீன யுகம் நோக்கி நகரும் கட்டுமானத்தை பார்த்து திகைப்படைகிறான். பரிசு பொருள்களின் நிரை அவனை சீண்டுகிறது. அவனின் மன வரிவு உடையும் போது அவமானகரமாக தோன்றி அதன் மறு எல்லையான சீற்றம் காழ்ப்பு போன்ற உணர்வுநிலையை அடைகிறான்.

தன்நிலை மறந்து, துரியோதனன் கொண்டு செல்லும் பரிசு் பொருட்கள் மற்றும் தேவயாணியின் கிரீடம் போன்றவை கர்ணனின் மனதில் இனம் புரியாத கசப்பை உருவாக்குகிறது. தேவையாணியின் கிரீடத்தை கர்ணன் அவையில் எழுந்து அறிவித்து அளிக்க வேண்டும் என துரியன் சொல்லும் போது சீண்டப்படுகிறான் . வழக்கம்போல் தான் சொல்ல நினைத்ததை சொல்லாமல் விடுகிறான். எதன் பொருட்டு என வகுத்துக் கொள்ள இயலாமல் அடையும் நிலையழிதலை இரண்டாம் பகுதியில் காட்டப்படுகிறது. ஒளிரும் கவசத்திற்கு பின்னால் கல்லென கணத்து கிடக்கிறது அவனது மனம்

நாக அன்னை கர்ணனுக்கு புரிய வைக்க முயலும் இடம் அதை அவனது வஞ்சனையாக எடுத்து வைக்கப் படுகிறது . நாக அன்னை தன் வஞ்சனையை புறந்தள்ளி அவனை தங்களில் ஒருவனாக கருதி அவனுக்கு உகந்த ஒன்றை சொல்ல விழையும் போதும் வெறும் விழிமயக்கு என  அதை கர்ணன் நிராகரிப்பது அவனது ஆழுள்ளம் அவனை மீறிய வஞ்சத்தை வெளிப்படுத்துகிறது. அவனுள் கிடக்கும் அந்த விதையின் பிரமாண்டத்தை அவன் அறியவில்லை

நீ அறிந்தாய். நீ எதை அறிந்தாயோ அது உண்மை.

அதை மறைத்தது தான் வஞ்சம்


  • இங்கு வஞ்சம் என்பது செயலல்ல, உண்மை அறிந்த பின் அதை மறைக்கும் உளச்சதியென கர்ணனுக்கு புரிய வைக்கிறாள்.

அதுவரை அவன் கொண்ட அலைக்கழிப்புகள் அனைத்தும் அர்த்தமற்றவையாக இங்கு உருவெடுக்கிறது. கர்ணன் ஒரு போர் தெய்வம் மட்டமே அங்கு ஒருமை படும் மனம் பிற அனைத்து சூழலிலும் பிளவுபட்டே நிற்கிறது. அவன் நாகர்களை அனுகுவது பாண்டவர்களுக்கு எதிராக கிடைக்கும் என ஊகிக்கும் சந்தர்ப்பம். அது நிகழாத போது மீண்டும் பிறிதொரு வாய்ப்பிற்கு ஜராசந்தனை நோக்கி நகர்கிறான். மானுட மனதை கொக்கை குறியீடாக கொண்டு அதன் நீந்துதலை துயரத்தை கர்ணனை நோக்கியதாக கூறப்பட்டிருப்பது கவித்துவமானது. பறத்தல் அதன் விடுதலை.இந்த பகுதியின் இறுதியில் மானுடர் உலகிற்கு வெளியே அவர்களை பொருட்படுத்தாத நாகர் உலகம் தங்களுக்கான உலகில் தங்களின் நாக வேதம் புராணம் தொன்மம் என நிறைந்தும் அங்கிருந்தே தங்களது எதிரிகளையும் கண்டடைகிறார்கள். உலகின் விரிந்த புலத்தில் வாழும் உலகில் மனிதன் ஒரு சிறு கூறு மட்டுமே என எடுத்துவைக்ப்படுகிறது

கர்ணனின் மனநிலையை புரிந்து கொள்ள இரண்டு எல்லைகள் காவிய லட்சணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

1.அர்ஜூனன்/ கர்ணன் இருவரின் ஒப்புமை

2. ஆண் / பெண் தன்மை ஏறப்பட்டவர்களாக வைக்கப்பட்டிருப்பது

காவியத்தில் இரண்டு நிகர்நிலை பாத்திரம் இடம் கொடுக்காது. அவற்றின் பேதங்கள் மற்றும் போதாமைகள் பற்றி சொல்லியாக வேண்டும் என்பதும் அதன் காவிய லட்சணங்களில் ஒன்றாக இருக்கலாம்இருவருக்கும் பொது அம்சம்  தாயை குறித்து ஏங்குபவர்களாக இருவரும் முன் வைக்கப் படுகிறார்கள். வித்தியாசம் அதை கடந்து சென்று வெல்பவனுக்கும், உழல்பவனுக்குமான வேறுபாடுகள் கொண்டதாக உருவாகி வருகிறது. இவர்களை ஆண் மற்றும் பெண் தன்மை ஏறிடப்பட்டு மேலதிகமாக ஒளிர்பவர்களாக எடுக்கலாம் என நினைக்கிறேன்.

இந்த இடத்தில் தம்ஸன் பிறதொரு கோணத்ததில் பூடகமாக அவனுடன் எப்போதும் அவனுக்கு எதிர் வலியாக காட்டப்படுகிறான்.கர்ணனின் உடல் வழியாக நுண்சொல் பெற்றும் அவனது குருதியின் பசையால் இறகு ஒட்டி விண்னேகும் வாய்ப்பை இழந்தவனாக சொல்கிறான் -ரத்தம் ஒரு தடை.   - குறியீடு- ஞானம் மற்றும் தீர்மானம் பற்றியது தாய் பற்றிய நினைவுகளை கிளர்வதற்கு தம்ஸனின் வருகையும் ஒரு குறியீடு. ஒரு வகை புனர் ஜென்ம நினைவுகளின் மீட்டல்

உடல் எனும் பிரபஞ்ச வெளிக்குள் தம்ஸன் நுழையும் தருணம் கவித்துவமானது். அங்கிருந்து பெண்கள் பற்றிய நினைவுகளை கிளர்ந்தெழச் செயகிறான். உடல் பஞ்ச பூதங்களில் மண்னை குறிப்பது. மனம் சந்திரனை தொட்டு பெண்னின் வடிவமாக பார்க்கப்படுவதால் கர்ணன் பிறவி தோரும் சந்தித்த அத்தனை பெண் வடிவங்களை அவன் நினைவு கூர்கிறான்

நிறைவாக

குந்தியின் நேரடி அழைப்பு கர்ணனை பல வித எண்ணங்களை உருவாக்குகிறது. தம்ஸன் கனவு வருகை கர்ணனின் பிறப்பு மற்றும் அதுபற்றிய அவனது எதிர்மறை எண்ணங்களை பற்றிய குறியீட்டை அவனுக்கு கொடுக்க முயல்கிறது

  • தாய் என்பவள் எல்லையற்றவள் அவளை இயக்கும் தெய்வங்கள் மட்டுமே அவள் செயல்களை அறிவது . அதை வகுப்பது மாநுட எல்லைக்கானது அல்ல என்பது தம்ஸன் சொல்லும் செய்தி
  • கியாதி, புலோமை,ரேணுகை, அம்பை, பிருதை, திரௌபதிஎன பிறந்திறந்து ஆடி முடித்து அவள் சென்ற அடிச்சுவடுகள் எஞ்சும் வெறும் வெளி ஒன்றுள்ளது” …“நதிஎனும் கருவி வழியாகக் கூறும் கவியுரு.

சட்டென தோன்றும் விஷ்ணுவின் அங்க வர்ணனைகள் பாஞ்சாலிக்கும் பொருந்து படி ஏறக்குறைய கர்ணனுக்கு கிடைத்த  விஸ்வரூப தர்சணம்.

 “தர்மம்என்பது வெளியில் தரிசிக்க வேண்டிய ஓர் உண்மை அல்ல,அது ஒருபோதும் புற வெளியில் நிகழாது என்பதால் அவன் அகத்தில் நிகழ்கிறது. ஆனால் கர்ணனை உலகியலில் மட்டுமின்றி ஆன்மீக குருடனாகவும் காட்டப்படுகிறது

ஞாயிறு, 15 ஜூன், 2025

அடையாளமாதல் * தனி முகம் *

 




ஶ்ரீ:



பதிவு : 680  / 869 / தேதி 15 ஜூன்  2025



* தனி முகம் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 78.







அரசியலில் கட்சித் தலைவர்களுக்கு ஊடாக பரஸ்பர நம்பிக்கை எளிதில் இயல்வதல்ல. பார்க்க பொதுவில் இருப்பது நாகரீகம் கருதி ஆனால் பொது வெளியில் ஒருவர் பற்றி ஒருவரின் கருத்து தனிப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவாவது. அவற்றின் அளவீடுகள் வேறு. அங்கு அரசியல் தலைவர்கள் பற்றிய பொதுமக்கள் கருத்துக்கள் எதிரொலிப்பதில்லை. ஒருவர் பற்றிய உள் தகவல்களை பிற அனைவரும் அறிவர். பொது வெளியில் கொண்டாடப்படும் தலைவர்களை அரசியலுக்கு அப்பால் பிற கட்சி மேல் மட்டத் தலைவர்கள் ஒன்று கூடி உரையாடும் போது மட்டுமே அந்த மெல்லிய பகடியுடன் வெடிச் சிரிப்புடன் விமர்சித்து விலகி செல்வதை பார்த்திருக்கிறேன். அவை பெருமாலும் அதிரவளிக்கும் உண்மை சம்பவம் பற்றியதாக இருக்கும். பொது வெளியில் அறம் சார்ந்து பேசும் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் எத்தனை தன்நோக்கு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது பற்றி தெரியும் போது அவை அதிர்ச்சி தருவது. பொதுவாக அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் தலைவர்கள் குறித்து நல்ல எண்ணம் பிற கட்சி தலைவர்களுக்கு இருப்பதில்லை. பல்வேறு போராட்டங்கள்,செயல்பாடுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்வியல் முறைகள் வழியாக அந்த தலைவர்கள் பற்றிய கருத்தை அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள்


அவற்றில் இருந்து விதிவிலக்கு காங்கிரஸ் கட்சி தலவர் சண்முகம். பல கட்சி தலைவர்களுடன் உரையாடும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பிற கட்சி தலைவர்கள் சண்முகத்திற்கு கொடுக்கும் இடமும் மரியாதையும் மிக உயர்வனதாக இருப்பதை பார்த்திருக்கிறேன். இதில் முரண் பிற கங்கிரஸ் தலைவர்கள் அவர் மீது வைக்கும் குற்றசாட்டுகள். தனது வாழ்க்கையையே ஒரு குறியீடு போல முன்வைத்தவர். மிக எளிய வாழ்கை முறை பலமுறை பாராளுமன்ற உறுப்பினர் மாநில அமைச்சர் என இருந்தாலும் தனது சொந்த கிராமமான கரைக்கால் நெடுங்காடு பூர்வீக சொத்தை தவிர புதுவையில் அவருக்கு சொந்த வீடோ நிலமோ கிடையாது. அவரின் நேர்மை எப்போதும் கேள்விக்குள்ளானதில்லை. சைவ உணவு, தடுத்து நிறுத்தும் யாருமின்றி வந்தவர் நேரடியாக சந்திக்கும் இடத்தில் அமர்ந்திருப்பது போன்றவை காமராஜரிடமருந்து அவர் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.தலைவர் சண்முகத்தை எனது அரசியல் குரு ஸ்தானத்தில் வைத்திருந்தது எனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருக்கலாம் . எனக்கான மதிப்பீடுகள் அங்கிருந்து உருவானவை . அரசியல் சரிநிலைகளை கடந்து ஒருவரின் கள செயல்பாடு நேர்மறை அனுகுமுறை ,உரையாடலின் கருத்தியல் போன்றவை முக்கிய இடம் வகிக்கின்றன. சாதாரண மக்கள் பார்வையில் இருந்து அரசியாளலர் பார்வை இன்னும் கூர் கொண்டவை.


இளைஞர் அமைப்பின் தலைவர்களின் நம்பிக்கையை பெறுவது முக்கிய இடத்தை வகித்தது. சமச்சீர் வரி எதிர்ப்பு திட்டமிட்டவைகளை செயல்படுத்துவது அதற்கான தனிபாணி மற்றும் நேர்மறையான அனுகுமுறை அந்த வெற்றியின் வழியாக எனக்கான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதாக இருந்தது. மத்திய வாஜ்பாய் அரசின் சமச்சீர் வரிக்கு எதிரான கூட்டுக் குழுவின் தலைமை பொறுப்பை நான் விழையவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பெருமன்றத்தின் செயலாளர் முருகனை மனதில் வைத்தே மொத்த திட்டத்தையும் உருவாகியிருந்தேன் . முதல் முறையாக கூடுகையில் அவரது பெயரை முன் வைத்த போது முருகன் அதை கடுமையாக மறுத்தார். பிற கட்சி தலைவர்களும் மௌனமாக அதை ஆதரித்தது முதலில் திகைப்பை கொடுத்தது . அவர்கள் அனைவரும் களத்தில் நீண்ட கால செயல்பாடுகளை உடையவர்கள், நண்பர்கள் என்றாலும் அவர்களுக்குள் முரண்கள் மிக இயல்பானவை. அரசியலின் பொருட்டு தங்களுக்குள் ஒருவரை ஆதரிக்க விடமாட்டார்கள். புதியதாக வந்திணைந்த என் போன்ற புதியவர்கள் அவர்களுக்கு எளிதில் கையாளக்கூடியவர்களாக தெரியலாம். நான் அறிந்த மிக எளிய அரசியல் கோட்பாடு. அவர்கள் ஒரு மனதாக என்னை முன்வைத்த போது நான் அதை மறுக்கவில்லை


அந்த மாதம் முழுவதும் பல கட்டங்களாக இளைஞர் பெருமன்ற பொது செயலாளர் முருகன் , சிபிஎம் லெனின்துரை , தமாக நமச்சியவாயம், அஇஅதிமுக இளைஞரணி போன்ற பலர் என்னுடன் தொடர்ந்து பயணித்தார்கள். பல கட்சியை சேர்ந்த இளைஞர் அமைப்பினர் மெல்ல இணையத் துவங்கினர். ஓரிரு மாதங்களில் அனைவரையும் உள்ளடக்கிய குழு உருவானது. நான் தலைவர் சண்முகத்திடம் அதன் பிறகே நிகழ்ந்ததை தகவலாக சொன்னேன். வழக்கம் போல தனது அதிருப்தியை தெரிவித்தார். பிற கட்சியினருடன் பயணிப்பது நல்ல பலனை கொண்டுவராது என்றார். தன்னுடைய அனுபவத்தில் நிகழ்ந்த பல விஷயங்களை பற்றி பேசிய பின்னர் நீண்ட அறிவுரைகள். அவை நிஜமான கவலைகள் ஆனால் களத்தில் செயலபட விரும்பும் ஒருவரை அதிலிருந்து விலக்கி வைக்க முடியாது.

அரசியல் எப்போதும் புதிய களங்களை கண்டடைவது வளர்வதற்கான வழி அதை தவிர்க்க இயலாதது. அவை செயலாக்கப்பட்ட பிறகு அதன் மீதான விமர்சனம் புரிந்து கொள்ள கூடியது. அதற்கு முன்பாக புதிய செயல்பாடுகளின் வழியாக புதிய நிலைபாடுகள் உருவாகி இருக்கும். அதுவரையில் அது அரசியல் முன்னகர்வாக இருக்கும் . மேலும் அன்று அது பற்றி எரிந்த அரசியல் களம். அகில இந்திய அளவில் காங்கிரஸ் அமைப்புகள் அந்த புதிய வரிவிதிப்பு முறையை கடுமையாக எதிர்க துவங்கி இருந்தன. நான் அதை ஒட்டியே எனது செயல்பாடுகளை வடிவமைத்துக் கொண்டிருந்தேன்


அனைத்து இளைஞர் அமைப்பின் கூட்டங்கள் பலகட்டங்களாக அனைத்து தொகுதிகளிலும் நிகழ்ந்தது. பிற அமைப்புகளை விட இளைஞர் காங்கிரஸ் மாநிலம் முழுவதும் பலமாக இருந்தது. பல வருடங்களாக அவர்களை ஒருங்கி திரட்டி இருந்தேன். பலமுறை அவர்களை முன்னிறுத்தி எடுக்க நினைத்த களங்கள் அமையாது போனது. ஒவ்வொரு முறை அதை செயல்படுத்த நான் நினைத்த அந்த தருணம் வாய்க்கவில்லை. இந்த முறை அதை மனதில் வைத்து கூட்டுப் போராட்ட கூட்டங்களில் செயல்பாட்டு நெறிகள் மற்றும் போராட்ட யுக்திகள் முன்வைத்து விவாதித்தோம்.மற்றவர்களுக்கு அது எப்படி இருந்தது என தெரியாது. எனக்கு அவை முற்றும் புதிய அனுபவங்களை கொடுத்தது. முக்கியமாக தெரு முணை பிரச்சாரம் கம்யூனிச பாணி செயல்பாடுகள் மிகச் சிறப்பானவை. நேரடியாக பொது மக்களுக்கு செய்திகளை மிகச் சரியாக கொண்டு சேர்ப்பவைஅவற்றில் திரளாக நண்பர்களை கொண்டு வந்து குவிக்க வேண்டிய நிர்பந்தமில்லை. காங்கிரஸ் கட்சி செயல்பாட்டு பார்வையில் இருந்து அவை முற்றிலும் வேறுபட்டவை. காங்கிரஸ் எதிர்கட்சியாக இருக்கும் போது போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. நான் அவற்றை கட்சியின் பொருட்டு ஒருங்கிணைத்த அனுபவம் உண்டு கடந்த முப்பதாண்டுகளாக அதை செய்திருந்தாலும் கம்யூனிச பாணி எனக்கு புதிய யுக்திகளை அறிமுகப்படுத்தியது. தெருமுணை பிரசாரத்தில் மேடை பேச்சு அனுபவம் தேவைப்பட்டது காங்கிரஸில் அதற்கான எந்த பயிற்சியும் இல்லை. காங்கிரஸ் கட்சியில் மேடையில் சிறப்பாக பேசக் கூடியவர்களாக மிக சிலரே இருந்தனர்.