https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 27 ஜூன், 2025

அடையாளமாதல் * தேடலின் நுண்மை *

 ஶ்ரீ:



பதிவு : 684  / 873 / தேதி 27 ஜூன்  2025



* தேடலின் நுண்மை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 82.






அன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டிற்கு வந்த நண்பர் ஜெயபால் ரங்கசாமிக்கு அணுக்கர் வந்தவுடன் என்னிடம்முதல்வர் வீட்டில் இருக்கிறார் உங்களை அழைத்து வரச்சொன்னார்என்றார். “மதியம் 1:30 மணி உணவிற்கு பிறகு செல்லலாம்என சொன்னேன்நேரமில்லைஎன்ற பின்னர்இல்லை பேச்சு எவ்வளவு நேரம் எடுக்கும் என தெரியவில்லை வழியில் எங்காவது உணவிற்கு நிறுத்தலாம்என்றார் . நான் மறுக்க என் வீட்டிலேயே ஜெயபாலும் உணவருந்தி முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்திக்க கிளம்பினோம் . போகும் வழி முழுவதும் நானும் ஜெயபாலும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ரங்கசாமியிடம் என்ன சொல்லெடுக்க வேண்டும் என்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்


முதல்வர் ரங்கசாமியின் அரசியல் என்ன? அது பிறரால் எப்படி பார்க்கப் படுகிறது ? அவரது பதவிக்கு இன்று எழுந்திருக்கும் சிக்கல் இந்தியா முழுவதிலும் உள்ள எல்லா காங்கிரஸ் முதல்வர்களும் தொடர்ந்து எதிர் கொண்டது. ஆனால் ரங்கசாமிக்கு என வரும் போது அதன் உண்மை தன்மையாக வேறு எப்படி கூர் கொள்கிறது அல்லது அதன் தனித் தன்மையை அது எப்படி இழக்கிறது என்பது பற்றி நான் உத்தேசித்திருந்ததை அவரிடம் என் பார்வையாக வைத்தேன். அது எப்படி பிறிதொரு அரசியல் பார்வையை கோருகிறது என்பதையும் சொல்லியிருந்தேன் . அவர் அதை ஏற்றால் பின்னர் பிறர் அவரிடம் வைக்க தயங்கிய அரசியலை பற்றி பேசலாம் என நினைத்திருந்தேன்


முதல்வர் ரங்கசாமியின் அரசியலை நான் எப்படி புரிந்திருந்தேன் என இந்தப் பதிவில் விளக்க முயல்கிறேன். என் அரசியலுக்குள் முதல்வர் ரங்கசாமி வந்தது நான் வழக்கமாக என் அரசியலின் அடுத்த நிலைக்காக செய்யும் புதிய முயற்சி ஒன்றின் வழியாக. அது என் வழமையான பாதையில் இருந்து மீறிச் செல்வது. புதிய முயற்சிகளில் காணப்படுகிற மீறல் என்கிற ஒவ்வாமையும் அதை பற்றிய நமது முடிவான மதிப்பீடுகள். எல்லோரும் பிறர் பற்றிய மதிப்பீடுகள் வழியாக  “இவர் இப்படித்தான்என வரையறை செய்வது கொண்டு அவர்கள் வரைந்து கொண்ட கோட்டிற்குள் நின்று முன்னகர இயலாமல் சிக்கிண்டு கிடப்பதை பார்த்திருக்கிறேன். அந்த கருத்தை நான் எப்போதும் ஏற்பதில்லை. யாரும் அப்படி மாற்ற முடியாத நிலைப்பாடுகளை கொண்டவர்கள் அல்ல. குறைந்தபட்சம் அரசியலில் அப்படிப்பட்ட நிலைப்பாடுகளுக்கு அர்த்தமில்லை என நினைப்பவன். தன்னை நோக்கி காலத்தால் கொண்டு வரப்படும் நிஜமான உதவியை யாரும் புறந்தள்ளுவதில்லை


நான் உத்தேசிக்கும் பாதையில் தொடர்ந்து பயணிப்பதில் அவ்வப்போது இடர்பாடுகள் எதிர்ப்பட்டாலும் அந்த முயற்சிகளின் குறைந்தபட்ச அளவிற்கு எப்போதும் ஏற்கப்படுவதை பார்த்திருக்கிறேன். பின் அங்கிருந்து அதை விரித்தெடுத்து வெற்றியை நோக்கி நகர்கிறேன்


அரசியலில் மட்டுமின்றி பிற துறைகளிலும் சிறந்த அவதானிப்புகள் மாற்றுப் பார்வைகளாக முன்வைக்கப்பட்ட போது அவை பல சமயங்களில் அதன் உண்மை தன்மை வேறு வடிவம் கொண்டது என ஆகி பெருகி இருக்கின்றன.அரசியலில் உதவுவதும் உதவியை பெறுவதும் குறிப்பிட்ட நிலைகளில் தங்களை வைத்துக் கொள்வதில் இருந்து தான் துவங்குகிறது. அந்நிலை கொண்டவர்களுடன் மட்டுமே நாம்மால் விவாதிக்க அல்லது உரையாட முடிகிறது. அத்தகைய முயற்சிகளில் குறைந்தபட்ச நட்பை அங்கு எதிர்பார்கலாம் அதை தாண்டி வேறு கற்பனையை வளர்த்து கொள்ள தேவையில்லை. அந்த புது நட்பில் நமக்குமான அரசியலும் இருக்கிறது என்பது அதன் பின்புலம். எந்த நிலைப்படும் இல்லாதவர்கள் சந்தர்ப்பவாதிகள் அவர்களுடன் பேச ஒன்றுமில்லை


ரங்கசாமி தன்னை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து பல தேர்தல்களை  கண்டார் ஆனால் தன் தொகுதியை தன்னை மட்டும் சார்ந்த அமைப்பாக உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றார். ரங்கசாமி மட்டுமன்றி புதுவையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அனைவரும் அதை ரங்கசாமிக்கு முன்பும் பின்பும் செய்திருக்கிறார்கள் செய்து கொண்டும் இருக்கிறார்கள். அதில் பலர் வென்றதில்லை காரணம் கட்சி அல்லது ஆட்சியில் ஏதாவது ஒன்றில் தங்களுக்கான இடம் இல்லாமலாகும் போது அவர்கள் உருவாக்கிய இடத்தை தக்க வைத்துக் கொள்ள இயலுவதில்லை. ஆனால் ரங்கசாமி தொடர்ந்து  “கட்சி மற்றும் தொகுதிஎன இரண்டு நிலைகளிலும் தனது இடத்தை பெற்று வென்று வந்தார். அது போல ஒன்றை பிற சட்டமன்ற உறுப்பினர்களும் உருவாக்க விழைந்து முடியாமலாகி பின் குறுங்குழுவாக தேங்கிப் போனார்கள் . ரங்கசாமி தனது ஆதரவாளர்களை ஒருபோதும் கட்சிப்படுத்தவில்லை என்பது உண்மை என்றாலும் அவர் மீது வைக்கப்படும் அதே குற்றச்சாட்டை புதுவை சட்டமன்ற உறுப்பினர்கள் 30 பேர் மீதும் வைக்க முடியும் . அரசியல் சரிநிலைகள் இங்கு பெரிய மாற்றத்தை அடைகின்றன


தன் தொகுதி மக்கள் தன்னை மட்டுமே சார்ந்திருக்கும்படி வைத்திருந்தார் என்பது வேறு வித நுண் குற்றச்சாட்டு அதே சமயம் அவர்கள் தங்கள் தேவைக்கு பிற அரசியல் தலைவர்களை நாடும்படி கைவிட்டதில்லை. அவர்கள் கோருவதை சலியாது மீள மீள அவர்களுக்கு செய்து கொடுக்கும் இடத்தில் தன்னை வைத்திருந்தார். அவர்களுக்கு ரங்கசாமியை கடந்து பிறிதொரு மாற்று இல்லை என்பது கள உண்மை அது அவர் உருவகித்திருந்த அமைப்பும் கூட. ஒரு புள்ளியில் அவர்கள் இணைந்து ஒருவருக்கு ஒருவர் அரணாக நிற்கும்படியான சூழலை உருவாகியது இரு தரப்பும் ஒன்றை ஒன்று இறுக பற்றியிருந்தது . அது அவர் பலம் அதே சமயம் பலவீனமும் கூட மாநில கட்சியின் அமைப்பின் பார்வையில்.


1991 களில் அவர் அமைச்சரான போது துவங்கிய அந்த குற்றச்சாட்டு 2001 களில் அவர் முதல்வரான போது பல மடங்கு பெருகியது. 30 தொகுத்திக்கு முதல்வராக இருக்க வேண்டியவர் தனது ஒரு தொகுதிக்கு மட்டும் முதல்வராக இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு பிறரால் ஏற்கவும் பட்டது. ஆனால் அதில் முழு உண்மையில்லை என்றே நினைக்கிறேன். ரங்கசாமி  தேவைக்கும் குறைவாக பேசுபவர். ஆனால் சகஜமான உரையாடலுக்குள் அவர் எப்போதும் தன்னை வைத்துக் கொண்டதில்லை என்பதை நான் ஏற்கவில்லை. மிக சரியாக வைக்கப்படும் விஷயங்கள் குறித்து மிக ஆழமாக விவாதிக்கக் கூடியவராக அவரை அறிந்திருக்கிறேன். அதே சமயம் அவரது ஆதரவாளர்கள் பிறருடன் இணங்கி பழகுவதில்லை என்பது ஒரு வித மூடுண்ட சமூகமாக பார்க்கப்பட்டது .அது அவர்களின் நெறியாக இருக்கலாம். அதன் வழியாக அவருக்கும் பிற அரசியல் தலைவர்களுக்கு உருவான இடைவெளி மிகப் பெரியது. அவர் சார்ந்த தட்டான்சாவடி மற்றும் கதிர்காமம் போன்ற தொகுதிகள் புதுவையில் பிறர் ஊடுவ முடியாத தனித் தீவுகளாயின

அவரிடம் அரசு ரீதியான பலன்களை அடைய நினைத்தவர்கள் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுக்க நினைத்தனர் அதன் வெளிப்பாடே அவர் தனது சொந்த தொகுதிக்கு முன்னுரிமை கொடுக்கிறார் என்பது.   


2001 களுக்கு பிறகு தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் கடந்து வந்தார் . அதை பிறர் மட்டுமின்றி தில்லி கட்சி தலைமையும் ஏற்றதாக தெரியவில்லை. அவரிடம் உரையாடிய போது அதை தெரிந்து கொண்டேன். தில்லியில் தன்னை நோக்கிய கேள்விகளுக்கு தன் செயல்பாடுகள் வழியாக பெற்ற தனது மக்கள் செல்வாக்கு மற்றும் அரசியல் பார்வையை முன்வைத்த போது அவர்கள் புதுவை அரசியலைஒரு பாராளுமன்ற மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கொண்டதாக குறுகிய அரசியல் பார்வையாக பார்க்கப்பட்டதையும் புதுவையின் ஒற்றை இலக்கு வெற்றி அகில இந்திய அளவில் அது பெரியதாக அளிக்க ஒன்றுமில்லை என சொல்லப்பட்ட போது அவரால் அதை ரங்கசாமியால் ஜீரணிக்க இயலவில்லை. கடும் கோபத்தோடு என்னிடம் சொன்னார்நான் பல வருடங்களில் புதுவை மற்றும் தமிழக மண்ணில் வளர்த்துக் கொண்ட தனிப்பட்ட செல்வாக்கு சட்டமன்ற மற்றும் பாராலுமன்ற தேர்தல் சமயத்தில் புதுவை மட்டுமின்றி அதை சார்ந்த தமிழக பகுதியில் இருந்து என்னால் 10 அல்லது 15 நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற வைக்க முடியும்என்றார். அவர் இந்த தகவலை சொன்ன போது முதலில் எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரை சந்தித்ததால் அவருள் நிகழ்ந்திருந்த அந்த மாற்றம் நான் அறிந்திருக்கவில்லைஅது உண்மை என தனி கட்சி துவங்கிய சில மாதங்களில் ஆட்சியில் அமர்ந்து நிரூபித்தார். பொதுவாக தில்லியில் அமர்ந்திருக்கும் அகில இந்திய கட்சி உதவி செயளாலர்களுக்கு இருக்கும் ஒரு வித ஆணவம் நான் அறிந்தது. அவர்களால் தங்களுக்கு எதிரே அமர்ந்திருப்பவரை ஒரு போதும் எடை போட இயன்றதில்லை காங்கிரஸின் பல கீழ்மைகளில் இது ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 88 எனது உரை. எழுத்து வடிவம்

  வெய்யோன் - 77 பகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி - 1 வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்...