https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 30 ஜூன், 2017

அடையாளமாதல் - 105 *இயற்கையை எதிர்கொள்ளல் *

ஶ்ரீ:*இயற்கையை எதிர்கொள்ளல்  *
இயக்க பின்புலம் - 32
அரசியல் களம் - 33


 உள்ளே கண்ணன் தன் வாய்ப்பை இழந்து கொண்டிருப்பதை பற்றி அறியாமல் நானும் வுட்லண்ஸ் பாலாவும் பேசிக்கொண்டிருந்ததை நினைவு கூர்கிறேன் . அவரவர்க்கு அவரது தலைவர்கள் ஆதர்சமாகவும் மற்றவர்கள் உதாவாக்கரைகள் என் நினைப்பதை புரிந்துகொள்ளாத காலம் . எனவே எங்களுக்கு கிடைத்த இடைப்பட்ட சிறிது நேரம் அவர் இதுவரை என்னுடனான உரையாடலை தீடீரென வேறுத்தளத்திற்கு நகர்த்தினார் . அவருக்கு உள்ளுணர்வு சொல்லத்துவங்கியிருந்தது கண்ணன் இந்த கூட்டத்திலிருந்து வெற்றியோடு வருவாரென . முதல்வராக வெளிவரும் கண்ணனுக்கு தான் போடுவதற்கு கொண்டுவந்திருந்த பெரிய ரோஜா மாலையை என்னை அழைத்து சென்று காட்டினார்

எனக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் வர்த்ததுபோலிருந்தது. கண்ணனின் வெற்றி எங்களை இருக்குமிடம் தெரியாது அழித்துவிடும் . அவர் பேசட்டும் என காத்திருந்தேன் , அரசியல் முதிர்ச்சி எல்லாம் ஒன்றுமில்லை , அவர் வயதில் பெரியவர் , உபயோகமான அரசியல் அனுபவங்களை அவர் பகிர்ந்துகொள்ளலாம் . நானும் அனுபவஸ்தர் ஒருவரின் ஆற்றுப்படுத்துதலுக்கு காத்திருந்த காலம் . தேர்தல் கால மத்தியிலேயே மிகவும் சோர்ந்திருந்தேன்

செயல்பாடுகளின் மூலம் பலம் பெறுவது பற்றிய எனது அனுபவம் இனி உதவப்போவதில்லை என பட்டவர்த்தமாக தெரிந்து போனது . அடுத்த நகர்வென்பது அதிகாரத்தை நோக்கியது . நம்மைவிட சகலத்திலும் பெரியவர்கள் மத்தியில் நம் சொல் எடுபடுதல் . கண்ணன் போன்றவரகள் வெற்றிபெற்று உள்ளே சென்றபிறகு சந்திக்க நேர்ந்தது அவர்களின் எள்ளலை மட்டுமே . அதைக் கடக்க விழைந்தே அவர் தன் அரசியலை தொடங்க இப்பொது இங்குவந்து அமைந்துள்ளார் . தன்நிலையை பலப்படுத்தாது அரச்சூழ்தலின் மூலம் முறச்சித்தார் . களத்தில் நின்றாடுபவர்களுக்கு அரசுசூழ்தல் சரிப்படுவருவதில்லை எனும்போது , எதையும் அடையாத எங்களிடமும் அதையே கேட்டது காலத்தின் குரூரம் ,என கொந்தளிப்பில் இருந்தேன் . பெரும்மழையின் முன்பு சிறு மழைக்குருவி போல அதை எதிர்கொண்டேயாகவேண்டும் 

பாலன் மரைக்காயரால் அங்கீகரிக்கப்பட்டவர் என நீ நினைக்கிறாயாஎன்றார் , நான் மெளனமாக என்னதான் சொல்லவருகிறார் பார்போம்மென இருந்தேன் . “அரசியலில் மரைக்காயரை சார்ந்திருப்பது போல மடத்தனம் பிறிதொன்றில்லை . அங்கு வளர்வதற்கான பாதை என ஒன்றில்லைஎன்றார் . கண்ணன் முதல்வராக்கப்பட்டால் அனைத்தும் மாறும் புது அரசியல் அதிகாரம் கைமாறி அமையும் . ஆகவே என்னையும் புத்திக்கொண்டு பிழைத்திருக்கசொன்னார் . மரைக்காயர் கண்ணனை தொடர்புகொள்ளவே தான் அங்கு இருப்பதாகவும் . அது தன்னை அடுத்த இடத்திற்கு நகர்த்தும் என்றார் . நான் அவரை உறுத்துப்பார்த்தேன்

அவர் அறுபதுகளின் மத்தியில் இருந்தார் . இவருக்கு நேற்று என்னவாக இருந்திருந்தால் இவர் நாளையப்பற்றிய கனவில் இருப்பர் . இங்கு கனவுகாண அனைவருக்கும் அரசியல் உரிமை வழங்கியிருந்தது அவர்களின் வயதிற்கு அப்பாற்பட்டு . இவர்களுக்கு கனவென்பது தூங்குவதால் எல்லோருக்கும் வரும் கனவை பற்றி சொல்கிறார் போலும் இவரிடம் தொண்டர் சுரண்டப்படல் வயறுகாய்ந்தவனின் கனவு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை

கட்டுப்படுத்த முடியாத வெறியை என்ன செய்வதென தெரியாமல் மெள்ள அங்கிருந்து வெளியே வந்தேன் . தேர்தல் கூடுகை அறையில் சலசலப்பு முடிவு எடுக்கப்பட்டதை உணர்த்தியது . கதவு திறக்க போகிறது, நான் ஆற்றாமையுடன் வுட்லண்ட்ஸ் பாலாவை பார்த்தேன் அவர் ,அளவுகடந்த உற்சாகத்துடன் தன் வயதை மறந்து தூக்கமுடியாத ரோஜாமாலையை எடுத்துக்கொண்டு வெளிவரும் கூட்டத்தை நோக்கி பாய்வதை வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்

மரைக்காயர் கண்ணன் இடையே நடுநாயகமாக வைத்திலிங்கம் வெளிவர நடந்ததை என்னால் ஓரளவிற்கு உணரமுடிந்தது அவர்கள் மூவரும் அறை கதவின் வெளியே வர முண்டியபடி வுட்லண்ஸ் பாலா அவர்களை அருகணைந்துவிட்டிருந்தார் . அவர் மாலையை கண்ணனுக்கு போடா எத்தனிக்க , அட்டகாச சிரிப்புடன் அந்த மாலையை பறித்த மரைக்காயர் அதை வைத்திலிங்கத்திற்கு தன்சார்பாக  போட்டு வாழ்த்து சொல்லிவிட்டு அவர்விலகிஎன்றுவிட்டார் .

வுட்லண்ஸ் பாலா திகைத்திருக்க , கண்ணன் விறுவிறுவென வெளியேறுவதைப் பார்த்து  , சுயநினைவு திரும்பியவராக அவரை பின்தொடர்ந்து ஓடினார் . என்னால் சிரிப்பை அடக்க முடியாது பீறிட்ட முகத்தது யாரும் பார்க்கும்முன்னர் அறைக்குள் ஓடிவிட்டேன் . அங்கிருந்த  ஆனந்தபாஸ்கர் என்னவென்று கேட்க நான் சிரிப்பினூடே நடந்ததை சொல்ல அவர் தன் பாணியில் அந்த அறை அதிர சிரிக்கத்துவங்கினார்.


-அனைத்தும் ம் ஒரு முடிவிற்கு வந்தது , பாலனை நான் அவரிருந்த அறையில் தேடினேன் அவர் எனக்காக நெடுநேரம் காத்திருந்துவிட்டு சற்றுமுன்னர் கிளம்பிச்சென்றார் என்றும் என்னை அவர் வீட்டில் சந்திக்க சொன்னார் என்கிற தகவல் எனக்காக காத்திருந்தது . கட்சி தேர்தல்களம் எல்லாம் இந்த முதல்வர் தேர்தலுடன் ஒரு முதுவை நோக்கி சென்றுவிட்டிருந்தது . கையிலிருந்தவைகளை யாரோ பறித்ததுபோல வெறுங்கையுடன் நிற்பதாக தோன்றியது . நினைவுகளை தாண்டி அந்த மூன்று மாத சிந்தனை சில அனுபவங்களாக தேங்கி நின்றது . அதில் கசப்பைத்தவிர வேறெதையும் எண்ணக்கூடவில்லை . நான் மெதுவாக படிகளில் இறங்கி போர்டிகோ வந்தபோது அந்த இடம் எனக்கு வெறுமையை  காட்டி நிற்பதாக தோன்றியது . இன்று பக்கத்தில் நின்று அளவளாவியர்களை நாளை மூடிய கதவிர்க்கும் அதை காவல் நிற்கும் சட்டசபை ஊழியர்களுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு காலம் நகர்ந்துகொண்டிருந்தது . கீழே வைத்ததும் கிளம்பத்தயாராக இருந்த வுட்லண்ட்ஸ் பாலாவை பார்க்க பரிதாபமாக இருந்தது . சோகமான முகத்ததுடன் காரைவிட்டு இறங்கி என்னுடன் பேசவருபவரை கைகாட்டி காரிலேயே நிறுத்தினேன் . அவருக்கு அருகில் சென்று , வேலை இருக்கிறது பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம் என்றபடி அவரை வழிஅனுப்பிவைத்தேன்

வியாழன், 29 ஜூன், 2017

அடையாளமாதல் - 104 *பிளவுகளை இனிதாக்குதல் *.

ஶ்ரீ:
*பிளவுகளை இனிதாக்குதல் *
இயக்க பின்புலம் - 31
அரசியல் களம் - 33
அரசியல் என்பது வஞ்சனைகளுக்கும் கைவிடப்பாடல்களுக்கும் இடைப்பட்டவை , வலிதாங்கும் திறனற்றவர்களுக்கு அங்கு இடமில்லை . உடலின் வலிகளைக்காட்டிலும் மனவலிகள் எக்காலத்திற்குமானது , நினைவுறும்தோறும் , நெஞ்சம் உருகி கண்களில் பெருகுவது . வெட்டுப்படலுக்கு உவந்து உடலை கொடுப்பது அனைவருக்கும் சாத்தியப்படாதது . பிளவுறத்தலை ஒரு ஒத்திசைவிற்கு விடுதல் இங்கு வகுக்கப்பட்டது

தலைவர்கள் தனியார்கள் அவர்கள் இருக்குமிடம் பலரால் கவனிக்கப்படுவதாலேயே தங்கள் வாழ்வினை ஒழுக்க நெறிகளால் முறைமைப்படுத்திக்கொண்டவர்கள் . சண்முகம் அப்படிப்பட்டவர் . எனக்கான தலைமையாக ஏற்று நான் அரசியலில் வளர்ந்தது அவரின் அறிவுரைகள் படி . பின் அதைவிட்டு வெளியேறியதும் அவரிடத்தில் பிரிதொருவரை கொண்டு வைக்கமுடியாமை . அதுவே என்ஊழ் எத்துறையிலும் எக்காலத்தும் .

இந்த பதிவை நான் எழுதுகிற சமயத்தில் நாராயணசாமி  இந்த மாநில முதல்வராக இருக்கிறார் . அவரை பற்றிய எனது பதிவை பிறிதொன்றில்வைக்கிறேன். வக்கீல் முருகேசனோ டாக்டர் ஆனதவேல் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டிருந்தால் இருவருமே கொடுக்கப்பட்ட காலத்திற்குள் அதை முடித்து ஒருவேளை அத்துடன் காணாமலாகி இருக்கலாம் . மறுபடி அரசியலின் மையப்புள்ளி சண்முகத்திடமே வந்து சேர்த்தும் இருக்கலாம் . ஆனால் நாராயணசாமியை தேர்ந்தெடுத்ததின் மூலமாக அது அவர் கைக்கு மறுபடி வராதே போனது  . அதுவரை அரசியலில் நடப்பதை முடிவெடுத்ததால் அவரின் செயல்பாடுகள் நேர்மறையாக நின்றது . பின் கைவிட்டுப்போன அரசியலை துரத்த துவங்கியதும் பிறிதெவர்க்கும் அவருக்குமான இடைவெளி குறையத்துவங்கியது

தனக்கு வஞ்சகம் நிகழ்ந்ததை அவர் எடுத்துக்கொண்ட விதம் 1991 நிகழ்ந்ததை ஆனந்தபாஸ்கர் என்னிடம் விரிவாக பேசிய போது அதை ஒரு தலைவனின் கம்பீர கடந்து செல்வதை ஒத்திருந்தது . ஆனால் அதன் காயங்கள் மறைந்தாலும் வடு நெடுநாள் அவரின் நெஞ்சில் நீங்காது இருந்துவந்தது . தான் தோல்வியுற்றதாக செய்தி வந்து சேர்த்தபோது அது அவர் எதிர்பார்த்ததுதான் என்றாலும் அவை நிகழ்கிறபோது தாங்கிக்கொள்ள முடியாததாகிவிடுகிறது .

அவர் வழமையாக அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு பின்புறமாக உள்ளது ஒரு சிறிய அறை , அவரின் சாப்பாட்டு அறையாகவும் உடை மாற்ற என பலவித உபயோகத்திற்கானது . அதை ஒட்டிய பின்புறத்தில் விசாலமான குளியலறை இக்காலத்திற்கொப்பான மிக நவீன வசதிகளுடன் இருப்பதை பார்த்திருக்கிறேன் . அவை சுமார் நூற்றுஐம்பது  வருடத்திற்கும் மேல் பழமையானது . அந்த வீடு அவரின் மீதிருந்த மரியாதையின் காரணமாக பத்மினிச்சந்திரசேகர் அவர் காலம் வரை அவரின் பயன்பாட்டிற்கு என விட்டது . அதற்கு அவர் கடைசீ வரை வாடகை தந்துகொண்டிருந்தார் .

பத்மினி சந்திரசேகர் செல்வராஜ் செட்டியாரின் மகள் . புதுவையின் மிக பெரிய செல்வந்தர்களின் ஒருவர் , இன்றும் அவரது அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள் புதுவையிலும் தமிழ்நாட்டிலும் ஏராளமாக கணக்கிட்டு மாளாது இருப்பதை இன்றுவரை கேள்விப்பட்டு வருகிறோம்  . அவரது காலத்திற்குப்பின் பல அரசியல்வாதிகளின் கை வழியே அது தொடர்ந்து  முறைகேடாக இன்றுவரை கைமாற்றப்பாடு வருகிறது . செல்வராஜ் செட்டியாரைப் பற்றி ஏராளமான கதைகள், அவரை ஒரு பயங்கர வில்லன் அளவிற்கு நான்சிறுவயதில் நடுங்கவைக்கும் கதைகளை கேட்டிருக்கிறேன் . அவர் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து அவை அனைத்தும் உண்மைதான் என்பது போல எழுந்த படலம் கடைசீ வரை கலையவேயிலாதபடி நின்று விட்டது . அவரை பற்றிய பதிவை பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன் அவை புதுவை விடுதலைக்கு சம்பந்தப்பட்டது .

தான் தோல்வியுற்ற செய்தி தன்னை அடைந்ததும் , தனது சாப்பாட்டறையில் இருந்து அவர் வெளியே வரவேயில்லை. இரண்டு நாள் அதனுள்ளேயிருந்து அவர் செயல்பட்டபடி இருந்தார். ஜன்னலில்லாத, காற்றோட்டமில்லாத அந்த அறையில் எவரும் ஐந்து நிமிடத்திற்குமேல் இருக்கமுடியாது . பத்துக்கு ஏழு என்கிற அளவிலுள்ள அந்த அரை சேர்ந்தாற்போல் இருவர் நிற்க கூட இயலாது சுற்றிலும் அவரின் உடைகளை அடுக்கிவைத்த மர அலமாரிகள் , ஒருவர் மட்டுமே அமர்ந்து சாப்பிடும் மாதிரியான இரண்டடுக்கு இரண்டடி மர சாப்பாட்டு மேஜை சுமார் இரண்டடி உயரமிருக்கும் .அவர் அமர்வதற்கு சிறிய மரநாற்காலி

அவர் உட்கார்ந்துவிட்டால் அங்கு ஒருவருக்கு மட்டுமே இடமிருக்கும் . அந்த இரண்டு நாள் முழுமையும் அந்த அறையை விட்டு அவர் வெளியே வரவேயில்லை . அவரை சந்திக்க வந்தவர்களில் கட்சி சம்பந்தமாக அவர் அழைத்தவர்கள் மட்டிலுமே அவர் சந்தித்தார் . அங்கிருந்தபடி தன்னுடைய மனப்புழுக்கம் , ஆற்றாமை வெறுப்பு இழப்பின் வலி வெஞ்சினம் என பலவித மனோநிலையில் இடையே நிதானமிழக்காது அவர் நிகழ்த்திய நகர்த்தல்களை உப்பளம் விடுதியில் கூட்டம்கூட்டமாக கூடிக்கூடி ஆலோசித்து எதிர்வினையாற்ற முடியாது திகைத்தனர்

என்னிடம் ஆனந்தபாஸ்கரன் சொன்ன அந்த சொல் இன்றும் என் காதுகளில் கேட்டபடி இருக்கிறது . அவர் சொன்னார்      " மாளாத மனப்புழுக்கத்திற்கு அந்த அறையின் தங்கவியலாத புழுக்கம் ஈடுகொடுத்தது , உள்ளும் புறமுமாக புழுங்கி புழுங்கி ஒரு இனிய பழம் போலே பழுத்து கனிந்து வெளிவந்தார்" என்றார் . அந்த மனநிலையை பற்றிய சண்முகத்தின் நிலை விரிப்பை அவர் வாயாலேயே நான் ஒருவன் மட்டுமே கேட்கும் வாய்ப்பு அமைந்திருந்து . ஆனால் அதை அருகில் நின்று பார்க்கும் வாய்ப்பு அன்று எனக்கில்லை . சண்முகத்தை சந்திக்காமல் நான் தவிர்த்திருந்தால் என் அரசியில் வாழ்வு அர்த்தமற்றுப்போயிருக்கும் .

இந்த கோணத்தில் எழுதுவதால் அன்று உப்பளம் விடுதியில் நிகழந்தவைகள் பல கூறுகளில் என்னால் உணரமுடிகிறது அதன் அடிப்படையில் அன்று எனக்கு என் தரப்பில் சொல்லப்பட்டதும் ஆனந்தபாஸ்கர் , வல்சராஜ் அன்று சொன்னதும் பிற்பாடு தியாகராஜன் சொன்னது நானும் பாலனும் பேசியது அதை ஒட்டிய என் அனுமானங்கள் . இப்போது நினைக்கையில் பிரம்மிப்பூட்டுவபாவை . இறுதியாக ஜெயலலிதா கூற்றுப்படி யார் முதல்வர் என்கிறவாய்ப்பு வைத்திலிங்கத்தை வந்தடைந்தோது அவருக்கு எல்லாம் துலக்கமாக விளங்கிவிட்டது


சண்முகம் பேருருக்கொண்டு எழுவதை பெரும் பயத்தோடு அண்ணார்ந்து பார்த்தார் வைத்திலிங்கம் , ஆனால் அந்த நினைவே அவருக்கு சண்முகத்திற்கு எதிரே நிற்கவும் அவருக்கு அறைகூவல் விடுப்பவராக மாறவும் காரணமென்று அமைந்தது . வைத்திலிங்கத்தின் அரசியல் பிறழ்வு அவரை துரத்தியபடி அவர் எதிர்பார்த்த பாரம்பரிய பெருமை மரியாதை மதிப்பு என அனைத்தும் அவரை கைவிட தனியராகி பின்னெப்போதும் அது தனக்கு அளித்த அரசுசூழ்தலின் வழியாக தனக்கான இடத்தை கண்டடையாமல் , பிறர் எடுத்து அளிக்கும் நாற்காலிகளில் அமர்ந்தபடி தன் அரசியல் வாழ்வை தொடர்ந்தார். ஒவ்வொன்றிலும் ஒரு இனிய பிளவுகள் போல பிறர் செய்வதறியாது நிற்க அது அவரது காலத்தை பிளந்தபடியே இருந்தது

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...