https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 4 ஜூன், 2017

அடையாளமாதல் - 87 *நிழலின் அழகிய வெறுமை *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 87
*நிழலின் அழகிய வெறுமை   *
இயக்க பின்புலம் - 14
அரசியல் களம் - 27
நெட்டப்பாக்கத்திலிருந்து புதுவை வந்து சேர இரவு நெடுநேரமானது . அண்ணாசாலை சாலையோர கையேந்தி பவனில் எல்லோரும் முட்டை தோசை குருமா, போட்டி என ஏதேதோ சொல்ல எனக்கு எப்போதும் போல இட்லி காரச்சட்டினி , பாலனும் அன்று என்னவோ விந்தையாக இட்லி சொன்னார். எல்லோரும் டேபிளில் அமர்ந்திருக்க  . நானும் பாலனும்  காரில் உட்கார்ந்தபடி சாப்பிட துவங்கினோம் . அப்போது பாலன்  "உன்னை அவர் தொகுதில் நிற்க சொன்னது சில விஷயங்களுக்காக ஏனென உனக்கே தெரியும் ,மிக முக்கியமான காலம் இது சரியாக வந்தால் நமக்கு எதிர்காலம்,உன்னுடைய கணிப்பு சரியானது என்று எனக்கும் தெரியும் ,ஆனால் அதன் பின் என்ன என்பதுதான் இப்போதுள்ள கேள்வி , கிடைக்கும் தகவல்களையெல்லாம் ஆர்வமிகுதியால் நீ பேசியபடி உள்ளாய் . சாமான்ய தொண்டனுக்கு இவையால் யாதொரு பயனும் இல்லை . நம்மை பொறுத்தவரை எக்காரணம் கொண்டும் கண்ணன் முதல்வராக வரக் கூடாது " என்றார்

"நாம் ஆசைதான் படமுடியும் "என்றேன். அது உண்மை வேறெதுவும் செய்யக்கூடும் இடத்தில் நாங்களில்லை . "இது நாம்  சந்திக்கும் முதல் தேர்தல் . சட்டமன்ற அரசியலைபற்றி நமக்கு எந்த அனுபவமும் இல்லை .  அதில் நாம் ஆற்றக்கூடியது என்ன என்று அறிந்திருக்கவில்லை . அரசியலின் நிஜமுகம் உள்நுழைந்த பிறகே தெரியவரும் . அது பெரும் திடுக்கிலாகக் கூட இருக்கலாம் ". "கண்ணனின் அணியினர் சந்தித்த அவரின் முதல் வட்ட அணுக்கர்களின் முரண்சிதறல்கலால் அவருக்கு நிகழ்ந்த ஆபத்தை பார்த்தோம் .   நாமும் அதுபோல ஒன்றை சந்திக்க நேரலாம். அவரிடமிருந்த  பதவி அவரை அனைத்தையும் கடக்க வைத்தது . இன்று பதவிக்காக கூட நம்மால் அவற்றை கடக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை .

நாம் இன்னும் எதற்கும் தயராகாது இருக்கிறோம் . என்னை ஒருங்கிணைப்புக்கு என்று சொல்லிவிட்டீர்கள் , அதில் ஒவ்வொருநாளும் நான் செவிகூறும் விஷயங்கள் எனக்கு அச்சமூட்டுவதாக இருக்கிறது . அரசியல் என்கிற பெயரில் அது பற்றி ஒன்றும் தெரியாத  பெருங்கூட்டம் ஒன்றை கூட்டி வைத்துள்ளோம், அதுவும்  சப்புகொட்டியபடி காத்திருக்கிறது . நாமாவது அரசிலென்பது இன்னதுதான் என அறிதியிடப்படாத நிலையிலேயே நின்று கொண்டிருக்கிறோம் இருந்தும்  அதன்  உள்நுழைவிற்கு பின் அடுத்த கட்டத்திற்கான புரிதல் ஏற்படும் என நம்புகிறோம் . ஆனால் அமைப்பின் முன்னனியில் உள்ளவர்களுக்கே இந்த தேர்தலுக்கு பின் தங்களுக்கான இடம் என்ன என்கிற  புரிபடாத நிலையில் இருப்பதாக உணர்கிறேன் "

"யாரும் பாதையை முழுவதுமாக தெரிந்து கொண்டபின் பயணப்படுவதில்லை . எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துகளை தாங்கும் அடிப்படையான கட்டுமானமுள்ள அமைப்பல்ல நமது. நாம்கொண்டிருக்கும்  அச்சமே அவர்களின் தேவைகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பது அதுவே அனைத்திற்கும் நுழைவாக இருக்கலாம் .கண்ணன் முதல்வராக பதவியேற்கும் நிலையில் "இன்று ஒவ்வொரு தொகுதியிலும் நாம் கண்ணனுடன்  மோதிக்கொண்டிருக்கிறோம். அது இதுவரை போலீஸ் ஸ்டேஷன் பஞ்சாயத்து என்கிற அளவில் உள்ளது . உயிர்பலி என இதுவரை ஒன்றும்  நிகழாதது நமக்கு சாதகமானது . ஆனால் எதிர்காலம் அப்படி இருக்க வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கவில்லை" .

"அதிகாரபூர்வமான கட்சியாக இன்று இருப்பது சண்முகமும் மற்றும் உங்கள் தலைமையிலான  அமைப்பே . கண்ணனின் தொழிற்சங்க அமைப்பு நிதி திரட்டலுக்கு வேண்டுமானால் பயன்படலாமே தவிர, அது கட்சி பண்ணுவதற்கு ஏற்ற அமைப்பல்ல  . இளைஞர் காங்கிரசின் கட்சி ரீதியான  செயல்பாடுகள் கண்ணனுக்கு எக்காலத்துக்குமான அறைகூவலே . அதை ஒழித்தாலன்றி அவர் மாற்றுத்தரப்பாக களம் காணவியலாது . அதுபற்றி கண்ணன் இன்னும்  சிந்தித்ததாக தெரியவில்லை .   அந்தக்கோணத்தில் பார்பாரேயானால் வருங்காலம் பயங்கரமானதாக இருக்கலாம் "என்றேன்.

அமைதியாக சாப்பிடும் அவரை  பத்துக்கொண்டே இருக்கிறேன் , நிதர்சனத்தின் அருகில் வர பாலனுக்கு மனமில்லை . தேர்தல் வரை வந்தாகிவிட்டது , இனி மிச்சமுள்ளது வெற்றி மட்டுமே , அதற்கு தடையாக இருப்பது சபாபதி அவரை பலகீனமாக்கினாலொழிய தான் வெற்றி பெருவதைப்பற்றி நினைத்துக்கூட பாரக்கமுடியாது . ஆனால் அவருக்குள் உள்ள முதிராச்சிறுவன் எப்படியாவது வெற்றிபெற்றுவிடுவோம் என சதாசர்வகாலமும் சொல்லியபடி இருக்கிறான் . அது அவரின் வெற்று ஆசை மட்டுமே . நிஜங்கள் நிச்சயமாக பிறிதொன்று.

தேர்தலுக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில் . மூன்று நாள் கழித்து புதுவை பிரச்சார கூட்டத்திற்கு ராஜீவ்காந்தி வர இருக்கும் செய்தி வந்ததிலிருந்து. அந்நிகழ்வு ஏற்பாடுகள் சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்னிடம் பாலன் முன்பே சொல்லியிருந்தார்  . இப்போது அதை நினைவுருத்தி "முக்கிய விஷயம் , சண்முகம் பற்றிய புகார் , அது ராஜீவ்காந்தியின் காதிற்கு சரியாக சென்று விட்டால் , அவர் சபாபதியுடனான தன்னுடைய தொடர்பை குறைத்துக்கொள்வார் மேலும் அவரை அழைத்து சமாதனபடுத்த வேண்டிய நிர்பந்தமும் எழும்என்றார் . ரமேஷ்சென்னித்தலாவிடம் பேசியதாகவும் அவர் இந்தத்தகவலை ராஜீவ்காந்தியின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக உறுதியளித்திருப்பதாக கூறினார்.

எனக்கு ஏனோ அதில்ஒரு  உண்மையற்ற தொனி இருப்தாக தோன்றிப்போனது . நான் சண்முகம் என்னிடம் சொன்ன விஷயத்தை மறுபடியும் பாலனுக்கு நினைவுபடுத்த விரும்பவில்லை . அதற்கு இனிமேல் யாதொரு பொருளும் இல்லை. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கான அழைப்பிதழ் மற்றும் கடவு சீட்டு   போன்றவைகளை சண்முகத்திடமிருந்து வாங்கிவரும் பொறுப்பை என்னிடம் விட்டிருந்தார். ஆகவே அதை நாளை சென்று அவற்றை அவரிடமிருந்து  பெற்றுவருமாறு கூறினார்

ராஜீவ்காந்தியிடம் புகார் என்பது மரைக்கார் எண்ணம் என்பதுபோல எனக்கு திடீரென தோன்றியதும். அதை பற்றி ஏற்கனவே தெரிந்ததைப்போல "மரைக்கார் சொல்லுகிற எல்லாவற்றையும் நாம் செய்தாக வேண்டும் என ஒரு கட்டாயமும் நமக்கில்லை" , "இந்த விஷயத்தில் நாம் , நமக்கு சரியெனத் தோன்றியதை செய்வதே நமக்கான நல்லது " என்றேன் . பாலன் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் .

நான் யூகித்தது சரி இது மரைக்காரின் சொல் . மரைக்கார் சண்முகத்தை எல்லாநிலையிலும் பலவீனப்படுத்தி அவரை பதட்டத்திலியே வைத்திருக்க விருப்புகிறார். அதிலிருந்த செய்தியால் எனக்குள் எதோ ஒன்று நடுங்கியது

"நிஜத்தின் நிழல் அழகாயிருக்கலாம் அதனால் யாதொருபயனுமில்லை " . நான் சொன்ன எந்த நுட்பமான செய்தியும் பாலனை சென்றடையவில்லை என்கிற உண்மை எனக்கு மிகுந்த மன வருத்ததை தந்தது. இந்த சூழலில் இருந்து அவர் வெளியே வந்தாலொழிய நமக்கான நிஜமான சிக்கலை உணரப்போவதில்லை . ஒன்று எதையும் சிந்திக்கும் நிலையில் அவரில்லை அல்லது எதுப்பற்றியும் கவலையற்று தன் சுயத்தை , தன் வெற்றி தோல்வியையும் அதற்கு பின் என்ன என்பதை மட்டுமே யோசிக்கும் இடத்திலிருக்கிறார்

முதல் கட்டத்திலிருக்கும் பாலன் பாவப்பட்டவர் அவருக்கு நம் உதவி அவசியம். இரண்டாவது கட்டத்திலிருக்கும் பாலன் ஆபத்தானவர் ,எங்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் . எது எப்படியிருந்தாலும் இது தேர்தல் நேரம் முழு உழைப்பையும் கொடுக்க முடிவுசெய்தேன்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்