https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 10 ஜூன், 2017

அடையாளமாதல் - 91 *புலனுக்கு வெளியே ஒரு பனியின் துளி *

ஶ்ரீ:
அடையாளமாதல் - 91 
*புலனுக்கு வெளியே ஒரு பனியின் துளி *
இயக்க பின்புலம் - 18
அரசியல் களம் - 27


எனக்கும் தாமோதரன் சொன்னது தேவையெனப் படவே அங்கு சென்றோம் அது ஒரு அரவிந்தர் சேவார்த்திகளுக்கான  உணவு விடுதி , ஆளுக்கு ஒரு செட் சப்பாத்தி சப்ஜி சொல்லிவிட்டு  காத்திருந்தோம் . தாமோதரன் பரம்பரை காங்கிரஸ்காரர் அவர் அப்பா ஒரு காங்கிரஸ் தீவிரவாதி , காந்தீய  வழிமுறைகளை ஏற்றுக்கொள்ளாதவர் . வயோதிகத்திலும் அவர் இளமையில் வழியான  அதே கூர்க்கொண்டிருப்பதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன் , பேச்சில் கூட முதிராச் சிறுவனின் வன்முறைக் காரம் குறையாத பேசக்கூடியவர் . முதுமை மானுடர்களை சாந்தப்படுத்தும் , அதற்கு  தான் அதுவரை மறைத்து செய்த நிகழ்வுகளை  திறந்து தொகுத்துக்காட்டுவதாலேயே அவர்கள் நிறைவடைந்து மண்மறைகின்றனர் என்பர். அது எல்லோருக்கும் இல்லைபோலும்

அவரின் குணம் அவரது பிள்ளை தாமோதரனிடத்தில் கைமாற்றி விடப்பட்டு அதே  கூர்கொண்டிருப்பதைக் காண்கிறேன். அவரின் மூர்க்கம் பாதி இருந்ததில் வியப்பில்லை . அவர்களுக்குள் முரண்படுதல் ஒரு செய்தியாகும் வாய்பில்லை .அது அப்படித்தான் இருக்கமுடியும் . இருவருக்கும் பேச்சுவார்த்தை நின்று பல வருஷங்களாகிறது

சாப்பாட்டிற்கு என்ன செய்தார் எப்படி சமாளித்தார் என்று எனக்கு இன்றுவரை புரிந்ததில்லை அவருக்கு வயதிற்கு வந்த பெண்கள் இரண்டுபேருண்டு . வீடு கூட பொறம்போக்கு நிலத்தில்தான் கட்டியிருந்தார், சாதாரண குடிசைவீடு , இரண்டு மூன்று கட்டுத் தடுப்பாக நீண்டிருக்கும் . இதில் அரசங்கதோடு ஓயாத சண்டை வேறு . பாலனின் அரசியல் வெற்றி அவரைவிட தாமோதரனுக்கு இன்றியமையாதது . குடும்ப செலவுகளை அவர் அப்பா பார்த்துக்கொண்டதால்  , கட்டுப்படியாகாது   அரசியலில் இவரால் ஈடுபட இயலுகிறது . கஷ்ட ஜீவனம் . இதெல்லாம் பாலனுக்கும்  தெரியும் .பாலனுக்கு அவர் தனக்கு செய்த உதவிகளைத் தாண்டி அவர்மீது கனிவோ பெரியமரியாதையோ இருந்ததில்லை என்பதை பிற்பாடு நடந்த ஒரு கொடுமையான  சம்பவத்திலிருந்து புரிந்து கொண்டேன்

அந்த உணவு விடுதியில் ஒரே பணியாள் , ஆகவே சொன்னது மேஜைக்கு வர வெகு காலம் எடுக்கும் . நான் தாமோதரனிடம் அரசியல் போக்கு எப்படி போய்க்கொண்டிருக்கிறது என பொதுவில் ஆரம்பித்தேன் , அவரிடம் சொல்லவருவதற்கு பீடிகை இடுவதெல்லாம் பழக்கமில்லை . முதலியார்பேட்டை சமாச்சாரம் ஒன்றும் தெளிவாக இல்லை , ஆனால் மாநில அளவில் காங்கிரஸ்க்கு அரசமைக்கும் வாய்ப்பிருப்பதைப் பற்றி சொல்லிவிட்டு , சண்முகம் தோல்வி அடையும் செய்தி தனக்கு கிடைத்ததைப்பற்றி சொல்லத் துவங்கினார் . இதுவே நான் எதிர்பார்க்கும் திரி . ஏறக்குறைய எனக்கு வந்த தகவல்கள் போலவே அவர் சொன்னதும் இருந்தது . சண்முகத்தின் தோல்வி அரசியலில் நமக்கு பலன் தரும் வாய்ப்பு அதிகம் என்றார் , இது நான் யோசிக்காத கோணம் , எப்படி என்றதற்கு , பழைய வன்னியர் கோட்பாடை உதாரணமாக சொன்னார் . தாமோதரன் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவர் , அதன் மீது அவருக்கு அபிமானம் இருப்பது புரிந்துகொள்ளக்கூடியதே . பாலன் வெற்றிபெற்றால் அமைச்சர் பதவிக்கு போட்டி ரங்கசாமி மட்டுமே . இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்கிற பதாகை தில்லியிடம் பேச நமக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்றார் . ஆம் அது இயலுவதே . அந்த ஆட்டத்தை தெளிவாக திட்டமிட்டால் செறிவாக ஆட இயலும். நானும் அதை அறிந்திருந்தேன்

நான் அவர் சொன்னதை முழுதுமாக ஏற்றுக்கொண்டேன் . அது வெற்றிக்கு பிறகு ஆட வேண்டிய ஆட்டம் . அவர் தேர்தலில் வென்று வரட்டும் . இப்போது அதுபற்றி பேசுவதில் அர்த்தம் இருப்பதாக நான் எண்ணவில்லை என்றதற்கு , பாலன் வெற்றிப்பெறுவதில் நீ சந்தேகம் கொள்கிறாயா என்று நேரடியாக கேட்டார் , அது அவரது இயற்கையான சுபாவம் . இது சற்று சரியாக பேசவேண்டிய தருணம் , எனனுடைய மனக்கணக்கு என்கிற வியாஜமெல்லாம் அவரிடம் எடுபடாது , அவர் தவறுதலாக அதன் முனையை மாற்றி அமைத்தால்  அர்த்தமே மாறிவிடுவதுடன் , இது பிறர் போல நானும் பாலனின் தோல்வியை விழைவதாக பொருள்படும் ஆபத்திருக்கிறது . " 

நம்மை சேர்த்தவர்கள் யார் அவருடைய தோல்வியை விரும்பப் போகிறார்கள் தவிரவும் நம்முடைய எதிர்காலம் அவரின் வெற்றிக்கு அடுத்துத்தான் இருக்கிறது . களத்தில் உள்ளவர்கள் யாரும் வெற்றிபெற்றவிட்ட மனோநிலையில் களத்தை அணுகுவதை காட்டிலும் தாவறானது பிறிதொன்றில்லை . ஒவ்வொரு கணமும் தோல்வியை எதிர்நோக்கினால் மட்டுமே நம்மால் காலத்தில் பிறரின் சதிகளை கண்டடைந்து  களையமுடியும் . நீங்களும் இப்படி பேசுவது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது என்றதற்கு , மவுனமாக ஆதரித்தார்

சுப்பாராயனை எப்போது நான் சந்தித்ததாக கேட்டார் . நான் இதற்கு நேரடியான பதிலாக அவரை சந்தித்து ஒருவாரத்திற்குமேல் ஆகிறது என்றேன் எங்களுக்குள் அது மிக நீண்ட காலம் என்று தெரியும் , ஏதாவது மனத்தாங்கள் இருந்தாலோழிய அவ்வளவு காலம் சந்திப்பதை தவிர்க்க இயலாது . காரணமாக நான்  அவர் களத்தில் மிக தீவிரமாக இருப்பவர் . இப்போது சகஜமாக பேசுகிற நிலையில் இல்லை  என்றதும் , அது உண்மை என்பதை அவரும்  அறிந்திருந்தார்  , அவரின் சில கள அணுகுமுறைகள் பாலனின் வெற்றியை பாதிக்கலாம் என அஞ்சுவதாகக் கூறினேன்.

கள நிர்வாகத்தில் தாமோதரன் ஒன்றும் முட்டாளில்லை . நான் சொன்னதை ஆமோதித்தார் , பாலனுடைய மனநிலையும் சொல்லிக்கொள்கிற மாதிரியில்லை என்றார் , எனக்கு அது வருத்தமாக இருந்தது . சண்முகத்தை சந்திப்பதை பற்றி பேச்சு திரும்பியதும் , என்ன நிகழக்கூடும் என கவலையுடன் பேசத்தொடங்கினோம் . நான்,சண்முகத்தின் தோல்வி அரசியலை புரட்டிப்போடும் , அதன் விளைவுகளை நம்மால் கணிக்க இயலாது என்றேன் 

சண்முகத்தின் தோல்வியோடு எந்த கேள்வியும் நின்றுவிடப்போவதில்லை . கண்ணன் சண்முகத்ததை களத்தில்  வெட்டினால் ,அவரை  சண்முகம் சட்டமன்ற கட்சி தேர்தலில் கண்ணனை கணக்கு தீர்ப்பதை யாராலும் தடுக்க முடியாது . கட்சித்தலைவருடைய ஆட்டமிது இதில் யாரும் உள்நுழையமுடியாது . மரைக்கார் பாராளுமன்ற வேட்பாளார் அவரின் வெற்றி உறுதியானது, அதில் யாரும் எவ்வித ஆட்டமும் ஆடமுடியாது , வெளிப்படையான  சதிகள் கூட்டணியை பாதிக்கும் .

மேலும் ஜெயலலிதா ஷீலா தீக்ஷித்துடன் சரியான தொடர்பில் இருக்கிறார் . ராஜிவ்காந்திக்கு தகவல்கள் உடனுக்குடன் சென்றபடி இருக்கிறது . அவர்களுக்கு  சில கேள்விகளை கேட்டுத்தான் பதில் பெறவேண்டும் என்கிற அவசியமில்லை , தில்லி மேலிடம்தனக்கு  கிடைக்கும் தகவல்களை வைத்து அது தனக்கான முடிவுகளை தேறும்

கண்ணனின் சதிகளை சண்முகம் மேலிடத்திற்கு சொல்லியிருப்பாரா என்கிற தாமோதரன் கேள்விக்கு , நான் அதற்கு அவசியமேயில்லை . மத்திய காவல் துறையின் நுண்பிரிவு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கள நிலவரங்களை அனுப்பியபடி இருக்கும் . தில்லி மேலிடம் மாநிலத்தில் ஆட்சி அமையாவிட்டால் இந்த தகவல்களை சரிபார்த்து அதில் கிடைக்கும் கள உண்மைகளை ஆராய்ந்து அதன் பின் தன்னுடைய முடிவை தேறும் . கண்ணன் தன்னுடைய வாழ்வில் காங்கிரஸுக்குள்  ஆடும் கடைசீ ஆட்டமாக இது இருக்கும் வாய்ப்பே அதிகம் . ஆனால் இதற்கு  அசாத்திய மனஉறுதியும் தைரியமும் வேண்டும் . நம்முடைய இயக்கத்தில் இருந்து இந்த இடத்திற்கு வென்று வந்தவரை நாம் பாராட்டத்தான் வேண்டும் என்றேன்.


சட்டமன்ற தலைவர் தேர்தலில் மரைக்கார் ஒரு அபிப்ராயம் மட்டுமே , அதை தாண்டி அவரால் அந்த கூட்டத்தில் உள்நுழைய முடியாதென்றே நினைக்கிறேன் . அந்த கூட்டத்தில் கட்சித்தலைவர்  கலந்துகொள்ள முடியும் , மற்றபடி முடிவுகள் மேலிடப்பார்வையாளர்கள் முன்னிலை வகிப்பார்கள் .ஏக மனதாக தேர்தெடுக்கப்பட்டால் முடிவு மேலிடத்திற்கு தெரிவிக்கப்படும் .இழுபறியானால் தலைவரை தில்லி மேலிடம் முடிவுசெய்யும் .கண்ணனுக்கு வாய்ப்பில்லையென்றால் வைத்திலிங்கம் தான் வரமுடியும் ஆனால் அது எப்படி நடந்து முடியும் என்றுதான் தெரியவில்லை என்றேன் . சண்முகம் பற்றிய பேச்சி வந்தவுடன் நான் அன்று எங்களிடம் சொன்ன விஷயத்தை அவருக்கு நினைவுபடுத்தினேன் . அந்த சொல் என்னை போலவே தாமோதரனையும் உருக்கியது என அன்றே கவனித்தேன் . நான் அவரிடம் மேற்கொண்டு பேசாமல் பாலன் சொன்ன சபாபதி குற்றச்சாட்டை அவரிடம் சொல்லும்போது கவனமாய் இருக்கும்படி சொன்னேன் , ஆனால் நான் எதிர்பார்த்தபடி அதை பற்றி அவரிடம் அதுபற்றி  பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டார் . எனக்கும்  அது மிக நல்லதாக பட்டது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 68 அழைப்பிதழ்

 காண்டீபன்