https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 17 ஜூன், 2017

அடையாளமாதல் - 98 *இயலாமையின் விழைவு *

ஶ்ரீ:





*இயலாமையின் விழைவு  *
இயக்க பின்புலம் - 25
அரசியல் களம் - 29







நாங்கள் போய் சேருவதற்கும் முருகானந்தம் வலிய தாமோதரனிடம் ஏதோ பேசி  அது வாய்தகராறாக மாறி கைகலப்பை அடைந்திருந்தது . அனேகமாக அது திட்டமிடப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன் சற்றுநேரத்தில் இரண்டு தரப்பிலும் கூட்டம் கூடிவந்தது , மெல்ல கலவரமாக மாரி அந்த இடம் போற்கலம்போலாகி கடை பஸ் என ஏதோதோ உடைக்கப்பட்டது . என்னை யாரோசிலர் அலுவலகத்துள் இழுத்து வந்துவிட்டார்கள் பாலன் இன்னும் அங்குவந்து சேரவில்லை என்பதை தாமதமாக உணர்ந்தேன் , அப்போதுதான் திட்டமிடல் பற்றிய சந்தேகம் என்னுள் துளிர்த்தது . என்னை வழிமறித்தபடியும்் யாரும் கட்சி அலுவலகத்திற்குள் வந்துவிடாது இருக்க ஆயுதங்களுடன் சிலர் வெளியே நின்றிந்தார்கள் , நான் வெளிச்செல்ல ஏவ்வளவோ முயன்றும் என்னால் செல்ல முடியவில்லை 

ஜன்னல் வழியாக நான் பார்த்தக்காட்சி முருகானந்தம் ஓட அவர்மீது தாமோதரன் சைக்கிளை தூக்கி அடிப்பதை . அலுவலகத்தை சுற்றி நூறுபேருக்கு மேல் இருப்பார்கள். கமலக்கண்ணனை எங்கும் பார்க்கமுடியவில்லை தாமோதரனை சூழ்ந்தபடி ஏழு எட்டுப்பேர் சுற்றி பாதுகாப்பிற்கு நின்றிந்தார்கள் அனைவரும் அவரின் ஊர்க்காரர்கள் .சண்டைக்கு புகழ்பெற்றவர்கள் . எனக்கு அப்பொது நிச்சயமாக புரிந்தது இது திட்டமிடப்பட்டது . இருபது நிமிடத்தில் அனைத்தும் முடிவுக்கு வந்தது. பாலன் வேகவேகமாக காலத்திற்குள் நுழைந்து அனைவரையும் கண்டிக்க பெருங்குரலில் கத்திக்கொண்டிருந்தார்

ரத்த காயங்களுடன் சிலர் அங்குமிங்கும் கிடக்க , அவர்களை வண்டிவைத்து மருத்துவமனைக்கு கொண்டுசென்றார்கள் . பாலன் ஆவேசமாக அலுவலகத்திற்குள் நுழைய உடன் வந்த தாமோதரனை பார்த்து சப்தமாக கண்டிக்க ஆரம்பித்த்தார் . அனைவரையும் சுற்றிச்சுற்றிபார்த்தபடி பேசிக்கொண்டிருந்தவர் .என்னை பார்த்ததும் என்னநீயுமா என்றார்நான் மறுக்க முற்பட, என்னை அங்கிருந்து உடனடியாக வெளியேறச்சொன்னார் . நான் தயங்கி நிற்க , மறுபடியும் ஓங்கிச்சொல்ல வேறு வழியற்று நான் வீடு திரும்பினேன் .

அடுத்தநாள் காலை பாலன் வீட்டில் , அவர் மனைவிதான் வரவேற்றார் எனக்கு சங்கடமாக இருந்ததது , அவரைப்பார்த்ததும் ஒரு வருத்தம் அது புண்ணகை அவரிடமிருந்து வெளிப்பட்டது. “பின் கட்டிலில் இருக்கிறார்என்றார் . நான் அவரை சென்று சந்தித்தேன் , முகம் தெளிந்திருந்தது , என்னை பார்த்ததும் சமாதானமாக நான்தான் அன்னைக்கே சொன்னானே என்கிறார் . நான் ஒன்றும் பேசாது அவர் எதிரில் உள்ள நாற்காலியில் அமர்ந்தேன் , எதில் வந்தாய் என்றார் .ஏன் காரில்தான் என்றேன் என்றேன் , நான் பெரும்பாலும் பைக்கில் தான் அவர் வீட்டிற்கு செல்வது வழமை

மரைக்காரைச் சந்திக்க வேண்டுமா ஏன் ?என்றேன் காலையில் மரைக்கரின் வீட்டிலிருந்து அழைப்புவந்ததாகவும் , சட்டமன்ற கட்சித்தலைவருக்கான தேர்தல் நாளை நடக்க இருப்பதை பற்றி கூறி , “நீயும்வா போய்வரலாம்என்றார் . எனக்கும் அவரை பார்க்கவேண்டும் எனது தோன்றியது . கூட்டம்எப்போதுஎன்றதற்கு , சண்முகத்தின் தோல்வி பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதை பற்றி சொன்னார்

அவர்கள் தரப்பில் யார் களத்தில் இருக்கிறார்கள்என்றதற்கு பிரதானம் மாநிலங்களவை உறுப்பினர் நாராயணசாமி என்றார் . மரைக்கார் என்ன மனநிலையில் இருக்கிறார் என்றதும் பாலன் அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றார், “நேரில் சென்றாலோழிய அறிவியலாது அதான் உன்னை எதிர்பார்த்திருந்தேன்என்றார் அப்போது நேரம் பின் மதியம் 2:00 மணி  இருக்கும் . சரி போகலாம் என்று புறப்பட்டோம்

முதல்நாள் நிகழ்வினால் முதலியார்பேட்டை பதட்டமாக இருந்தது . எங்கும் போலீஸ் தொப்பிகளாக தெரிந்தது பாலன் தெரு முனையில் இருப்பக்கமும் போலீஸ் அறந்திருப்பதை அவர்கள் பாலனை கண்டவுடன் எழுந்து விறைப்பாக நின்றபோதுதான் அதை இன்னும் தீவிரமாக உணரமுடிந்தது. மெளனமாக ரோடியர் மில் சாலை ஏறி கடலூர் சாலை திரும்பினேன் , சில கடைகள் மூடப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது , வலது புறம் திரும்பினால் கடலூர் சாலை இரண்டாகப் பிரியும் ஒன்று கடலூருக்கு பிறிதொன்று உப்பளம் வழியாக கடற்கரை சாலைக்கு . மரைக்காரரின் வீடு கடற்கரையை ஒட்டி இருந்தது

பக்கத்தில் அமர்ந்திருந்த பாலனிடம் அலுவலகம் போய் போகலாமா என்றதற்கு வேண்டாம் என்றதால் இடப்புறமாக உப்பளம் செல்லும் பாதை திருப்பி வண்டி போய்க்கொண்டிருந்தது . மரைக்காயர் வீடு வரும் வரை பாலன் ஒன்றும் பேசவில்லை எனக்கும் அது உசிதமான தோன்றவே அவர் மௌனத்தை கலைக்கவில்லை



எனக்கு நேற்றிரவு நடந்த கலவரம் மனதிற்குள் ஓடியபடிஇருந்தது . இது , இது நான் நினைப்பதை போல திட்டமிடப்பட்டதாக இருந்தால் புலி வாலை பிடித்தக்கதைதான் . சக்தியற்றவர்கள் விழைவுகள் யதார்த்தத்திற்கு அருகில் அமையவில்லை என்றால் அது இளிவரலை மட்டுமல்ல நம் இயலாமையை காட்டிக்கொடுத்துவிடும் இது இயலாமையின் விழைவு மட்டுமே . அரசியலின் முகங்கங்களை பாரத்தேயாகவேண்டிய இடத்திற்கு வந்து நிற்கிறோம் . உள்ளே ஏதோ நலுங்கியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...