https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 22 ஜூன், 2017

அடையாளமாதல் - 100 *வாழக் கோட்டுதல் * .

ஶ்ரீ:





*வாழக் கோட்டுதல் *
இயக்க பின்புலம் - 27
அரசியல் களம் - 30




மரைக்கார் வீட்டின் கார்நிறுத்துமிடத்தில் அன்று கார் எதுவும் நிறுத்தப்படவில்லை . சாரிசாரியாக வெளியில் ஒருங்கமைக்கப்பட்டிருந்தன . காலியான கார்நிறுத்துமிடத்தில் நிறையாக நாற்காலிகள் போடப்பட்டிருந்ததில்  ஒருசில புதுமுகங்களை அங்கு பார்க்கமுடிந்தது , அவர்களில் பெரும்பாலோரை வேறு எங்கும் பார்க்கமுடியாது , அவர்கள் மரைக்காயர் ஆட்கள், தனித்து தெரிகவர்கள், பெரும்பாலும் வலையர்கள் . உடலிலும் வாயிலும் சிறு வாடை எப்போதுமுள்ளவர்கள் ஆகவே கரடுமுரடானவர்கள் .

வெளியே போடப்பட்டிருந்த நாற்காலியில் ரங்கசாமியை பார்த்தேன் அப்போது என்னை அவருக்கு தெரியாது .பாலன் சென்று அவரிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தார் , பின்னர் என்னிடம் திரும்பிமரைக்கார் பின்கட்டுக்கு வந்துவிட்டாரா? பார்என்றார் . நான் உள்ளே சென்றேன் . நான் அந்த வீட்டில் சகஜமாய் புழங்க அனுமதிக்கப்பட்டிருந்தேன் . ஏன்என்று எனக்குத்தெரியாது . கிருஷ்ணமூர்த்தி ஒரு காரணமாக இருக்கலாம் . அங்கு யாரும் கிருஷ்ணமூர்த்தி இருக்கும் போது பின்கட்டுக்கு நுழைவதில்லை . நான் கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சுவதில்லை என்பதால் நான் சகஜமாக அங்கு அமர்வதால் , என்னிடமிருந்து அவர்கள் விலகியே நின்றினர்  , நான் அவருக்கு வேண்டியவன் என்றோ அல்லது அவருக்கும் மேலே என்றோ  என எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கலாம்

நான் அவருக்கு பெரிதும் முரண்பட்டவன் என்பது தெரிந்தால் அவர்களின் அணுகுமுறை மாறி இருக்கலாம் . நான் பின்கட்டுக்கு போனபோது அங்கு மரைக்கார் அமைந்திருந்தார் .முக்கியஸ்தர்களை அங்கு சந்திப்பது அவரின் வழமை . நான் ரங்கசாமி வந்திருப்பதை சொன்னேன் . அவர் தலையாட்டிவிட்டு "சரி" என்றார் . அது நான் எதிர்பார்ததுதான் . என்னை பாலனுடன் வருபவன் என்பதை தாண்டி என்னை அவர் அறிந்திருக்கவில்லை . என் பெயர் கூட அவருக்கு தெரியாது . நான் வெளியில் வந்து மரைக்கார் இருப்பதை சொன்னேன் . பாலன் பின்கட்டுக்கு சென்றார் . நான் வெளியே  தெரிந்த முகங்களுடன் அரட்டையடித்தபடி இருந்தேன் . அவர்களில் சிலர் மரைக்காருக்கு நெருக்கமானவர்கள் . அவர்களின் தகவல் எனக்கு பயன் மிக்கது .

அரசியலை போல வேடிக்கையான விளையாட்டு பிறிதொன்றில்லை , எலலோரும் எல்லாவற்றையும் யூகித்தே நடந்துகொள்வார்கள் . அது பெரும்பாலும் மிகைப்படுத்தப்டட தவறாகவே இருக்கும் . எவருக்கும் இன்னதுதான் நிஜம் என்றோ இதுதான் நிகழவிருக்கிறதென்றோ அறுதியிட்டு சொல்லமுடியாது . எவரும் அவரின் கீழ்நிலையில் உள்ளவர்களுடன் எல்லாம் தெரிந்ததாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்து நான் மெல்ல சிரித்தால், அவரின் பேச்சி தடைபட்டுவிடும் . சில நிமிடங்களில் அவர் என்னுடனான உறவை துவக்கவோ , அறிமுகமாயிருந்தால் அதை சீர்படுத்தவோ முயற்சிப்பார்கள் . இது மேலிருந்து கீழ்வரை உள்ள முறைமை. பார்க்க மிக பரிபவமாக இருக்கும்

அனைத்துமே ஒருவித நடிப்பும், அலம்பலும்,சலம்பலுமே அரசியல். அவரவர் நிலைகளே  முடிவென அசைபாவை . சில   உயர் பதவியில் இருபவரில் தொடங்கி கடைநிலையார்வரை இதுவே முறைமை சில ஏற்றமிறக்கம் இருக்கலாம், அது அவரின் புரிதலின்  தாரதம்யம் பொறுத்தது  . முன் திட்டமிடல் என்கிற ஒன்றை நான் எங்குமே பார்க்கவில்லை . கேள்விபடுதல்களிலிருந்து , எதிர்வினை துவங்கும். இரண்டு பக்கத்திலிருந்து பார்க்கும் வாய்ப்புள்ள எவருக்கும், இது மனம்பிறழ்ந்தவர்களின் நடவடிக்கை போல தோற்றமளிக்கும்

சிறிது நேரத்தில் பாலனும் மரைக்காயரும் பேசியபடி வெளிவந்தார்கள் , கார் நிறுத்துமிடத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த ரங்கசாமி மரைக்கரை பார்த்ததும் ஏழுந்து வணங்கினார் , மரைக்கார் அதை எதிர்கொண்டவிதம் என் மனதில் சிறிய அலைகளை கிளப்பினாலும் , அது சகஜம் என என்னுள் ஒன்று ஏழுந்து ஆற்றுப்படுத்தியது.இதுவும் ஒரு வகையில் உளச்சிக்கலில் இருந்து வெளிவருவதே

மரைக்கார் பாலனுடன் பேசியபடி வீட்டின் பிரதான நுழைவிற்கு அருகில் வந்தவுடன் அவரின்  டிரைவர் வண்டியை எடுக்க முன்னே செல்ல . மரைக்கார் வேண்டாம் என்றார் , பாலனிடம் திரும்பி உன்னிடம் வண்டி இருக்கிறதா என்றதற்கு என்னை காட்டி "அவர் வண்டி" என்றார் என்னிடம் வண்டியை எடுக்க சொன்னதும், நான் புரியாது கதவை திறந்ததுகொண்டு வெளியே வந்தது என் டிரைவரிடம்  அங்கேயே காத்திருக்கும்படி சொல்லிவிட்டு , வண்டியை எடுத்துக்கொண்டு நுழைவாயிலுக்கு வந்தேன் .

மரைக்கார் முன் சீட்டில் அமர்ந்துகொள்ள பின் சீட்டில் பாலன் ஏறிக்கொண்டார் , நான் மெளனமாக தீயணைப்பு நிலையம் வந்ததும் இடாதா வலதா என்றேன் மரைக்கார் எல்லாவற்றிற்கும் சகுனம் பார்ப்பவராதலால் கிளம்பும்போது "எங்கு" என கேட்பது முறைமையல்ல , அவர் வலது எனறதும் நான் உப்பளம் அரசினர் விடுதியை நோக்கி வண்டியை செலுத்த தொடங்கினேன் . பாலன் மரிகாரிடம் கெஞ்சும் தொனியில்  "கண்ணன் வரமால் பாத்துக்கங்கண்ணா "என்றதும் மரைக்கார் அவரிடம்" நான் அதை செய்வேன் என்று நினைக்கிறாயா" என்றார் ,பாலனுக்கு பரமதிருப்தி . , வைத்திலிங்கம் தான் தன் தேர்வு என்றும் , ஆனால் அவருக்கு கண்ணனை எதிர்கொள்ள முடியாது , என்சார்பாக கிருஷ்ணமூர்த்தி அனைத்தையும் ஒருங்குவார் என்றார் . எனக்கு அது பெரும் வருத்தத்தை கொடுத்தது

அதற்கானவர் அல்ல கிருஷ்ணமூர்த்தி . மரைக்கார் ஒருநாள் இதற்கு வருத்தப்படுவார் என நினைத்துக்கொண்டேன் . அமைச்சரவையை பற்றி பேசும்போது சபாபதி அமைச்சராகும் வாய்ப்புள்ளதா என்றதற்கு   மரைக்கார் அதற்கு வாய்ப்பில்லை என்றார் .மற்றபடி யார் அமைச்சர்கள் என்பதை பற்றிய தன் எண்ணத்தை சொல்லிக்கொண்டுவந்தார்


தகவல்களாக கிடைப்பதை தாண்டி மரைக்கார் பாலனிடம் வேறெதுவும் பேசவில்லை . ஒன்று எனக்கு புரிந்தது , பாலனுக்கு அவர் சொன்னது தகவல்கள் மட்டுமே , அரசியலில் பாலனின் பங்குபற்றியோ, அவரது எதிர்கால திட்டங்களில் பாலனின் பங்களிப்பைப் பற்றியோ அவர் பேசாதது ஏமாற்றமாக இருந்தது . எங்களின் பங்களிப்பு இனி என்னவாக இருக்கப்போகிறது , என்பதுதான் எங்களின் உடனடி பிரச்சனை . எதிர்கட்சியாகவிருக்கும்போது . போராட்டங்களின் வழியாக அமைப்பை சிதையாது கொண்டுசெல்லாம். அளும்கட்சியானபிறகு அவர்களின் பரப்பிற்கு மடைகட்டுவது அறிவீனம் . பாலனின் அரசியல் வாழ்வு தேர்தலில் கரைந்து போனது . இனிஇயக்கத்திற்கு மற்றொரு இலக்கை சுட்டுவது எளிதல்ல. மண்மூடி  அடையாளமிழந்து போனாலும் வாழ்வதற்கான காலம் முடியும்வரையில் மூச்சிற்கு  மூக்கைகோட்டி காற்றிற்கு  கூர்ந்தாக வேண்டும்  , அத்துடன் இழவு வாயுமல்லவா உடனெழுந்து வருகிறது , அதற்காகவாவது கைநீட்டித்தான் ஆகவேண்டுமா ?.பாலன் அதை தன்னைக் கேட்டுக்கொண்டாரா  எனத் தெரியவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக