https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 28 ஜூன், 2017

அடையாளமாதல் - 103 *அதிகாரத்தில் தடை * .


ஶ்ரீ:



*அதிகாரத்தில் தடை  *
இயக்க பின்புலம் - 30
அரசியல் களம் - 32





வைத்திலிங்கத்தின்  உளச்சிக்கலே அவரின் ரிபுவாக எல்லா பாதைக்கும் தடையாக அமைந்தது . சட்டமன்ற கட்சி தலைவர் தேர்தல் கூட்டம் இரண்டாவது முறை கூடும்போது ,அனுபவம் முன்னுரிமை என்கிற பதாகை முன்னிறுத்தப்பட்டு இதில் வைத்திலிங்கம் தன்னை ஒரு போட்டியாளராக முன்னிறுத்தாததால் . வாய்ப்பு கண்ணன் என்கிற கட்டத்தை அடைந்தது …. பல மணிநேர இழுபறிக்கு பிறகு ,முடிவாக வாழப்பாடி ராமமூர்த்தி மூலமாக ஜெயலலிதாவிற்கு தகவல் போனதும், அவர் மூலமாகதனது ஆதரவு சண்முகம் மட்டுமே அவரில்லாதபட்சத்தில் அவரின் முடிவே தனுக்குமானதுஎன்று சொல்லவைத்ததும். வைத்திலிங்கம் முன்னிறுத்தப்பட்டு , சட்டமான்ற கட்சித்தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் . கண்ணன் வைத்திலிங்கம் கீழே பணியாற்றுவது அவருக்குகௌரவத்திற்கு”!!   உகந்ததல்ல என்பதாலும் , ஆட்சியை வைத்திலிங்கம் சுதந்திரமாக கொண்டுசெல்லவும் கண்ணன் அமைச்சரவையில் இடம்பெறாது பார்த்துக்கொள்ளப்பட்டது

அவர் சபாநாயகராக்கப்பட்டர் . இது கண்ணனின் அரசியல் பாதையில் என்றுமே விலக்கமுடியாத தடையாக அவரின் வாழ்நாள்முழுவதும் கிடக்கப்போகிறது . சண்முகம் கண்ணன் தன்னுக்கு இழைத்த குற்றத்திற்கு நிரந்தரமாக அவரது கணக்கை முடித்துவைத்தார் . இணைக்கட்சி நடத்துதலில் பெறும் வெற்றி பெற்ற அவர் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு    “ அனைத்து கட்சிக்கும்  அப்பார்பபட்டவரானது “ !! நல்ல முரண்நகை .

நல்லது , நல்லதல்லாதது என யார் முடிவு செய்ய இயலும் . அது நல்லதென உள்ளது ஒரு  காலத்தில் உள்ளது .எல்லா  காலத்திற்கும்  நல்லதென  இருப்பதில்லை.நடந்தவைகள் அனைத்துமே நன்று எனக்கொண்டால் , அது எப்படி நன்றென ஆகிறது என்பதை நாளையென வரிகின்ற காலத்தை கூர்வதால் மட்டுமே எவரும் அறிய இயலுமென்கிறது . உதிரியாக நிகழ்ந்துபடி அவை அனைத்தும் பெரும்திட்ட வாதமெனும் மையசாலைகளில் சென்று இணைகின்றன. கசந்தவர்களும் அதை ஒருநாள் உவகையுடன் ஏற்கின்றனர் . எனக்கு அது நான்கு வித வாய்ப்புகளை வழங்கியது , பார்வையாளனாக , நிகழ்வதில் சிறு பங்கினை ஆற்றுபவனாக , முழு திட்டமிடலும் அதன் வழிநடத்தலுமாக , பின் எந்தவித சம்பந்தமுமின்றி நோக்கனாக மட்டுமேயான நிலை

இங்கிருந்தபடி  நடந்தவைகளை தொகுக்க முயற்சிக்கிறேன் . சண்முகம் , மரைக்காயர் , கண்ணன் இவர்கள் முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக புதுவை அரசியல் எந்த திக்கில் பயணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்பவர்களாக , அதன் பலனை நேரடியாக தங்கள் தளத்திற்குள் கொண்டுவரும் திறமையுள்ளவர்களாக இருந்தார்கள் . இவர்களின் செயல்களை என் பார்வையிலிருந்து நான் இப்படித்தான் தொகுப்பேன்

சண்முகம் , கண்ணன்  பின் மரைக்காயர் . கட்சி அமைப்பை வழி நடத்துவது அதன் வழியாக தன்னுடைய கனவுகளை நோக்கி நகர்த்தல் என்பதால் இவர்களை நேர்மறையாளர்கள் என்கிற வட்டத்திற்குள் கொண்டுவருகிறேன் . மரைக்காயர் எப்பவும் ஆட்சி அதிகாரத்தில் நிலைநின்றார் , என்பதாலும் அவை எப்பவும் அரசுசூழ்கையைத்தவிர பிறிதில்லை என்பதாலும் அவரை எதிரமறையாளராக வைத்ததாலன்றி நகர்த்தலுக்கு சாத்திமற்றுப்போகும்.

கட்சி அமைப்பை கையாள்வது என்பது அவ்வளவு எளிதானதன்று . சாமான்யருடனும் , அனைத்துமட்ட தலைவர்களுடனும் தொடர் உரையாடல்களில் ஈடுபடுவது. குறைந்தபட்ச ஜனநாயகபண்பில்லாதவர்கள் இந்தபதவிக்கு வரமுடியாது . நடிப்பாக செய்தாலும் அத்தகைய மனமில்லாதவர்களுக்கு இவை கட்டுப்படியாவதில்லை

சண்முகத்தையும் கண்ணனையும் துலாத்தட்டின் ஒரு பக்கமாக வைப்பது குற்றம் என்றாலும் முக்கிய ஆளுமைகளில் மூவரில் மரைக்காயரை இணைத்து வைத்தால் இருவரையும் ஒரு கூராக்கிதான்னாகவேண்டும் . இரண்டாவது தலைமுறை அரசியல்வாதிகளாக காங்கிரஸைப்  பொறுத்தவரை வைத்திலிங்கம் நாராயணசாமி . இருவரும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் அரசியலில் நுழைந்தவர்கள் . ஆனால் இருவருக்கும் பெரிய வேறுபாடுகள் உண்டு

வைத்திலிங்கம் ஒரு இடைச்செறுகளலானது 1991 இல் தான், அதுவரை தேர்தல் களத்தில் தன் முயற்சியால் மேலெழுந்து வந்தவர் . முதல் முறை அரசியலில் நிற்க வாய்பபு வந்தபோது மறுத்து சில காலம் காணமால் போனார். அவரை பழனியில் கண்டுபிடித்து கொண்டுவந்து 1980 தேர்தலில் நிறுத்தியபோது , தோல்வியுற்றார் அதனால் வெறிகொண்டு 1985 தேர்தலில் நின்று அரசியலில் நுழைந்தார் . ஆனால் நாராயணசாமியை பொறுத்தவரை . முதலில் இருந்தே இடைச்செறுகளாக ,அரசியலை தொடங்கு இன்றுவரை அதையே தனக்கான அரசியல் யுக்தி என நினைக்கிறார் .

அரசியல் தன் சொந்த விருப்புவெறுப்புகளினால் வழியாக அமைத்து செயல்பட்டவர்கள், அதற்கான விலையை கொடுத்தேயாகவேண்டும் என்பது விண்ணகத்து தெய்வங்கள் வகுத்தநெறி . அதைவிட அதைக்கொடுக்க்கவேண்டிய நேரம் அதுவே அந்த தெய்வங்களின் ஆடல் புரிந்து கொள்ள முடியாதது

இந்த ஆட்டத்தை தொடங்கியவர் சண்முகம் .முதல்வர் ராமச்சந்திரனுடன் காங்கிரஸ் கூட்டணி முறித்து வெளியேறியதில் தொடங்குகிறது . இந்த அரசியல் பிறழ்வு. தன்ணெண்ணம் அறியாது முதல்வர ராமசந்திரன் டாக்டர் ஆனந்தவேலுவை தெரிவுசெய்ததால் , அவர் தன்னை வந்து சந்தித்த போது  தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார் . கூட்டணிக்கும் அத்தால் மலர்ந்த ஆட்சிக்கும் தான் மட்டுமே காரணமானதால் அவர் கொண்ட வெஞ்சினம் சரி என்றே அவர் அகம் சான்றுரைத்திருக்கலாம்

அந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டு பின் 1985 தனி பெரும்பான்மையுடன் அரசமைந்த இதே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு  மூப்பனார் சொன்னார் என்பதாலும் தன் தனிப்பட்டக்கருத்தினாலும் வக்கீல் முருகேசனை நிராகரித்து. தினம் வந்த தன்னை தொழுது செல்லும் நாராயணசாமி சரியானவர் என அவரை மாநிலங்களவைக்கு அனுப்பி தன் அரசியல் வரலாற்று பிறழ்வை துவக்கினார் . கடைசியில் நாராயணசாமி சண்முகத்தின் அரசியல் வாழ்வு முடிவிற்குவர காரணமானார் .

அதிகாரத்திற்கு வந்த அனைவரின் உத்திரவிடலுக்கும் ஏதோ ஒரு தடையை அது அவரவர் உள்ளங்கைகளில் பிறிதொருவர அறியாது நுழைத்துவிடுவது வினோதமானதுதான் .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்