https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 17 ஜூன், 2017

அடையாளமாதல் - 99 *வதந்திகளின் வதை *

ஶ்ரீ:

*வதந்திகளின் வதை *
இயக்க பின்புலம் - 26
அரசியல் களம் - 29கலவரம் நிச்சயம் திட்டமிடப்பட்டததுதான் என்கிற முடிவிற்கு வருவதற்கு வலுவான காரணம் வேண்டும் , நான் எதற்கு இப்படி சிந்திக்க துவங்கியதற்கு ஒரு காரணமிருந்தது  . இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் நடப்பவைகளை தீர்மானிப்பவர்களில் நானும் ஒருவன் என்பதே என்னை அதில் ஆற்றலுடன் செயல்படவைப்பது . சரியோ தவறோ நானும் உடன்பட்டுத்தான் இதுவரை பல முயற்சிகள், போராட்டங்களின் வழியாக இங்கு வந்திருக்கிறோம். அதிகாரம் என்பது கருப்ப சிவப்பா எனத்தெரியாது, ஒருநாள் அது கைவரும் என்கிற நம்பிக்கையே  அனைவரும் வேட்டைநாய்களைப் போல காட்டிய திசைகளின் பாயவைத்தது . வெற்றி தோல்விகளல்ல அரசியலை முடிவு செய்வதற்கு . எதை இயற்றினாலும் அது நம் பொருட்டே அமையவேண்டும் . தோல்லியுற்றாலும், முயன்ற திருப்தியே உளம் அமைதியடைய செய்வது . இப்படி ஏன் செய்கிறோம் , யாருடைய எதிர்காலத்திற்கு . அவர் சாப்பிட்ட எச்சிலிலையாவது நம்முன் வீசப்படுமா? அதுவுமின்றி பலி மிருகம் போல களம்படுவது கொடுமையானது .

இப்போது என் கவனத்திற்கு வராத இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தால் யார் அவர்கள் , என்னிடம் இதுபற்றி ஒன்றும் சொல்லாதது ஏன் ? திடீரென திட்டமிடப்பட்டதா . எண்ணங்கள் வண்டின் ரீகாரம் போல தலையில் கேட்டபடி இருந்தது . சபாபதியின் ஆதரவோடுதான் இனி ஆட்சி அமையப்போகிறது என்பதில் மாற்றில்லை . ஆதரவு தரும் சுயேட்சைகளில் இருவர் காங்கிரஸ் கட்சியை சேர்த்தவர்கள் ராஜவேலு மட்டுமே ஜனதாதளம் . ஆட்சி அமைக்க மட்டுமல்ல கண்ணன் முதல்வராவதை தடுக்கவும் அவர்கள் தேவைப்படுபவர்கள் . சபாபதியின் ஆதரவை பெற முடியாதபடி செய்யவோ அல்லது ஆதரவு கேட்பதில் சிக்கலை உண்டுபண்ணவோதான் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கிறது . எனக்கு நன்கு தெரிந்தவரை . இளைஞர் காங்கிரஸ் இயக்கம் இதுபோன்ற அடாவடிகளில் ஈடுபட்டதில்லை . எங்கு சுற்றினாலும் அது மரைக்கார் மரைக்கார் என்றே வந்து நிற்கிறது . இது ஒருகாலமும் பாலனுக்கோ அவர் சார்ந்த இயக்கத்திற்கோ நலம் பயக்கப்போவதில்லை , தன்னுடைய நலம் தவிர வேறு எதைப்பற்றியும் யோசிக்கும் நிலையில் பாலன் ஊன்று இல்லை . இந்த தோல்வி அவரின் சகல கோட்பாடுககையும் காலாவதியாகிவிட்டது .

அரசியலை போல வேடிக்கையான விளையாட்டு பிறிதொன்றில்லை , எல்லோரும் எல்லாவற்றையும் யூகித்தே நடந்துகொள்வார்கள் . எவருக்கும் இன்னதுதான் நிஜம் என்றோ இதுதான் நிகழவிருக்கிறதென்றோ அறுதியிட்டு சொல்லமாட்டார்கள் . எவரும் அவரின் கீழ்நிலையில் உள்ளவர்களுடன் எல்லாம் தெரிந்ததாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்து நான் மெல்ல சிரித்தால் அவரின் பேச்சி தடைபட்டுவிடும் . சில நிமிடங்களில் என்னுடனான உறவை துவக்கவோ , அறிமுகமாயிருந்தால் அதை சீர்படுத்தவோ முயற்சிப்பார் . இது மேலிருந்து கீழ்வரை முறைமை. பார்க்க மிக பரிபவமாக இருக்கும் . ஒருவித நடிப்பும் அலம்பலும் சலம்பலுமே அரசியல் அவரவர் நிலைகளை முடிவாக அசைபாவை . சில   உயர் பதவியில் இருபவரில் தொடங்கி கடைநிலையர்வரை இதுவே முறைமை , சில ஏற்றமிறக்கம் இருக்கலாம் அது அவரின் புரிதலில் பொருந்திய தாரதம்யம் மட்டுமே 

மரைகாரின் வீடு அனுகினோம் . மரைக்கார் வீடு . பல வித எண்ணங்களுக்கும் வாழ்கைக்கும் இடைப்பட்டதாக நின்று கொண்டிருப்பது . வந்ததற்காக , வராததற்காக வருத்தமும் அவமானமும் அளிக்கும் அரசியலை நடத்தும் இரண்டு மையங்களில் ஒன்று . எது முதல் எது இரண்டாவது என்கிற முடிவில் பாதியை கடந்து வந்திருக்கிறது . மிச்சமுள்ளவை நாளைக் கடக்கபடலாம்

அது பழைய பிரெஞ்சு பாணி வீடு வளைவான காம்பௌண்ட் சுவர் வைத்து வழியை முழுவதுமாக மூடி மறைத்த பெரிய மரக்கதவு .வெளியே நின்றிருந்தவரிடம் இருக்காரா என்றதும் ,அவர் ஒன்றும் சொல்லாது கதவை திறந்துவிட்டார்.பலமுறை அந்த வீட்டிற்கு நான் வந்திருந்தாலும் ,அது வாழும் வீட்டிற்கான எந்த இலக்கணமும் கொண்டிருப்பதாக இருப்பதாக நான் நினைத்ததில்லை . கதவைத் துறந்து உள்ளே நுழைந்ததும், கார் நிறுத்துமிடம் .

நிழலுக்காக பாலிகார்பனேட்டால் வளைத்து மூடப்பட்ட  நிழல் விழா வெளிச்சமான நடைபாதை . அதைத்தாண்டி ஒருவர் தழுவவியலா பருமனான தூண்களை நிறுத்தி வளைவால் இணைக்கப்பட்டு ,அதிக உரமுள்ளவை . தேக்கமர வாரைகளை கொண்ட விதானம் எல்லாம் முட்டை தேய்த்த சுவர் என்பார்கள் அதைப்போல  வெள்ளை வழுவழுப்பானதாக இருக்கும் நடை .அதன் இணைவான இடத்தில் மழைசாரல் உள்ளவராதபடி தூண்களை இணைத்பபடல் , அதன் கீழ் சுருட்டுவைக்கப்பட்ட பச்சை துணியால் போரத்தப்பட்ட மூங்கில் வெய்யில் தடுப்பான்கள் அவற்றை தாண்டினால் பெரிய ஹால் .இருபுறமும் அறைகளைக்கொண்டது இரண்டால் உயரத்துக்கு அடர் பச்சை வண்ணமடிக்கப்பட்ட கதவுகள் , கதவின் நடுப்பகுதி சாய்வான மர சட்டங்களை ஒன்றன்மேல் ஒன்று அடித்து காற்றோட்டத்திற்கு தோதாக அமைக்கப்பட்டது .பெரிய ஹால் உள்நுழைந்ததும் காஷ்மீர கம்பளம் போடப்பட்ட அலங்காரமான சோபாக்கள் பல நாற்காலிகள் அனைத்தும் வெகு நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடியது .


ஹாலின் இருபுறமும் பெரிய அறைகள் அவற்றிக்கு உள்ளிருத்தபடி செல்ல ஹாலுக்குள்ளும் வெளியே பார்த்த அதே பாணிக்கதவுகள் . ஹாலுக்கு பின்புறம் சாப்பாடுமேஜை . அதற்க்கு பின்புறம் பெரிய முற்றம் திறந்தவெளி சுற்றிலும் மூடப்பட்ட நடைபாதைகள்


பின்கட்டிலில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் இருக்கவேண்டும் . மரைக்கார் இஸ்லாம் மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் . அவர் ஒரு ஹிந்து போலவே அனைவராலும் பார்க்கப்பட்டடார் . பல ஹிந்துக்கோவிலுக்கு சென்றுவருவதும் பூஜைகளில் கலந்து கொள்வதுமாக இருந்தது காரணமாக இருக்கலாம் . அது அவரின் அரசியல் சாமர்த்தியம் என் பார்க்கப்பட்டாலும் . ஜாதகம் பார்ப்பது நால்லநேரத்தில் துவங்குவது என்பதால் , முஸ்லிம்கள் அவரை காஃபிர் என்றுகூட சொன்னதுண்டு , தமிழக முதல்வர் எம்ஜியாரைப்  போல ஏறிய படி இறங்காது கடைசீ வரை அவர் பதவியில் இருந்ததால் அவரைப்பற்றிய எந்த வதந்திகளும்  வதைகளும் அவரை கடைசீவரை ஏதும் செய்ய இயலவில்லை . நிச்சயமாக அவர் அளவில் அரசியலில் வென்றவர் பிறிதொருவர் புதுவையில் இல்லை என்றே சொல்லவேண்டும் . சிலரை எதுவும் பாதிப்பதில்லை போலும் . அவர் சாமாண்யர்களாக இல்லாதவரை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக