https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 27 மே, 2022

அடையாளமாதல் * இணைப்பு *

 


ஶ்ரீ:பதிவு : 623  / 813 / தேதி 27 மே  2022* இணைப்பு * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 20.


நான் அரசியலில் எனது இடத்தை இப்படி வரையறை செய்து கொள்வேன். செயல்பாடு மற்றும் தொடர்புறுத்தல் எனக்கு மிக இயல்பாக வருவது . அதில் பிற எவரையும் விட என்னால் வெற்றிகரமாக செய்ய இலும் என என்னைப் புரிந்திருந்தேன்.

அவை இரண்டும் இருவழி சாலை கட்சியுடன் சமூகம் தொடங்கி தனிநபர்கள் வரை தொடர்புறுத்துவது . கட்சியின் அனைத்து நிகழ்விலும் பங்கெடுக்கும் அதே சமயம் அந்த குடும்ப நிகழ்வுகளுக்கு தலைவர்களை கொண்டு சேர்ப்பது என்பது எனது செயல்பாடாக இருந்தது. அது மிக சிக்கலான அதிக நம்பிக்கைதன்மை கோரும் ஒன்று . கட்சி அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் மிகப் பொதுவாக இந்த இடத்திற்கு வருவார்கள். அங்கு வந்து சேருபவர்கள் இரண்டு வகையில் அங்கிருந்து தங்கள் இலக்கை சென்றடைகிறார்கள் . பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தேர்ந்தெடுக்கும் இடம் அது . ஒன்று தேர்தலாரசியலுக்குள் சென்று சட்டமன்ற உறுப்பினர் எனத் தொடங்கி அந்த வரிசையில் இணைய முயற்சிப்பது . இரண்டு அவர்கள் பொருளியல் வளம் பெறம் அனைத்தையும் இடைநின்று செய்பவராக காரியங்களை முடித்து தருபவராக பொருளாதார தன்றிறைவு அடைந்து அங்கேயே தேங்கிவிடுகிறார்கள் . அல்லது அங்கிருந்து வாய்ப்பு கிடைக்குமானால் தேர்தலரசியலுக்குள் வாய்ப்புகளின் கதவுகளை தட்டி முடிந்தவரை அதன் உயரங்களுக்கு செல்கிறார்கள் . நான் பொருளியல் பலமும் பெயரும் கொண்ட பின்புலத்தில் இருந்து வருகிறேன் . அரசியல் எனக்கு கற்றல் மட்டுமே. அங்கிருந்து நான் அடையும் தொடர்புகள் அனைத்தும் நான் ஏற்கும் தலைமையில் வந்து நிலை கொள்ள செய்கிறேன். அங்கிருந்து என்ன கிடைக்கும் என்பது எப்போதும் என் கணக்குகளில் இல்லை


பொதுவில் அனைவரும் செய்யக்கூடியதை நானும் செய்திருக்கிறேனா ? என்றால் இல்லை என நினைக்கிறேன். உள்நுழைந்து பின் அங்கு நிகழ்ந்த கற்றலில் என்னை புரிந்து கொண்டேன் . என்னால் இயல்வதை பற்றிய புரிதலினால் எனக்கான எல்லையை வகுத்துக் கொண்டேன் . பின்னர் ஒரு போதும் அதை மாற்றிக் கொள்ளவில்லை. அது அரசியலில் எனது இடத்தை எனக்கு அளித்ததா என்றால் பதில் ஆம்/ இல்லை என இரண்டையும் சொல்வேன் ஆனால் அந்த இடம் பொதுவில் இருந்தாலும் என்னுடைய பின்புலமுத்தில் இருந்து ஒருவர் அந்த இடத்திற்கு வருவது எப்போதும் நிகழ்வதில்லை என்றே நினைக்கிறேன். எளிதில் அணுக்கூடிய எனது நிலைபாடும் என்னை அவர்களில் ஒருவனாக அவர்களின் சிக்கலை அணுகுவதால் என்னை சுற்றி மிக விரிவான இறுக்கமான நட்புகள் உருவாகிவந்தன. என்னை நோக்கி வரும் உதவிகளை ஆழைத்துக் கொண்டு நான் யாரிடமும் சிபாரிசுக்கு செல்வதில்லை . அது எனது வழிமுறை இல்லை . அரசியல் மற்றும் அதிகார அமைப்பின் மீது என எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை . தந்தை மட்டுமே பிள்ளக்கு எந்தவித நிபந்தனையில்லாத உதவிகளை செய்யக்கூடியர் . பிறர் யாருக்கு என்ன செய்தாலும் அதற்கு பின்னால் நிச்சயம் ஒரு கணக்கு இருக்கும். அரசியல் அதிகாரத்தில் சிபாரிசு மேல் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. அது நிகழும் அந்த இறுதி கணம் அது உறுதிபடாது . இயலாமல் போகும் போது சம்பிரதாய வருத்தம் கூட தெரிவிக்கப்படுவதில்லை. யாரோ அதை தடுத்தது பற்றிய பிலாக்கணம் மட்டுமே சொல்லப்படும். அரசியல் வழியாக முயலும் எதுவும் தோல்வியடைஙதில்லை . போதும் என நிறுத்துவது மட்டுமே அந்த இறுதி முடிவை கொண்டு வரும் . சில தவறுகளால் அந்த முயற்சி தடைபடும். அந்த தவறுகளை சரி செய்து கொள்ளும் போது அடுத்த கதவு திறப்பதை பார்த்திருக்கிறேன் . என்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு நான் சொல்லும் பதில் கத்திருக்க இயலுமானால் என்னிடம் சொல்லுங்கள் என்பது .இன்றுவரை அதுவே எனது நிலைப்பாடு . இளைஞர் காங்கிரஸில் இருந்து அவர்கள் சென்று அமரமுடியாத இடத்தில் நான் சென்று அமர்ந்திருப்பதாக அவர்கள நம்பினார்கள். அரசியில் ஒருவருக்கு இடம் உருவாகிவது, பின்னர் அவர்கள் செல்வாக்கு அடைவது இயல்பாக நிகழ்வது . அதற்கு நல்லூழ் வேண்டும்அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. என் வாழ்நாள் முழுவதும் எனக்கான இடத்தை யாரும் ஒருபோதும் உருவாக்கித் தந்ததில்லை என் ஊழ் அப்படி . நான் அடைந்த உயரங்கள் அணைத்தும் நான் செய்ய முயன்ற முயற்சிகளில் மற்றும் செயல்பாடுகளில் இருந்து கிடைத்தவை. ஆகவே எப்போது் அதற்கு பின்னால் கருவிக் கொண்டிருக்கும எதிர் தரப்பு ஒன்றுண்டு .


சிலநாள் காலை முதல் இரவுவரை தலைவருடன் இருக்கும் சந்தர்பங்கள் கிடத்தன. அவருடன் காரில் பயணிக்கும் வாய்ப்பு அதை தொடர்ந்து வந்தது அவரது கார் இல்லத போது எனது காரில் அவர் செல்வது என அது மிக மெல்ல நடந்தது . தனது அணுக்கர்களாக இருப்பவர்கள் தன்னுடனான நெருக்கத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது பற்றிய எச்சரிக்கை உணர்வு அவருக்கு எப்போதும் கொடுக்கும் ஆரம்பத்தில் அது என்னிடமும் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன் . எனக்கு அவரது பெயரையோ அவரது அணுக்கத்தையோ உபயாகப்படுத்திக் கொள்ள நான் விரும்பியதில்லை . பொதுவாக அரசியல் தலைவருக்கு அணுக்கராக இருப்பவர்கள் பொருளாதரத்தில் பின்னடைந்தவராக இருப்பார்கள் என்பது இயல்பாக நிகழ்வது . அவர்கள் மட்டுமே அத்தனை நேரமிருக்கும் . அதிலிருந்து லாபடையும் வழிகளை கண்டடைவார்கள். பிறரின் தேவைகளை அதன் பொருட்டு திறந்து கொடுப்பார்கள் . ஆகவே அவர் பலமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கான தேவை இரு தரப்பிற்கும் இருக்கும். அவர்களுக்கு மத்தியல் நான் வேண்டாத ஒரு கல்போல சென்று அமர்ந்திருந்தேன் .அவர்களை நான் அறியாமல் இடறச் செய்து கொண்டிருந்தேன அவர்கள் உலகியலின் எந்த தேவையும் இல்லாத ஒருவன் அங்கு வந்து அமர்ந்திருப்பது அவர்களையும் அவர்களை செயல்பட வைக்கும் நிலைசக்திகளையும் எப்போதும் பதட்டமடைய வைத்துக் கொண்டருந்தது. எனது முதன்மை சவால் அது மட்டுமே. எனக்கு எதிரானவர்கள் அவர்களால் உடனடியாக அடையாளம்காணப்பட்டு ஆதரவளிக்கப் பட்டார்கள் அதன் பின்னர் அவர்கள் இன்னும் மூர்கமாக என்னை எதிர்க்கத் துவங்கினர். ஊசுடு பெருமாள் அறிமுகம் செய்து வைத்தவர்கள் மெல்ல என்னுடன் தங்களை தொடர்புபடுத்துக் கொண்டார்கள். பழைய அனுபவம் காரணமாக அவர்களுடன் தனது தனிப்பட்ட உறவை பெருமாள் வளர்த்துக கொள்ள முயன்றதில்லை.  


வெள்ளி, 20 மே, 2022

அடையாளமாதல் * இறந்தகாலத்தின் துளி *

 ஶ்ரீ:பதிவு : 622  / 812 / தேதி 20 மே  2022

  •                                  * இறந்தகாலத்தின் துளி *

ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 19.

மனிதனின் மென்னுணர்வு அவனது அன்றாட வாழ்கையை மிக அழகானதாக மாற்றிவிடுகிறது. சிறு கற்பனை , அழகுணர்வு ரசிப்பு மற்றும் முதிரா இளமையின் மிச்சக்கூறு போன்றவைகளை கொண்டு அவற்றை மெல்ல உருவாக்கிக் கொள்ள முடியும் என நினைக்கிறேன். சட்டென எதிர் கொள்ளும் புறவயமான அகச் சீண்டல் நிகழும் கணம் அது அந்த மெல்லுணர்வுகளை தகர்த்து தள்ளி அகத்தை கொதிப்படைய வைத்துவிடுகிறது். அன்றாடங்களை இதன் பொருட்டே தவிற்க நினைக்கிறேன். அங்கிருந்து மீண்டு வர சில மணி நேரம், சில நாட்களாகிவிடுகிறது . அது ஒரு ஓயாத கூச்சல் போல அதன் ஓசை அடங்க நீண்ட நேரமாகிறது1991 களில் வைத்திலிங்கம் முதல்வராக இருந்த போது புதுவை மின்துறை அவரின் இலாக்காக்களில் ஒன்று .ஊசுடு பெருமாள் புதுவை மின்துறையில் தினக்கூலி உதவியாளனாக பாலனின் பரிந்துரையின் அடிப்படையில் இணைந்திருந்தான் . அது மிகக்கடுமையான உடல் உழைப்பைக் கோரும் சாலையோர கம்பம் நடும் வேலை . அவனது தகுதிக்கு அது மிக தாழ்ந்த பணி என்பதால் அதை தவிற்க ஸ்டோரில் ஒரு வேலை வாங்கிக் கொண்டு வெளி வேலைக்கு செல்லாமலிருந்தான் . அவனது அரசியல் தொடர்பை அறிந்து கொண்டவர்களால் அது சலுகையாக அவனுக்கு வழங்கப்பட்டது . அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடித்து தினசரி காலை 11:30 மணிக்கு என்னை சந்திக்க வந்துவிடுவான். நாங்கள் கடற்கரை சாலையில் உள்ள தலைவர் சண்முகம் இல்லத்திற்கு அல்லது காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்று வீடு திரும்பும் வழியில் கடற்கரை சாலையில் இருக்கும் இந்தியன் காபி விடுதியில் காபி சாப்பிடுவதுடன் அன்றைய காலை அரசியல் முடிவுக்கு வந்துவிடும். அரசியலில் தீவிர பணிகளை துவங்கி பின்னர் பெரிய இயக்கமாக உருவெடுத்ததெல்லாம் 1997 களுக்கு பிறகு. 1994 களில் பாலனுடன் நான் முரண்பட்டு வெளியேறியதால் அவருக்கு மிக அணுக்கமானவனான ஊசுடு பெருமாள் சிறிது காலம் என்னுடன் தொடர்பில் இல்லாமலிருந்தான் .ஊசுடு பெருமாள் தலித் வகுப்பைச் சேர்ந்தவன் . அவர்களே அன்று எங்களது அடிப்படைப்பலம் . ஒரு காலத்தில் பாலனுக்காக தொண்டர்களைத் திரட்டித் தந்தவன். திரட்டிய கூட்டம் தங்களின் சிக்கலுக்கு தீர்வையும் அதற்கு பதிலும் வேண்டி நின்றபோது அதை நிகழ்த்த முடியாமல் பாலனால் கைவிடப்பட்டு சிறுக சிறுக தன் செல்வாக்கிழந்தான்


1996 களில் பாலன் காங்கிரஸில் இருந்து விலகிதமாகசென்று இணைந்த போது மூன்று கார்களில் அவரது அணுக்கர்கள் சென்றனர் அவர்களில் பெருமாளும் ஒருவன். ஒரு வருடத்திற்கு முன்புதான் கடற்கரை காந்தி சிலை அருகே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட பாலனின் பொதுக்கூட்டம் நடந்து முடிந்திருந்தது. கூடிய கூட்டம் இளைஞர் காங்கிரஸின் பலமாக அன்று பார்க்கப்பட்டது . இன்று அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? என தெரியவில்லை . கண்ணனுடன் இணையப் போகிறார்கள் என தெரியாமல் அவர்களுடன் சென்று தமாக அலுவலகத்தை பார்த்தது அதிர்ந்து போயிருந்தான் . சம்பிரதாயமான இணைப்பிற்கு பிறகு யாரும் பார்த்திராத நேரத்தில் நழுவி என்னிடம் வந்ததாக கூறினான். பெருமளை நான் சந்தித்து ஓராண்டிற்கு மேலாகிறது. நான் சண்முகத்துடன் இணைந்து சில வாரங்களே ஆகியிருந்தன . அவன் என்னை வந்து சந்தித்தது மகிழ்வாக இருந்தாலும், அரசியல் எதிர்காலம் குறித்த எனக்கு எந்த நோக்கமும், இலக்கும் இல்லை கால நதியில் ஒரு ஓராமாக பயணிக்க முடிவு செய்ததை சொல்லி என்னிடம் அவனுக்கு தீவிர அரசியலுக்கான வாய்ப்பில்லை என்பதைச் சொன்னேன். அவன் என் மனநிலையை அறிந்திருக்க வேண்டும். தனக்கும் பெரிய திட்டமொன்றும் இல்லை உடன் பயணிக்கிறேன் என்றான். நான் மிக உச்ச நிலை அரதியலுக்குள் வந்ததெல்லாம் அதன் பின் நிகழ்ந்தது . பிறகு  2010 களில் அரசியலில் இருந்து நான் முழுமையாக விலகும் அந்த இறுதி கணம்வரை என்னுடன் இருந்தான்


எனது அரசியல் களம் ஊசுடுவின் அந்த இரண்டு நிகழ்வின் பின்னணியில் இருந்து உருவானது. ஊசுடு பெருமாள் எப்போதும் அனைத்திலும் என்னுடன் இருந்தான் . அவனது பழைய தொடர்புகளில் சிலர் தங்கள் சிக்கல் குறித்து  சண்முகத்துடன் உரையாட வந்து அவரை அவரது இல்லத்தில் அல்லது காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சந்திக்கும் போது என்னுடன் இருக்கும் பெருமாளை பார்த்து திகைத்தனர். ஒரு சிறு தலயசைப்பில் கடந்து சென்றாலும் அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை ஒரு போதும் ஒதுக்குவதில்லை. அவர்களின் சிக்கல்கள் நீண்ட பின்தொடர்சியை கோருபவை யாராவது ஒருவர் அதை இறுதிவரை தூக்கி சுமக்க வேண்டி இருக்கும். எனவே அவர்கள் மிக எளிதில் அணுக இயல்பவரை முதலில் தொட முயல்வார்கள் . அரசியலின் அடிப்படை விதிகளில் ஒன்று . அவர்கள் ஒருவர் பின் ஒருவராக பெருமாளை தொடர்பு கொண்ட போது. வெவ்வேறு சந்தர்பங்களில் அவர்களை என்னிடம் கொண்டுவந்து எனக்கு அறிமுகம் செய்து வைத்தான் . அது ஒருவகையில் எனது அரசியல் கணக்கை மீண்டும் துவக்கி வைத்தது. அரசியலில் எப்போதும் திட்டமிடல் என ஒன்றில்லை. அது சந்திக்கும் சிலருக்கு உதவ முற்படுப்போது உருவாகி வருவது . ஒன்றிலிருந்து ஒன்று பல்கிப் பெருகுவது . ஒருவர் சொல்லில் இருந்து பலருக்கு சென்று சேர்வது. அரசியலில் தகவல்கள் காற்றைவிட மிக வேகமாக சென்றடைவது


பாலனுடனான எனது கடந்த கால அனுபவத்தில் இருந்து தொகுதி அரசியலைப்பற்றி தெளிவான வரையறைகளை உருவாக்கித் வைத்திருந்தேன் . யார் எந்த தொகுதியில் இருந்து தங்கள் சிக்கல் சார்ந்து கட்சியில் முறையிட வருந்தாலும் என்னை பார்பதுண்டு அவர்கள் நான் முன்பு பார்த்த அந்த திரளில் ஒருவர் . சிலரின் முகம் நினைவில் இருக்கும் அல்லது அவர்கள் கொண்டுவரும் சிக்கலை நான் எங்காவது முன்பே அறிந்திருப்பேன். அவர்கள் விரும்புவது தலைவருடன் தங்கள் எண்ணத்தை தனிப்பட்ட முறையில் சொலும் ஒரு சந்தர்பத்திற்கு. அது அவர்களுக்கு சிக்கலை உருவாக்குபவர் பற்றிய நேரடியான குற்றச்சாட்டு . அதை பிறர் அறிய பகிரங்கமாக தலைவர் முன்னே சொல்ல இயலாது . வெளித்தெரிந்தால் அதற்கு உரிய விலை அவர் கொடுக்க வேண்டியிருக்கும். அவர்கள் எளிய மக்கள் வல்லமையுள்ள அரசியலாளாலர்களை அஞ்சினர். கடந்த கால அரசியலில் அவர்களை பலரை அவர்கள் வாழ்விடத்திற்கு சென்று அவர்களை சந்திக்கும் வாய்ப்பிருந்ததால் அதை இப்போது உபயோகப்படுத்த நினைப்பார்கள். பெருமாளுக்கு என்னைவிட அவர்களை மிக அணுக்கமாக தெரியும் மேலும் அவன் எப்போதும் அவர்களில் ஒருவன். என்னுடன் அவன் இருப்பது அவர்களுக்கு தெரியும் அந்த கணம் என்னை சந்திக்க அவனது துணையை நாடுவார்கள் . அவர்களை என்னிடம் அழைத்துவந்து அவர்கள் சிக்கலை எனக்கு சொல்ல அவனுக்கு தயக்கமிருந்ததில்லை. மெல்ல பழைய தொடர்புகள் அணுக்கமாவதுடன் அவர்கள் வழியாக புதிய நட்புகள் உருவாகிக் கொண்டிருந்தன


சனி, 14 மே, 2022

அடையாளமாதல் * அலைக்கழிக்கும் நினைவுகள் *

 


ஶ்ரீ:பதிவு : 621  / 811 / தேதி 14 மே  2022* அலைக்கழிக்கும் நினைவுகள் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 18.


மக்களின் மனநிலை எப்போதும் கொந்தளிப்பது ஒரு முறை வெளிப்பட்டுவிட்டால் அமைதியடைந்து விடுகிறது. பின்னர் பிறிதொரு சந்தர்ப்பத்தற்கு காத்திருப்பது ஆகவே காற்று வீசும் திசைக்கு ஏற்ப எப்போதும் மாறிக் கொண்டிருப்பது . எல்லா புறநகர்த் தொகுதிகளைப்போல இங்கும் மக்களை முடிவெடுக்க வைக்கும் சிலர் உண்டு அவர்கள் பேசிபேசி தாங்கள் நினைத்த இடத்திற்கு மற்றவர்களை நகர்த்தி போகிறார்கள் . அவற்றில் டீக்கடை முதன்மை, மோட்டார் சைக்கில் ரிப்பேர் கடை ,தையற்கடை என இப்படி ஒவ்வொரு வீட்டில் ஒண்டிக்கொண்டு சில்லறை வியாபாரத்தை வைத்திருப்பவர்கள் அந்த தொகுதியின் வெற்றித் தோல்வியை முடிவு செய்பவர்கள் என்பது ஆச்சர்யமானது . இத்தனைக்கும் அவர்களில் பலருக்கு அந்த தொகுதியில் வாக்குரிமை இல்லதிருப்பதை பார்த்திருக்கிறேன். உதிரி உதிரியாக அவர்கள் தங்கள் செல்வாக்கை அந்த பகுதி மக்கள் மீது தொடர்ந்து செலுத்துகிறார்கள் . அது அவர்களின் தனிப்பட்ட விருப்பாக, வெறுப்பாக இருக்கும் . சில சமயங்களில் உச்ச நிலைக்கு சென்று அடுத்த வேட்பாளர் என சிலரை அழைத்துக் கொண்டு காங்கிரஸின் தலைவர் அனைவரின் வீடுகளுக்கும் அவர்கள் ஏறியிறங்கும் வேடிக்கையை பார்த்திருக்கிறேன், புதுவையில் உள்ள அனைத்து தனித் தொகுதிகளின் அரசியல் இயங்கு விசை அப்படிப்பட்டதே. அங்கு இவர்களை போல வாக்காளர்களில் யாருக்கும் தங்களுடைய இடம் பற்றிய பிரக்ஞை இருப்பதில்லை


ஊசுடுவை சேர்ந்த பங்கூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல சென்ற முன்னாள் முதல்வர் வைத்திலிங்கத்தின் குழுவில் நான் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டேன். தலைவர் சண்முகம் அன்று அதிகாலை தொலைபேசியில் அழைத்து அதை என்னிடம் சொன்னபோது மிகுந்த ஈடுபாடோடு அவர்களுடன் சென்று கலந்து கொண்டேன். அங்கு பார்க்க இருப்பதைப் பற்றிய எண்ணமில்லாமல் முன் தயாரிப்பில்லாமல் கிளம்பியது பைத்தியக்காரத்தனம் . அங்கு பார்த்த அந்த கொடூர நிலக்காட்சிகளும் பாதிப்புகளின் வலியும் நீண்ட நாட்களுக்கு என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தது . ஒவ்வொரு முறையும் அதை தள்ளிக்கொண்டு வெளிவருவது எளிதாக இல்லை. அன்றெல்லாம் ஊசுடு பெருமாள் மட்டுமே என்னுடன் இருந்தான். அவனும் நானுமாக இரண்டே பேர். தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் கலவர செய்திகளை அன்றாடம் பார்க்கும் போது மனம் அதை வெறும் தகவல்காளாக்கி அடுக்கிக் கொள்வதால் மிக எளிதில் அதை கடந்து செல்ல வைக்கிறது  . ஆனால் நேர் காட்சி மனதில் ஆழமான வடுவாக நிரந்தரமாக தங்கிவிடுவதால் அதன் சீண்டல்கள் வேறுவிதமானவை ஓயாத அலைக்கழிப்பைத் தருபவை . எண்ணத்தை நிறுத்தி மனத்தை உறையவைப்பது . மனிதர்கள் மீது பெரும் அவநம்பிக்கையையும் தீராத அச்சத்தை ஏற்படுத்துகிறது . கலவரத்தில் ஈடுபடுபவர்களிடம் அந்த ஆபாசம் ஒரு களிம்புபோல மனம் புத்தி ஆன்மா மீது படிந்திருக்க வேண்டும் . எண்ணங்கள் துருப்பிடித்து அந்த களிம்பை அதில் ஏற்றிவிடுகிறது. காலை 9:00 மணிக்கு நாங்கள் அங்கு சென்றபோது அது மிக இயல்பான ஒன்று போல அங்கு நிகழ்ந்து முடிந்திருந்தது . அது ஒரு வெறியாட்டம். இருள் தெய்வம் அனைவரின் மீதி எறி கழிந்து சென்றிருக்கிறது. அதில் கொடூர திருப்தியை அடையும் மனிதன் ஒரு மிருகம் மட்டுமே  . அவர்கள் வேறெங்கிருந்தோ கிளம்பி வந்து இதை நிகழ்த்தவில்லை. பக்கத்துவீட்டுகாரர் எதிர்வீட்டுகரருக்கு இதை செய்திருக்கிறார் என்பது இன்னும் அதிரவைப்பது . அவர்கள் அன்றாடம் சந்தித்துக் கொள்பவர்கள் . இதன் பிறகும் சந்தித்துக்கொள்ள இருப்பவர்கள். எப்படி அவர்களால் பிறருக்கு இதை செய்துவிட்டு எளிதில் தாண்டிச்செல்ல முடிகிறது என தெரியவில்லை. அது ஒரு தனிநபர் கணநேர பைத்தியகாரத்தனமாகவோ அந்த நிமிட வெறித்தனத்தால் நிகழ்ந்ததில்லை . முந்தின இரவு நீண்ட திட்டமிடலுக்கு பிறகு அதிகாலை அந்த தாக்குதலை ஒரு போர் வெற்றி போல நடத்தி முடித்திருந்தனர்


பங்கூர் கலரவரத்தைப் பார்வையிட சென்றபோது , ஆறுதலளிக்க என்பது போல் ஒன்றிற்கு நான் பழகியிருக்கவில்லை .கொந்தளித்த கடல் உள்வாங்கி விட்டுச் சென்ற மிச்சல்கள் போல எங்கும் சேறும் கற்களும் நாற்றமும் குவிந்து கிடந்தன . தீயை அனைத்து வழிந்தோடிய தண்ணீர் கருமையாகி தேங்கிக்கிடந்தது. பல வீடுகள் எரிந்து போனதால் சாலைகளின் எல்லை அழிந்து முழு இடமே வெட்டவெளி போல இருந்தது . கரிந்து போன பலவகை பொருள்கள் வீட்டிற்கு முன்னே குவித்து வைக்கப்படிருந்தன. அங்கு சென்ற முதல் தருணமே முகத்தில் ஓங்கி அறைந்தது போல ஒரு தாக்குதலால் திகிலடைந்து பதறும் நெஞ்சுடன் ஆறுதல் சொல்லச் சென்ற குழுவுடன் கலக்காமல் நான் பெருமாளுடன் தனியாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தேன் . சகல புலன்களுக்கும் அங்கு விஷயமிருந்தது எரிந்து தீய்ந்த நாற்றத்துடன் கரிகட்டையாய் நின்ற வீடுகள் , அமைதியாய் அழுது கொண்டிருந்தவர்கள் எங்களை பார்த்ததும் கதறி சூழ்ந்து கொண்டனர். பார்க்கும் காட்சிகளை பற்றி யாரிடமும் ஒரு சொல்லும் பேச இயலாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அவை புகைப்படம் போல அனைத்தும் ஒரு சட்டகத்திற்குள் வந்து தனித்தனியாக நினைவில் படிந்து கொண்டிருந்தது பின் அந்த காட்சிகளை நினைவுகளில் இருந்து விலக்க பலநாள் முயன்றிருக்கிறேன். விலக்க நினைக்கும் ஒவ்வொரு முறையும் அது பெருகி எனக்குள் எழுந்து கொண்டே இருந்தது


சில மாதங்கள் கழித்து ஒரு சிறு கூடுகைக்கு அரியூருக்கு சென்ற போது அருகில் இருந்தவர்களிடம் பங்கூர் பற்றி விசாரித்தேன் .அவர்கள் அந்த கலவரத்தை ஏதோ போன ஜென்மத்து கதை போல நினைவில் இருந்து மெல்ல திரட்டிக் கூறினார்கள். பங்கூர் சென்று பார்பதனூடாக எனது வாதையில் இருந்து வெளிவர நினைத்தேன். அங்கு சென்று பார்த்த போது என் முன் நின்ற ஊர் கலவரத்தின் போது நான் பார்த்த எதனுடனும் பெருந்தி போகாமல் புதிதாக இருந்தது. எறிபற்றிய காடு மீள்வது போல அந்த கிராமங்கள் இரண்டு மாதத்தில் மீண்டெழுந்து இயல்பு திரும்பியபோது பார்க்க திகைப்பாய் இருந்தது


அந்த குழுவுடன் சென்றதால் அதன் மேலதிக செயல்பாடுகள் வந்து சேர்ந்தன. முன்னாள் அமைச்சர் காந்திராஜ் பிரபல வழக்கறிஞர் என்பதால் கலவரம் குறித்து காவல் நிலையத்தில் முறையாட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க என நீண்ட செயல்பாடுகளை நான் ஒருங்கிணத்தேன். அதையொட்டி அந்த பகுதி மக்களை தொடர்ந்து சந்தித்திக் கொண்டிருந்தேன். இளைஞர் காங்கிரஸ் பொச்செயலாளர் என்பதால் பத்திரிக்கை அறிக்கை மற்றும் சந்திப்புகள் நடத்தியது என அரசியலின் அடுத்த கட்டம் தொடங்கியது. அது என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தது . செய்து முடித்ததை தலைவரிடம் சொன்னால் போதும் என்கிற வழக்கம் தொடங்கியது. அதிகாரப் பூர்வமான கூட்டங்களை ஒருங்குவது தேவை ஏற்பட்டால் போராட்டங்களை முன்னெடுப்பது என முழுநேரப் பணிசூழ்ந்து கொண்டது . காந்திராஜை அனைத்து கூட்டங்களிலும் சிறப்பு அழைப்பாளராக அழைத்துச் சென்றேன். அவர் உற்சாகமாக அனைத்திலும் கலந்து கொண்டார். அதுவே பின்னர் பல தொகுதிகளில் நடந்த சிறு கூடுகைக்கு அழைத்து செல்ல ஆரம்பித்தேன். அது எனது அரசியலுக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது . பின் அனைத்தும் அங்கிருந்து துவங்கியது

புதிய பதிவுகள்

ஒரு கனவு

  அன்பிற்கினிய ஜெ, வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன். கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப...