https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 2 மே, 2022

அடையாளமாதல் * அடுக்குகளின் நிழல் *

 



ஶ்ரீ:



பதிவு : 619  / 809 / தேதி 02 மே  2022



* அடுக்குகளின் நிழல் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 16.





புதுவை மாநில தேர்தல் அரசியல் தமிழகத்தின் பிற பகுதிகளிலில் இருந்து சற்று வேறுபட்டது . மிக சிறிய எண்ணிக்கையில் இருக்கும் வாக்காளர்கள் அதன் காரணம். இப்படி இருக்கும் எல்லா இடங்களிலும் இதுவே அடிப்படை விதியாக இருக்கலாம் . அரசியல் பற்றிய விழிப்புணர்வு அதில் தங்களின் இடம் குறித்த புரிதல் முக்கிய காரணியாக இருக்கிறது என்பதால் அவர்களிடம் ஒரு எகத்தாளம் தெரியும். நேரில் பார்க்கும் போது காரியத் தேவைக்கு இருக்கும் குறுகளை பணிவு என எண்ணிக் கொள்ளக் கூடாது என அறிந்திருக்கிறேன். அங்கிருந்து அரசியலின் மையத்திற்கு தங்களை அழைத்து செல்லும் ஒரு சந்தர்ப்பத்திற்கு அவர்கள் காத்திருக்கிறார்கள் என்பது அதன் உச்சம். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்துவின் மேல் எழுந்து நின்ற நான்கு வருட அதிருப்தி அவர் தோல்வியுற்றதும் கூரிழந்தது. தண்டித்தவனின் இரக்கம் போல. தங்களது தேவை பற்றிய தெளிவோ அவை அத்தனையையும் ஒரு சட்டமன்ற உறுப்பனரால் செய்து கொடுக்க முடியுமா? என்கிற அறிதலோ இல்லாமல் தங்களால் வெற்றி பெற்றவர் என்று அவர் மீது அதீத எதிர்பார்ப்பை ஏற்றிவைத்து  கொள்வதும், பொய்த்து போகும் போது ஊஞ்சல் போல எதிர்நிலை நோக்கி பாய்வது மட்டுமே அவர்களின் அரசியல்இனி புதிதாக் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தோற்கும் காலம் வரை அவர்கள் மாரிமுத்துவை நோக்கி வந்து கொண்டேயிருப்பார்கள்அது சாமான்யர்களின் அரசியல் இயங்குவிசை 


அன்று அவர்களது அரசியலில் நிகழ்ந்தது கூடுதலான ஒன்று அதுநான்என நினைக்கிறேன். ஆனால் எனக்கு எந்த முன் திட்டமிடலும் இல்லை. அது முழுக்க மிக இயல்பாக நடந்தது. அங்கு நிலவிய குழுப்பமான சூழல் எதை கேட்டதோ , அதை பிறர் அறிவுத்தல் இன்றி நானாக எடுத்துக் கொண்டேன். ஒரு இடத்தை நோக்கி நகர அந்த நிகழ்வு எனக்கொரு வாய்ப்பை உருவாக்கித் அளித்தது . அரசியலின் அடிப்படை . அதுவே நடந்தாலும் நான் அறியாமல் பின்னர் மெல்ல அவர்களின் கணக்குகளுக்குள் வந்து சேர்ந்திருந்தேன். அன்று மாநிலம் முழுவதிலும் இருந்த வந்திருந்த அனைத்து கட்சி மூத்தவர்களின் கண்களில் பட்டு அவர்களின் மனத்தால் ஏற்கவும், விலக்கவும் பட்டுவிட்டேன். இதன் மத்தியில் கூடப்பாக்கத் தகராறு எனது முதல் எதிர்மறைக் கணக்கை துவக்கி வைத்தது . அதைப்பற்றி விரிவாக முன்பே பதிவு செய்திருக்கிறேன். கூடப்பாக்க தகராறு . அது மாரிமுத்தை குறிவைத்து நடந்தது என எனக்குத் தெரியாது ஆனால் அதன் மையமாக என்னைக் கொண்டு நிறுத்திய போது அவர்கள் அவசரப்பட்டுவட்டார்கள் என நினைத்தேன் . ஆனால் அது அனைத்து வகையிலும் எனது கணக்கை நிராகரிக்க செய்த நுட்பமான சீண்டலாக பின்னர் மாறியது  . அதில் தலைவர் எடுத்த நிலைப்பாடு ஊசுடுவிற்கு எந்த சம்பந்தமும் இல்லாத நான் அதன் முக்கியஸ்தராக உருவெடுக்க வைத்தது. அது பின்னாளில் தொகுதித் தலைவர்கள் மாற்றி அமைப்பது வரை என்னை கொண்டு சென்று . அதுவும் கூட நான் எண்ணிய கணக்கு அல்ல வழக்கம்போல சிலர் எடுத்து முடிவு என்னிடம் அதை கொண்டுவந்தார்கள். அவர்களை தலைவரிடம் அழைத்துச் சென்றது மட்டுமே நான் செய்தது அதில் என் முடிவு என ஒன்றுமில்லை . அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்கும் போது அதற்கு எண்ணி எண்ணி செய்வது போல ஒரு தொடர்த்தன்மை வந்துவிடுகிறது. நீண்டு நடக்கும் உரையடல்கள் வழியாக அது தடையற்று நடந்து கொண்டிருந்தது . அங்கிருந்து தொடங்கி எனது இடத்தை அது மிக பலமுள்ளதாக மாற்றும் என்பதை அறிந்திருந்தேன்.


புதுவையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களில் பெரும்பான்மை மக்கள் காங்கிரஸை ஆதரித்ததால் இங்கு தொடர்ந்து ஆட்சியில் அமர முடிந்தது. அவர்கள் முரண்படும் போது வேறுகட்சிகள் மெல்லிய பெரும்பான்மையுடன் கூட்டணி ஆட்சிக்கு வருகின்றன. ரங்கசாமி மட்டுமே பெயரளவில் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை கொண்டுவந்திருக்கிறார் . காங்கிரஸ் கட்சியில் நல்ல தலைமை இல்லாததால் ஒருங்கிணைப்பு சிதறி இது நிகழ்ந்திருக்கிறது. இழந்து போன ஒருமையை திரும்ப கொண்டுவர வேறுவிதமான தலைமை உருவாகி வரவேண்டும். அதற்கு கண்ணுக்கெட்டிய தூரம்வரை எந்த சாத்தியமும் தென்படவில்லை . இன்று கட்சி அமைப்புகள் வேறு வடிவங்களை எடுத்துவிட்டது. பழைய கோட்பாடுகள் இனி கைகொடுக்காது .


தலித் சமூகத்தினர் புதுவையின் முக்கிய புறநகர் மற்றும் கிராமப் பகுதிகளில் சிறு சிறுக் குழுக்களாக விரவியிருக்கிறார்கள் . ஏறக்குறைய அனைவரும் கட்சி அல்லது அரசியல் மனச்சாய்வு கொண்டவர்கள். தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி அன்றாட வாழ்கையின் பல்வேறு சிக்கலான கூறுகளை சந்தித்துக் கொண்டே இருப்பவர்கள். அவர்களை இங்கிருந்து கொண்டு புரிந்து கொள்வது அறிவு செயல்பாடாகாது என நினைக்கிறேன். அனைவரும் உருவகிப்பது போன்ற வரையறை செய்யப்பட்ட வாழ்கைக்குள் அவர்கள் சென்று அமர்வதில்லை முற்றாக வேறொரு உலகியல் சூழலில் வாழ்கிறார்கள். ஒரு வேட்டைகாரர்களின் மனநிலை . உயிர் வாழ்வதைப்பற்றிய எண்ணம் போல ஒன்று என நினைத்துக் கொள்வேன் . பிறருக்கு அவர்கள் திறந்து கொடுக்கும் மிக சிறிய ஜன்னல் வழியாக அவர்களை முழுவதுமாக பார்கவோ புரிந்து கொள்ளவோ இயலாது . குடும்ப உள்ளுறவுகளில் இருந்து துவங்கி சமூகத்தில் அவர்கள் புகுந்து புழங்குவது வரை எல்லையற்ற சாத்தியகூறுகளை உருவாக்கிக் கொண்டே செல்கிறார்கள். அதன் ஒரு அலகில் இங்கு அரசியலில் பல புதிய தலைமைகளை உருவாக்கியும் நிராகரித்தும் சென்று கொண்டிருக்கிறார்கள்

முரண்களுக்கு இடையே ஒவ்வொரு குழுவிற்கும் ஒன்றுடன் ஒன்று மெல்லிய தொடர்பு இருந்தாலும் வேறுபாடுகள் காரணமாக அவர்கள் இன்றுவரை இணைந்து தங்களின் ஒற்றை குரலை அவர்கள் ஒருபோதும் பதிவு செய்ததில்லை. அவர்களுக்கு எப்போதும் ஒருங்கிணைத்து கையாளும் வெளித்தலைமை தேவைபட்டபோது உருவாக்கியும் கடந்தும் சென்றுவிடுகிறார்கள் . அதனால் அவர்களின் தேவைக்கு ஏற்ப அவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மாறிக்கொண்டே இருந்தனர். வெளி பார்வைக்கு தோன்றும் வளர்ச்சி , வீழ்ச்சி என்பது இதை கணக்கில் எடுத்தே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது . நான் அவர்கள் உருவகித்த அல்லது உருவாக்கிய பல ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவன் என்பது விந்தையானது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்