https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 30 நவம்பர், 2017

அடையாளமாதல் - 254 * கோட்பாட்டின் முகங்கள் *

ஶ்ரீ:



பதிவு : 254 / 340 / தேதி :- 30 நவம்பர்    2017

* கோட்பாட்டின் முகங்கள்  *


முரண்களின் முனைகள் ” - 23
கருதுகோளின் கோட்டோவியம் -02



அடையாளமென்பது செயல்பாடுகளிலிருந்ததே ஒருவரை புரிந்து கொள்ள வைக்கிறது . அவை கொடுப்பதும் பெறுவதுமாக இருக்கும் போது மட்டுமே செழிப்பது , ஒரு நல்ல உரையாடலைப்போலே  . செயல்பாடுகள் இல்லாத இடத்தில்தான்ஆதரவு நிலைப்பாடுஎன்பது வெறும் வழிபாடு போல தேங்கி நின்றுவிடுகிறது . அரசியல் செயல்பாடுகள்  இதைப்போன்ற பதட்டத்திலிருந்தும் , குழப்பத்திலிருந்தும் எளிய மனிதர்களால்  எழுந்து வருபவை . அதுதான் அரசியலை உயிர்ப்புடன் வைத்துள்ளது . அதனாலேயே பலரை எல்லாத் திக்கிலும் சிதறடிக்கிறதுஏன்றார் . சற்று கடினமான கோட்பாடு இது , மூளையை சொடுக்கி , அதன் வழியாக மனதின் தொடர்பை துண்டிப்பது . எந்த இடத்தில் மனதின் தொடர்பு அறுபடுகிறதோ அப்போது அவர்கள் மானுடத் திரள்களின் ஒருத்துளி என ஆகிவிடுகிறார்கள் . இத்தைகைய தருணங்களில்தான் , எவர்க்கும் அவர்களின் இருளிலிருந்து  பிறிதொருவராக எழுந்து வருகிறார்கள். பலர் நெறியென கடமையென கூறி இதற்கு தலை கொடுக்க , அதனால் சிலர் வெற்றியடைகிறார்கள்.

வல்சராஜின் கோட்பாடு அவர் சொன்னதிலிருந்து அவரின் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு அதன் பொருள் புரிந்தது. “நீ ஒரு பேச்சிற்காக நாராயணசாமிக்கு தேர்தல் வேலையில் ஈடுபட தயார் என கூறிவிட்டாய் , இதனால் தலைவர் உனக்கு எதிர்நிலையில் வரக்கூடும்”  என்றார். “பிளவு என ஒன்று வெளிப்படாத போது , அதன் பொருட்டு தன்நலம் கருதி தனித்தனி நகர்வுகளுக்கு முயல்வதை சமயோஜிதம் என சிலர் சொல்லாம் . நான் என்னை வடிவமைத்துக் கொண்டதற்கு சில பின்புலமுண்டு . நான் அரசியலுக்குள் வந்தது பதவிகளை பெறுவதற்கும் , அதிலுள்ள அதிகாரத்தை அடைவதற்கல்ல . நான் இதனுள் நுழைந்தது வெறும் தற்செயல் மட்டுமே , அதை நான் உங்களிடம் முன்னமே சொல்லியும் இருக்கிறேன் . நான் சொல்ல விழைவதை பிறிதொரு முறையில் சொன்னால் இன்னும் எளிதாக என்னால் சொல்லிவிட முடியும என நினைக்கிறேன் . அத்தனை நதிகளுக்கு அடியிலும் எதிர்நீரோட்டம் உள்ளது, அதனுடைய எதிர்வு அதனுடைய விழைவு என சொல்படுவதுண்டு. தலைவரிடம் அது பிறதெவரையும் விட அதிக  சலனமில்லாததாக உணர்கிறேன்என்றேன் .

எப்போது நான் தேர்தலாரசியல் என்வழியல்ல என முடிவு செயதேனோ , அப்போதே என் பாதை இதுதான் என உருவாகிவிட்டது , அதில் வருவதை எதிர்கொண்டு பயணப்படுவதே என்னால் ஆகக்கூடியது . அது எனக்கு பலவற்றை உணர்திவிட்டது . நான் ஒருபோதும் முதல்மை அராசியல் நிலையை அடையமுடியாது  . அதில் அமைந்திருப்பவர்களுக்கு அடுத்த இடத்தில் மட்டுமே என்னால் என்னை நிறுத்தி நிறுவிக்கொள்வதனூடாக முக்கிய கொள்கை வகுப்பையும் , அதன் செயலாக்கத்திறகும் , தலைமைதாங்கும் வாய்ப்பு என்னை தேடு வரும். அது எங்கு எங்கு இருக்கிறதோ அதுவே என் இடம் என்பதில் , ஐயமற்று இருக்கிறேன்

அதை நான் தலைவருடன் இருக்கையில் அது எனக்கான இடமாக தெளிவென உணர்கிறேன் . உங்களிடம் நான் வந்தது சேர்ந்தது அந்த வாய்ப்புகளுக்கும் மேலதிகமானது . இந்த இடம் எனக்கான களத்தை உருவாக்கும் பெரிய வாய்ப்பை எனக்கு கொடுப்பது . அதை எனக்கு முன் இருப்பவர்களின் அனுமதியோடு நான் அதை பெற இயலும் . அவர்கள் விரும்புவது என் நிலைபாட்டிற்கு முரண்பட்டாலும் கூட . எனது செய் நேர்த்தியால் நான் என்னை அதிலிருந்து முற்றாக வேறுபடுத்தி காட்ட முடியும் என நினைக்கிறேன்என்றேன் .

இதில் தலைவர் என்னை தனக்கு எதிராக நினைக்கும் ஆபத்தை தெரிந்தே இருகிறேன் . ஆனால் அத்தகைய சந்தர்ப்பதிலிருந்தே , நமக்கான வாய்ப்புகள் எழுந்து வருகின்றன . இந்த இடத்தில்தான் நீங்கள் சொன்ன  “ஆதரவு என்பது முற்றாதரவு நிலை என்பதல்லஎன்கிற கோட்பாட்டை ஒப்புக்கொள்கிறேன் . என்னை அவர் இதற்கு முன்பும் இதன் பின்னும் நான் ஆற்றும் செயல்களிலிருந்து என்னை புரிந்து கொள்ள வேண்டியது . ஏன் ? இதைப்போல ஒன்றை நீங்களோ நாராயணசாமியோ மரைக்கருக்கு எதிராக தலைவர் செயல்பட்டது  உங்களை போன்றவர்களை முன்னிறுத்தித்தானே? . அப்போது நீங்களோ நாராயணசாமியோ அதை எந்த மனநிலையிலிருந்து செய்தீர்களோ  , அங்கேயே நான் இப்போது நின்று கொண்டிருக்கிறேன் . என் தனிப்பட்ட விழைவிலிருந்து எனது செயல் எழும் வரை ,என்னை தனித்து குற்றம் சொல்ல இயலாதுஎன்றேன் . வல்சராஜ் சிரித்துக்கொண்டார்

அரசியல் சூழலிலிருந்து எழுந்து வருபவை அவை யாரையும் யார் அருகிலும் நீண்ட நாட்கள் வைத்திருப்பதில்லை . முற்றாதரவு நிலை எடுத்தவன் , தான் இழைக்காத குற்றத்திற்கு என்றாவது ஒருநாள் பலியாக வேண்டிவரும் . இது மாறா இப்புடவியின் நெறி. அன்று கலங்காதிருக்க, இன்று மனதை நிலைநிறுத்திக்கொள்ள , நிலை பெயறாது இருந்து கொண்டு கண்களில் தெரியும் வாய்ப்புகள் , தனக்கு சரி என தெரிந்தவைகளை ஆற்றிக்கொண்டிருபது மட்டுமே நாம் செய்யக்கூடியது .

சுருதன் ஏளனத்தில் உதடுகள் சற்று வளைய உபபாண்டவர்கள் நிமித்திகர்களுக்கு இணையாகவே வருவதுரைப்பவர்கள் என்பதை உணர்ந்துகொண்டேன்என்றான். அவன் விழிகளை ஏறிட்டு நோக்கி புன்னகைத்த சதானீகன்எந்தையர் ஐவரில் இளையவர் நிமித்த நூல் தேர்ந்தவர், ஆவதை முற்றுணர்ந்தவர் என்று அறிந்திருப்பீர். நாங்கள் ஒன்பதின்மர் அந்த ஐவரின் நல்லியல்புகள் அனைத்தையும் பெற்றவர்கள் என்பார்கள்என்றான். “சுருதரே, வருவதை உள்ளறியாத எவரும் மண்ணில் இல்லை. ஏனென்றால் நிகழ்வதறிந்த பார்த்திவப் பரமாணுவே உள்ளமென விரிந்தெழுகிறது. அறிந்ததை விழைவாலும் ஆணவத்தாலும் மறைத்துக்கொள்கிறோம்.” என்கிறது திரு.ஜெயமோகனின் -வெண்முரசு - எழுதழல்- எட்டு : குருதிவிதை – 6

வல்சராஜுடன்  நாராயணசாமியின் தேர்தல் வேலைகளை நானும் சேர்நது பார்க்கும்படி நேர்ந்தது  . கொடுத்த வேலையை நான் சரியாக செய்து கொடுத்துக் கொண்டிருந்தேன் . பல மிக மிக சிக்கலானவை . அதில் என்னை அவர் பொருளில் சார்ந்த வேளைகளில் தனித்து செயல்பட சொன்னபோது , உறுதியாக மறுத்துவிட்டேன். தனிப்பட்ட வேலைகளை வல்சராஜுடன் இணைந்தே செய்திருந்தேன் . பாமக வின் ஆதரவை பெற முயற்சித்துக்கொண்டிருந்த போது, அதன் தலைவர் ராமதாஸ் பல வருடங்களாக நாராயணசாமி பாமகவை விமர்சித்துவந்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டால் ஒருவேளை தங்களின் ஆதரவு தருவது பற்றி யோசிக்கலாம் என்றார்


யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலக பத்திரிக்கையாளர் கூட்டத்தில் நாராயணசாமி பமகவிற்கு வருத்தம் தெரிவிக்க , கட்சிக்குள் கொந்தளிப்பு ஏற்பட்டது . அப்போது நானும் வல்சராஜும் அங்கு இருந்தோம் . வல்சராஜ் எந்த உணர்வையும் வெளிக்காட்டாது மௌனமாக அமர்ந்திருந்தார் . என்னை நாராயணசாமியின் பேட்டி குன்றிப்போக வைத்து , அவர் மீது மிகுந்த வருத்தத்தை  ஏற்படுத்திவிட்டது . வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்லலாம் என்கிற கோட்பாட்டினால் நிகர்செய்யக் கூடியதல்ல இது . தலைவர் கொதிநிலையில் உச்சத்திற்கு சென்றார் .