https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 20 நவம்பர், 2017

அடையாளமாதல் - 243 * சுயத் திறப்புகள் *

ஶ்ரீ:


பதிவு : 243/ 328 / தேதி :- 19 நவம்பர்    2017


* சுயத் திறப்புகள் *



முரண்களின் முனைகள் ” - 12 ”
கருதுகோளின் கோட்டோவியம் -02





 Erich von Däniken எழுதிய The Chariot of Gods அன்று ஏற்படுத்திய ஒவ்வாமை நீண்ட காலத்திற்கு எனக்குள் இருந்து கொண்டே இருந்தது . ஆகவே அதை போன்ற ஆக்கங்களை தொடுவது என்பது என்னால் செயக்கூடியதில்லை . அதை போல ஒன்றாக ஜெயமோகனின் ஆக்கம் இருந்து விடக்கூடும் என்கிற அச்சம் . நீண்ட காலத்திற்கு பிறகு சரியோ தவறோ ஒரு இடம் என்னையும் என் நம்பிக்கைகளையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது . அந்த முதிரா சிறுவனின் அதே மனப்போக்கு இன்றும் இருக்கிறதா ? என என்னைக் கேட்டுக்கொண்டு . இல்லை அதைப்போன்ற ஒன்றை எதிர்கொள்ளும் எதிர்ப்புசக்தியை நான் அடைந்திருப்பதாக தோன்றிய பிறகு முழு கவனத்துடன் அவரது ஆக்கங்களை அனுகத் துவங்கினேன்.

"விஷ்னுபுரம்" விவாதப் பகுதியை ஆழ்ந்து படிக்க முற்படும் போதுதான் எனக்கு ஒருவிஷயம் புரிபட ஆரம்பித்தது. அது எனக்கு ஒரு மின்னலின் பொறி எனவும் அதே சமயம் புரியாமை என்கிற ஆயாசத்தையும் ஒரே சமயத்தில் ஏற்படுத்தியது. அது சொன்ன சிக்கலான கோட்பாடுகளை புரிந்து கொள்ள என் மனம் தன் உள் அடுக்குகளிலில் துழாவத் தொடங்கியது ஆழ்படிமங்களில் அது இருப்பதாக உணர்த்திய பின் அதுஅகப்பையில் இருந்தும் புறப்பைக்குவர மறுத்தது.அது ஒரு வகையான வதை. நானே இரண்டாக பிளந்தது போல ஒரு உணர்வு.

தீவிரமான ஶ்ரீவைஷ்ணவ குடும்பத்தில் பிறந்த எவருக்கும் உள்ள அகவய அபிப்ராயம் அதைத் தொடர்ந்த புறவயமான பேச்சினால் ஏற்பட்ட ஒற்றை சிந்தனை என வளர்ந்தாலும், ஓயாத ஒவ்வாமையும் சேர்ந்தே வளர்ந்தது.அது எங்கும் எவர்மத்தியிலும் ஒத்துபோகாத மனநிலையை எப்போதும் அளித்துவந்தது. இயற்கையான சுபாவம் அதைப் பற்றிய பேசும் திடத்தை கொடுக்கவில்லை.எங்கோ ஏதோ சரியில்லை என்னும் புரிதலையும் மட்டும் அது உள்ளே பொதிந்து வைத்தது.

விசிஸ்டாத்துவைத சித்தாந்தத்தைஎம்பெருமானார் தரிசனம்என்பது ஶ்ரீவைஷ்ணவத்தில் பிரசித்தி.அது சம்பந்தமாக புத்தகங்களை இருபது வருடங்களாக படித்ததினால் ஏற்பட்ட பாதிப்பு அது பற்றிய சிந்தனை ஓட்டத்தில்வெண்முரசைபுரிதலுக்கு எடுக்க என்னிடம் நிறைய குறைபாடுகள் உள்ளதாக தோன்றியது. அதுவே என்தேடலை அதிகப்படுத்தியதுபேசிற்றே பேசலல்லால்,”  ஏகக்கண்டர்கள்என்று சொல்மாறாது அர்த்தம் மாறாதே பேசுதல் சம்பிரதாயம் என்றிருக்கும் போது அதில் நவீன சிந்தனை பற்றி பேசுதலைதான்தோன்றிஎன குற்றமாக பார்ப்பது வழக்காரு.நான் இந்த பொதுச் செயளாலர் பதவிக்கு வரும்போது சம்பிரதாயப்படி கடமைகளை ஆற்றிய பிறகு என்தேடலுக்கு வடிகாலாக பார்த்ததுதிறந்த மன்றம்அதில் நவீன பார்வைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்கிற ஆவலில் பல திக்குகளுக்கு ஓடி நின்றது, இந்த வகை வாசிப்புகறுக்குப் பிறகுதான்.

முந்தைய சிந்தனைகளின் பிந்தைய தொகுப்புத்தான் புதுமை என்பது. முந்தைய சிந்தனைகளை தொகுத்திருக்கின்ற தொகுப்பு முறையும் அவற்றில் காணப்பட்ட இடைவெளிகளைத் புதிய தொகுப்பினால் விளக்கக்கூடிய நிரவல்களை கொண்டதுஎன்கிற ஜெயமோகனின்  எழுத்து எனக்கு பல அடுக்கு திறப்புகளைக் கொண்டாதாக இருந்தது. என்னை தெளிவு படுத்தியது.பல வருட மண்டை குடைச்சல் ஒழிந்து தெளிவென சிந்திக்க முயன்றது இங்குதான் என உணர்கிறேன் .

இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்இதில் அணிந்துரை எழுதிய சோதி பிரகாசம்  “இந்திய ஞான மரபுஎன்று சொல்லியதை ஜெயமோகன் மறுத்து இரண்டிலுமுள்ள உள்ள வித்தியாசத்தை சொன்ன போது , மரபான பௌரானிக பாணியின் அடிப்படையை அது தகர்க்காது போனது . இந்திய தத்துவத்தில் ஆழ்ந்த பயிற்சி உள்ளவராக , அதே சமயம் மேற்கத்திய தத்துவங்களை இணைத்து ஒரு புரிதலைத் தரும் அவரது கட்டுரையாக பல வாசிக்க கிடைத்தன . அவை என்னை கலைத்துக்கொள்ளும் நிபந்தனையை வைக்கவில்லை . என்னிடம் உள்ள இடைவெளிகளை மிக இயல்பாக நிறுத்தும் நுண்மை அதற்கு இருந்தது .

பல வருட அரசியல் ,ஆன்மீக மற்றும் வியாபாரம் போன்ற இயக்க பின்புலம் , எனக்கு நிறைய களப்பணிகளை அளித்திருந்தது . அதன் மூலமாக பலத் துறையில் ஈடுபடும் சமூகத்தின் அனைத்து பிரிவினர்களை நேரில் சந்தித்து உரையாட கிடைக்கும் வாய்ப்பை எப்போதும் இழந்ததில்லை. மனித மனங்களை பண்படுத்துவது  தத்துவம். அது எப்போதும் மதம் சாந்தே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது . மதம் பக்திசார்ந்தே வளர்வது . கடந்த முப்பது வருடத்தில் நிகழ்ந்த சமூக பொருளியல்  மாற்றங்கள் அனைத்து நம்பிக்கைகளையும் மரபுகளையும் தலைகீழாக மாற்றி இருப்பதை எல்லோரும் உணர்ந்தாலும் , அதன் தாக்கம் அவர்கள்  நினைத்தது போலில்லாமல் சமூக கட்டுகளை முற்றாக மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றிருக்கிறது . பெற்றோர் தன் பிள்ளைகளுடன் உரையாட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டதையும் . அடிப்படையான மரியாதையும் கானாமலாகி இருந்தது.

ஆறு தரிசனங்கள் ஆக்கத்தில் நம் அறிவுச்சூழலில் இந்து மெய்ஞான மரபு குறித்துக் கடுமையான துவேஷம் கொண்டவர்கள் ,மற்றும் மிகப் பெரிய பக்தி கொண்டவர்கள் பலர் உள்ளனர் இருசாராருக்குமே இம்மரபு குறித்து போதுமான அளவு தெரியாது இவர்கள் வெறும் மனப்பதிவுகளையும் ஒற்றைப்படை புரிதல் மட்டும் உள்ளவர்களே.வெறுப்பவர்களுக்கும் வழிபடுபவர்களுக்கும் இடையே வியக்கதகு ஒற்றுமை.இந்து ஞான மரபு என்பது முற்றிலும் ஆன்மீக மரபுதான் என்றும் , அது தவிற்கவியலாத மதச்சடங்குகளுடனும் நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது என நம்புவதுதான்“.என்றது . ஆம் இதில் நான் இரண்டாவது வகை

இந்நூல் இந்த இருவகைச் சிறுமைப்படுத்துதல்களுக்கும் எதிரான தரப்பை தெளிவாக முன்வைக்கிறதுஎன்கிற வரி ஆழ்ந்த திகைப்பை ஏற்படுத்தி அதுவரை நான் கொண்டிருந்த முன் முடிவுகளை கலைந்து விட்ட பிறகே அது தன் நிஜமாகவே முகத்தை காட்டத்தொடங்கி பின் என்னை முழுமையாக உள்ளிழுத்துக் கொண்டது. சுயத்தை கலைந்து கொள்ளாமல் திறப்பை அடைவது பற்றிய சிந்தனை எழுந்தது . மிக ஆரோக்கியமானதாக இருந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்