https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 15 நவம்பர், 2017

அடையாளமாதல் - 239 * சிந்தனையால் கருவுறுதல் *

ஶ்ரீ:


பதிவு : 239 / 325 / தேதி :- 15 நவம்பர்    2017


* சிந்தனையால் கருவுறுதல்  *



முரண்களின் முனைகள் ” - 09 ”
கருதுகோளின் கோட்டோவியம் -02





2008 ல் திட்டமிட்டபடி நான் அனைத்திலிருந்தும் முற்றாக ஓய்வு பெற விழைந்து நிர்ணயித்த வருடம் 2013 ,அது எங்களது நிறுவனம் தனது நூற்றாண்டை நிறைவு செய்யும் வருடமும் கூட . நான் தனியாக நடத்திக் கொண்டிருந்த என் நிறுவனத்தை பெரிய அளவில் விஸ்தரிக்க திட்டமிட்டதை முடக்கி  கொந்தளிக்கும் மனநிலையில் திட்டமிட்ட காலத்திற்கு ஒரு வருடம் முன்பாகவே அனைத்திலிருந்தும் 2012 ல் வெளியேறி பாரமார்த்திக ஈடுபாட்டால்   “ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழுதொடங்கி ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுடன் மிகப்பெரிய அளவில்   வளர்தெடுக்கப்பட்டது . நீண்ட கால அமைதியின்மைக்கு பிறகு ஒருவித மன அமைதியை கொடுத்தாலும்  அது ஒரு இடைக்கால ஏற்பாடாகவே இருந்தது. புறவய செயல்பாடுகளால் அலைக்கழிகப்பட்டு, அகவயமாக என்னை அவதானிக்கும் வழிமுறைகளை நோக்கிய எனது தேடலை தொடர்ந்தேன்

அதற்கு இந்த இயக்கமும் ஆன்மீகத்துறையும் சரியான தேர்வாகவே இருந்தது. ஆன்மீகத்துறை எனக்கு புதிதான ஒன்றல்ல. என்னுடைய நுழைவு ஏழாவது வயதில் . நான் எனது பெற்றோர்களுடன் திருக்கோவலூர் ஜீயர் மடத்தில் வைணவ தீட்சை பெற்றபோதே நிகழ்ந்துவிட்டது. அது என்ன ஏதென புரியாத வயதில் என் ஒப்புதலோ புரிதலோ இல்லாத காலத்தில். இருந்தும்  மிக இயல்பாக என் ஆழ்மனத்தில் எங்கோ அதை உணர்ந்தே இருந்தேன் .

ஆன்மீகத்துறையின் தற்போதைய நிலையை நன்கு அறிந்திருந்தும், உள் நுழைந்த போது அதன் நிதர்சன உண்மைகள் பெரும் திகைப்பை கொடுத்தது . அரிதாக சிலரைத்தவிர . அது மிக சராசரியான மனிதர்கள் கட்டுக்கடங்காமல் புழங்கும் இடமாகிப் போனது . அவர்களை  தங்களின் தகுதிக்கு மீறிய விழைவுகளை கொண்ட மனிதர்களாக சந்தித்தபோது அதிர்ந்து போனேன் . இன்று ஆன்மிகம் பெரும் மூலதனத்தில் நடைபெறும் தொழில் போன்று மாறியதையும் , சாமான்யர்கள் தங்கள் அடையாளங்களை தேடியபடி இதில் அலைந்து கொண்டிருப்பதையும் , அதற்காக அவர்கள் எதையும் செய்யும்  மனநிலையில் இருப்பது , எனக்கு ஆற்றாமையைத்தான் கொடுத்தது

அரசியல் - அது ஒருவரை பிறிதெவரிடமிருந்தும் தன் ஆளுமையால் தனித்து காட்டுவது . கட்சி ரீதியில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை . அதன் புகழ்வெளிச்ச பாய்சலுக்கும் , செல்வாக்கிற்கும் பிற துறையில் பெரும் வெற்றி பெற்றவர்களும் ஏங்குவதை பார்க்க முடிந்தது . கட்சி அரசியல் பெரிய மனிதர்களின் வழியல்ல என மாறிப்போனது. அதில் உள்ள கீழ்மையான சவால்களுக்கு அஞ்சி, சமூக அந்தஸ்ததில் உள்ளவர்கள்பாரம்பர்யமுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  என்கிற அடையாளங்களால் அறியப்பட்டவர்கள் , கட்சி அரசியலில் தகுதியற்றவர்களின் ஆதிக்கத்தால் அவர்களுடன் பொருதும் இழிவை விலக்கி , அதை அரிமா சங்கம் போன்றவற்றில் மூலம் தங்களின்  அரசியல் கனவிற்கு தீணியிட்டுக்கொண்டனர் . அது ஒரு வேடிக்கையான அரசியலை  நகல் செய்பவை    . அவர்களை தவிர பிற சாமான்யர்கள் வந்து சேரும் இடம் ஆன்மீகம் என்றாகிப்போனது . அத்தகையவர்கள் தங்களின் அதீதமான ஆச்சாரப் பேச்சால் தங்கள்அடையாளத்தைநெருங்க நினைத்தார்கள் . அதில் பெரும்பாலானவர்கள் அதை நடிப்பாக செய்து கொண்டிருப்பதைதான் பார்க்க முடிந்தது.

இவற்றின் மத்தியில் இளைய தலைமுறையினருக்கான விஷயமாக இதில் ஏதாவது செய்யவேண்டும் என்கிற விழைவில் . ஆயிரமாவது ஆண்டு இயக்கத்தில்திறந்த அரங்கம்என்கிற உள் அமைப்பை கொண்டு வந்து , அதில் அனைத்து சம்பிரதாய விஷயங்களின்  தத்துவ விசாரம் போன்ற ஒன்றை நடத்தும்  முயற்சியில் அப்போது இருந்தேன் . அந்த விழைவு ஒன்றுதான் என்னை அதில் முழு மனதாக ஈடுபட வைத்தது . நடைமுறை யதார்த்தம் அதற்கு பலவிதமான வடிவ மாற்றங்களை கொடுத்தபடி இருந்ததது. “வேதவிஞ்ஞானம்எனத்தொடங்கி சிலகாலம் அதில் உழன்றுஇந்து ஞானமரபு என்கிற கருதுகோளைஅடைவது வரை ,பல துறையில்  பலத்தரப்பட்ட வல்லுனர்களை சந்திக்கும் வாய்ப்பினால் அடைந்த திறப்புக்கள் ஏராளம்

மேலதிகமாக ஏதாவது செயலாம் என்கிற கணக்கில் உள்நுழைந்து அதில் அலைக்கழிக்கப்பட்ட நேரத்தில் ஏற்பட்ட உளசிக்கலின் காரணமாக சில காலம் என்னை தொகுத்துக்கொள்ள அதலிருந்து கொஞ்ச ஒதுங்கியிருத்தேன் . அந்த காலகட்டத்தில்  “நம்மாழ்வாரின் திருவாய்மொழிப்ரபந்தத்தில் இருந்த மாதுர்யம் காரணமாக அதை பிறிதொரு கோணத்தில் அறிய வலைத்தளத்தில் ஆழ்ந்தபோதுதான் தற்செயலாகஜெயமோகன் வலைத்தளத்தைஅடைந்தேன்.

அது ஒரு பெரிய திருப்புமுனை என இப்போது நினைக்கிறேன். அதுவரை பலகாலம் பலத்துறையில் அடைந்த அனுபவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாக , இணைக்க முடியாத உதிறிகளாக என்னால் பார்க்கப்பட்டன . ஆனால் ஜெயமோகனின்வெண்முரசு , இன்றைய காந்தி விஷ்ணுபுரம் , இந்து ஞானமரபின் ஆறு தரிசனங்கள்மற்றும் அவரது ஆக்கங்கள் வழியாக பெற்ற நுண்ணுர்வு அல்லது ஆழ்மனப்படிமம் என ஏதோ ஒன்று எனது அணைத்து அனுபவத்தையும் தொகுக்கும் முயற்சிக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தது எனது நல்லூழ் என்பேன் .

தத்துவம் , தருக்கம் ,புராணம் ,வரலாறு போன்றவை உலகியலை அறிந்து கொள்வதனூடாக நம்மையும் அறிந்துகொள்ள வைப்பவைகள் . இவை  இயற்கையிலேயே எனக்கு மிகுந்த ஈடுபாட்டைத் தருபவை என்பதை மிகத்தாமதமாக புரிந்துகொண்டேன் . சித்தனை ரீதியாக இருந்து வந்த இலக்கற்ற அலைக்கழிப்பை முதல்முறையாக முறைப்படுத்த முயன்றது இலக்கிய வசிப்பினூடாக

அதை கண்டுகொண்ட பிறகு ,ஒவ்வொரு வாசிப்பின் போது எனக்குள் ஒன்று கிளர்ந்தபடி இருந்தது . அவை பலதுறைகளில் நான் பெற்ற அனுபவங்கள் . அவை வாசிப்பை நிகழ்த்த  துவங்கியதும் , வாசிப்பினூடாக சிந்தனைகளாக எழுந்து மனத்திறப்பை சிதைக்கும் போக்கு பெரும் மனஅலைக்கழிப்பைதான் கொடுத்தன . அவற்றை எழுதி தொகுத்துக் கொண்டு முன்னகர்வதன் மூலம் அவற்றைக் கடக்க முடியும் என உணர்ந்தது போது , அது என்னை பிறிதொரு தளத்தை நோக்கி தள்ளியது . அங்கு அலைக்கழிக்கும் சிந்தனைகளை அகழ்ந்தெடுக்க என்  மொழி இன்மையை உணர்ந்து திடுக்கிட்டது அப்போதுதான். எண்ணங்களால் மட்டுமே சிந்தனை கருத்துக்களாக கருவுறமுடியும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...