https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 21 நவம்பர், 2017

அடையாளமாதல் - 245 * மனதின் வழிகாட்டல் *

ஶ்ரீ:


பதிவு : 245 / 331 / தேதி :- 21 நவம்பர்    2017

* மனதின் வழிகாட்டல் *


முரண்களின் முனைகள் ” - 14 ”
கருதுகோளின் கோட்டோவியம் -02




இதை விட சரியான தருணமென ஒன்று வாய்க்காது  என நினைத்தேன் , நான் பல காலமாக  என்னுள்  நினைத்திருந்தவைகளுக்கு அது சொன்னதைவிட  சொல்லாதது அதிகமாக புரிந்ததாக . இருந்தும் அவதானித்த ஆளுமைக்கும் யதார்த்தமும் பல சமயம் முற்றிலும் புதிதானவர்களாக பார்த்திருந்த அனுபவம் அப்படி எனோ இந்தமுறை எனக்கு தோன்றவில்லை இருப்பினும் செல்வதை பற்றிய முடிவும் செய்யமுடியாமையுமாக  இருந்தேன் . அது மூன்று நாள் மாலை மட்டுமே நடக்கும் நிகழ்வு காலை முதல் என்ன செய்வது என்கிற திட்டமில்லாமலும் . அங்கு எனக்கு தெரிந்தவர் யாருமில்லாததால் ஓட்டலில் தான் தங்கவேண்டும் இரண்டு முறை ஆன்லைனில் புக் செய்ய  பாதிவரை சென்று துண்டித்துவிட்டேன் . தனியாக செல்ல தயங்கி நண்பர் ஒருவரை அழைத்ததும் அவரும் வருவதாக சொன்னார். ஆனால் பேய் மழை தமிழகமும் பாண்டியும் வெள்ளக்காடாகி , நிவாரணம் நடந்து கொண்டிருந்தது , கடைசியில் கிளம்பி விட்டேன் வழி முழுக்க தயக்கம் அடிக்கடி எழுந்தபடியே இருந்தது. அந்த விளம்பரத்தில் சொல்லப்பட்டிருந்த எந்த  விஷயம் என்னை உந்தித்தள்ளியது என யோசித்து அதில் சொல்லப்பட்டதை மீளவும் ஒருமுறை சொல்லி கொண்டேன்

கீதையின் சாராம்சத்தைபாமரருக்கும் புரியும்படிஎளிமைப்படுத்தி குட்டிக்கதைகள், புராணங்கள், நகைச்சுவைகள் கலந்து சொல்லப்படும் உரை அல்ல.கீதையின் பாடல் வரிகளைச் சொல்லி விளக்கமளிக்கும் உரை அல்ல”. என்றிருந்தது. ஆம் அதை பாமரர்களுக்கு விளக்க பல நூறு வருடங்களாக மரபான ஆன்மீக சமூகம் முயற்சித்தபடியே இருக்கிறது . அதனால் விளைந்த பலன் என்ன என்றுதான் தெரிவில்லை?

பக்தி நோக்கில் கீதாசாரியனின் ஆணைகளையும் வழிகாட்டல்களையும் விளக்கப்போவதில்லை. அதை பௌரானிகர்கள் பல்நெடுங்காலமாக செய்து வந்திருக்கிறார்கள் . அதற்கு உரை பல இன்று காணக்கிடைக்கிறது . நிச்சயமாக அதை இந்த மேடையில் செய்ய இயலாது

கீதையை மரபார்ந்த முறையில் சொல்லப்படும் தேர்ந்த அறிஞர்களின் கருத்துக்கள்  பல உள்ளன .ஏனென்றால் இந்து ஞான மரபின் முதல்நூலாக அது நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. அவர்களை மேற்கோள்காட்டி பேசப்போவதில்லை, மறுத்தும் பேசப்போவதில்லை. மறுத்து பேசப்போவதில்லை என்பது எனக்கு சற்று ஊக்கம் கொடுத்தது .எனக்கு உரை எந்த கோணத்தில் அனுகப்படும் என்கிற வகைமைகளே எனக்கு அதன் மீதான பெரும் ஈரப்பை கொடுத்திருந்தது .

உலகின் முதன்மையான தத்துவ -மெய்யியல் நூல்கள் அனைத்துமே காலம்கடந்தவை. உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், சாங்கியகாரிகை, பிளேட்டோ சாக்ரடீஸ் உரையாடல்கள், பைபிள், தம்மபதம், ஜைனசூத்திரங்கள், கன்ஃபூஷியஸ் மொழிகள் போன்றவை உலகநாகரீகத்தின் பொதுச்சொத்துக்கள். அவற்றை ஒவ்வொரு காலகட்டத்தினரும் தங்கள் வாழ்க்கைச்சூழலைக் கொண்டு, தங்கள் சிந்தனைப்பரப்பைக்கொண்டு மறு கண்டுபிடிப்பு செய்யவேண்டியிருக்கிறது, மறுவரையறை செய்யவேண்டியிருக்கிறது. இதில் மரபானவர்கள் முறன் படுவார்கள்ஆம் இது காலத்தால்  சூழலால்  தவிற்க முடியாதது என்றே தோன்றியது . இன்று பிறந்து வரும் புதிய தலைமுறையின் அறிவுத்திறன் முந்தைய தலைமுறையிலிருந்து பெரிதும் மேம்பட்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே அவர்களுக்கு உகந்த முறையில் அவை மறுவரையறை செய்வது அவசியமாகிறது.

பௌரானிக மரபில்  இதில் எந்த மாற்றமும் செய்ய இயலாதுஅங்கு அது குற்றமாக பார்க்கப்படுவது. அதனால்  இளைய சமூகத்திடம் எழும் கேள்விகளுக்கு உலக நடப்பிலிருந்து உதாரணம் கொடுக்க இயலாததால் அவர்களிடம்  நெருங்கி செல்ல முடிவதில்லை . பௌரானிக மரபில் ஒரு தந்தை இதில் சமர்த்தராக இருந்தாலும் ,தன் மகனுக்கு இதை சொல்லி வைப்பதில் வெற்றியடைந்தாக தெரியவில்லை , என்பதை விட சொல்லிவைக்கும் சூழலில் அவர்களே இல்லை என்பதுதான் நடைமுறை . அப்பாவை தனது ஆதர்ஷங்களாக பார்த்து பிள்ளை வளர்வது ஏறக்குறைய இல்லை என்கிற காலம் வந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன  . தனது பள்ளி பாடத்தில் உதவ முடியாத தந்தையை , போதிய உலக ஞானமில்லாதவராக பார்க்கும் பிள்ளை , தன் வாழ்வை தான் முடிவுசெய்யும் தகுதியுள்ளவனாக பிற்காலத்தில் வளர்ச்சி அடைந்ததாக எண்ணிக்கொள்கிறான்  . 

வாழ்வியல் தத்துவங்களால் புரிந்து கொள்ளப்படுபவை , அவைகளைக் கொண்டே அதை  கடக்கவும்  இயலும் . ஐம்பது வயதில் வாழ்வியலில் ஏற்படுகிற விரக்தியும் வெறுமையும் இன்றைய கால சூழலில் முப்பது வயதில் ஒருவர்  எதிர்நோக்க வேண்டிய தருணங்களில் பெரும்பாலான தந்தை மகனுக்குச் பிரத்தியேகமாக சொல்ல ஏதுமில்லை . இந்த உரையில் இன்றைய சூழலில் கீதையை ஒரு சிந்திக்கும் நவீன இளைஞன் எப்படி அணுகலாம் என்று மட்டுமே இருக்கும் என்றது. நான்எதிர்நோக்கும்  கருதுகோள் கிடைக்கும் வாய்ப்பை இழக்க நான்  தயாராக இல்லை. நவீன உலகில் மதம் பற்றிய சிந்தனை மறுவரையறை செய்யபடவேண்டும் என கருதுகிறேன் . கார்பரேட் குருநிலைகள் , அந்தைகைய தேவைகளை மிகச் சரியாகவே கையாளுகின்றனர் . ஆனால் மரபான நிலைகளில் இருந்தே அது மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றே கடந்த கால வரலாறுகள் காட்டுகின்றன .  வெகு சில மரபான சிந்தனையை ஒட்டிய குருநிலைகளே இன்றும் சிஷ்ய பரம்பரையை காப்பாற்றி வருகின்றன . தனி ஆளுமையாக தோன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்த கார்ப்பரேட் குரு நிலைகள் இன்று வெறும் சொத்தையும் பொருளியல் வளத்தை பராமரிக்க மட்டுமே இருக்கின்றன என்பது நடைமுறை யதார்த்தம் . 

கீதையை புனிதநூலாகவோ மதநூலாகவோ அணுகப்படாது . இலக்கியநூலாக, தத்துவநூலாக, ஆன்மிகநூலாக மட்டுமே அணுகப்படும்.கீதையின் வரலாறு, கீதை இந்திய- உலக தத்துவப்புலத்தில் கொண்டுள்ள இடம், அதன் மெய்யியல் ஆகியவையே பேசுபொருட்கள் என்றது.

கீதையை எந்த ஒரு இந்து தத்துவமரபுக்குள்ளும் நிறுத்தப்போவதில்லை. ஆனால் தன் குருமரபு என்பது அத்வைதத்தை கொள்கையாகக்கொண்ட நாராயணகுருவின் பள்ளி என்பதனால் அவர்களிடமிருந்து அவர் கற்றதே முதன்மையாக இருக்கும் என்றார். கூடுமானவரை மேற்கோள்களைத் தவிர்க்கவும் இதுவரை கீதைபற்றி பேசப்பட்டதை தொகுத்துவைக்காமலிருக்கவும் முயல்கிறேன். ஆகவே இதை ஓர் அறிஞனின் ஆய்வுரையாக ஆக்காமலிருக்க முயல்கிறேன். இது ஓர் இலக்கியவாதி கண்டடைந்த கீதை.இந்த வரிகள் நான் எடுத்த முடிவை சரியாக பற்றி நிற்க உதவியது. அறிஞனும் இலக்கியவாதியும் சமூகத்தை அனுகும்விதம் பெரிய வித்தியாசத்தைக் கொண்டது என நினைக்கிறேன். நான் எனது மனம் வழிகாட்ட அதை பின்பற்றுவதை வாழ்க்கையில்  இதுவரை செய்து வந்திருக்கிறேன் . மனம் ஒரு குரங்கு என சொல்வதுண்டு அது எளிதில் அடங்க மறுப்பதும் , தேடலும் கொண்டது . நான் அப்படிதான் முட்டி மோதி முயங்கி இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...