https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 1 நவம்பர், 2017

அடையாளமாதல் - 225 * மரபின் மீறல் *

ஶ்ரீ:


பதிவு : 225 / 311 / தேதி :- 01 நவம்பர்    2017

* மரபின் மீறல்   *


வாய்ப்புகளில் புரியாமை - 10 ”
கருதுகோளின் கோட்டோவியம் -01.

இப்படி அடிப்படையில்லாமல் பெரிய பொறுப்புகளில் வருவதெல்லாம் காங்கிரஸில் ஒரு விஷயமேயில்லை . இப்படிப்பட்டவர்களால்தான் அதன் திசைகள் மாறிப்போனது . அவற்றால் கசப்படைதல் காட்டிலும் மடமை பிறிதொன்றில்லை . அதுவும் ஒரு நிகழ்வின் பெருக்கு, முரணியக்கத்தில் ஒரு அலகு , பெரும் முடிவுகளின் சாயல்களில் அதுவும் ஒரு துளியாக எஞ்சுவதை விண்ணகத்து தெய்வங்கள் விரும்புகின்றானபோலும் . அதன் குறுக்காக நிற்க எப்போதும், எவராலும் இயலுவதில்லை . ஆனால் சில சமயம் அவர்களுக்கு கிடைக்கும் நகல் மரியாதையில் உள்ள எள்ளலே அவர்களுக்கு அவர்கள் யார் என காட்டிவிடுவதுண்டு.

நிர்வாகிகளின் நியமனத்திற்கு பின்னர் வல்சராஜ் மாஹே கிளம்பி சென்றுவிட்டார் . இம்முறை அங்கு அவருக்கு ஏதோ அரசியல் நிர்பந்தம் புதுவைக்கு திரும்ப இரண்டுமாதமாக்கலாம் என்கிற சூழலில் தான் என் நண்பர் என்னை சந்திக்க வந்தார் . அவர் வந்ததினாலேயே இதன் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்து போனது . வல்சராஜ் இல்லாத நேரத்தில் செயல்பட ஒரு குழு அமைப்பதன் அவசியம் பற்றி எடுத்த எடுப்பில் நேராக என்னிடம் சொன்னார் . இது என்னை தொடக்கூடாது இடத்தில தொடுவது . இருப்பினும் எனது வருத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளாது , நான் வெறும் பொதுச்செயலாளர் மட்டுமே நீங்கள் வல்சராஜுடன் கலந்துபேசி ஒரு குழுவை அமைக்க சொலுங்கள் . நான் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறேன் என்றதும் . தான் நட்பின் அடிப்படையில்தான் இதை சொல்லவந்தேன் என்றார் . அரசியல் நம் நட்பின் அடிப்படையில் செயல்படுவதல்ல என்று சொன்னேன்

அந்த பால் விலையுயர்வு எதிர்ப்பு போராட்டத்திற்கு பின்  கட்சிக்குள் பல்வேறு தரப்பிலிருந்து பலவகை எண்ண அலைகளை உருவாகிவருவதை அறிய முடிந்தது . கட்சிக்கு முகமாக தலைவர் இருப்பதனால் நடைமுறை அரசியலில் புதிய வகைமுறை என்கிற ஒன்றை தனித்து எவராலும் அவரிடம் முன்வைக்க முடியவில்லை . அதை போன்ற ஒன்றை அவரிடம்  சொல்லி, அவர் மூலமாகத்தான் அவற்றை செய்யவேண்டிய நிலை . அதை நடைமுறை படுத்துவது தலைவரின் முடிவைப் பொருத்தது . இவர்களின் வகைமுறைக்கு பின்னால் சொந்த கணக்கிருப்தால்  அரசியல் ரீதியில் அவரிடம் பேசுவது நின்றுபோய் இருந்தது .

நான் நடத்திய நிகழ்விற்கு பிறகு இளைஞர் காங்கிரஸ், கட்சியை  நகல் செய்யும் அமைப்பாக எல்லோருடைய  கண்களிலும் தென்பட்டிருக்கலாம் . என்னிடம் அவர்களால் உரையாடமுடியாமைக்கு நான் வேறொரு தளத்திலிருந்து காரணம் . நான் தற்சார்பு பலம் பெரும் முயற்சியில் இருந்தேன் . அது நீண்ட நாள் பலன் தரும் திட்டம். அவர்களுக்கு புரியாததில் வியப்பில்லை. என்னுடை ஒத்துழையாமையை என் அரசியல்  போதாமை அல்லது புரியாமைய காரணமென அவர்கள் யூகித்திருக்கலாம் . அது மட்டுமல்லாமல் என்னுடன் அவர்களின் தனிப்பட்ட லாபங்களை சொல்ல ஒரு தயக்கமிருந்திருக்கலாம் .

அதற்கு மாற்றாக அவர்களின் கணக்குகளுக்கு ஒரு இணை தலைமை தேவைபட்டிருக்கலாம் . ஒருவகையிலும் நான் அவர்கள் சொல் பேச்சு கேளாதவன் என்பதைப்பற்றிய தெளிவு அவர்களுக்கு இருந்தது . அவர்கள் என்னை முழுமையாக ஒதுக்கும் எண்ணத்தில் எனக்கு இணையான அல்லது என்னை சமாதானம் செய்யக்கூடியவனாக எனது நண்பனை தெரிவு செய்திருக்கலாம் . அவன் வல்சராஜ் கமிட்டியில் அந்த நண்பர் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக வந்தான்

அவன் அந்த பதவிக்கு வந்தது ஒரு தறசெயல் . அது அவனது விழைவின் விளைவு மட்டுமே என்று நினைத்திருந்தேன் , ஒருநாள் அவன் என்னை தேடி அரசியல் பேச வரும்வரை .அது வழமையான சந்திப்பு என்றே ஒரு தருணம் வரை நினைத்தேன் .தலைவரை சார்ந்த அமைப்பினுள்ளேயே ஒரு சிலர் என்னை கட்டுப்படுத்தும் மையத்தை உருவாக்க நினைத்து , என் நண்பரை என்னுடன் பேசுவதற்கு அனுப்பியிருந்தார்கள் . பிறிதெவரையாவது அனுப்பி இருந்தால் இதை ஒரு உட்கட்சி ஜனநாயாகப்போக்கு என்கிற அடிப்படையில் நான் அதைக் கையாண்டிருப்பேன் . நண்பர் ஏற்கனவே அவருக்கு நான் உதவ மறுத்ததாக எண்ணி என்மீது காழ்ப்பிலிருப்பது எனக்கு தெரியும் . கசப்பு நட்பிலே நிகழும்போது தீர்ந்து விடும் வருத்தம் . என்றாவது ஒரு நாள் அதை சரியாகிவிடும் .ஆனால் அரசியலில் அது சரி செய்யவே முடியாமல் போய்விடுவதை பார்த்திருக்கிறேன்

இந்த சந்தர்ப்பத்தை பயனபடுத்தி நட்பை சரிசெய்யும் பொருட்டு நான் என்னவெல்லாம் சொன்னேனோ அவை அத்தனையும் எனது அரசியல் வாய்ஜாலம் என்றே எடுத்துக்கொண்டான் . நான் சொல்ல வந்தவை மறுபடியும் பிழையாக மாற்றிக்கொண்டு என்னுடன் நேரடியாகவே முரண்பட்டு , தன்னால் மாற்று மையத்தை உருவாக்கிடமுடியும் என்னும் , ஒரு நல்லெண்ணத்தில்தான் என்னை அனுகியதாக சொன்னது . எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை தருவதாக இருந்தது

நேற்றுவரை கட்சியென்றால் என்னவென தெரியாதவர் அரசியல் மாற்று மையத்தை பற்றியெல்லாம் பேசத்துவங்கியதும் , நான் இதன் பின்புலத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அனுமானிக்க துவங்கினேன். நான் அவனிடம் ,”இதுநாள்வரை கட்சி சார்பாக என்ன செய்யவேண்டும் என்பதை தலைவரின் அறிவுறுத்தலின்படி நடத்திக்கொண்டிருந்தேன் . இப்போது நீ மாற்று மையாத்தை பற்றி பேசுவது எனக்கு புரியவில்லை. இப்போதுள்ள நிலையில் நான் வேகமாக செயல்படுவதாக இல்லை . நீ தலைவரை சந்தித்து இனி அவரிடம் சொல்லி ஆகவேண்டியதை பார் . இதை என்னிடத்தில் பேச என்ன இருக்கிறது ?” என்றதும் , நண்பருக்கு ஒன்றும் புரியாமல் தலைவரை சந்திப்பதாக சொல்லி சென்றார் . நான் மனதிற்குள் சிரித்துக்கொண்டேன். இது இத்துடன் நிற்கப்போவதில்லை . நண்பர் நான் சொன்னதை சரியாக அர்த்தமாக்கிக் கொள்ளாமல் தன்னை அனுப்பியவரிடம் அதை கொண்டு சென்றால் என்ன நிகழும் என அவருக்கு புரியவில்லை. எதிலும் அவசரம் .எந்த மரபையும் மீற தயங்காதவர்கள்  மண்ணில் வேர்விட்டு தழைக்கும் மரமல்ல . உடனடி லாபத்திற்கு எதையும் கடக்க துணிபவர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...