ஆறு தரிசனங்கள்
வேதப் பரிச்சயம் உள்ளவர்கள்.
இவர்கள் ஒரு சிறு தொகுதியாக இருப்பவர்கள்.அடிப்படை ஞானம் இல்லாதவர்களிடம் பேச இயலாதவர்கள்.அவற்களுக்கே உள்ள கலைச்சொல்லாக்கத்தினால் சாமான்யர்களுக்கு அடிப்படையை ஏற்படுத்த இயலாதவர்கள்.அகவே கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் கடைசி மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டு தொடக்கம் வரையிலான பக்தி காலகட்டத்தில் தரிசனங்களுக்கு இடையேயான முரண்களுக்கான முன்வைப்பு கருத்துக்களும் அவற்றுக்கான உரைகளும் பதினான்கு மற்றும் பதினாறாம் நூற்றாண்டின் இடையே எழுந்து வந்தன.அவையே இன்றும் ஆதார கிரந்தங்கள்.
அதற்கான வாய்ப்பில்லாதவர்கள்
மரம் என்று சொல்லப்பட்ட ஒன்றின் முன் நிறுத்தப்பட்டு அந்த மரத்தை பற்றிய விவரணமாக பேசி பேசி கண்ணுக்கு பலப்படாத அதன் கிளை,இலை,பூ,காய் கனிகளைப்பற்றி விஸ்தாரமாக பேசி அதையும் அதன் பயனைப்பற்றியும் கற்பனைக்கு விடும்போது.உத்தரத்தை தாங்கும் தூண் போன்ற ஒன்றை வைத்து அதன் பயனை அவர்கள் சொல்லும்படி யூகிக்க இயலாது அதற்கு உயிர் உண்டு என்பதை மண்ணிலே ஓடும் வேரை அறியாததே
சிந்தனைத் துறையில் உள்ள தர்க்கங்களின் ஒட்டு மொத்த தொகுப்பே தத்துவங்கள்.அதன் ரீதியில் தரிசனம் என்பது வாழ்க்கை மற்றும் பிரபஞ்சம் குறித்த ஒட்டு மொத்தப் பார்வை அது சிந்தனையால உருவாக்க படுவதல்ல.தர்க்கபூர்வமாக விளக்கி விட முடியாதது,ஏனென்றால் அது தர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்ட விளக்கவியலாதது.அது ஒரு மனத்திறப்பின் கணத்தில் அடைந்த ஒட்டு மொத்தமான அகப்பார்வை.ஞானிகள் அடைந்தது மெய்ஞானம்,தத்துவஞானி அடைந்தது தத்துவஞானம் அது மெய்ஞானத்திற்கு அடங்கியது உள்ளுணர்வினால் அறியப்படவேண்டியது.எளிதாக கூறவேண்டுமெனில் அறிவு மற்றும் ஞானம் இவற்றிடையே உள்ள வித்தியாசம்.
தரிசனங்கள் சூன்யத்திலிருந்து உருவாக்கப்படுபட்டது அல்ல உலகத்தில் இதுகாறும் உருவான எந்த தரிசனமும் ஒரு தனிநபரால் திடீரென கண்டடையப்பட்டது அல்ல அதன்விதைகள் நம் மொழி நாட்டுப்புறப் பாடல்கள்,பழமொழிகள் முதலியவற்றில் புதைந்து கிடக்கின்றன.விழிப்புற்ற மனம் அவற்றைக் கண்டுபிடிக்கிறது
இந்து ஞானமரபின் பாடத்திட்டம்
வேதம்கள்
ஆறு தரிசனம்
ஆறு மதங்கள்
மூன்று தத்துவங்கள்
இந்து எட்டு காலகட்டங்கள்
வேத கலாலகட்டம்
உபநிஷத்து காலகட்டம்
தரிசன காலகட்டம்
அவைதிக மதங்களின் காலகட்டம்
பக்தி காலகட்டம்
பிற்கால வேதாந்த காலகட்டம்
இந்து மறுமலர்ச்சி காலகட்டம்
இந்து நவீனப் போக்கு காலகட்டம்
வேத கலாலகட்டம்
இந்து ஞான மரபின் தொடக்கப்புள்ளி வேதங்கள்.அவை புராதன பிரார்த்தனை படல்களின் தொகை.அவற்றின் மொழி மிகப்பழைமையானது.வேதங்களின் சிறப்பியல்புகள் இரண்டு 1. பல்லாயிரம் வரிடங்களாகியும் சிறு மாறுதலில்லாத தூயப் பிரதிகளாக இன்றும் கிடைப்பவை அவை மட்டுமே.2. எழுத்து வடிவ பிரதிக்கு ஆதாரமாக உச்சரிப்புகளை எடுத்துக் கொள்ளக்கூடிய படைப்புகளும் இவை மட்டுமே.
வேதங்கள் மொழின் ஆதிநிலை வேர் சொற்கள்.உச்சரிப்பு முறை சைகைகள் ஆகியவற்றுடன் இனைத்து அறியும் போது தெளிவான சித்திரம் கிடைக்கும்
வேதங்களின் கணிசமான பகுதிகள் நேரிடையான இறைசக்திகளிடம் கோரும் எளிய பிரார்த்தனைகள்,அவை மிகவும் கவித்துவமாக காணப்பட்டு குறியீட்டு செய்திகளை மின்னலைப் போல தென்பட்டு ஆழ்மனப்படிமங்களை சொடுக்கி மறைகின்றது.அவை மூன்று புள்ளிகளில் குவிவதை காணலாம்.
நாம் கண்டு கேட்டு உற்று நுகர்ந்து அறியும் எல்லாம் அடிப்படையில் ஒன்றே.அந்த ஒன்றின் தோற்றமே இதுவெல்லாம்.
நாம் நம் எல்லா புலன்களின் வழியே அறியும் ஒவ்வொன்றும் நம் காலவெளியின் மடிப்புக்களின் வழியே பெற்ற அறிவின் இயல்பிற்கு ஏற்ப நமக்கு புரிபடுபவைகளே.
நம்மை சுற்றி எதையெல்லாம் தேடுகிறோமோ அவற்றை எல்லாம் நமக்குள்ளேயே நாம் அறிய முடியும்.
தரிசனங்களை தீவிரமாக முன்வைப்பது ரிக்வேதத்தில் உள்ள "சிருஷ்டி கீதம்" இது உலக ஞான மரபின் "முதல் வெளிச்சம்" எனப்படுகிறது.இந்த நிமிடம் வரையான மானுட ஞானத்தேடலை முன்னோக்கி உந்தும் அனைத்து வித அடிப்படையான கேள்விகள் முழுக்க அந்தப் பாடலில் உள்ளன.இந்து ஞானமரபின் மையம் எனக் கருதப்படும் இப்பாடலில் வினாக்கள் மட்டுமே உள்ளன விடைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்தத்தன்மையே காலவெளியில் மானுடத்தேடலை முடிவிலியாக்கி அறிவதென்பது அறியமுடியாது எனும் அறிவே.
2. உபநிஷத்து காலகட்டம்
வேதங்களில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் கண்டடையப்பட்ட தரிசனங்கள் விரிவாக தருக்கப்பூர்வமாக உபநிஷத்துகளில் விவாதிக்கப்பட்டது.
உபநிஷத்துக்கள்
ஐதரேயம்
கெளஷீதகம்
தைத்ரியம்
கடம்
ஸ்வேதாஸ்வேதரம்
பிரகதாரண்யகம்
ஈஸம்
கேனம்
சாந்தோக்கியம்
மாண்டூக்யம்
முண்டகம்
பிரஸ்னம்
உபநிஷத்துக்கள் பலவகைப்பட்டவைகள்,ஒற்றை பார்வை அற்று தத்துவார்தமான விவாதங்களை கொண்டவை.பிற்கால தரிசனங்கள் பல உபநிஷத்துக்களை மூலநூலாக கொண்டவை.
நேதி நேதி நேதி (இவையல்ல இவையல்ல இவையல்ல)
பிரக்ஞானம் பிரஹ்மம் (பிரக்ஞையே பிரஹ்மம்)
தத்துவமஸி (அது நீயே)
அகம் பிரம்மாஸ்மி (நானே பிரஹ்மம்)
ஈஸாவாஸ்யம் இதம் ஸர்வம் (இவற்றிலெல்லாம் இறைவன் உறைகிறான்)
இப்படி சில ஆப்தசூத்திர வாக்கியங்களை அடுக்கினாலே அவற்றில் ஒரு பயணம் இருப்பதை உணரலாம்.முதலில் கண்டு அறியும் அனைத்தையும்,இவை உண்மை அல்ல என மறுக்கிறது நமது பிரக்ஞை.பிறகு நாம் அறிவதெல்லாம் நம் அறிவை மட்டுமே.நமது அறிவும் எல்லைக்கு அப்பால் உள்ள எதையும் நாம் அறிவதில்லை என அறிகிறோம்.பிரக்ஞையே முழுமுதல் கடவுள் என்று அறிகிறோம்.
இதன் தொடர்சியாக அறிவதும் அறிபடுபொருளும் அறிபவனும் வேறு வேறு அல்ல என்றஉ உணர்கிறோம். அது நீயே என்ற பிரக்ஞை ஏற்படுகிறது அதைத் தொடர்ந்து நானே பிரஹ்மம் என்கிற முழுமையுணர்வு. மீண்டு வருகையில் நம்மைசுற்றி உள்ள ஒவ்வொன்றும் நாமும் பிரம்ஹமே என்ற பிரபஞ்சத் தரிசனம் ஏற்படுகிறது.
3. தரிசன காலகட்டம்
உபநிஷத்து காலகட்டத்தில் தர்கப்பிரக்ஞை வலுவடைந்ததால் ஞான தரிசனங்கள் விவாதிக்கப்பட்டு தரிசன காலகட்டமாக உருவெடுத்தது.
4. அவைதிக மதங்களின் காலகட்டம்
இந்து ஞான மரபில் வேதத்தை பரமாணமாக ஏற்றுக்கொண்டவை வைதிக மதம் என்றும் மறுப்பவை அவைதிக மதம் என்றும் வேதரிஷி பிரகஸ்பதி அதன் பிரவர்த்தகரென வேதகாலம் முதலே பிரிந்திருந்தன.வேதத்தின் சொற்களைப் கொண்டே பரம்பொருள் கொள்கையை வெகுவாக மறுத்தது ராமாயணகாலத்தில் ஜாபாலி ராமர் வனவாசத்தில் விவாதித்தவை மிகவும் பிரசித்தம்.
இவை தரிசன காலகட்டதிற்கு பின் பிரகாசமானதாக உறுப்பெற்றது சமணம் மற்றும் பௌத்தம் தழைத்த போது.அவை பிரபஞ்சத்தை பருப்பொருட்களின் கூட்டியக்கமாக உருவகித்து வேத உபநிஷத்துக்களை மறுத்தது
பண்டையத் தமிழரின் ஊழ் குறித்த பார்வை ஆஜீவக மதத்தின் செல்வாக்கு என்பர்.
5. பக்தி காலகட்டம்
வைதிக மதங்கள் வேள்வி சடங்கு என மன்னர், வணிகர், மற்றும் பிராம்ணர்கள் சம்பந்தப்பபட்டதாக இருந்தது. இது சாமான்ய மக்கள் அடுக்கிலிருந்து விலகியிருந்ததால்,பௌத்தம் மற்றும் சமணம் எளிய மக்களிடையே ஊடுருவி வேரூன்றியது.
கல்வி மற்றும் மருத்துவத்தை பரவலாக வெகுஜனங்களுக்கு கொண்டு சேர்த்ததின் விளைவாக அடித்தள மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றது அதன் அடிப்படையில் மன்னர்களும் வணிகர்களையும் உள்ளிழுத்துக் கொண்டது.இந்தச்சூழலில் பல நாடுகள் பௌத்த,சமண மதங்களால் கையகப்படுத்துதல் நிகழ்ந்தது.இந்த நிலையில்தான் வைதிக மதங்கள் விழித்தெழுந்து பெருவாரியான மக்களை உள்ளே இழுக்க முயன்றது. இந்த கால கூட்டமே பக்தி காலகட்டமாகும்.
வைதிக மதங்கள் பெருவாரியான மக்களை உள்ளே கொண்டு வருவதற்கான வழிமுறைகள் இரு முக்கிய சிறப்பியல்புகளைக் கொண்டது.
வெகுஜனமாக்கப்பட்ட வழிபாட்டு முறைகள்.
பலவேறு சமயப் போக்குகளக் கொண்ட சமூகத்தை ஒரு பொது சரடில் கோர்கப்படுதல்
தத்துவம் வேள்வி என்கிற இரு முறைகளில் இருந்து பக்தி எனும் எளிய முறையை முன்வைத்தல்.கலைகளும் கேளிக்கைகளும் விழிபாட்டுடன் இனைக்கப்பட்டது.இதை தொடர்ந்து பெரும் திருவிழாக்களும் அதை ஒட்டிய சந்தைகளும் எழுந்தன.மத மரபுகள் என இன்று நாம் காணும் விஷயங்களாகிய இதிகாச புராணங்கள் பிரந்திய மொழி ஆக்கங்களாக பல மூல நூல்களுக்கான உரைகள் பக்தி கால்கட்டத்தில் உருவானவையே.
பக்தி காலகட்டத்தில் தான் இந்து ஞானமரபுக்காலம் அது பல்வேறு கட்டங்களாக பற்பல நூற்றாண்டு தொடர்ந்து நிகழ்ந்த ஒன்று இந்து சிற்பக்கலை,இந்து இசை,இந்து இலக்கிய மரபு, இந்து வாழ்கை முறை என்ற ஒன்று உருவாகியது.
இதன் இறுதிப்பகுதியை பக்தி இயக்க காலகட்டம் என்று குறிக்கப்பட்டது.இக் காலகட்டத்தில் சிரமண சாதிகள் எனப்படும் உழைக்கும் வர்க்கம் இந்து ஞான மரபுடன் நேரடி தொடர்பு பெற்று அதில் இருந்து கபீர்தாஸ்,கிருஷ்ண சைத்தன்யர் துகாராம் ஞானேஸவர்,புரந்தரதாசர்,நரசிம்ம மேத்தா போன்ற பல ஞானகுருக்கள் உருவாகினர்.
பக்தி இயக்க காலம் வேறு,பக்தி காலகட்டம் வேறு.பக்தி காலகட்டத்தின் முதிர்ந்த நிலையே பக்தி இயக்க காலம்.அது தென்னிந்தியாவில் தொடங்கி வடக்கு முழுவதும் பரவியது.
தத்துவார்த்தமாகப் பார்த்தால் பௌத்த,சமண மதங்களின் இறுதி காலகட்டத்தில் தோன்றிய வைதிக மதங்களின் எழுச்சி முதல்,ஶ்ரீராமாநுஜர்,பசவண்ணர் போன்ற பிற்காலத்திய ஞானகுருக்களின் வரையிலான காலகட்டத்தை ஒட்டுமொத்தமாக பக்தி காலகட்டம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம் தனியாக நோக்கத் தக்கது ஆனால் அது பக்தி காலகட்டத்திற்கு உள்ளடங்கிய ஒன்றே.
6. பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம்
பௌத்த சமண மதங்களின் தத்துவ அறைகூவலுக்கு எதிராக எழந்த வைதிக தத்துவ தரிசனங்களையே பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம் என்பர்.அவை அத்வைதம் த்வைதம் மற்றும் விசிஷ்டாத்வைதம் என மூன்று தனி போக்குகளுடன் பௌத்த சமண மதங்களுடனும் எதிர்பும் தங்களுக்குளான பேதங்களுடனும் முரணிலைகள் கொண்டவையாகும்.
வேதத்தின் இறுதி வேதாந்தம் அவை வேதங்களின் விரிவாக்கமாகி உபநிஷத்துக்களாக பரிணமித்தன.பௌத்த சமண மதங்கள் தர்க்க முறைகளை பிரமாண்டமாக வளர்த்து வைத்திருந்தன.பௌத்த ஞானமரபின் நியாய சாஸ்திரம் நாகார்ஜூனர் அசங்கர் வசுபந்து திக்நாகர் தர்மகீர்த்தி போன்றோரின் நியாய இயலுக்கான உரைகள் என பரந்துபட்டு காணப்பட்டு வந்தது.
இவைகளையே கற்றும் கைவிளக்காக கொண்டும் சங்கரர் முதல் ராமாநுஜர் வரை பௌத்த சமண மதங்களுக்கு எதிரிராக பயன்பற்றி வென்றனர்.நியாய சாஸ்திர சூத்ர ந்யாயத்தாலேயே வைதிக மதங்களின் வேதம் உபநிஷதம் ப்ரம்ஹசூத்ரம் முதலிய பாடங்களுக்கு புதிய பரிமாணத்தை ஆதிசங்கரர் ஶ்ரீராமநுஜர் விளக்கத் தொடங்கினர்.இந்த புதிய தர்க்க முறைப்படியான வேதாந்தமே "பிற்கால வேதாந்த மரபாயிற்று.ஆதிசங்கரரின் காலத்தில் அனேகமாக பௌத்தம் வலுவற்றதாக இருந்திருக்கும் வேண்டும்.அவரின் தர்க்க முறை மிகவும் பௌத்தைச் சார்ந்து இருந்ததால் மற்ற வைதிக மரபு அவரை பிரச்சன்ன பௌத்தன்
(மாறுவேடமிட்ட போத்தன்)என குறைகூறினர்.
விஞ்ஞானம் என்றால் அறிதல்.நாம் பிரபஞ்சமாக கண்டு கொண்டிருப்பது நமது சுயத்தையும் அகங்காரத்தை மட்டுமே என்பது விஞ்ஞானவாத பௌத்தமரபு.ஏனெனில் தண்ணிரைப் பற்றி நாம் அறிவது அதன் குளுமை,வடிவமற்றத்தன்மை,தாகம் தீர்க்கும் இயல்பு.இவை அனைத்தும் நம் சரீரத்தின் இயல்பு,மற்றும் தேவை ஆகியவற்றால் தீர்மானிக்கப்பட்டது நம்மால் அதைத் தாண்டி செல்ல இயலுவதில்லை.ஆனால் அகங்காரத்தை தாண்டி சென்று பிரபஞ்சத்தை அறிய முற்படின் அந்த அறிதலால் அனைத்தும்'நாம் உள்பட'இல்லாததாகவும் பிரபஞ்சம்,மட்டுமே எஞ்சி,அதில் நாம் ஒரு துளி என உணர்கிறோம்.எனவே அறிதல்,அறிபடுபொருள்,அறிபவன் மூன்றும் ஒன்றென ஆகிறது.
அத்வைதம் இதை விரிவுபடுத்தி ஜீவாத்மா தன் அகங்காரத்தால் தன்னைப் பிரித்தறிந்து,பிரபஞ்சத்தை தன்னில்லும் இருந்து வேறாக கண்டு தன்சுயத்தை கணக்கிட்டப்பின்,பரமாத்மாவை அறிய முற்படுகிறது.அது அகங்காரத்தை களையும் போது அதன் மாயை களைந்து விடுகிறது.அந்நிலையில் ஜவாத்மா வேறு பரமாத்மா வேறல்ல.அறிவதும்,அறியபடுவதும்,அறிவும் எல்லாமே பரமாத்மாவேயாகும்.இவ்வைகயாக இந்து மரபின் மெய்ஞானத்தை தத்துவார்த்தமாக மறுவிளக்கம் அளித்ததன் மூலமாக புத்துயிர் பெற்று வைதிக மரபு அவைதிக மரபை வென்றது.
அத்வைத மரபிற்கும் அக்கால பக்தி காலகட்டத்தில் எதிர்ப்பு நிலவியது,காரணம் அது பக்திக்கு எதிரானது.அவித்யை என்னும் அறியாமையினை மெய்யறிதலின் மூலம் வென்று இரண்டற்ற நிலை அடைவதையும் ஞானமே முக்திக்கு வழி என்கிறது ஏனெனில் அத்வைத மரபு முழுக்க முழுக்க அறிவார்ந்தது.
மூன்றுமே வேத த்தை பிரமாணமாகக் கொண்டவை.அனைவரும் வேதம் துணைக்க தங்கள் பட்சத்தை முன்வைத்தனர்.
பேத சுருதிகளைப் பொருள் கண்டு துவைத மதம் நிலைநாட்டப்பட்டது. அபேத சுருதிகளைப் பொருள் கண்டு அத்வைதம் உண்டானது. கடக சுருதிகளைக் கொண்டு பேத, அபேத சுருதிகளுக்கும் விரோதமின்றிப் பொருள் கண்டு முழு பிரும்ம சூத்திர விளக்கமாக, பரிபூரண வேத சம்மதமாக ஸ்ரீ ராமானுஜர் தமது தரிசனத்தைக் கண்டார்.
அபேத சுருதிகளைப் பொருள் கண்டு அத்வைதம் சித்தாந்தம் செய்தது.
பேத சுருதிகளைப் பொருள் கண்டு த்வைதம் சித்தாந்தம் செய்தது.
கடக சுருதிகளைக் கொண்டு பேத, அபேத சுருதிகளுக்கும் விரோதமின்றிப் பொருள் கண்டு முழு பிரும்ம சூத்திர விளக்கமாக, பரிபூரண வேத சம்மதமாக ஸ்ரீ ராமானுஜர் தமது சித்தாந்தத்தை முன்னெடுத்தார்.
வைதிக மரபிற்குள் இரு வேறு பிரிவான த்வைதம் மற்றும் விசிஷ்டாத்வைதம் பக்தியை முக்திக்கு வழியாக முன்வைத்த போது அவர்கள் ஆதிசங்கரரின் கொள்கையில் முரண்பட்டனர்.அவர்களில் த்வைதம்
ஜீவாத்மாவும்(சித்)பரமாத்மாவும்(ஈஸ்வரன்)ஒன்று எனில் ஜீவாத்மா பரமாத்மாவை வணங்க வேண்டிய தேவையில்லை.ஆகவே இரண்டும் வேறு வேறானவை.
பரமாத்தா எல்லாவிதமான நிபந்தனைகளுக்கும், வரையறைகளுக்கும் அப்பாற்பட்டது.எவ்வித முறைகளும் இல்லாதது .
ஆனால் ஜீவாத்மா உடலும் உயிருமாக மாறக்கூடியது.காம, குரோத மோகம் போன்ற குறைபாடுகளுக்கு ஆட்படக்கூடியது
இவற்றை வெல்ல ஜீவாத்மா பரமாத்மாவை வழிபட வேண்டியது என்னும் இதவே த்வைதம் (இருமைவாதம்)எனப்படுகிறது.
விசிஷ்டாத்வைதம்-பக்தி நெறியை முதன்மைபடுத்தியவர் ஶ்ரீராமாநுஜர் பிரியமும் சேவையும் (ப்ரபத்தி,கைங்கர்யம்)தான் மானுட விடுதலைக்கு வழி என்றார் அவர் மும்மை வாதத்தை முன்வைத்தார்.
ஜவாத்மா(சித்-ஞானமுள்ளது)பரமாத்மா(ஈஸ்வரன்) பிரக்ருதி(அசித் ஞானமில்லாதது)
ஜீவன்-பிரும்மம்-பிரக்ருதி ஆகிய மூன்று தத்துவங்கள் தனித்தனியாக உள்ளன. அவை மூன்றுமே உண்மை, அழிவற்றவை, பிரும்மத்துடன் மற்ற இரண்டும் தொடர்பு கொண்டு உள்ளன.
இத்தொடர்பு ஒன்பது விதங்களாகும். அதாவது சித்-அசித் தை தன்னைச் சேர்ந்த விசிஷ்டமாகக் கொண்ட பிரும்மமே உண்மை என்றார் இராமானுஜர்.
நீங்கள் குறிப்பிடும் சிக்கல் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நம் மரபில் இருந்துகொண்டிருக்கிறது. பல்வேறு தத்துவதரிசனங்கள் இங்கே உள்ளன. ஆனால் அவற்றுக்கு இடையே உரையாடலே இல்லை. ஒவ்வொரு தரிசனமும் ஒரு மதமாக ஆகி தங்கள் தரப்பை மட்டுமே குருபரம்பரையாகக் கற்று அதையே நம்பிக்கொண்டு முன்செல்கிறது. வரலாற்று நோக்கே காணக்கிடைப்பதில்லை. ஒட்டுமொத்தப்பார்வை உருவாவதில்லை. ஆகவே விவாதங்கள் பரஸ்பர நிராகரிப்பாகவே நிகழ முடிகிறது. அவை விதண்டாவாதங்களாக ஆகி மனக்கசப்பை நோக்கிச் செல்கின்றன
பத்தாம் நூற்றாண்டு முதல் கடுமையான மதப்போர்கள் இங்கே நிகழ்ந்து வந்தன. காரணம் பொதுவான மதவிவாத சபைகள் இல்லாமலிருந்ததே. பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் நாயக்க அரசர்கள் சைவம் வைணவம் சாக்தம் ஆகிய மூன்றுமதங்களையும் தங்கள் அதிகாரம் மூலம் இணையச் செய்தார்கள். சைவக்கோயிலில் வைணவச் சன்னிதிகளையும் வைணவக்கோயிலில் சைவ சன்னிதிகளையும் அமைத்து வழிபாடுகளை கலந்தார்கள். விளைவாக மதச்சண்டை நடைமுறைத்தளத்தில் இல்லாமலாகியது. ஆனால் தத்துவ தளத்தில் மதநம்பிக்கையாளர்கள் தத்தம் வாசலை இறுக்கி மூடிக்கொண்டு உள்ளே ஒடுங்கித்தான் கிடந்தார்கள்.
ஒட்டுமொத்தமான பார்வையும் வரலாற்று அணுகுமுறையும் ஐரோப்பிய இந்தியவியலாளர்களாலேயே சாத்தியமாகியது என்பதே உண்மை. கிரிபித், மோனியர் விலியம்ஸ் போன்றவர்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களே இந்து ஞானமரபை ஒட்டுமொத்தமாக தொகுத்து நமக்களித்தார்கள். அனைத்து தரப்பையும் ஒரு பொதுவாசகன் அறிவதற்கான வாய்ப்பை அளித்தார்கள். அதன் விளைவாகவே இன்றைய இந்திய தத்துவ ஞானம் உருவாகி வந்தது
இன்றும் மரபான குருபரம்பரை வழியாக இந்து ஞானமரபின் ஏதேனும் கிளைகளை கற்பவர்கள் இந்த வரலாற்று அணுகுமுறையும் ஒட்டுமொத்த நோக்கும் இல்லாத ஒருவகை மூர்க்கர்களாகவே இருக்கிறார்கள் என்பதைக் காணலாம். தமிழகத்தில் ஆசார வைணவர்களும் ஆசார சைவர்களும் மதக்காழ்ப்பும் குருட்டுநம்பிக்கையும் கொண்டவர்களாகவும் ஆராய்ச்சி மனநிலைக்கு எதிரானவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் எழுதிய நூல்களே அதிகமும் தமிழில் கிடைக்கின்றன. அவற்றின் வழியாகச் சென்று நாம் எந்த தத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியாது.
அந்நூல்களை நாம் வெளியே நின்று ஆராயலாம். அந்த மதங்களின் சில நுட்பமான உள்விஷயங்களைப் புரிந்துகொள்ள அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். இன்றும் ஒட்டுமொத்த பார்வைக்கும் வரலாற்று நொக்குக்கும் நாம் இந்தியவியல் முன்னோடிகளின் நூல்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அவர்களை சார்ந்தே விவேகானந்தரும் அரவிந்தரும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியும் ஓஷோவும் எல்லாம் சிந்தித்தார்கள். இந்தியவியலாளர்களுக்கு அவர்களுக்கே உரிய புரிதல் சிக்கல்கள் உள்ளன. மனநிலைச்சிக்கல்களும் உள்ளன. அவற்றை கருத்தில்கொண்டபடி அவர்களை துணைகொண்டு மூலநூல்களை நாமே வாசிப்பதே நல்ல முறையாகும். சமநிலை கொண்ட ஒரு குரு அமைவாரென்றால் மேலதிக அதிருஷ்டம்
விசிஷ்ட்டாத்வைதம்
பிரம்மமும் சீவங்களும் பிரபஞ்சமும் வெவ்வேறானவை என்றும் பிற அனைத்தையும் பிரம்மமே உருவக்கி தன்னிலடக்கிக்கொண்டுள்ளது என்றும் சொல்லும் பிற்கால வேதாந்த மரபு விசிஷ்டாத்வைதம் எனப்படுகிறது. இதுஅத்வைதத்திலிருந்து முரண்பட்டு கிளைத்தது. விசிஷ்டாத்வைதத்தின் மையகுரு ராமானுஜர். ஆனால் அதன் விளைநிலம் நம்மாழ்வாரின் பாடல்களே.
விசிஷ்டாத்வைதம் இருமூலங்கள் கொண்டது. சங்கரரின் அத்வைத தரிசனத்தை மறுத்த வேதாந்த கோட்பாடுகள் ஒன்பதாம் நூற்றாண்டுமுதலே இருந்தன. அவர்களில் முக்கியமானவர் பாஸ்கரர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தார். இவர் பிரம்மசூத்திரத்துக்கு எழுதிய உரையான பாஸ்கர பாஷ்யத்தில் பிரம்மம் குணங்களுக்கு அப்பாற்பட்ட முற்றொருமை அல்ல என்றும் அது குணவடிவ தன்மை கொண்டு பிரபஞ்சமாகி வருகிறது என்றும் சொன்னார். இவரது கோட்பாட்டை பதினொன்றாம் நூற்றாண்டைசேர்ந்த யாதவபிரகாசர் வளர்த்தெடுத்தார். பிரம்மம் முழுமுதன்மையாக பிரிவுபடாமலும் பிரபஞ்சமாக பிரிவுபட்டும் இருதள இருப்பு கொண்டது இரண்டையும் இணைத்து அறிதலே பிரபஞ்ச உண்மையை அறியும் வழியாகும் என்பது இவர்களின் கோட்பாடு. இது பிரிவொருமைக் கோட்பாடு எனப்பட்டது.
கி பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான நம்மாழ்வார் ஆழ்வார்களில் முதன்மையானவர். நெல்லையருகே ஆழ்வார் திருநகரி [திருக்குருகூர்] என்ற ஊரில் பிறந்தவர். பிற ஆழ்வார் பாடல்களில் வெளிப்படும் உக்கிரமான பக்தியுடன் தத்துவ நோக்கும் வெளிப்படும்பாடல்கள் அவரால் எழுதப்பட்டவை. பத்தாம் நூற்றாண்டில் நாதமுனி ஆழ்வார்பாடல்களை தொகுத்து அளித்தார். அவரது மாணவரும் மகனுமாகிய யமுனாச்சாரியார் ‘சித்ரத்ரயம்’ என்ற நூலை இயற்றினார். இதுவே ஒருவகையில் விசிஷ்டாத்வைதத்தின் முதல் நூல்.
பதினொன்றாம் நூற்றாண்டில் காஞ்சீபுரமருகே ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் பிறந்தார். இவர் யாதவப்பிரகாசர் யமுனாச்சாரியார் ஆகிய இருவருக்கும் மாணவர். பிரிவொருமைக் கோட்பாடு மற்றும் ஆழ்வார்பாடல்களில் உள்ள பிரபத்தி – அதாவது உணர்ச்சிப்பெருக்கான அர்ப்பணிப்பு கொண்ட பக்தி- இரண்டையும் இணைத்து உருவாக்கப்பட்டதே ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். ராமானுஜரின் முக்கிய நூல்கள் பிரம்மசூத்திரத்துக்கு எழுதப்பட்ட ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், வேதாந்த சம்கிரஹம் ஆகியவை.
விசிஷ்டாத்வைதம் சங்கர வேதாந்தத்தை ஒட்டியும் வெட்டியும் உருவானது. ராமானுஜரின் நூல்களில் சங்கரரை அவர் விரிவாக நிராகரித்தே தன் தரப்பை நிறுவுகிறார். முரண்பாடுகளை ஓர் அட்டவணையாக இப்படி தொகுக்கலாம்.
1] அத்வைதம்: பிரபஞ்சத்தில் உள்ள ஆத்மாக்கள் எல்லாம் ஒன்றே . விசிஷ்டாத்வைதம்: ஆத்மாக்கள் ஒன்றல்ல, தனித்தன்மைகள் கொண்ட பல.
2] அத்வைதம்: இப்பிரபஞ்சம் ஒரு மாயக்காட்சி. ஒன்றேயானபிரம்மத்தை ஆத்மா பலவானபிரபஞ்சமென மயங்குகிறது .
விசிஷ்டாத்வைத மறுப்பு: பிரம்மத்திலிருந்து உருவாகி பிரம்மத்தின் பகுதியாக நிலைநிற்கும் ஓர் உண்மையே இப்பிரபஞ்சம்
3]அத்வைதம்: பிரம்மம் மட்டுமே உள்ளது பிறவெல்லாம் பொய்மைகள்.
விசிஷ்டாத்வைத மறுப்பு: மூவகை உண்மைகள் உண்டு. பிரம்மம், ஆத்மா, பிரபஞ்சம்
4] அத்வைதம்: பிரம்மமே ஆத்மாவும்.
விசிஷ்டாத்வைத மறுப்பு: ஆத்மா பிரம்மமல்ல அது தனித்துவம் கொண்ட ஒரு இருப்பு.
ராமானுஜர் முக்கியமான வினா ஒன்றுடன் தொடங்குகிறார். பிரம்மத்தை ஆத்மா மற்றும்பிரபஞ்சமாக ஆக்குவது எது? மாயை என்பது அத்வைதத்தின் பதில். மாயையை உருவாக்குவது எது ? பிரம்மம் என்றால் பிரம்மம் குறையுடையது என்று பொருள். பிரம்மமே ஆத்மா என்றால் மாயையின் உருவாக்கமான ஆத்மா மாயைக்கு காரணமாக இருக்க முடியாது. இதற்கு பதிலளிக்கும் ராமானுஜர் பிரம்மம் மாயையின் மூலம் பிரபஞ்சமாக ஆவதில்லை, அது பிரபஞ்சமும் கூட என்கிறார்.
ராமானுஜ கோட்பாட்டை ஓர் உவமை மூலம் விளக்கலாம். கடலில் வாழும் மீன் அறியும் கடல் என்பது அது புழங்கும் சிறிய நீர்ப்பரப்பும் மணலும் பாறைகளும் மற்ற மீன்களும் அதுவும் மட்டுமே. ஆனால் அதுவல்ல கடல். அதேசமயம் அது கடலும் கூடத்தான். மீனறியும் கடல் பொய்யோ மாயையோ அல்ல. அது உண்மை .கடல் என்ற பேருண்மையின் ஒரு பகுதியான சிறு உண்மையே மீன் அறியும் கடல்.
எத்தனை விரிந்தாலும் மீனின் தர்க்கபுத்தி கடலை அறிந்துவிட முடியாது. கடலை மீன் அறிவதற்கான வழி சிறிது சிறிதாக தன்னை ரத்து செய்துகொள்வதே. அதன் தன்னுணர்வுநிலை இல்லாமலாகும் தோறும் அதனால் கடலை உணர முடியும். ஆகவே அதன் முன் உள்ள ஒரே வழி தன் முன் உள்ள சிறிய நீர்வெளியை கடலென எண்ணி மயங்காமலிருப்பது. அப்பால் உள்ள கடலை அறியும்பொருட்டு தன்னை முழுமையாக அதற்கு ஒப்படைத்துவிடுவது. இதுவே ஆழ்வார் பாடல்களில் பிரபத்தி என்று சொல்லப்படும் முழுமையான ஒப்புணர்வு ஆகும். இதன் மூலம் மனம் விரியும் ஒருவர் கடல் என்பது தன்னையும் உள்ளடக்கிய ஒன்று என அறியும் மீன் போல தன்னையிழந்து பிரம்மத்தை உணர்கிறார். எல்லா வேதாந்தக் கோட்பாடுகளுக்கும் பொதுவாக உள்ள கூறு என்பது அனைத்தும் பிரம்மத்தில் தோன்றி பிரம்மத்தில் அடங்குகின்றன என்ற தரிசனமாகும். அதை ராமானுஜரும் சொல்கிறார்.
விசிஷ்டாத்வைதம் முழுக்கமுழுக்க தமிழ் பண்பாட்டில் உதித்ததும் தமிழ் பண்பாட்டின் குரலாக ஒலிப்பதும் ஆன ஒரு தத்துவக் கோட்பாடு. ஆழ்வார் பாடல்களில் வெளிப்படும் பிரபத்தியை நாம் சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையில் காண்கிறோம். அதாவது ஆழ்வார்களுக்கு முன்னரே இக்கோட்பாடு நம் நாட்டார் வாய்மொழி மரபில் வாழ்ந்துள்ளது. ஆழ்வார் பாடல்களின் அழகியலும் உணர்வுநிலைகளும் முழுக்க முழுக்க சங்க இலக்கிய அகத்துறையின் நீட்சியே.
தமிழ்ப் பண்பாட்டின் மூன்று முக்கிய தத்துவ அம்சங்கள் விசிஷ்டாத்வைதத்தில் உள்ளன.
1] எந்நிலையிலும் ஒருமையை ஏற்காமல் பன்மையை நோக்கி செல்லும் நோக்கு
2] உலக வாழ்வை நிராகரிக்காமல் அதை கொண்டாடும் நோக்கு
3] தர்க்கத்துக்குப் பதிலாக அழகியலையும் உணர்வுகளையும் முன்வைக்கும் போக்கு.
விசிஷ்டாத்வைதமே பிற்பாடு பக்தியியக்கம் மூலம் இந்தியாவெங்கும் பரவிய கிருஷ்ணபக்தி மரபுக்கு அடிப்படையாகும். அவ்வகையில் பார்த்தால் அத்வைதம் ஓர் அறிவார்ந்த பாதிப்பையே உருவாகியது. விசிஷ்டாத்வைதமோ பெரும் மக்களியக்கமாக ஆயிற்று. அதன் பாதிப்புகள் இருபதாம் நூற்றாண்டு சிந்தனைகளில் கூட பலவகைகளில் தொடர்கின்றன. குறிப்பாக காந்தியின் ஆன்மீகம் விசிஷ்டாத்வைத அடிப்படை கொண்டதேயாகும். பாரதியின் ஆன்மீகமும் விசிஷ்டாத்வைதக் கோட்பாடான பிரபத்தியை காட்டுவதே.
பிரபத்தி
விசிஷ்டாத்வைதம் திரும்பத் திரும்பச் சொல்லும் மனநிலை பிரபத்தி என்பதாகும். பிரபத்தி என்றால்
இயல்பான வரம்பற்ற பக்தி. விசிஷ்டாத்வைத நோக்கு இதை அடிப்படை கோட்பாடாக முன்வைக்கிறது. பக்தியானது அறிந்து தெளிந்து நோக்கம் கொண்டு உருவவது. பிரபத்தி தன்னிச்சையானது, கட்டற்றது, நிபந்தனைகள் அற்றது. தாய்ப்பசு மீது கன்றின் பிரியம் போல வேறு சாத்தியங்களே இல்லாதது. செடியில் பூ போல அடிப்படை விதியாலேயே உருவாவது. பிரபத்தி உருவாவதற்கே இறையருள் தேவை என்று ராமானுஜர் சொல்கிறார். பெரியாழ்வார் விஷ்ணுவிடம் கொண்டது பக்தி. ஆண்டாள் கொண்டது பிரபத்தி. நம்மாழ்வார் பாடல்களில் நாயகி பாவமாக பிரபத்திநிலை அழகிய கவித்துவத்துடன் சொல்லப்பட்டுள்ளது
மண்ணை இருந்து துழாவி
வாமனன் மண்ணிது என்னும்
விண்ணைதொழுது அவன் மேவு
வைகுந்தம் என்று கைகாட்டும்
கண்னை உள்நீர் மல்க நின்று
கடல்வண்ணம் என்னும் அன்னே என்
பெண்ணை பெருமயல் செய்தார்க்கு
என் செய்கேன் பெய்வளையீரே
[செவிலி கூற்று]
செவிலித்தாய் தன் மகள் பெருமாள் மீது கொண்ட காதலைக் கண்டு சொல்கிறள். ‘மண்ணை இருந்து துழாவி அன்று வாமனன் மூன்ரடி வைத்த மண் இது என்கிறாள். விண்னை தொழுது அவனிருக்கும் வைகுண்டம் அது என்கிறாள். கண்ணில் நீர் பெருக கடலைக் கண்டு அவன் வண்ணமல்லவா இது என்கிறள்; எதைக்கண்டாலும் அவன் நினைபபகவே இருக்கிராள். என் பெண்ணிடம் இத்தனை பெருங்காதலை நிறைத்தவனை நான் என்னவென்று சொல்வது? என்ன செய்வது?’
என்ற நாலாயிர திவ்ய பிரபந்த பாடலை உதாரணமாக காட்டலாம்
இந்து ஞானமரபை இந்திய ஞானமரபென எவ்வகையிலும் கூறவியலாது ...
சோதிப்பிரகாசருடைய எளியநடை என்பது நுனிப்புல்களை அல்ல கருத்துத் தெளிவு..என் மனத்தின் விடுதலையைத் தரிசனமென்பதா , அல்லது தருக்கம் என்பதா? என ஜெயமோகனைக் கேட்கிறார்.
தரிசனம் பற்றி சாங்கியத்தின் தோற்றுவாய் தமிழகம் எனகிறார்
பஞ்ச தனமாத்திரைகளின் அடுக்கு பிரளயத்தில் முறையே பூமி பிரளய ஜலத்தில் கரைந்து பிரளய ஜலம் பிரளயாக்னியில் வரண்டு பிரளயாக்னி பிரளயக்காற்றில் அனைந்து பிரளயக்காற்று ஆகாசத்தில் அடங்கி ஆகாசம் அவ்யக்தத்தில் ஒடுங்கி விடுகிறது.
ஜெயமோகனின் மூலமுதல் சிந்தனை சத்வ ரஜஸ் தமோ குணம் கருத்தமைவுகளைக் கடந்தது, நேர் எதிர் நடு என முரண்பட்ட இயக்கமாக கண்டடைதல்
பழைய சிந்தனைகளின் புதிய தொகுப்புக்கு புதிய சிந்தனையானதே ஒழிய, முற்றிலும் புதிதாக தமது மண்டையில் இருந்து யாரோ ஒரு புதிய மேதாவி உதிர்த்து தள்ளிவிடுகின்ற தனிமைச் சிந்தனையல்ல
"முக்கியமான எந்தச் சிந்தனையும் காலாவதியாவதில்லை" என்பது சரியான பார்வை
கருத்துக்கள் பழைமையினைத் தாண்டிச் சென்றுவிட முடியாது; பழைமையினை பற்றிய கருத்துக்களைதான் தாண்டி சென்றிட இயலும்.கருத்துக்களினால் எதையும்தாண்டிச் சென்றிட கருத்துக்களை செயல்படுத்தும் செயல்திறன்மிக்க மனிதர்கள் தேவைபடுகிறார்கள்.
இங்கே ஒன்று சொல்லத் தோன்றுகிறது.உதாரணத்திற்கு யோக மார்கம் பற்றி சொல்லும் போது சத்குரு முகமாக எதையும் அப்பியாசம் செய்ய வேண்டும் என்றும் தானே அரைகுறையாக உள்ளவர் மற்றவர்களுக்கு வழிகாட்ட இயலாது என்கிற போது
ஆதிசங்கரர் புலனறிவு நிலையிலிருந்து காரண அறிவு நிலையினை எய்தி பின் காரண அறிவின் முழுவீச்சில் மீண்டும் புலனறிவினை வந்தடைந்திடவில்லை என்பஅதஉ ஒரு குறை காரணம் ; கருமஞானம் மட்டுமே காரியமாக நிறைவடைந்திட முடியும்.
யோகம் ஒரு தமிழ் தரிசனம் என சிந்துவெளி நாகரிகம் மூலமாக தெரிகிறது
சமஸ்கிருத எழுத்துகளுக்கும் எண்ணிக்கைகளுக்கும் தத்துவ எண்ணிக்கைகளின் தொடர்பு உதாரணமாக "ம" என்னும் எழுத்து இருபத்தி ஐந்தாவது தத்துவமான ஜீவாத்மாவை குறிக்கும்
ஞானம் என்பதையும் ஞானமரபு என்பதையும் மதச்சடங்குகளோடும் நம்பிக்கைகளோடும் சேர்த்துப் புரிந்துகொள்ளச் செய்யப்படும் முயற்சிகளை இந்த நுால் தொடக்கத்திலேயே தகர்க்கிறது. ஞானம் என்பது ஓர் அறிவுப்பயணம். ஒரு கேள்விக்கான விடையைத் தேடி அலையும் வேகம். தலைமுறை தலைமுறையாகக் கேட்டுக்கொள்ளப்பட்ட கேள்விகளையும் கண்டடைந்த விடைகளையும் மீண்டும் மீண்டும் தொகுத்து வைத்துக்கொள்கிறது மனித நாகரிகம். இ
ஒரு சங்கப் பாடல் வரிக்கு இன்றைய வாழ்க்கைக்குப் பொருத்தமான உரையைச்சொல்லி, அந்த வரியை நவீனகாலத்துக் கவிதையாக மாற்றிவிடுவதைப்போல ஞானப்பயணத்தில் கண்டடைந்த ஒரு பதிலை விரித்து வளர்த்தெடுக்கும்போது கேள்வியும் பதிலும் நவீனமடைகின்றன.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக