https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 27 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 34 சிக்கலும் தீர்வும் எழுச்சியும் - 3

ஶ்ரீ:


அடையாளமாதல் - 34
சிக்கலும் தீர்வும் எழுச்சியும் - 3
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 9
அரசியல் களம் - 16.



அரசியல் என்பது காத்திருப்பது என திரு.சண்முகம் சொல்லுவார் . அவரது எண்ணம் போல அதற்கான சந்தர்ப்பம் வந்தது. கூட்டணி விஷயத்தில் திமுக தலைவர் திரு.கருணாநிதியின் கோரிக்கை ஆளும் அதிமுக அரசை கவிழ்ப்பது என்கிற ஒற்றை கோரிக்கையை முன்பே அறிந்திருந்த திரு.சண்முகம் , இந்திராகாந்தியிடம் இது பற்றி பேசுவதற்கான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தார். தில்லியில் திரு.வெங்கட்ராமனை சந்திக்கும் வரை .

தில்லியில்  திரு.வெங்கட்ராமனை "தற்செயலாக "சந்தித்த போது அவர் கடந்தகால தேர்தல் கசப்பில் இருந்தார் .மாநில அளவில் காமராஜர் தலைமையிலான அரசியல் முயற்சிகள்  தோல்வியில் முடிந்திருந்தன . தமிழகத்தில் துவங்கியிருக்கும் பரப்பியல் பிரசாரமுறை புதுமையானது நெறியற்றது. அது ஏற்படுத்தும் விளைவுகளின் மீது நேர்மையான எவருக்கும் கடும் ஒவ்வாமை இருந்தது

இதில் கொடுமை பொதுமக்களின் மத்தியில் அது ஏற்படுத்தும் நம்பகத்தன்மை மீதும் அதனால் மக்களிடம் எடுபடும் மடமை மீதும் அவரகளின் ஏமாளிதனத்தின் மீதும் அதீத கோபத்தையும் வருத்தத்தையும் தந்தது . இது போன்ற ஒரு கற்பனை வாதம் நீண்ட நாள் நீடிக்காது என்றே அவர்களைப் போன்றவர்கள் நம்பினார்கள் . ஒரு காலம் வரும் மக்கள் உண்மையை புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது

திமுக அறிவித்த வேட்பாளர்களையும் அவர்கள் பெறுவாரியாக சட்டமன்றத்தில் அலை அலையென நுழைந்ததையும் பார்த்து திகைத்தனர் . ஒருபோதும் அவர்கள் எதிர் பார்தத காலம் வரபோவதில்லை என புரிந்து விரைவில் புரிந்து கொண்டனர்  . இத்தகைய அரசியலில் நீடிக்க இயலாமல் அதில் இருந்து மெல்ல விலகத் துவங்கினர்.

அன்று தமிழ்நாட்டிற்கு நடிகர் சிவாஜியைத் தவிர பிரபலாமான தலைவர்கள் இல்லை . புதுவையிலும் நிலமை சொல்லிக்கொள்ளும்படி இல்லை .கட்டுப்பாடு என்பது காணாமலாகியிருந்தது . வெளியில் சென்ற பலர் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியிருந்தனர் . சென்றவர்கள் திரும்பும் போது கட்சியில் இருந்தவர் , திரும்பி வந்தவர் பகுபாடு வலுத்து கோஷ்டி செயல்பாடுகள் உச்சத்திற்கு சென்றது.

அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக எழுந்துவந்த ஜனதா மோசமான உட்கட்சி சிக்கலில் சின்னாபின்னமானதாலும் அதிமுக புதுவையில் தலையெடுக்கும் வாய்பில்லாததாலும். பதிவி நாடி வேறு கட்சிகளுக்கு சென்ற அணைவரும் காங்கிரசுக்கு திரும்பினர். 'வழமைபோல' சண்முகம் அணைவரையும் கட்சியில் அரவனைத்துக் கொண்டார்.

திமுகவிலிருந்து கட்சிமாறி வந்த பரூக் மற்றும் இளைஞர் காங்கிரசின் தலைவர் கண்ணன் ஆகியோர் சண்முகத்திற்கு பெரும் குடைச்சலாக உறுவெடுத்திருந்தனர். இவர்களை பற்றி நன்கு தெரிந்திருந்தும் ஏன் கட்சியில் சேர்க்க வேண்டும். சேர்ப்பது மடமைதானே என்கிற கேள்வியெழும்

தேர்தலரசியல் மக்கள் ஓட்டு போட்டு உறுப்பினர்களை சட்டமன்றத்திற்க்கு தேர்ந்தெடுப்பது . தேர்தலில் பிரபலமானவர்களும் , பரிட்சயமுள்ளவர்கள் மட்டுமே வெற்றிபெற இயலும் . தேர்தல் வெற்றிக்காக ஐந்தாண்டுகள் அந்த நாளுக்காகவே காத்திருந்து அதை ஒரு வாழ்நாள் லட்சியம் போல அதை அனுகுவார்கள்

வெற்றி அவர்களை அடுத்த இலக்கிற்கு நகர்த்தும் அப்போது தான் அவர்கள் கட்சிக்கும் , கட்சி அவர்களுக்கும் பரஸ்பரம் தேவையுறுவார்கள் . தோற்றவர்களுக்கு தேர்தல் சூது போல அடுத்த தேர்தலுக்கு அன்றுமுதல் காத்திருப்பார்கள் அவர்கள் வேறுவிதமானவர்கள்


காட்டு விலங்கிற்கும் , வீட்டு விலங்கிற்கும் உள்ள வித்தியசம் . அத்தகையவர்களை கட்சியில் இருந்து உருவாக்கி எடுப்பது அவ்வளவு எளிதல்ல , என்பதால் இந்த அனுகுமுறைக்கு என்றும் மாற்றம் வரப்போவதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்