ஶ்ரீ:
அடையாளமழித்தல் - 8
( ஊழின் ஆடல் )
விசிஷ்டாத்வைத தத்துவத்தின் சாரமான சரணாகதியை பற்றி அப்பா எனக்கு செய்த உபதேசம் குறித்து அவதானிக்கிறேன் இயற்கையாகவே அதன் மேல் ஒரு ஆழமான நம்பிக்கை இருந்திருக்க வேண்டும், அன்றி அவர் சொல்லவருவது சட்டென பதிந்தது படர்வதை எப்படி அறியமுடிந்தது . என் குணாதிசியங்கள் அதற்கு ஏற்ற ஒத்திசைவுடன் இருப்பதை கவணித்திருக்கிறேன் . மனிதனை படைக்கும் தொரும் விண்ணகத்து தெய்வம் அவனுக்கு தேவையுறும் அனைத்தையும் அவனுள்ளே பொதிந்து அனுப்புகின்றன போலும் . அவன் செய்யக்கூடுவது அதை நோக்கி கூர்ந்து கண்டடைந்து பயன் பெற்று உய்யவேண்டியது மட்டுமே.பெரும் இக்கட்டுகளில் இருந்து நான் வெளியவர ஒரு முக்கியமான காரணியாக அது இருந்திருக்கிறது.
விழைவும் முயற்சியும் மட்டுமன்றி காலானுகூலம் தேவை யாதொரு வெற்றிக்கும் . இந்த அடையாளமழித்தல் பதிவு என் மீது நான் அடுக்கிக் கொண்ட காகித அலங்காரங்களையும் பிறந்து வளரும் தொரும் என்மேல் முளைத்தெழுந்த குல அடையாளங்களையும் ஆனவத்தையும் வெட்டி களைவதற்கான முயற்சியே.
வாயப்புகள் அனைத்தையும் ஆற்றவேண்டியே வந்ததணைந்தவையென நினைத்து புரிந்த செயல்கள் யாவும் பெரும் வெற்றியை அடைந்தவை, அவை பிறிதொருவர் எண்ணவும் ஆற்றவும் இயலாதவைகள் .சில காத தூரம் ஓடி நின்று பின் அது தன் பாதையை தேரும் பொருட்டு என்னை விலக்கியவைகள் . அவை என்னை அதில் நிலைத்து நிற்க விடாதவைகளாக , வெளியேறவும் எப்போதும் தன் கதவுகளை திறந்தே வைத்திருந்தன. ஆரம்ப நாள்முதல் இன்றுவரையில் அறியாத ஒரு செயல் என்னை சுற்றி இயங்கிக் கொண்டிருப்பதுடன் . என்னை தொடர்ந்து பயணிக்கவே ஆனையிட்டு சென்றவைகள் . நான் தொடந்து பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறேன்.
எனது சரீரம் என நான் சொந்தம் கொண்டாடியபோதும் அது முன்னமே மிகத்தெளிவாக நடக்க இருக்கும் ஊழின் ஆடலுக்கு எற்ப மிக கச்சிதமாக வடிவமைக்க பட்டிருந்ததை , கடந்து சென்ற காலங்களில் அது நடந்து கொண்ட முறையை கண்டு அவற்றை அவதானித்திருக்கிறேன் . பெருவிசும்பின் ஆடலின் ஒரு காய் சரீரம் எனில் அதில் அதை புரியாது அதனுள் வாழும் ஆத்மா செய்யவேண்டிதென்ன? புரிதல் என்பதைதாண்டி ஏதுமிருப்பதாக தெரியவில்லை .
யாரையும் எதையும் எதிலும் எங்கும் எப்பொழுதும் அஞ்சுதலை காட்டிலும் மடமையன்றி பிறிதில்லை. புரிதலுக்கு உகந்ததாக இருக்கும் இவற்றை உபயோகத்திற்கானதாக கொண்டுவருவது அத்துனை எளிதில் நிகழ்வதில்லை. எண்ணையின் ஒழுக்குப் போல சதா அதன் நினைவை பெருக்குகையில் ஒருநாளில் அது கைவரலாம்.
அது ஒரு பாடம் போலும் ,ஞானமயன் ஆத்மா சேறு எனும் சரீரம் பூனவண்டியது ப்பிராரப்தம், சிஞ்சித கர்மா நீக்க வேண்டி மட்டும் தானா? . ஆத்மா பெருவிசும்மின் ஆடல் வலையின் ஒரு கண்ணியாய் இருந்து உதிர்ந்தே சம்சாரத்தில் வீழ்கிறது போலும் . அப்படியெனில் அந்த நிலையிலும் அது ஸ்வதந்திர சிந்தனையுள்ளதா?
*****************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக