ஶ்ரீ:
அடையாளமாதல் - 33
சிக்கலும் தீர்வும் எழுச்சியும் - 2
திரு.ப.சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 8
அரசியல் களம் - 16.
புதுவை காங்கிரஸ் 1980 முன்பே பெரும் அடையாளசிக்கலில் இருந்தது . ஏறக்குறைய அழிந்த நிலை. அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திரு. சபாபதி மற்றும் சிவபிரகாசம் என்று இரண்டு சட்டமன்ற உறுப்பினார்கள் மட்டுமே இருந்த காலம் . விதி தந்த வாயப்பாக மொரார்ஜி தேசாய் கொண்டுவர இருந்த புதுவையை தமிழ்நாட்டுடன் இணைக்கும் முயற்சியை எதிர்த்து , புதுவையில் அதுவரை கண்டிராத வன்முறை வெடித்தது .
இணைப்பு எதிர்ப்பு போரட்டத்தில் காங்கிரஸை கட்சி வேறுபாடு இல்லாது ஆதரிக்க வேண்டிய நிலை மற்ற மாநில கட்சிகளுக்கு ஏற்பட்டது. ஜனதா கட்சியும் அதனோடு கூட்டணி வைத்த அதிமுகவிற்கு புதுவையை பொருத்தவரை அத்துடன் சேர்ந்து அழிவதைத் தவிர வேறு வழியில்லை .
அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அதன் தலைமைக்கும் புதுவை ஒரு பெரிய விஷயமில்லை . மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்ததும் அது மௌனம் காத்ததற்கு ஒரு காரணம் .
காங்கிரசுக்கு இது பொன்னான வாய்ப்பு , சண்முகம் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் ,இந்திய - பிரன்சு உடன்படிக்கையில் ஏற்கனவே நேரு கொடுத்திருந்த உறுதிமொழியில் புதுவை மக்கள் விரும்பும் வரை அது தனி பிராந்தியமாக இருக்கும் என்பது காங்கிரசின் கொள்கையானது . அகில இந்திய தலைமையும் அதற்கு ஆதரவு தெரிவத்திருந்தது . அந்த சந்தர்ப்பங்களில் திரு.சண்முகத்திற்கும் திரு.கருணாநிதியுடன் பேச்சுவார்தை சுமூகமாக இருந்த காலம் . அந்த தொடர்பு அவருக்கு 1980 பாராளுமன்ற தேர்தலில் பெரும் பங்காற்றும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது அதை ஒட்டி அவர் மாநில அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கவும் முக்கிய காரணமாக அமைந்தது.
அதன் பின்னனி மிக ஸ்வாரஸ்யமானது , எமர்ஜன்சி காலகட்ட பாதிப்புகளால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் பலவீனமாக இருந்தது . நெருங்கி வரும் பாராளுமன்ற சட்மன்ற தேரதல்களில் வென்றால் அன்றி அது மீண்டு எழ வாய்ப்பில்லை எனவே மிக முக்கியமானதாக உணரப்பட்ட நேரம் .கூட்டணி இல்லாது தேர்தலை சந்திப்பது தற்கொலைக்கு சமமானது. அதிமுக ஒரு இயல்பான கூட்டணி ஆனால் அது ஜனதாவுடன் சென்று விட்டதால் , திமுக நோக்கி வருவதைத் தவிர காங்கிரசுக்கு வேறு வழியில்லை .
ஆனால் சிக்கல் ,மதுரையில் இந்திராகாந்தி மீது திமுக நடத்திய தாக்குதலுக்கு பிறகு அப்படிபட்ட ஒரு கூட்டணியை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. காமராஜருடைய விலகல் இன்டிகேட் சின்டிகேட் பிரச்சனைகள் , எமர்ஜன்சிக்கு பிறகு இந்திராகாந்திக்கு எதிர்காலமில்லை என்று பல பெரிய தலைவர்கள் காமராஜருக்கு பின்னால் சென்று விட்டது போன்ற காரணங்களால் தமிழ்நாடு காங்கிரசிற்கு வலுவான தலைவர்கள் என யாருமில்லை.
புதுவையிலும காங்கிரசுக்கு அப்படிபட்ட நிலை நேர்ந்தது ஆனால் சண்முகம் மட்டும் உறுதியாக இந்திராகாந்தியின் பின்னால் நின்றுவிட்டார் . புதிதாக இணைந்த பரூக்கும் அதிகாரத்திற்கு காத்திருந்த கண்ணன் போன்றவர்கள் காமராஜர் பின்னால் அனிவகுத்தனர். புதுவையிலும் தமிழகம் போல பிளவுபட்டதானதாக உணரப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக