https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 26 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 30 திரு.ப.சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 5

ஶ்ரீ:

அடையாளமாதல் - 30
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 5
என் ஆதரவு தளம்  கண்டடைதல் 
அரசியல் களம் - 16.



இளைஞர் காங்கிரசில் என் செயல்பாட்டால் தொகுதி அடிப்படையில் எனக்கு பலர் அறிமுகமாயினர். அவர்களில் சிலர் என்னுடன் எப்போதும் இருந்தனர். என் தனிப்பட்ட அரசியல் களம் கண்டடைந்து வெற்றிவரை அவர்களுடனான என் நட்பு கடைசிவரை நீடித்தது

தொகுதிகள் அமைப்பு மூன்று விதமான பிரிவுகளைக் கொண்டவைகளாக இருந்தன நகர் பகுதி , புறநகர் பகுதி மற்றும் கிராம்ப் பகுதிகள் . நகர்புற பகுதிகளில் எங்களுக்கென விரிவான ஆதரவுதளமில்லை , புறநகர் பகுதிகளில் ஓரளவு கணிசமான ஆதரவும் , கிராமப்பகுதிகளில் பெரும் ஆதரவு தளங்கள் இருந்தன . அவற்றில் பெரிய ஆதரவு என்பது ரிசர்வ் தொகுதிகளில் இருந்து கிடைத்தவை

அங்கு இருந்த சாதி அடுக்களுக்கு எதிராக அவற்றை உடைப்பதாக என் அரசியல் இருந்ததை இன்று நினைத்துப் பார்கிறேன் . இதற்கு பின்னால் அரசியல் திட்டமெல்லாம் ஒன்றுமில்லை . அங்கு நிலவிய சூழல் அவற்றுக்கெதிராக எனக்குள் இருந்த தார்மீக கோபம் போன்றவை எழுந்து இதைச் செய்திருக்கலாம்

காலவோட்டத்தில் என் மீது அந்த தொகுதிகளைச் சார்ந்தவர்கள்  கொண்ட அன்பும் கணிவும் என்னை கண்ணீர் மல்கவைப்பது. அவர்கள் என் பாட்டனாரை அறிந்திருத்ததும் அவரோடு என்னை இணைத்து தெரிந்து கொண்டதும் வியப்பளிப்பதாக இருந்தன. இத்தனைக்கும் அவருக்கு எந்தவித அரசியல் தொடர்பும் இருந்ததில்லை. எளிய கிராமத்து மக்களாக தெரிந்தாலும் ஒன்றோடு ஒன்றை இணைத்து புரிந்து கொள்ளும் அறிவு நகர்புறங்களில் காணமுடிவதில்லை என்பது மற்றொரு ஆச்சர்யம்

அன்று விளையாட்டாக நான் செய்தவைகளின் விளைவை பத்து ஆண்டுகளுக்கு பின் நான் அடைந்தேன் என்பதை இப்போது என்னால் அனு அனுவாக இணைத்துப் பார்க்க முடிவது விந்தைதான் .மிக கச்சிதமாக பின்னப்பட்ட வலையைப் போல அவை என் அடையாளமாகவும் எனக்கான அரசியல் களமாக பின்னர் உருவெடுத்தன என்பதை நினைக்கும் போது நம்பமுடியாத அளவு ஆச்சர்யமளிப்பது .

எங்களுக்கு எதிராக பலதரப்பட்ட அரசியல் நிகழ்வுகளில் சண்முகம் நிகழ்தியது, நகர்த்தியதும் பற்றியும் அதற்கான எங்களின் எதிர்வினை பற்றியும் மட்டுமே எங்கள் பேச்சு எப்போதும் இருந்திருக்கிறது. இளைஞர் காங்கிரசில் அவருக்கு எதிரான பல விஷயங்களில் நான் ஈடுபட்டிருக்கிறேன் . அது அன்றையத் தலைமை எனக்கிட்ட வேலை தவிரவும் ,அன்று எனக்கென அரசியலில் இலக்கென ஒன்றில்லை.


புதுவை காங்கிரஸ் கட்சியரசியலை புரிந்து கொள்ள திரு.சண்முகத்தின் அரசியல் ஆளுமை தெரிந்திருக்க வேண்டும். அரசியல் என்கிற அந்த கிளி யாருடையத் தோள்கலிலும் எளிதில் வந்தமர்ந்து விடுவதில்லை , அதில் திரு.சண்முகமும் விலக்கில்லை.அவருக்கான களம் அதில் அதில் அவர் மீண்டு வந்தது . அதன் பொருட்டே அவர் புதுவை அரசியலில் அறுபது ஆண்டுகளாக பேசப்பட்டார். பல கட்சிகளின் அரசியல் போக்கு அவரை மையப்படுத்தியே அமைந்திருந்தது . அதை ஒட்டியே அவர் ஆகப் பெரும் ஆளுமையாக இப் பதிவுகளின் பேசுபொருளாகியிருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்