https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 29 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 41 குருவெனயிருத்தல்

ஶ்ரீ:

அடையாளமாதல் - 41
குருவெனயிருத்தல்
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 16
அரசியல் களம் - 16


மாநில இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் நான் நேரடியாக இனைந்தது 1984 வருடம் ,இந்தக் களேபரத்திற்கு பிற்பாடு . இந்த சம்பவம் நடக்கும்போது நான் என் தொகுதி அமைப்பில் சிறிய பொறுப்பில் இருந்தேன். அப்போதெல்லாம் மாநில அமைப்பு ஒருவித ரவுடி கூட்டம் போல உள்நுழைவது ஆபத்தானது .அன்று நிகழ்ந்தவைகளுக்கு நான் வெறும் திடுக்கிட்ட பார்வையாளன் மட்டுமே .சண்முகத்திற்கு எதிரணியில் இருந்தேன்இருந்தும், அன்று நடந்தது அப்போது அது ஒரு வீர சாகஸமாக என்னால் பார்க்கப்பட்டாலும் . புரிதல் அடைந்து ஐந்து வருடம் கழித்து 1984 நான் கண்ணனுடன் இணைவதை தவிற்த்து பாலன் தலைமையில் இணைந்ததற்கு அன்று கண்ணன் தலைமையில் நடந்த வெறியாட்டத்திற்கு முரண்பட்டுத்தான்

நான் சண்முகத்திற்கு நெருக்கமானது 1992ஆம் ஆண்டு.இந்தப் பதிவுகளில் நான் எழுதுவது திரு.சண்முகம் என்னுடனான தனிப்பட்ட உரையாடல்களில் பின்னாளில்  சொன்னவைகள் . அவற்றில் பல நிகழ்வுகளிலில் என்னை நேரடியான தொடர்புறுத்துபவைகள் . அந்த 13 ஆண்டுகளில் காங்கிரஸ் உட்கட்சி அரசியலிலும் என்னுடைய அரசியல் அனுகுமுறைகளிலும்

நான் உற்றுநோக்கிய நிகழ்வுனூடாக நிகழ்ந்துவிட்ட பலவித மாற்றங்கள் ,ஏற்ப்பட்டு விட்ட பலவித விலகல் , சேர்தல் ,காட்டிக்கொடுத்தல், பழிவாங்கப்படல், துரோகங்கள் ,வீழ்ச்சி ,வெற்றி,பிறழ்கணக்கிடுகை கீழமேல் தலைமைகள் இடம்மாறி அமைந்தது.

இப்படி பல கூறுகளாக இந்த இரண்டுத்தரப்பும் பலவித வளர்சிதைமாற்றம் அடைந்து பல அணிகளுடன் பல்வேறு கோணங்களில் இது தொடர்நது விவாதிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது அவரவர் இதற்கு அவர் யூகங்களின் வழியே பிறிதொரு வடிவம் கொடுத்துக்கொண்டே இருந்தனர்

கட்சி அமைப்பு மிக நுண்ணிய உணர்வுகளால் இயக்கம் பெற்றடைந்த காலம் . அதன் அவதானிப்புகள் அனைத்தும் நிஜத்திற்கு தொலைதூரத்தில் இருந்தன.ஆனால் திரு.சண்முகதின் விமர்சனங்களை நேடியாக கேட்கும் வாய்ப்பு என் ஒருவனுக்கு மட்டுமே கிடைத்தது என நினைக்கிறேன் .

மாநிலத்தின் உச்சத் தலைமையின் புரிதல்கள் , வினைகள் அவற்றிற்கான எதிர்வினைகள் அவற்றால் நிகழ்நதவை அவை பல மாநில இணைத்தலைவர்களின்  அரசியலை புரட்டிப்போட்டு , கீழ்மேலென ஆக்கியது போன்றவற்றை அவரைத் தவிர வேறுயாரால் நேர்மறையாக ஒரு சம்பவத்தை கூறிவிடமுடியும் .

என்னால் நடைபெற்றதை பலவகையிலும் ஒன்றோடொன்றை பொருத்தியும் , பலவற்றை பிரித்தும் இடம்மாற்றி வைத்து பார்க்கும்  போது கிடைக்கும் புரிதல்கள் அலாதியானவை, பலவித பாடங்களை சொல்லிக்கொடுப்பவை. அவை பின்னாளில் என்  பல அரசியல் முடிவுகளுக்கான ஆதாரமாக இருந்தவை

என்னை அனைவரிடமிருந்து பிரித்துக்காட்டியவை . கட்சிரீதியில் மனிதமனங்களை  சரியாக புரிந்து கொள்ள வைத்தவை . எனக்கான பாணியை நான் உருக்கிக் கொண்டதும் அப்போதுதான் . எனக்குமான வழிமுறைகளில் பலமுறை சண்முகத்திடம் மோதியிருக்கிறேன் . அதற்கான துணிவை அளித்ததும் அவர்தான்.எப்படியாகிலும் ஒழிந்துபோ என்பதே அவர் எனக்களிக்கும் ஆசீர்வாதம்


ஆனால் என்முயற்சிகளில் பின்னால் அவரின் காதுகள் என்னை மிகத்தீவிரமாக் தொடந்தபடியேயிருக்கும் நான் சந்திக்கும் இடரடக்கள்களுக்கு அவரது மறைமுக மீட்புகள் என்பாதைகளை சரிசெய்தபடியே இருந்திருக்கின்றன . அதால்தான் அவர் எனது எக்காலத்துக்குமான அரசியல் ஆசனாக நீடித்தப்படியே இருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக