https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 19 ஏப்ரல், 2017

அடையாளமழித்தல் - 5 ( மொழியை கண்டடைய முயற்சித்தல் )

ஶ்ரீ:

அடையாளமழித்தல் -  5
( மொழியை கண்டடைய முயற்சித்தல்   )


என் அடிப்படை இயல்பான எந்த உலச்சிக்கலிலும் நான் நீண்டகாலம் இருந்ததில்லை . ஏதாவதொரு காரணத்தை பற்றி வெகு விரைவில் அதிலிருந்து வெளிவந்து விடுவேன் .திருவாய்மொழிக்கு எளிய உரை எழுதுவது என்கிற முடிவு அப்படிபட்டதே . என் தமிழ் அறிவும் நடையும் செறிவின்மையையும்  நான் நன்று அறிந்த ஒன்றே . எளிய உரை எழுதுவதற்கு முயற்சிப்பதே என் தகுதிக்கு ஏற்றதல்ல எனத்தெரிந்தும் , என் மீட்சிக்கு அது இட்டுச்செல்லும் என என் ஆழ்மனது சொன்னது,ஆகவே ஒரு முக்கியமான வைணவ வலைதளத்தில் உள்ள கடின சொற்பிரயோகத்திற்கு மாற்று என நான் நினைத்ததை அதில் இட்டு நிரப்பி கொண்டிருந்ததே என் ஆக்கம்.

அதே காலகட்டத்தில் தான் திரு.சதுர்வேதி அவர்களின் ஈடு வியாக்கியானம் பற்றிய சில குறிப்புகளை அறிய நேர்ந்தது . அவர் அன்று ஆற்றிய உரையின் சாரம் . "திருவாய்மொழியை மூன்று பதமாக பிரித்து , மொழி, வாய்மொழி , திருவாய்மொழி நுட்பமாண திறப்பானது "

முதலில் மொழி கைவரவேண்டும் என்கிற உணர்வில் எனது ஆழ்மன வழிகாட்டலின் படியே ஜெயமோகனின் தளத்தை கண்டடைந்தேன் என்று சொல்லவேண்டும். அதை " கீதா முகூர்த்தம்" என்று முன்பே சொல்லியிருந்தேன் . அது விளையாட்டல்ல திரு.ஜெயமோகனை நான் ஒரு டிசம்பர் மாத பெரும் மழைக்காலத்தில் கோவை சென்று சந்தித்தது அவரின் மூன்று நாள் "கீதை உரையாடலின் போது . கீதா முகூர்த்தம் பற்றி அவர் சொல்லக் கேட்டதும் அங்கேதான்

அதிலிருந்து எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் கொடுக்கத் துவங்கினேன் . அது எழுத்தையும் , எழுது முறையையும் பழக்கத்திற்கு கொண்டுவரும் என்று நினைத்தே துவங்கினேன் . ஆனால் எழுத்துகளின் வழியே அனைத்து உளச்சிக்கலிலிருந்து எழுந்து வெளியே வர இயலும் என்றும் அவற்றை கடந்து முற்றாக மறக்க இயலும் என புரிந்தபோது , மிக பிரமிப்பாக இருந்தது . மூளையின்  படிப்புகளில் படிந்துள்ள மேவையற்ற நினைவுகளை எழதுதல் மூலமாக பனியைப் போல கரையவைக்க இயலும் என்பது நம்பமுடியாததாக இருப்பினும் , அதுதான் நிஜம் . அன்று முதல் நிறைய எழுதத்துவங்கினேன் 


எனக்குள் நிகழ்வது காலபரிமாணத்திற்கு அதீனமானது என்பதும் , என் எண்ணங்கள் அவற்றின் நீட்சி என உணர்ந்தேன் . கால பாகுபாடுகளை புரியவைத்தது திரு.ஜெயமோகன் . நிலவுடைமை சமுதாயம் , நவீனத்துவம் , பின்நவீனத்துவ முரண்கள் போன்றவை அவர் அறிமுகப்படுத்தியதே. அதை கைவிளக்காக கொண்டு என்னைத் தொகுக்கத் தொடங்கினேன் . அவை முற்றிலும் பிழையாகக் கூட இருக்கலாம். வருங்காலத்தில் அவற்றை சரியாக புரிந்து கொள்வதன் மூலம் என்னுடைய இந்த எண்ணங்களை மறு ஆய்விற்கு நான் உட்படுத்தலாம் . இவ்வுலகில் மாற்றமில்லாதென்றும் நிரந்தரமானதென்றும் ஏதுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்