https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 23 அரசியல் களம் - 15 உட்கட்சி அரசியல் ஒரு இயக்கமுறைமையும் -6

ஶ்ரீ:


அடையாளமாதல் - 23
அரசியல் களம் - 15
உட்கட்சி அரசியல் ஒரு இயக்கமுறைமையும் -6


இப்போது மதியம் . காலை வர இருந்த பல ஊரைச்சேர்ந்த வர இருந்த தொண்டர்களை மாலை நான்கு மணிக்கு வரச் சொல்லி தகவல் பறந்தது . உள்ளே நுழைந்தபிறகு முடியும்வரை வெளியேற இயலாது . ஊர்வலம் கிளம்பும் போதோ அல்லது பிறகோ கலவர வாய்ப்பு பற்றி காவல்துறையை சேர்ந்தவர்கள் எங்களை எச்சரித்தவண்ணம் இருந்தனர் .

நிகழ்வின் நடுப்பகுதியில் அமர்ந்திருந்த பாலன் மற்றும் நிர்வாகிகள் வெளியேறினால் எங்கள் சிக்கல் தீர்ந்துவிடும் , அதன்பின் கலவரம் வேறுயாரையாவது மையம் கொள்ளும்.
பதட்டம் கூடி கூடி வந்தவண்ணமிருந்தது . இதுவரை கிடைத்த அரசியல் பலனே எங்கள் தகுதியை மீறியது . அதற்கு மேல் அங்கிருப்பது சரியாகப் படவில்லை . நான் மெல்ல பாலனை அனுகி அங்கிருந்து விலகுவது பற்றி குறிப்புணர்த்தினேன் , புரிந்த கொண்ட அவர் நான்கு மணிக்கு அங்கிருந்து விலக திரு.கண்ணன் உள்நுழைய சரியாக இருந்தது .அது அவர் தொகுதி பிரச்சனை அவரை மையகொள்ளத் துவங்கிது

மையசாலையை அடைந்தவுடன் அனைவரையும் கலத்துவிட்டு உடனடியாக அங்கிருந்த கிளம்பினோம் நல்ல பசி முதல் நாள் இரவு எங்கோ ரோட்டோர கடையில் தோசை சாப்பிட்ட நினைவு . பாலன் பரோட்டா போட்டிகறி சாப்பிட்டதோடே சரி

அன்று பந்த்திற்கு அழைப்பு விடுத்த நாங்கள் எங்களுக்கு கட்டுபடாத ஓட்டலை தேடி புதுவை முழுவதும் அலைந்தோம் ஒரு டீ தேடி . பொது மருத்துமணை அருகே கிடைக்கும் என்றார்கள் , இங்கே என்றார்கள் அங்கே என்றார்கள் . ஏறக்குறைய புதுவையை முற்றாக ஒரு வலம் வந்து பசி அடங்கியது போல ஒரு நினைவு

கடைசியில் புதுவையின் எல்லை கோட்குப்பம் அருகே சென்று டீ சொல்லிவிட்டு காத்திருந்த போது மாலை ஆறுமணி . அன்றைய மாலை மலர் பத்திரிக்கை சூடான செய்திகள் போஸ்டராக தொடங்கியது அதில் " இளைஞர் காங்கிரஸ் பந்த் போராட்டம் " புதுவை முடங்கியது , என்றது.

நேற்று காலை தொடங்கி இன்று மாலை வரை நீடித்த பதட்டம் எங்களுக்கு முண்பின் பழக்கமில்லாதது . எங்களையும் புதுவை இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என நாங்கள் நினைக்கவில்லை . இது ஒரு நகைமுரண் .

நானும் பாலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட போது பீறீட்டு கிளம்பிய சிரிப்பை அடக்க இயலாமல் வெடிசிரிப்பாக தொடங்கி சில நிமிடங்களில் எங்களுடன் வந்திருந்த அனைவருக்கும் புரைக்கேறி விட்டது. எங்களை சுற்றி டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் எங்களை ஒரு மாதிரி பார்த்து அச்சமுற்று எங்களை விட்டு சிறிது வலகி நின்று டீ குடிப்பதை பார்த்தவுடன் சிரிப்பு இன்னும் பொத்துக்கொண்டு கிளம்பியது .

நான் டீ சாப்பிட்டதற்கான காசு கொடுத்து விட்டு காரில் ஏறி அதைக் கிளப்பிவுடன் மீண்டும் சிரிக்கத் தொடங்கினோம் . விளையாட்டாக நிகழ்ந்து விட்டது அந்த செய்தி . எங்கள் பலம் எங்களுக்கு தெளிவாக தெரிவித்தது அந்த செய்தி.
அரசியல் எனபது மற்றவர்களுக்கு எப்படியோ , எனக்குத்தெரியாது ஆனால் என்னைப் பொருத்தவரை அது ஒரு கலை . அதில் கற்றுக்கொள்ளும் பாடங்களின் நுட்பங்களும் அவற்றின் வீச்சும் கணங்களுக்கு புலப்படாத குறியீடுகளாக பிறரின் ஆழ்மனப் படிமங்களோடு உரையாடக் கூடியது . அதன் நுட்பங்களால் எவரும் செய்ய முனையாத செயல்களில் நம்மை நுழைத்து வெற்றி பெற வைப்பது.


இளைஞர் காங்கிரசின் பந்த யாருக்கு என்ன உணர்த்தியதென என்னக்குத் தெரியாது ஆனால் அது சொல்லிய செய்தி என்னுள் மிகத் தெளிவாக விளைந்திருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...