https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 26 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 32 சிக்கலும் தீர்வும் எழுச்சியும் - 1


ஶ்ரீ:


அடையாளமாதல் - 32
சிக்கலும் தீர்வும் எழுச்சியும் - 1
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 7
அரசியல் களம் - 16.



1977 தமிழகத்தைப் போலவே புதுவையிலும் திரவிட கட்சிகளின் ஆதிக்கம் தொடங்கி இருந்தது . திமுக வில் இருந்து உலகப்புகழ் கணக்கை கேட்டு விலகி எம்ஜியார் அதிமுக கண்டடைந்தார் , அன்று அவர் சென்ன அண்ணாயிசம் இன்றும் விளங்கிக் கொள்ள முடியாதது . அதன் தாக்கம் தேர்தல் நேரத்தில் புதுவையிலும் எதிரொலித்தது . அதன் விலையாக அது   14 இடங்களில் வென்று ஜனதா கட்சியுடன் கூட்டணியாக ஆட்சி அமைத்திருந்த நேரம்

மாநில காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது . அன்று முறையான தலைமை இல்லாது போயிருந்தால் தமிழ்நாடு போலவே புதுவையிலும் திராவிட கட்சிகளின் ஆட்சி நடந்திருக்கும் . என்ன காரணத்தினாலோ எனக்கு திராவிடத் இயக்கங்களின் தலைவர்கள் இன்றுவரையில் எவரையும்  பிடித்ததில்லை . ஆளுவதை ஒரு கொள்கையாக கொண்ட கட்சி அதைத்தாண்டி வேறு சித்தாந்தம் இருப்பதாக இன்று வரை தெரியவில்லை .

அண்ணாதுரை புண்ணியம் செய்தவர் அவர் நிலையாவது பரவாயில்லை, கொள்கை ரீதியான பிரிதலும் புதிய கட்சியை உருவாக்கவும் அவருக்கு பெரியாரின் காலங்கடந்த திருமணம் , தென்னிந்தியவை ஒருங்கினைத்த அகண்ட தனித்திராவிட நாடு கனவு பின் கைவிடல் போன்ற காரணங்கள் இருந்தன. அவரின் வழிதோன்றலுக்கு அண்ணாதுரையின் குரலைப் போண்ற பேசு மொழி இருந்தது. துரதிருஷ்டவசமாக எம்ஜியாருக்கு அது கூட வாய்க்கவில்லை .

தென்னிந்திய பிராந்தியத்தில் காங்கிரஸ் எமர்ஜன்சிக்கு பிறகு செல்வாக்கிழக்க துவங்கியது.மாநில கட்சிகளின் எழுச்சி , உணர்ச்சி மிகு மாநில முன்னுரிமை , காங்கிரசில் சக்தி மிக்க மாநில தலைவர்கள் வளர்வதை அகில இந்திய தலமை விரும்பாமை போன்ற பல காரணங்களால் காங்கிரசின் வீழ்ச்சி தடுக்கவியலாததாகி விட்டது


தென்னிந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சி மாறி மாறி அமைந்தாலும் புதுவையில் அது செல்வாக்கு மிக்கதாக இருந்தது ஒரு தோற்றம் மட்டுமே. ஆனால் அது நிஜமான பலத்தோடு விளங்கவில்லை. மாநில தலைமையின் நிர்வாக யுக்தியால் அதன் பலம் நீடித்தது போல மாயை இருந்துவந்தது . பக்கத்து மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியிழந்து ஐம்பது ஆண்டு ஆன பிறகும் , இன்றும் அது ஆட்சி கட்டலில் அமரும் வாய்ப்பு சிந்தனைக்கெட்டிய தூரத்தில் கூட இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக