https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

அடையாளமழித்தல் - 4 (கீதா முகூர்த்தம் )

ஶ்ரீ:

அடையாளமழித்தல் - 4
(கீதா முகூர்த்தம் )



இரண்டு வருடத்திற்கு முன்பு  ஒரு பெரும் நோக்கத்திற்காக நான் நடத்த இருந்த முக்கியமான ஒரு நிகழ்வு எதிர்பாராது தள்ளிப்போனதும், அதை ஒட்டி நிகழ்ந்த சில விஷயங்களினால் நான் மிகவும் மனக்கொந்தளிப்பிற்கு ஆளாகியிருந்தேன் .

மன நிம்மதிக்காகவும் , சதா தலைக்குள் பேசியபடி இருந்த அதிலிருந்து வெளிவருவதற்கும் நான் வலைதளத்தின் உதவியுடன் திருவாய்மொழிக்கு எளிய விளக்கம் எழுத முயற்சித்த போதுதான் ஜெயமோகன் தளத்திற்கு தற்செயலாக வர நேர்ந்தது . அது ஒரு திருப்புமுனையாக இருந்தது . ஒரு கீதா முகூர்த்தம் என்றுதான் சொல்லவேண்டும்.

அப்பாவிடம் இருந்து அறிவுகள் எல்லோரையும் போல சிறு வயதில் பெரும் சலிப்பையே தந்தன. வழிகாட்டுதல் ஏதுமின்றி நானே என்னைத் தொகுத்து கொண்டு முன்னகர்வதை வழமையாக கொண்டதால்  நான் அனைத்து காலங்களிலும் உள்ளுணர்வு மூலமாகவே என்னை வழிநடத்திச் சென்றிருக்கிறேன்

அதன் பிறகு நான் எவரிடமும் அறிவுறை கேட்டதில்லை . எந்த ஒரு விஷயத்தையும் எனக்குள்ளேயே தர்கித்துக் கொண்டே முன்னகர்ந்திருக்கிறேன் . இயற்கையின் ஆடல் விளங்கிக்கொள்ளவொன்னாத போக்கு. "ஏனிப்படி ஏனிப்படி " என ஓயாது அதிர்ந்து கேட்கும் எந்த கேள்விக்கும் நம்புரிதலில் இருந்து ஒன்றையும் அறியவியலாது அதனிடம் முழுமையாக ஒப்படைத்துவிடுவதன் வழியே அதனின்று மீட்சி. அதுவே விடுதலை. என் வழி அதுவாகவே இன்றுவரையில் இருந்து வருகிறது.

தற்செயல் பெருக்காகவே வாழ்க்கை இருக்கிறது. மனிதனின் இறப்புதான் அதுவரை அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த அனைத்தையும் தொகுத்து ஒரு கட்டுக்கோப்பை அளிக்கிறது என்று "காம்யூ " ஓரிடத்தில் சொல்கிறார். இந்த விவாதத்தை தொடங்கியவர்கள் மனிதசிந்தனையின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்கள். இன்னும் முடியவில்லை. நாம் வேடிக்கை பார்க்கவே முடியும்- நம் வாழ்க்கையை வைத்து. என்கிறார் ஜெ .

இது ஒரு தற்செயலாக அமைந்ததே , வாழ்கையின் சில கணங்கள் இறப்புற்கு நிகரானது .அந்த நிமிடங்கள் அதுவரையில் நிகழ்ந்ததைக் கொண்டு நிகழவிருப்பதை கணிப்பது ஒரு விளையாட்டு போல . அது வெறுப்பு வருத்தம் கசப்பு போன்ற சதா அழுத்தும் எதையும் எதையும் ஏதாவதொரு தர்க நியாயப்படுத்தப்பட்டு அதிலிருந்து வெளியேறி விடுவிடுவதற்கு துணையாக இருக்கிறது .


என்னுடைய யதார்த்தமானது .எவர்மீதும் வெறுப்பு வருத்தம் கசப்பு போன்ற நினைவுகளை நான் சுமந்தலைவதில்லை , மனதை அதிலிருந்து கழட்டி வெளிவர ,வேறு விருப்பமுள்ள விஷயங்களை நாடி ஈடுபடுதொன்றே என் வழிமுறையாக இன்று வரை இருந்து வந்திருக்கிறது . எனவே எந்த உளச்சிக்களிலும் நீண்டகாலமாக நான்  இருப்பதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...