https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 12 ஏப்ரல், 2017

அடையாளமழித்தல்-2 (விடுதி புஷ்பம் )

ஶ்ரீ:


அடையாளமழித்தல்-2
(விடுதி புஷ்பம் )








சரடில் கோக்கப்படாத விடுதி புஷ்பம் போல தனித்திருக்க துவங்கினேன். அதற்கு ஏற்றார் போல் பல பக்கங்களிலும் ஒத்திசையுடன் எழுந்த அமைதி. அமைதி ஒரு எதிர்மறைக் காரணம் ஒட்டி வருவது . நமக்கு தாங்கவொன்னாத ஒன்றை நமக்கு வேண்டியவரே செய்வர் , அதிலும் நம் சகாயம் வேண்டி நிற்பவர்கள் அதை கூசாது ஆற்றுவர் . அது நியாயம் தானே , பின் எப்படித்தான் லௌகீகத்தை விடுத் தொலைப்பது .

நான் எனக்கு மீண்டுமீண்டு சொல்லிக்கொள்வது கடந்த காலத்தை நிகழுடன் பொருத்திப் பார்க்காதே . அது கசப்பை நோக்கியே தள்ளுவது . ஆகவே கசப்படையாதே . அதன் மூலம் பெரும்வசுமின் நிர்வாகத்தில் குறைகாண்கிறாய் . யார் நீ என்ன தெரியும் உனக்கு . எதன் அடிப்படையில் நெறியை அறிந்திருக்கிறாய் .எவ்வகையில் இந்த உலகு நெறிபிழைத்து வாழ்கின்றது  .

ஒரு கணத்தில் எங்காவது பொருத்தியறிதல் தேவையென்றானது. எங்கு, ஏன்,எப்படி பொருந்துவது. பொருந்தினால்  அது மன விடுதலையை அளிப்பதா? விடுதலையைத்தான் விரும்புகிறேனா?

ஆம் ,விடுதலையை விரும்புகிறேன் , எந்த மாதிரியான விடுதலையை . வேஷமில்லாது தன்னியல்பாக  இருப்பதே விடுதலை . விடுதலை வாழ்கை அது தன்னளவிலேயே நிறைவைக் கொடுப்பது . அது எளிதில் கடக்கக்கூடியதாக புலப்படவில்லை. "வேஷமின்மை, இயல்பு " இந்த இரண்டைத்தாண்டி இப்போதைக்கு ஏதுமில்லை. பொருத்தப்படும் இடம் இரண்டு "லௌகீகம், பாரமார்திகம்".விசை இரண்டு "அக மற்றும் புறவயங்கள்".

குறுக்கு வெட்டாக பிரித்துக்கொண்டால் இரண்டு.வேஷமின்மை மற்றும் இயல்பை , லௌகீக ,பாரமார்திக மார்கத்திற்கு ,அகப்புறவய அவதானிப்பில்   இருக்கும்  முயற்சி . விசை , அது ஒழியாத தேடல்களினாலானது.  கிடைப்பவைகளை இந்த இரண்டில் தொகுக்கத் கொள்ளத் துவங்கினேன். எனக்கென ஒரு பாணி எழுந்து வந்தது .

தேடல் ,நம்முள் உறையும் முரணை விளக்கிக்கொள்ள ,அது தேடுபொறியை தேவையை அறிந்து தேர்ந்து செல்பவையாக இல்லாது , "நேதி , நேதி " என்பதைப் போல "இதுவல்ல , இதுவல்ல "என விலக்கி நகர்பவை . ஒரு கணத்தில் விலக்கவியலாததே அடையவேண்டியத் தெளிவு எனக்கிடைக்கிறது . ஆனால் அது பல சமயங்களில் கச்சாப்பொருள் போல சுத்திகரிக்கப்படாமலே எஞ்சுகின்றன.

சுத்திகரிக்கும் செயல். அது இதுநாள்வரை ஒட்டி வளர்ந்ததை பிய்த்தெடுப்பது போல ஒரு வலிமிகுந்த வதை . கிடைத்ததோ சரியாக பொருந்திப்போகும் அவசியமற்றது .மற்றொன்றோ உதற முடியாத சிலவற்றுடன் ஒட்டி முரண்பட்டே நிற்பவை .இரண்டுமே கூர் கொண்டவை ,சிறிது காலம் அவைகளை அப்படியே விடப்பட்டு விடுவதும்,  முரணிலைகளின் விசை ஏற்கவியலாததாக இருப்பினும் . சில காலத்தில் இளம் காற்றின் தழுவல்கள் எனக் கிடைக்கும் புரிதலினாலேயே அவற்றை கடக்க முடிந்திருக்கிறது . அதுவரை அதை சுமந்தலைவது பிறிதொருவிதமான வதை.

ஒருகட்டத்தில் பௌரானிக மரபான வேதாந்த விசாரங்கள் ஈடுபாடு அதில் தங்களை சரியாக பொருத்திக்கொண்டதாக கூறும் பரமைகாந்திகள் , கற்றவைகளின் பயனாக பிறரில் குற்றம் கண்டனர் , ஆசாரம் பெரும் விசாரமானது , அவர்கள் சங்கத்தில் கலக்காது தனியனாகினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்