https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 13 மே, 2017

அடையாளமாதல் - 63 * பரப்பியம்

ஶ்ரீ:





அடையாளமாதல் - 63
*பரப்பியம் 
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 36
அரசியல் களம் - 18





தொடர்புறுத்தலில் இளைஞர் அமைப்பின்  பாணி காங்கிரசிற்கு புதுமையானது. ஏராளமானவர்களை தொடவும் , தொட்டவர்களை நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்ளவும் , அவர்களை கட்சியின் மடிப்பிற்குள் கொண்டுவரவும் அவர்களால் மிக எளிதென செய்ய இயன்றது. தனக்கான ஆதரவு தளத்தை கட்சிக்குள்ளும் வெளியிலேயும் மட்டுமல்லாமல் பொது சமூகத்திலும் அவர்கள் வெற்றிகரமாக நிறுவினர்  . 


இத்தகைய முறை ஆரம்ப காலத்தில் கண்ணனுக்கு பலம்சேர்பவையாக இருந்தாலும் பிற்காலத்தில் அதுவே பெரும்சுமையென கருதத்துவங்கினர் . அக்கருத்தால் அமைப்பு சிதையத் தொடங்கிதும் ,அதை தக்கவைத்துக்கொள்ள ,அந்தந்த பகுதிகளில் எழுந்த வந்தவர்களை , தன்கீழ் குறுங்குழுவாக பரிணமித்துவிட்ட சிலரின் ஆளுகைக்கு உட்படுத்தியாதால், யாராலும் அவரை எளிதில் சந்திக்கவியாலாத ஒரு அரணாக அது உறுமாறியது

அதைத்தொடர்நது பல சர்ச்சைக்கிடமான முறைகேடுகள் முளைக்கத்தொடங்கியது . அந்த முறைகேடுகளை ஆதரித்தவராக அது அவரை தோற்றம் கொள்ளச்செய்து. கடைசிவரை அவருக்கு அந்த பிம்பம் கலையவில்லை என்பதல்ல அது மாறவேயில்லை என்பதுதான் இன்னும் வினோதம். அது தொடர்பான அவதூறின் உண்மைநிலை என்ன என்பது அவருக்கே வெளிச்சமும்

ஒரு தலைவருக்கு பலமாக இருப்பதென்பது  அவரது செயல்திறனின் . அது அரசியலை ஒட்டியுள்ள பல்வேறு வகையான நிர்வாகத் தேவைகளுக்கான அடைவுகள் எழுந்து வரும்போது ,அதை செய்து கொடுக்கக் கூடிய கட்சியரசியல் சித்தாந்தம்  சார்ந்த தனித்திறமைகள் உற்ற மையமாக  உள்ள ஒரு மனிதரையே தலைமை என்கிற குறியீடாக பொது வெளியில் அது நிலைநிறுத்துகிறது  . 

ஆனால் விண்ணுலக தெய்வங்கள் எவருக்கும் தேவையுறும் அத்தனை துறைகளிலும் நிபுணத்துவத்தை அளிப்பதில்லை. அத்தைகைய நிபுணத்துவம் உள்ளவர் பலரை சரியாக நிர்வகித்தலுக்கு ஊடே தன் விழுமித்தை நோக்கி உந்தி செலுத்தும்  திறமையே தலைமைபண்பு .

மாநில காங்கிரசின் இருப்பிற்கு சவாலாகவும் ,மாற்றாகவும் எழந்த இயக்கத்திற்கு இணைப்பு சக்தியாக இருந்தது, அதிலுள்ளவர்கள் அனைவருக்கும்,  தங்களுடைய நாளைய கனவுகளில் ஒன்று , ஏதோவொரு வழியில் ஆட்சியிலும், கட்சியிலும் வலுவான இருப்புநிலையை ஊர்ஜிதப்படுத்தும் என்பது

அதற்கு மேல்நிலையிலிருந்து அவர்களுக்கு கிடைத்த தவறான சமிக்ஞை ஒரு காரணமாக இருக்கலாம்  . அந்த சமிக்ஞையை  கொடுப்பவர்கள் எல்லோரும் ஒருவித பதட்டத்தில் இருந்து கொண்டே இருந்தனர் . அடுத்ததாக வரயிருப்பது,  கொடுங்கனவுகளை தந்து அவர்களை பதட்டத்திலிருந்து எப்போதுக்குமான விடுதலைக்கு விழைய விட்டது  . சிந்தனையில் 'இது தற்போதைய சிக்கல், இதிலிருக்கும் வரை தாக்குபிடித்தால் போதும் ' என்கிற பொதுமம்  எல்லோர் நரம்பிலும் இருந்தது  . 

அதற்காக எதைவேண்டுமானாலும் சொல் , என்னவேண்டுமானாலும் செய் . வேண்டுவது  தற்கால தேவைகளில் தன்னிறைவை அடைவதே வெற்றியெனப்படுவது. நாளையை , விடிந்ததும் பார் த்துக்கொள்ளலாம் ,என்கிற பரப்பியல் கோட்பாடு

தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலத்தில் ஏமாறுவதற்கான கூட்டம் எப்போதும் இருப்பதுஇம்முறைகள் அவர்களுக்கானது . ஒருநாளில்லா ஒருநாள் உண்மைநிலை புரிந்து அவர்கள் வெளியேறினால் ,அதை நிரப்புவதற்கான மறு கூட்டம் எப்போதுமே தயாராக இருக்கும். கட்சி அமைப்பு ஒருபோதும் வற்றாது

காமராஜர் போன்றவர்களிடம் செய்யக்கூடியதையும், காலமறிந்த செய்யலாம் என்கிற நினைவாக " ஆகட்டும் பார்க்கலாம் " என்கிற உண்மை சொல் , அவரை யாரும் வந்து "பார்காமலாக்கியது ". பிழைக்கத் தெரியாதவர்கள் !!


புதுவை சிறிய பகுதிகளானது , அரசியலுக்கென கிளம்பி வருபவர்கள் அதில் மிகச்சிறிய குழுவினர் . அதி சீக்கிரத்தில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டிவிடுவதால் வெகு விரைவில் அனைவரின்  " மூக்கும் வெளுத்து விடுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...