ஶ்ரீ:
அடையாளமாதல் - 60
விழுமியங்களில் நின்றது
திரு.ப.சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 33
அரசியல் களம் - 18
சண்முகம் பிறிதொரு ஆட்சிக்கு எதிராக செய்வதை . ஒரு முறை தனக்கே செய்துகொள்ளுமாறு ஒரு தருணம் வாய்த்தது. காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஆட்சியின் போது அதற்கு எதிராக அதைப் பிரயோகப்படுத்தினார் . சில சிக்கலான சமன்பாடுகளுக்காக தான் உருவக்கிய கூட்டணியை விட்டு வெளியேறி அதை கலைக்கும்படி நேர்ந்தது. மூன்று வருடம் பல்வேறு சிக்கல் நிலைபாடுகளால் ஒத்து போக முடியாத சூழல் . லாட்டரி ஊழல் புகாரால் ஆட்சி தடுமாறியது. மக்கள் லாட்டரி சீட்டால் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று சொல்லி புதுச்சேரி அரசே லாட்டரி சீட்டை ஏற்று நடத்தியது. சோடாகடை நடத்தாதது தான் பாக்கி
அந்த சமயத்தில் திமுகவை சேர்ந்த MA.சண்முகம் முதல்வர் ராமசந்திரனுக்கு எதிர்பாக பேசி யாரோ பதிவு செய்த பேச்சு அனைத்து தரப்பிலிருந்தும் புகுந்து புறப்பட்டது . நானும் அதைக் கேட்டிருக்கிறேன். MA.சண்முகம் என் தகப்பனாரின் நெடுநாளைய நண்பர் , எளிய மனதுடன் அரசியலுக்கு வந்தவர் அதன் திருகல்களை அறியாதவர் . முதல்வராக வர இருந்த சமயத்தில் வஞ்சகமாக அதை இழந்தார் என்பார்கள் .
அதைவிட முக்கிய நிகழ்வு ராஜ்யசபை நியமனம் தொடர்பானது . டாக்டர் ஆனந்தவேலுவை அதன் வேட்பாளராக அறிவிப்பு கெஜட்டில் வர இருக்கும் சந்தர்பத்தில், தன்னை கலந்தாலோசிக்கவில்லை என்கிற ஆதங்கத்தில் , சண்முகம் எதிர்வினையைத் தொடங்கினார். அதில் இரண்டு சிக்கல் ஒன்று ; வேட்பாளரை மாற்றினால் கூட்டணி முறிந்து போகும்படி நேரும் . தில்லியை சம்மதிக்க வைப்பது அசகாய வேளை .இரண்டு; அப்படி மாற்றி எடுத்தாலும் , சட்டமன்றத்தில் திமுக வின் ஆதரவின்றி அது நிறைவேறாது . முதல்வர் ராமசந்திரன் தன்னிடம் பேசிய சொற்களே அவருக்கு வினையாக முடிந்தது.
சில நாட்களில் கவர்னரை சந்தித்த காங்கிரஸ் அமைச்சர்கள் தங்களின் ராஜினாமாவை கொடுக்க. சண்முகம் ஆட்சிக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள ஆட்சி கவிழ்ந்தது . அது மிக நுட்பமாண அரசியல் பரிமாணம் . ஆனால் அதில் புகுவதல்ல இந்தப்பதிவின் நோக்கம் .
இந்தப் பதிவு ஏற்கனவே பலமுறை சொல்லியபடி , என்னை நான் அவதானிக்கும் பொருட்டு என் அடையாளங்களை உருவாக்கிய ஐந்து துறைகளில் அரசியலும் ஒன்று .அதை உருவாக்கி கொடுத்தவர் தலைவர் சண்முகம் அவரை நோக்கிய என்பயணத்தில் நான் அடைந்தவைகள் அதனால் நான் பெற்றவைகள் பற்றியது. பலருடைய வாழ்வினூடாக கடந்து சென்றது . அது அவர்களில் வாழ்வியலில் பலவித செயல்களை நிகழ்த்தி பெறுமதியில் இன்றளவும் தாக்கம் கொண்டதாக இருக்கிறது.
நான் பெருந்திட்டவாதத்தில் நம்பிக்கையுள்ளவன் , பிறருக்கு வேண்டுமானால் அது தற்செயல்களின் தொகுப்பாக தெரியலாம் , சூழலியலின் தாக்கமே அனைத்திற்குமானது என்பதை ஒற்றைவரியில் புரியவைத்திட இயலாது . அதை அலகலகாக பிறித்தும் சொல்லில்லிட மாளாது . அதுபற்றிய பல விவாதங்களில் எங்களுக்குள் கடந்த பல வருடங்களாக நிகழ்நதவண்ணம் இருக்கிறது . இன்றும் அதன் பல கோணங்கள் பேசு பொருளாக இருந்து வருகிறது. என் வழியாக நிகழ்ந்த அரசியல் செயல்பாடுகளில், என் முடிவுகளுக்கு ; சிலரை தவிர்த்து , ஆதரவில்லாத நிலையே அன்று காணப்பட்டது .
கடந்த பத்து வருடங்களாகவே அரசியல் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் விலகிவிட்ட நிலையில் . அன்று முரண்பட்ட சிலர் இன்று என் செயல்பாடுகளை பெயரளவில் ஏற்றுக்கொள்கிறார்கள். அதனால் இன்று அதனால் ஆவதன்ன ?. எனக்கு மிக ஆச்சர்யம் தரும் விஷயம் என் முடிவுகள் அரசியலில் நீடிப்பதற்கான அடிப்படையில் இருந்ததில்லை . என்னுடைய விழுமியங்களை என்னை அவற்றுள் செலுத்தியவை . அதை இழந்து அங்கு நீடிப்பது மரணத்திலும் கொடியது . இன்றளவும் நான் எடுத்த அத்துனை முடிவுகளும் எனக்கு இன்றும் சரியென்றே படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக