https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 8 மே, 2017

அடையாளமாதல் - 54 குறுங்குழு அரசியல் - 2

ஶ்ரீ:



அடையாளமாதல் - 54
குறுங்குழு அரசியல் - 2 
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 27
அரசியல் களம் - 16



எவரரொவரின் கொள்கை ரீதியான செயல்பாடு என்பதும்  . யதார்த்த அரசியலுக்குள் நுழையும் வரையிலானது . நுழைந்ததும் மெது மெதுவே  அனைத்தும் களையாப்பட்டுவிடும் . என்பது அடிப்படை விதி.

அதைத்தாண்டி , எவ்வளவு காலம் தங்கள் விழுமியங்களுடன் அவர்கள் தாக்குப்படிக்கிறார்கள் என்பதே விண்ணகத்து தெய்வங்களின் ஆடல் . அது எவரையும் இதுவரை  வெற்றிபெற விட்டதில்லை .விழுமியங்களை பற்றி நிற்பவர்கள் புறவய உலகை விடுத்து தான் மட்டுமே என மிச்சப்படுபவார்கள் . விழுமியங்களை விட்டுக்கொடுத்து நீடிக்க நினைப்பவர்களைபிறழ்வுகளாக கருதி புறவய உலகம் அவரை விட்டு விலக , அவர்கள் எச்சங்களாக தனித்து விடப்படுவர் . காந்தி முதல் சண்முகம் வரை நிகழ்ந்தது அதுவே .

காந்தியின் உயர் விழுமியங்கள் அனைவருக்குமானதாக நாடு சுதந்திரம் அடையும்வரை உணரப்பட்டது . பின் தன் சிலுவையை தான் சுமந்தபடி சென்ற வங்காள பயணத்தை காட்டிலும் ஒரு இழிவை "காலம் " என்று சொல்லாமல் அதை வேறு எப்படி விளக்கிட இயலும். விதிக்கப்பட்டதை அனைவரும் ஆற்றியேயாகவேண்டும்.

இளைஞர் காங்கிரசின் விழுமியங்கள் காங்கிரசின் விடுபாடுகளை நிரவுவதற்கானவை. அதனாலேயே காங்கிரசின் கட்சிக்கு மாற்றாக இளைஞர் அல்லாதோரும் அந்த அமைப்பில் இருந்தனர் . அல்லது அவர்கள் இருந்ததினாலேயே அது மாற்று அமைப்பாக உருவெடுத்தது

கண்ணன் ஒரு மையம் என்றல் அவரைச்சுற்றி முக்கிய தலைவர்காளாக இருந்தவர்கள் , அல்லது பின்னாளில் ஆளுமைகளாக எழந்து வந்தவர்கள் .சபாபதி , பாலாஜி ,பெத்தப்பெருமாள், வக்கீல் முருகேசன்,சாயிகுமாரி , இன்பசேகரன் உட்லன்ஸ்பாலா போன்ற , பலர் அந்த மாற்று சிந்தனைகளின்  பின்னாலிருந்தார்கள் . ஒருகாலத்தில் காங்கிரசில் ஏற்படப்போகும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உருவாகி வருபவர்கள் . அரசியல் மிக ஆரோக்கியமானதாக உருவாகிவந்த சூழல் அது

இதை அப்போது சொல்லிருந்தால் அன்றைக்கிருந்தவர்கள், எதுவார் குபேர்,VMC வரதப்பிள்ளை, கந்தசாமிபிள்ளை, ஜீவரத்தின உடையார் , அன்சாரி துரைசாமி போன்னறவர்கள் காங்கிரஸ் குட்டிசுவராகி விட்டது , நெடுங்காட்டு சண்முகம் போன்றவர்களின் தலையீட்டின் விளைவு . இனி இது உருப்படாது என்பதாக இருக்கும்

இது ஒரு மாற்ற முடியாத இயற்கையின் விதி . வளர்சிதைமாற்றம் எனப்படுவது. சிதையுறாத ஏதும் மாற்றமடைய இயலாது  வளராது . ஒதுக்கப்படும் எவருக்குமே கடந்த காலமே பொற்காலம் என அது காட்டும் . இதில் வினோதம், அந்த காலத்திலாவது அதை அவர்கள் உணர்ந்திருந்தார்களா ? எனில் . இல்லை . அவர்கள் அப்போதும் கடந்து சென்ற இறந்தகாலத்தை நோக்கியே பேசுபவர்கள் . அவர்கள்  முக்காலத்திலும் வாழாதவர்கள்  . 

எந்த தற்கால நிகழ்வுகளையும் கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது அங்கலாயப்பவர்கள் அதை எதிர்காலத்தோடும் ஒப்பிடத்தக்கதுமான ஒரு பார்வை விரிவை கொண்டிருப்பதில்லை . அவர்கள் கைகளில் வந்து அமர்ந்து இருந்தது , அப்படிபட்ட மாற்றங்களினூடகத்தான் , என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.


இத்தகைய சூழலில் இளைஞர் காங்கிரசின் தாக்குதல் நிகழ்ந்தது ஒரு குறுங்குழுவின் வெறுப்பரசியல் . அது ஒரு முதல் கோணலாக உருவெடுத்து . கண்ணன் ஒரு மூன்றாவது சக்தி . முதல் இரு சக்கிகளும் நிகர்நிலையில் நிற்கும்போது மூன்றாவது அணி எந்த தட்டில் ஏறுகிறதோ துலாவின் முள் அந்த பக்கம் சாய்வது தடுக்க இயலாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக