https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 15 மே, 2017

அடையாளமாதல் - 69 * ஒளி நீர்த்த மாண்பு *

ஶ்ரீ:





அடையாளமாதல் - 69
* ஒளி நீர்த்த மாண்பு *
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 42
அரசியல் களம் - 18




அனைத்து மாற்றுக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுன் மரைகார் தில்லி சென்றிருப்பதை, சண்முகம் அறிந்தும், தன் மௌனத்தை அவர் கலைக்கவில்லைநிகழவிருக்கும் ஆபத்தையும் அதன் உள்கணக்குகள் அனைத்தும் புரிந்திருந்தார் . முதல் சிக்கல் , இன்று ஓடிவந்திருப்பவர்கள் அனைவரையும் நன்கு தெரியும். பலர் ஸ்திரபுத்தி இல்லாதவர்கள் அவர்களின் தலைமையை எதிர்த்த கலக மனோபாவமும் , சிலர் முதல்முறையாக சட்டமன்றத்தை பார்பவர்கள் அவர்களின் அதிதீவிர வினையாற்றலும் ஆணவமும்  கட்சிக்கும் ஆட்சிக்கும் அவர்களை எப்போதுமாக கட்டுப்பட வைக்காது . கட்சிக்குள் ஒருநாளும் பொருந்தி இருக்க மாட்டார்கள் .

அதனால் இப்படி , இப்போது இது நிகழக் கூடாது . மீறி நடந்தால் அது மரைகாரின் சிக்கல் . அவர் மட்டுமல்ல கட்சியும் ஒருநாள் இதற்கு விலை கொடுக்கவேண்டி வரும் . தன்வரையில் அவ்வளவே. இரண்டு ; இதில் வலிந்து சென்று கருத்து சொன்னால் , தனக்கான கணக்கிற்காக ஒரு முயற்சியை சிதைக்க நினைக்கிறார் என்கிற கெட்டபெயர் தேவையற்று எழும்

ராஜீவ்காந்தி தலைமைக்கு வந்த பின் அவருடன் தனிப்பட்ட உரையாடல்கள் எதுவும் நிகழாத இந்த தருணத்தில் அவருடனான கருத்து பரிமாற்றத்திற்கான நேரம் இதுவா? எனத் தெரியவில்லை. மேலும் தன் கருத்தை நிறூவுவதற்கு முன் , தன் நேர்மையை நிறுவ வேண்டியிருக்கும் . அது ஏற்கனவே நிறூபனாமாகியருந்தால் , இந்த சிடுக்கை மட்டிலும் விஸத்தாரமாக பேசாலாம். அப்போது அதன் உண்மை பொருள்படும்

இரண்டையும் ஏக காலத்தில் ஸ்தாபிக்க முயற்சி செய்வது மூளையை முடிச்சிட்டு செயலிழக்கச் செய்துவிடும் . மேலதிகமாக ஒரு முன்னாள் பிரதமர் கட்சிமாறி வந்தவர்களை நேரே சந்திப்பதும், ஆட்சி மாற்றத்திற்கு அவரே தலைமையேற்றதும் போல் அவருக்கு ஒரு உருவகம் கொடுத்துவிடும் . ரசிக்கத்தக்தல்ல.

அது வளர்ந்து வருகின்றன ஒரு தலைவருக்கு நன்மை தருவதல்ல . அவரது அகில இந்திய அரசியலில் ஒரு பதிலிருக்கவியலா நேர்குற்றச்சாட்டிற்கு கொண்டு செல்லும் . மேலும் பல சமன்பாடுகளை குலைத்து எதிர்வினை செயலூக்கிகளை விழிக்கச்செய்யும் . அது போகாத ஊருக்கான பாதையை சொல்லியபடியே இருக்கும்

ஆட்சிமாற்றமென்பது இயல்பாக மாநில சட்டமன்றத்தில் மோதி ,உருமாறி, பின் விளைவது . அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம்  அனுமதி அளிப்பதற்கு கவர்னரின் பரிந்துரை வேண்டும் . இதில் இடியாப்ப சிக்கல்  மத்தியில் ஆட்சியிருக்கும் சந்திரசேகரின் ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியின் நீட்சி இது.

தன்னை கலக்காமல் ராஜீவ்காந்தி  இதை செய்யமாட்டார் என் உறுதியாக சண்முகம் நம்பினார். அது போலவே இருநாள் கழித்து ராஜீவ்காந்தி முதலில் சண்முகத்தை அழைத்து, மாற்று கட்சி சட்டமன்ற உறுப்புனர்களை சந்திக்கவும் , அவர்கள் கருத்தை தெரிந்த பிறகு முடிவெடுக்கலாம் என்றார்.

சண்முகம் தனக்கு இரண்டு நாள் அவகாசம் தர வேண்டும் எனக் கேட்டார்,அனைவரும் இங்கேயே இருக்கும் போது எதற்கு அவகாசம்? ,  ராஜீவ்காந்தி புரியாது "ஏன் " என்றார். மரைக்காருக்கு உள்ளூற ஆனந்தமாக இருந்திருக்க வேண்டும் . இந்த வலையில் சண்முகம் சிக்கி சீரழிவார் என அவருக்கு தெரியும்.

சண்முகம் சொன்னது "முப்பது பேர் சட்டமன்றத்தில் இருபத்தி ஏழுபேர் இங்கிருக்கிறார்கள் , இரண்டு நாள் அவகாசம் , மீதமுள்ளவர்களையும் அழைத்துவர" என்றார் . சில நொடிகள்  எவருடைய  சொல்லுமெழாததால் அங்கே அசாதாரமாக மிக நீண்ட அமைதி நிலவியது . அனைவரும் திகைத்து நின்ற தருணத்தை பிளந்தது, ராஜீவ்காந்தியின் அட்டகாசமான வெடிச்சிரிப்பு .

சண்முகம் அவருடன் இனைந்து கொண்டார் . மரைகாருக்குத்தான் என்ன நிகழ்ந்தது ,இப்படி சிரிப்பதற்கு என முதலில் புரியாவிட்டாலும் , சில நொடிகளில் புரிந்தது , ஆனால் அந்த நகையாட்டுடன்தான் அவரால் இணைந்துகொள்ள முடிவில்லை .

சண்முகம் சொல்லாமல் ராஜீவ்காந்திக்கு புரிந்தது  . ஒன்று ; இந்திய வரலாற்றில் கட்சிமாறி வந்து நூறு சதவிகித ஆளும்கட்சியாவது ஜனநாயகத்தின் உச்சகட்ட இளிவரல் . இரண்டு; இவர்களில் சிலர் நாளை வந்தக்கட்சிக்கு திரும்பினால் , அன்றுவரை காங்கிரஸால் மட்டுமே முழுஆட்சிகாலமும் ஆளமுடியும் என்கிற பெருமையை அது சீர்குலைக்கும்

மூன்று; சரி , ராஜீவ்காந்தி காந்தி ஏன் சிரித்தார்? . கூப்பிடவுடன் ஓடிவரத்தயாராக இருப்பவர்களின் அதிகாரப் "பசியை "பற்றி நினைக்கையில் சிரிக்காமல் எப்படி  இருக்கமுடியும் .

தான் தங்கிருந்த விடுதிக்குத் திரும்பிய மரைகார் வெறுப்பின் உச்சத்தில் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாது புதுவைத் திருப்பினார்

சண்முகம் தன் மாற்றுத்திட்டங்களை தில்லியில் வைத்துவிட்டு திரும்பினார் . புதுவையை பொருத்தவரை,அது எந்த சமரசத்திற்கும் பொருந்திவராத கூட்டம், தானாக கலைந்து போகட்டும் . அதை நாம் கவிழக்க வேண்டாமென்று விட்டுவிட்டார் . அது அவருக்கு சவாலானதில்லை .

சில மாதங்கள் கழித்து பிரதமர் சந்திரசேகர் விலகி தில்லியில் தேவகௌடா பிரதமர் பொறுப்பேற்றார் . நம்பிக்கை வாக்கெடுப்பு வரை இழுத்து  நீடித்து , கௌரவமாக விலகும் வாய்பையிழந்து வெளியேறினார்

அதை அடியொற்றி புதுவை சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிப்பதாக முதல் நாள் இரவு வரை பேட்டி கொடுத்திருந்து விட்டு , சட்டமன்றம் கூடிய பிறகு கவர்னரை சந்தித்து தன் ராஜினாமாவை கொடுத்தார் முதல்வர் ராமசந்திரன்


ஒரு 364 நாள் அரசு தன் வெற்று அகங்காரம் கொண்ட உறுப்பினர்களால் கௌரவமற்ற முறையில் வெளியேறியது.அவர்களில் பலர் இன்றுவரையில் கூட சட்டமன்றம் நுழைய இயலவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்