https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 9 மே, 2017

அடையாளமாதல் - 57 குறுங்குழு அரசியல் - 5

ஶ்ரீ:



அடையாளமாதல் - 57
குறுங்குழு அரசியல் - 5
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 30
அரசியல் களம் - 16



கங்கிரஸ் அலுவலகம் அதன் இளைஞர் அமைப்பால் தாக்கப்பட்ட அன்று மாலை அவர்களை குறிப்பிட்டபடி ஆறுமணிக்கு சந்தித்தபோது நட்பு ஆழமாக வேர்விட்டிருப்பதை அறியமுடிந்தது. அதற்குள் என்னைப்பற்றிய அனைத்து தகவல்களும் அவர்களுக்கு தெரிந்திருந்தது. என்னைப்போன்ற ஒருவனுக்கு அவர்கள் மத்தியில் என்ன வேளையிருக்கமுடியும் என்கிற சிறு புரியாமை சில காலம் அவர்களிடமிருந்ததை , பிற்பாடு அறிந்த போது , அதன்பின்னால் இருக்கும் யதார்த்ததையும் புரிந்து கொள்ளமுடிந்தது  . என் அரசியலை ஒரு வடிவத்துக்கு கொண்டுவந்தது இங்குதான் என்பதை உணர்கிறேன்.

அன்று எனக்கு நிறைய தகவல்கள் கிடைத்தது . அரசியல் இயங்கு விசை மற்றும் முறையை தெரிந்து கொள்ளும் ஆர்வமே என்னை மறுபடி மறுபடியும் அவர்களின் முன்னே கொண்டு நிறுத்தியது . இந்தப்பதிவில் சொல்லப்பட்டது பலநாள் நடந்த விவாதங்களில் இருந்து நான் புரிந்து கொண்டது.

1980 தேர்தல் சீட்டுவிஷயத்தில் வெங்கட்ராமனை முன்னிருத்தி சண்முகம் தரப்பு வெற்றி மிக தெளிவானதாக இருந்தது . அதுவே மரைக்காரை கண்ணனை நோக்கி நகர்த்தியது. இதில் பலமுறை மரைகாரால் முன்னிருத்தப்பட்ட கண்ணன் வெறும் "வெட்டுக்கு கொடுக்கிற காய் " . துரதிஷட்வசமாக கடைசீவரை அதை அவர் புரிந்து கொள்ளவில்லை என்பது சோகம்.

தாக்குதலை எதிர்கொள்ளும் இடத்தில் சண்முகமில்லை காரணம் . ஒன்று ; அது தொடரக்கூடியது , சண்முகத்தால் அதை செய்து கொண்டே இருக்கமுடியாது . இரண்டு ; அவர் ஒரு வலுவானத்தாரப்பு , கட்சியை ஆட்சியை நோக்கி நகர்த்த வேண்டியவர் . தவறினால் அதற்கு தன்தலையை விலையாக கொடுக்கவேண்டியிருக்கும் . இந்த சில்லரை சினுமிஷங்களை ஆடிக்கொண்டிருக்க முடியாது. மேலதிகமாக மரைகார் எப்போதும் தன்னை வீழ்த்தும் நிலைக்கு போகவே மாட்டார் . நாளைய பூதம் இதைவிட ஆபத்தானதாக இருக்கலாம் . என்பது அவருக்கும் புரியும்.

மேலும் அவர் அரசுக்கான தரப்பல்ல , அது மரைக்காருடையது. அந்த வசீகரத்தை அவர் பெற்றிருந்தார் . சண்முகத்திற்கு ஆட்சியை கட்டுக்குள் வைக்க தன் தரப்பு ஆட்களை களமிறக்கவேண்டும் , பின் மந்திரிசபை ,கேபினட் முக்கியத்துவம், இப்படி பல கட்ட மேலிட தலையீடுகளை ஸ்திரமாக நிறுவதற்கு வெங்கட்ராமன் வழிவகுப்பார்

மரைக்காரை பொருத்தவரை அது நிகழக்கூடாது. மேலும் திமுக கூட்டணி வர இருப்தாக அப்போது எங்கும் பேசப்பட்டது. மரைக்கார் சிக்கல் வெகு சமீபத்தில்தான் அவர் திமுகவிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்திருந்தார். அதனடிப்படையில் மாநில கட்சி நிர்வாகத்தில் கூட்டணி என்று வருகிறபோது , சண்முகத்திற்கு விளையாட பல அலகுகளை அது உருவாக்கிக் கொடுக்கும் .அனைத்தும் சூத்திரம் போன்றது அதற்கு வலுவாக எதிரிடையான உபசம்ஹாரம் சொல்லியாக வேண்டும் . அதற்கானவரல்லர் மரைகார்

அவருடன் ஒப்பிடுகையில் சண்முகம் "கட்சிக்காரர்" என்கிற சிறப்புமணி அவர் கிரீடத்தில் எப்போதும் உள்ளது. தில்லி மற்றும் புதுவை கட்சிகாரர்கள் இடையே அவர்சொல் நிற்கும் அளவிற்கு மரைக்கார் சொல் நிற்காது. மேலதிகமாக திமுக தலைமை மரைகார் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்ததால் . அவர்களின் எதிர்வினை காத்திரமாணது . அவர் இருதலைக்கொள்ளி எறும்பானார்.


மரைக்காருக்கு இந்த சமயத்தில் "வாராது வாய்த்த மாமணி " கண்ணன். அவரின் வன்முறையின் அளவு நிச்சயம் சண்முகத்தை தினறடிக்கும் . அவர் எங்காவது சறுக்குவார் . அதுவே தனக்கான இடம் என காத்திருப்பதைத் தவிர அவருக்கும் பிறிதொரு வழியில்லை. கண்ணன் நிலையிழிந்தால் , அவரை கடந்து தன் இடம் நோக்கி நகர்வதற்கு மரைகாருக்கு தடையென ஏதுமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்