https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 10 மே, 2017

அடையாளமாதல் - 59 : 1980 முன்பின்னாக ஓர் அலசல்

ஶ்ரீ:





அடையாளமாதல் - 59
1980 முன்பின்னாக ஓர் அலசல் 
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 32
அரசியல் களம் - 17



புதுவை காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியேறியது அதிக இடத்தில் திமுக வென்று ராமசந்திரன் முதல்வரானார் . மந்திரிசபையில் இடம்பெறமுடியாதபடி மரைகார் சபாநயகரானார் . வலுவான நிலையில் சண்முகம் இருந்ததால் கண்ணனுக்கு சீட் கிடைக்காமல் பார்த்துக்கொண்டார் . சண்முகத்தின் தரப்பில் பலர் மத்திரிகளாக்கப்பட்டனர் . ரேனுகா அப்பாத்துரை . கதிர்வேல் , காலரைக்கால் சவரிராஜன் போன்றவர்கள்  கல்வி, உள்துறை முதலான பலமிக்க பொறுப்புகளில் அமரவைக்கப்பட்டனர்.

பொதுவாக ஆட்சியில் யார் அமர்ந்தாலும் அவர்களுக்கு சண்முகத்தின் அரசியல் பாணி மீது இயல்பாக மிக விரைவில்  கசப்பெழுந்துவிடும் . காரணம் ஆட்சியை பற்றிய குறைகளை கூறுமிடமாக அவரது அலுவலகம் மற்றும் வீடு மையம் கொள்ளும்  . எந்த குறைக்கும் அவர் செவிக்கூட்டி கூர்வது வழமை. இது ஆட்சியாளர்களுக்கு எப்போதும் கசப்பை விளைவிப்பது

சண்முகத்தின் இந்த வழிமுறை ஆளும்தரப்பை எப்போதும் பதட்டத்தில் வைப்பது . பல ஆண்டுகளாக அவர் நிகழ்த்தி ,வளர்த்து , வைத்திருந்த பூதம் பலரை விழுங்கியது. கடைசியாக அவரையும் அதற்கான விலையாக பெற்று அவரது அரசியலை முடித்து வைத்தது , என்பதுதான்  இன்னும் வினோதம்.

சண்முகம் கட்சி மற்றும் வீட்டு அலுவலகங்களில் கட்சி முக்கியஸ்தர்கள் குவிந்து கிடப்பர் . தனி பேசுமிடம் என ஒன்றிருக்காது . எவரும் எவர் பக்கத்திலும் அமரலாம் . கட்சிகாரர்கள் குறை சொல்லும் படலம் துவங்கிவிடும் . சில சமயம் அமைச்சர்களின் முன்னிலையிலேயே கூட நிழந்து விடுவதுண்டு . அனைத்திற்கும் சண்முகத்தின் சொல்                " என்னையா இது " என்பதாக இருக்கும் . அமைச்சர்களை நெளியவிடுவதுடன் , பின் அவர்கள் சண்முகம் கூப்பிட்டாலொழிய இந்தப் பக்கம் தலைகாட்டமாட்டார்கள்.யாரால்தான் முடியும்.

எளிய கட்சிக்காரர்கள் சண்முகம் மத்தியில் அமைச்சர்களை நோக்கி எழும் கேள்விகள் , "கேட்கப்பட்டது " என்கிற வரையில் சென்றதும் , கேட்டவர் திருப்தியுறுவார் . சில விஷயங்களில் உறுதியான நடவடிக்கைகளுக்கும் அது இடமேற்படுத்திவிடும்.


மரைகார்  1967 காங்கிரசின் ஆட்சியில் சிலகாலம் முதலவராக இருந்து பின் , கட்சியிலிருந்து வெளியேறி திமுக வில் இணைந்தார் . சில காலம் கவர்னர் ஆட்சி நடைபெற்றது. நெருநாட்களுக்கு பின் காங்கிரசல்லாது அரசு ஏறக்குறைய தன் முழு ஆயுளுடன் வாழ்ந்தது 1969 முதல் 1974 வரையில் . அதன் பின்னே  காங்கிரசில் மீண்டுமொருமுறை இணைந்தார் . 1974 முதல் 1980வரை அரசியல் ஸ்திரதண்மையில்லாததால் இரண்டு முறை அதிமுக ஆட்சியில் ராமாசாமி தலைமையில் சொற்ப காலம் இருந்தது. ஒரு முறை இருபத்தி இரணடு நாட்கள், மற்றொருமுறை ஒரு வருடம் நான்கு மாதம். இடைப்பட்டதாக உள்ள காலத்தில் கவர்னர் ஆட்சி நீடித்தது .இந்த அரசியல் வெற்றிடம் 1980 வரையும் அதற்கு பிறகும் சிலகாலம் ,அதாவது 1991 வரைகூட சில காலம் நீடித்தது.காங்கிரசைத் தவிர்த்து மரைகாரால் மட்டுமே 1969ல் நான்கு வருடங்களுக்கு மேல் ஆட்சியில் நீடிக்க முடிந்தது. இந்த காலகட்டத்தில் காங்கிரசல்லாத அரசுகள் பலமுறை கவிழ்ந்தது . அதன் பின்னனியில் சண்முகம் இருந்தார. அக்காலத்தில் ஒரு சொல் உண்டு , "சண்முகம் வீட்டில் நடுநிசியில விலக்கெரிந்தால் அளும் அரசு கவிழும்" என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்