https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 18 மே, 2017

அடையாளமாதல் - 75 * பிறழ்ந்த கணக்கு *

ஶ்ரீ:





அடையாளமாதல் - 75
*  பிறழ்ந்த கணக்கு  *
இயக்க பின்புலம் -2 
அரசியல் களம் - 22




சுப்பராயனின் தங்கை பாலனுக்கு மணமுடிக்கப்பட்டது சுப்பராயனின் சிறந்த அரசுசூழதலாக பச்சைமுத்து சந்தேகிக்க துவங்கியதும்அவர் சிறிது சிறிதாக விலகினார்  , அந்த கல்யாணத்திற்குப் பின் சுப்பராயனின் கையோங்குவது தவிற்கவியலாது என பச்சைமுத்து உணரத்தொடங்கினார். இதற்கு அரசியலில் பதில் சொல்லிமாளாது . பச்சைமுத்து நினைத்தது ஒருவகையில் சரியானதும் கூட. நான் பாலன் - சுப்பராயன்  இருவருக்குமான பாலமாக பலமுறை இருந்துள்ளேன் . சுப்பராயனின் பேச்சை மீறுவதில் மிகுந்ததுமான உளநிலையை எய்துவதை பார்த்திருக்கிறேன்.அதை ஆராயமுற்பட்டதில்லை .

பலமுறை பாலன் மனவெதும்பி என்னிடம் சில விஷயங்களை கூறுவதுண்டு . அது அவரின் ஒருவித மனப்புழுக்கத்தின் வெளிப்பாடாக பார்த்திருக்கிறேன்  . அதை எனக்கான ஒரு தகவலாக கருதுவதில்லை . அது அவர்களின் குடும்ப ஊழல், அதில் எனக்கென ஒரு பங்குமில்லை

நான் முனைந்து சரி செய்ய வேண்டிய தருணங்களும் ஏற்பட்டதுண்டு . அதை நான்தான் சரிசெய்தேன் என்கிற சுவடு தெரியாமல் செய்து விலகிவிடுவேன் . நமக்கு மிக வேண்டியவர்களாக கருதப்படுபவர்களின் தேவைகளை அவர்கள் சொல்லி செய்வது நட்பல்ல. நான் அவர்கள் இருவரிடமும் கொண்டிருந்தது நல்ல நட்பு மட்டுமே. அதற்கு எதிர்பார்ப்பென்று ஏதுமில்லை.

பாலன் மனைவி சுப்பராயன் சொல்வதை அப்படியே எடுத்துக்கொண்டிருக்கலாம் . ஒவ்வொரு அரசியல் விஷயத்தையும் வீட்டிலுள்ளவர்களுக்கு புரியவைப்பது போல ஒரு வதை பிறிதொன்றில்லை . அந்த வட்டத்திற்குள்  சுப்பராயன் மிகத்திறமையாக தன் ஆளுகைக்கு அனைவரையும் கொண்டுவந்திருக்கலாம். அது அவர்களின் களம் . அது பற்றியெல்லாம் நான் நோண்டிக்கொண்டிருந்ததில்லை. அது என் சுபாவமல்ல

என்னைப் பொருத்தவரை சுப்பராயன் எனக்கு சரியாக, அனுக்கமாக இருந்தார் . அதற்கு நான் பாலனிடம் நேர்மையாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அங்குள்ள எல்லோருக்கும் அவரவர்கள்  எதிர்காலத்தை குறித்து ஒரு கணக்கிருந்தது , எனக்கது இல்லை . அதை ஒரு களியாட்டு போலே அனுகினேன் . அதில் பாலனின் வெற்றித்தவிர எனக்கு வேறு எண்ணமிருந்ததில்லை

நமக்கு மேல் ஒருவர் எனமுடிவு செய்து செயலாற்றும் போது முதலில் அடங்கவேண்டியது நம் ஆணவம் . பாலன் என்னை பற்றிய பார்வையை மாற்றியது சுப்பராயன் . அது ஒரு நிகழ்வில் நிதர்சணமாக வெளிப்பட்டது.

எந்த நிகழ்விற்கு சென்றாலும் பாலன் தன்னுடைய காலணியை தொலைப்பது வழமை . அது ஏன் அவருக்கு மட்டும் அவ்விதம் நிகழ்கிறது எனப் புரிந்ததில்லை. ஒருமுறை அவரை அழைத்துக் கொண்டு ஒரு கோவிலுக்கு சென்று திரும்புகையில் வழமைபோல வெளிய விட்டிருந்த அவரது காலணி திருடுபோயிருந்தது . அபசகுனமாக கருதி மிகவும் வியாகூலமடைந்தார். எனக்கு அவரை பார்க்க வருத்தமாக இருந்தது . அவரை வீட்டில்விட்டு, புது காலணி வாங்கிக் கொடுத்தேன் , மிகவும் சந்தோஷப்பட்டார். எனக்கும் அப்படிதான் இருந்தது.

ஆனால் சில மணிநேரம் கழித்து அந்த நிகழ்வை சுட்டி பாலனை வறுத்தெடுத்திருந்தார் சுப்பராயன் யார் அவரிடம் அதைப்போட்டுக்கொடுத்தது என தெரியவில்லை . பாலனை சுற்றிய வளையம்போல சுப்பராயனின் ஆட்கள் இருகிறார்களா என்று கூட நான் நினைத்ததுண்டு .





 "யாரிடம் எது மாதிரியான வேளைகளை வாங்கவேண்டுமென இன்னும் தெரிந்து கொள்ளாதவனுக்கு அரசியல் லாயக்கில்லை" என்று கத்திக்கொண்டேபாலனின் வீட்டிலிருந்து  வெளியே வந்து , என்னிடமே அது பற்றி கூறி நான் அது மாதிரி செய்திருக்ககேடாது என வருத்தப்பட்டார் . எனக்கு அது அவர் சொல்லி வருந்துகிற அளவில் ஒரு நிகழ்வாக நான் பார்க்கவில்லை என்று சொன்னேன் .

அந்தக்கட்டத்தில் சுப்பராயன் சொன்னது எனக்கு பலத்திறப்புகளை கொடுத்தது . இளைஞர் காங்கிரசின் தொண்டர்கள் மத்தியில் எனக்கு மிகுந்த செல்வாக்கிருபதாகவும் . இது மாதியாக அவர் என்னை வேளைவாங்குவது அவர்மேல் சீற்றமாக வெளிப்படும் என்றார்

பாலனுக்கு எதிர்காலமில்லை என்கிற கட்டத்திற்கு வந்துவிட்டதாகவும் , என்னைபோன்ற ஒருவன் பாலனுக்கு நெருக்கமாக இருப்பது , அவரது தலைமையின் மீது உயத்தியிருப்பதைப் பற்றியும் . கூடிய விரைவில் தான் ஒருமுடிவு எடுக்கவிருப்பதாகவும் , நான் அவர்சொல்லை மறுதலிக்க கூடாது எனவும் கூறினார் . எனக்கொன்றும் அப்போது புரியவில்லை . ஆனால் நான் எவ்விதம் நடத்தப்படவேண்டும் என சிலர் விரும்புகிறார்கள் என்கிற செய்தி எனக்கு அப்போது நிறைவை தந்தது


ஆனால் அது எதைநோக்கிய பயணமென்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்