https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 3 மே, 2017

பிரிந்தவர் கூடின் பேசவும் வேண்டும்

ஶ்ரீ:


பிரிந்தவர் கூடின் பேசவும் வேண்டும்ஆயிரமாவது ஆண்டு கடந்தது போனது .நான் எதிர்ப்பார்த்தைப் போல என்னை தவிர்த்தே அது கடக்கும் என கணித்திருந்தேன் . வழமைப்போல நான் எதிர்பார்தது நடவாது , என்னையும் உடன் வைத்ததுடன் இனிதாக, எளியதாகவே நகர்ந்தது . காலை 11:30 மணிக்கே திரும்பிவிட்டேன் . முதலில் எப்போதும் என்னுள் எழும் முரண்பாடு எழுந்து வழத்தைப்போல என்னை அங்கிருந்து வெளியேற்றப் பார்த்தது , அது ஏறக்குறைய வெற்றியடைந்திருக்கும்.ஏதோ ஒன்று என்னை திரும்பவும் அங்கே அமர்த்தியது . ராமாநுஜநூற்றந்தாதி சேவித்துவிட்டு கிளம்பலாம் என அமைதியடைந்தேன். நன்றாகவே முடிந்தது

வந்ததும் சில பதிவுகளை வளையேற்றினேன் . என்தளத்திற்கான வருகையாளர்கள் வழக்கமாக 100 இருந்து 125 பேர் . என்ன ஆயிற்று எனத்தெரியவல்லை வருகையாளர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கானபோது சற்று கிலியானேன் . கொஞ்ச காலம் பதிவிடுவதை நிறுத்தலாம் என்று மனைவிடம் சொன்னபோது . செய்வது இது ஒன்றுதான் உருப்படி அதையேன் என்னத்துக்கு நிறுத்த சொல்லியபடி சென்றாள்.

மாலை விஜி ஏற்பாடு குணா வந்தாள் . எந்த தயக்கமும் இன்றி என்னால் சொல்லொற்றுமை கொண்ட உரையாடலை நிகழ்த்த இயன்றது. உணர்சியலைகள் உச்சத்தில் சில சமயங்களில் அசைவிழந்து சலனமற்று போவதுண்டு. அன்று அப்படித்தான்.

பல்லாயிரம் முறை என்னால் என்னுள் நான் அறியதே நிகழ்த்தி பார்த்தது . தடையற வெளிவந்தது . நட்பு. அது மலர்வது போல் பிறிதொன்று வளர்வதில்லை . உறவிற்கும் நட்பிற்கும் ஒரு வித்தியாசமுண்டு , நம்புகை நட்பில் பிரதானமெனில் , ஐயம் எப்போதும் ஆட்கொள்வதற்கு ஏற்ற கலம் உறவு

தவிற்க இயலாமை நட்பில் புரிந்து கொள்ளக்கூடியது . உறவில் அது பரிபவபடுத்தியதாகவே உள்மனம் கொந்தளிப்பது. ஏன் அது . தன்னகங்காரம் , அல்லது தாழ்வுணர்வு , அதில் பிறர் குற்றம் கண்டடைந்து அதில்நின்று வெளியேறத் துடிப்புடன் பதில் செய்யக் காத்திருப்பது எனில் உடைவுற காத்திருப்பது ஒருகாலத்தும் வளர்த்துக்கொள்ள இயலாதது . எனில் உறவை கறுக்குவதை விட நட்பென பெருக்குவது நன்று.

சொல்லென்னிப் பேசுதலை செயலில் புகுத்துவதை போல் வதை பிறிதொன்றில்லை , ஆனால் அதனை செயல்படுத்துவதை காட்டிலும் வழியும் பிறிதொன்னில்லை

நான் பல்லாயிரம் முறை சிந்தையில் நிகழ்த்தியதை செயல்வடிவென்ற திட்டம் இதுவரை ஒன்றில்லை. காரணம் விழ்வியல் நிகழ்வுகள் ஒன்றைப்போல் ஒன்று நிகழ்வதெனத் தோன்றும் , ஆனால் அது மாயமயக்கு

"சிறு சிறகுத்துளி பருப்பொருள் வடிவை உதறி ஒளியாக மாறும் முதல்படியிலிருந்தது. அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் தொட்டு அசைத்தது காற்று. அல்லது ஒவ்வொரு பீலிக்கும் தனிக்காற்றா? காற்றென்பது ஒரு பெரும் படையெழுச்சியா? அவ்வசைவுகளினூடாக உயிர்கொண்டதுபோல சிறகுப்பிசிறு எண்ணியது". என்கிறது வெண்முரசு . இது அதனின்று நுண்ணியது. எனவே சிந்தனையை பெருக்கிக்கொண்டே செல்வதை காட்டிலும் சிந்திக்கும் முறையை ஏற்படுத்திக்கொள்ளும் வழிமுறையே சிறந்ததென நினைக்கிறேன்.

இதில் இப்படி இயங்குவது என்கிற முன்முடிவைப் போல நமக்கான கல்லறையை  கட்டிக்கொள்வதைக் காட்டிலும். எப்படி இயங்குவதென சூழல் முடிவுசெய்ய சிந்தனையின் விடுதலை சரி என நினைக்கிறேன் . எனெனில் என்னை என்னில் குறுக்கி ஒன்றென காட்டுவது என்வரையில் உகந்தது

ஏன் எதற்காக என நிறைய இத்தகைய பலநூறு வினாக்களின் தொகையை சுமையெனக்கொண்டே ஒவ்வொருவரும் வாழ்க்கையை முடிக்கிறார்கள்.


நிழல் என. வழிகாட்டும் நிழல். அந்நிழலை நான் தொடர்கிறேன். அதன் அசைவுகளை நிகழ்த்துகிறேன். அப்படியென்றால் நான்தான் நிழலா? நிழலுக்கு வண்ணமும் வடிவமும் எண்ணமும் இருப்பும் உண்டா?” உண்டு அது தான் நான்

விஜி பேசினாள் , அவள் சொன்னதில் சொல்லாதது எனக்கு புரிந்தது . அவளுக்கும் அவ்விதமே .எதைத் தொடுகிறோம் எனத் தெரிந்தே இது நடந்திருப்பதால் . அவள் பெறவேண்டிய பெறுமதியைப் பெற்றபின் இனி பெறப் போவதில் உள்ள சிடுக்குகள அறிந்திருப்பதை காட்டிலும் தெளிவு பிறிதொன்றில்லை .
நன்றி வெண்முரசு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

மறைக்க இயலாத காதல்

மறைக்க இயலாத காதல் பெண்களின் கண்களில் இருந்து காதலர்கள் தப்பிப்பதல்லை . என் மனைவி என்னிடம் கேட்டார் “ அது தான் அஜி திருமணம் செ...