https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 23 மே, 2017

அடையாளமாதல் - 78 * முனைந்த அனர்த்தம் *

ஶ்ரீ:










அடையாளமாதல் - 78
*  முனைந்த அனர்த்தம்  *
இயக்க பின்புலம் - 5
அரசியல் களம் - 23




இருபத்தைந்தாண்டுகளுக்கு மேலாகியிருந்தது சண்முகம் சட்டமன்றத்திற்கான தேர்தலில் பங்கு பெற்று . இந்த முறை அவர் காசுக்கடை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானதும் பலருக்கு ஆச்சர்யமாகவும் , சிலருக்கு அதிர்ச்சியாகயும் இருந்தது . பலர் பல அரசியல் கணக்குகளை சொன்னார்கள் . திறமையான முடிவு , இல்லை இல்லை பைத்தியகர்த்தனமானது என்றனர்  .அது கண்ணனுக்கு மிகுந்த செல்வாக்குள்ள தொகுதி . அதை  தொடர்ந்து தக்கவைப்பதற்கு  அவருக்கு தோதாக வார்தெடுத்திருந்தார் . அவரளவில் அது ஒரு நல்தேர்வு . பிறர் அங்கு நிற்க முயலுவது தற்கொலைக்கு சமானமானது.

காசுக்கடை  நகரத்தின் மையப்பகுதி , பாரம்பரியமான  குடும்பங்களும் , செல்வந்தர்களும் , குவிந்திருந்தனர். புதுவையில் ஜாதி பேரால்தான் தெருக்கள் அமைந்திருந்தன, ஏறக்குறைய இன்றும் அந்தந்த ஜாதியினர் அந்தந்த வீதிகளில் வாழ்கிறார்கள் . நகர் புறத்தில் கோமுட்டி செட்டியார்கள் , முதலியார்கள்  மற்றும் மேலடுக்கு ஜாதியினர் நிறைந்துள்ளனர் . அனைவருக்கும் ஷராப்பு மற்றும் தங்கநகை வியாபாரம் முக்கிய தொழில் . புதுவையிலுள்ள அனைவரையும் ஓரளவிற்கு பழக்கமுள்ளவர்கள். தேர்தலில் இவர்கள் ஓட்டுப்போடுவது மிக குறைவு என்றாலும் . எதிர்மறையாக திரும்பினால் சரிசெய்வது முடியாது. புதுவையின் அனைத்து தொகுதிகளிலும் இது போன்ற தனித்தன்மையுடைய சில காரணிகள் இருக்கின்றது. நிஜமான அரசியல் சக்தி படைத்தவர்களைத் தவிர அங்கு வெற்றிபெறுவது எளிதல்ல . 

கடற்கரை ஒட்டி அமைந்துள்ள புற நகர் பகுதிகள் அடித்தட்டு மக்கள் வாழ்கிறார்கள்  , அவர்களின் மனத்தை வெல்வது அவ்வளவு எளிதல்ல , சரியான தொடற்புருத்தல் முறையும் , அவர்களுடனான இயைந்த வாழ்க்கை முறையை கைகொண்டவர் தவிற அவர்களுள் நுழையமுடியாது , என்கிற போது அவைகளை வெற்றி கொள்வதை பற்றி நினைத்துப் பார்க்கமுடியாது . இளைஞர் காங்கிரசில் இருந்தே அந்த தொகுதி கண்ணனின் கட்டுப்பாட்டிலிருந்தது . பொதுவாக அது கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கத்தில் இருந்தது. பல வித அரசியல் காரணங்களைக்கொண்டு அதை காங்கிரசிற்கு மடைமாற்றியவர் கண்ணன் . இருந்தும் எதிர்மறையான அரசியல் உள்நீரோட்டம் போல எப்போதும் இருந்துவந்தது . பல தொடர் கொலைகளுக்கான களம் அங்கு உருவாகிவந்தது . சண்முகம் அந்த தொகுதியை தேர்ந்தெடுத்த காரணம் எனக்கு இன்றும் புரியவில்லை .

கண்ணன் அந்த தொகுதியிலிருந்து இரண்டு முறை தேர்தெடுக்கப்பட்டபோதும் , மிகச்சரியாக அவர்களுடன் திட்டமிட்டு நல்ல நட்ப்பை வளர்த்துக்கொண்டார் , நகர் புறத்தை இரண்டவது முறை வெற்றி பெற மிக கடுமையாக பணியாற்றிய போதும் , தலை தப்பியது ஆச்சரியம் . அப்போதைய சூழ்நிலையில் கண்ணனுக்கே வெற்றி நிச்சயமில்லை என்கிற நிலைமையில் , புறநகர் பகுதிகள்தான் அவருக்கு கைகொடுத்தன .சண்முகம் அந்த தொகுதியை தேர்தெடுத்தது வேணடாத  வேலை என்றே இப்போதும் நினைக்கிறேன் .

முதலில் இருந்தே கண்ணனுக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படாமலேயே காரியங்கள் நிகழலாயின . இந்தமுறை காலப்பட்டு  தொகுதி மரைக்காருக்கு பதிலாக அவரது உறவினர்கள் போட்டியிடப் போவதாக செய்திகள் உலவத் தொடங்கின . கண்ணனுக்கு வேறு எந்த தொகுதியும் ஒதுக்கப்படாததால்  இறுதியாக  மரைக்கார்  அவரது காலாப்பட்டு தொகுதி தாரைவார்த்தார்  .  மரைக்கார் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியது 

கண்ணன் மறுபடியும் மரைக்கார் சார்பு நிலையே எடுத்தார்,இந்தமுறை அவரளவில் அது சரியாணமுடிவும் கூட . அவர்களுக்குள் எந்த மாதிரியான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கும் என கணிக்க பெரிய அரசியால் ஞானமெல்லாம் தேவையில்லை . மரைக்கார் மாநில அரசியலை தன் கையில் வைத்திருக்க சண்முகம் முதல்வராகக்கூடாது . அதை கண்ணனால் செய்ய இயலுமாயின் , அதனால் ஏற்படும் வெற்றிடத்தை கண்ணன் தன்னைக் கொண்டு நிரப்பிக்கொள்ளலாம் . 

கண்ணனின் சிக்கல்,வெற்றிபெறும் சட்டமன்ற உறுப்பினர்களை தன பின்னல் அணிதிரள வைக்கமுடியவில்லை , அதற்கான படிமம் தணக்கில்லை என்பதை புரிந்திருந்தாலும் , ஏற்று கொள்ள அவரது கசப்பும் ஆணவம் தயாராக இயலவில்லை. அதனால் யாருடன் சகஜமாக பேசினாலும் பழகினாலும் ஒரு தேளின் கொடுக்கு போல சில சயங்களில் அது அவரை மீறி வெளிவந்துவிடுகிறது . அதை மற்றவர்கள் பார்த்தும் விடுவதால் கண்ணனைப்பற்றிய அச்சம் யாருக்கும் விலகவேயில்லை . ஆனால் இந்தமுறை அந்த கவலை இல்லை . தன் பின்னல் சட்டமன்ற உறுப்பினர்களை அணிதிரள வைக்கவேண்டிய பொறுப்பு மறைக்காரை சேர்த்து 

அதே சமயம் அவருடைய ஆணவத்தை பற்றிய கவலை இல்லாதவர்கள் அவருக்குள்ள  வெகுஜன ஆகர்ஷணம் , மற்ற துறை அமைச்சர்களால் அவருக்கு முன் சோபிக்கா இயலுமா என்கிற கவலை ஆட்டிப்படைத்தது . அரசியலில் வெற்றி பெற பலவித அரசியலில் ஈடுப்படவேண்டியுள்ளது . ஒன்று; கட்சிக்குள் தன்னுடைய இடத்திற்கு , இரண்டு ; தொகுதியில் செல்வாக்கு பெற , அதில் கட்சி பேதமில்லாது அனைவையும் அரவணைக்க . மூன்று; கட்சியில் சீட்டு பெற , நான்கு ; தொகுதியில் வெற்றிபெற .ஐந்து ; அமைச்சர் பதவி பெற . ஆறு ; பெற்ற பதவியில் சிறப்பாக செயல்பட . ஏழு ; முதல்வர் பதவிக்கு போட்டிக்கு நுழைவது . எட்டு ; முதல்வரானபின் வேறுயாரும் தன்னை கவிழ்க்காதிருக்க . இப்படி எட்டு வித அரசியல்

பாலனுக்கு சீட்டு கிடைத்தபின் பொருளாதார உதவிக்காக கண்ணனை சந்திக்கலாம் என்று சுப்பாராயன் சொன்ன போது அது சரியாக வரும் எனத்தோன்றவில்லை . கண்ணனுடைய இன்றைய சிக்கலுக்கு ஒருவகையில் பாலனும் காரணம் . என்னை கூப்பிடவேண்டிய அவசிமுல்லாததால் , முதலில் எனக்கு தயக்கமாக இருந்தாலும் . அவர்களுடன் சென்று கண்ணனை பார்ப்பதை தவிர எனக்கும் வேறுவழில்லை . 

சுப்பாராயனின் கணக்கு , பாலன் வெற்றிபெற்றால்  கண்ணன் முதல்வராவதற்கு உதவுவார் . என்பது சூசனம் . கண்ணனை சந்தித்தபோது இதை ஒரு பகடியாக பார்த்தார் என்பது அவர் பேசியதில் இருந்து புரிந்தது . கட்சியில் கீழிருந்து மேலேவருபவனுக்கு இங்கு அப்படி ஒன்றும் மரியாதையை இல்லை என்பதைத் தன் அனுபவத்திலிருந்து புரிந்துகொண்டிருக்கிறார் . அந்தக்கசப்புகள் அவரின் பல அரசியல் திடீர் முடிவுகளுக்கும் அதை ஒட்டி  பெரும் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமான  காரணமாகியது .
அந்த இடத்தில் பாலன் செய்வதற்கொன்றுமில்லை என்பது கண்கூடு . மேலதிகமாக , பாலன் மரைக்கார் அணியை சேர்த்தவர் , அவர் என்ன சொல்லகிறாரோ அதை செய்யபோகிறார் . எனவே தனிப்பட்டு அவரிடத்தே பேச ஒன்றில்லை என்றும்  நினைத்திருக்கலாம் . 


அவர் அப்படி நினைக்கும் பட்சத்தில் அதுதான் சரியானதும்கூட . அவர்கள் பேசப்போகிற அரசியல் எனக்கு உடன்பாடில்லை . நான் உள்ளே செல்லவில்லை , வெளி ஹாலில் அமர்ந்தபடி என் பக்கத்தில் கண்ணனை பார்க்க வந்து இடைப்பட்ட நேரத்தில் தூங்கிவழிந்து கொண்டிருந்த  மற்றொரு அதிமுக வேட்பாளரை பார்த்தபடி இருந்தேன் . கண்ணன் தனக்கான காயை நகர்த்த தொடங்கிவிட்டார் , சொந்த கட்சியிலிருந்து மட்டுமல்ல மாற்றுக் கட்சியினரிடமும்  நல்ல தொடர்பிலிருக்கிறார் என புரிந்தது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...