https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 1 மே, 2017

அடையாளமாதல் - 50 ரணகளம் -1

ஶ்ரீ:

அடையாளமாதல் - 50
ரணகளம் -1
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 23
அரசியல் களம் - 16



அந்த காரின் உள்ளேயிருந்து தயங்கி இறங்கிய அந்தப் பெரியவரை முதலில் பார்த்தேன் . அது வெங்கட்ராமன் . நான் அவரை செய்தித்தாள்களில் பார்த்திருக்கிறேன் . ஆனால் நேரில் வேறு மாதிரி இருப்பதாக தோன்றியது . அனைவரையும் பார்த்து சிரித்தபடி கைகூப்பியதும் . சலசலப்பை மீறி யாரோ வாழ்க கோஷம் எழுப்ப பின் என்ன சொல்கிறார்கள் என புரியது அனைத்தும் இனைந்த கார்வையாகியது

அந்தக் காரின் ஓட்டுனர் பரப்புடன் இறங்கி வலது பக்க பின் கதவை திறக்க அதிலிருந்த இறங்கிய ஜிப்பா குர்தா அணிந்த அந்த சிவந்த வடநாட்டுகாரர் யார் என்று தெரியவில்லை. மொத்தக்கூட்டமும் காரை சூழ்ந்து கொள்ள ஒருவரை ஒருவர் தள்ளியபடி அவரை பார்ப்பதற்கு முண்டியடித்தனர்.
அந்தக் காருக்கு பின்னால் அதனுடன்  வந்த நிறைய கார்கள் வரிசையாக நின்றிருந்தன

அதிலிருந்தும் சிலர் இறங்கி இந்தக் காரை நோக்கி ஓடிவந்தனர் . அவர்களுக்கு மத்தியில் பரூக் மரைக்காரையும் கண்ணையும் பார்த்தேன் . இவர்கள் இங்கு அல்லவா நின்று கொண்டிருந்தனர் .எப்படி இந்தக் காருக்கு பின்னால் வர முடிந்தது .

நான் வெங்கட்ராமனைச் சுற்றி நிகழ்வதில் கவனம் கொள்ளத் தொடங்கினேன் . காரை சுற்றி நின்ற கூட்டத்தில் சண்முகமும் நின்று கொண்டிருந்தார். பாக்கத்திலிருந்தவரிடிம்  கைநீட்டி ஏதோ கேட்டார் . ஆளாளுக்கு கையில் மாலை சால்வையுடன் கூட்டத்தில் நீந்தி கொண்டிருந்தனர் .சிலர் கூட்டத்தை விலக்கி தலைவர்கள் முன்னேறி வர வழி ஏற்படுத்த முயன்றனர், ஒருவரை ஒருவர் தள்ள . மேலும் சிலர் அவர்களை நோக்கிப்பாய . ஒரே குழப்பம் . அனைவரும் யாருக்கோ கட்டளையிட்டுக்கொண்டே இருந்தனர் .அதை  கேட்கத்தான் யாருமில்லை . எல்லோரும் ஒருவித பரவச  நிலையில் இருந்தனர்.

பின்னால் வந்த கண்ணனுக்கு காரின் வலப்புறம் வழியாக யாரோ பாதை ஏற்படுத்த அவர் வெங்கட்ராமனை மிக நொருங்கி வந்து விட்டார் . வெங்கட்ராமன் சுற்றி நின்றிருந்த சிலரை விலக்குவதற்காக பிடித்திழுத்தனர் . அவர் கோபமாக கையை தட்டிவிட்டு இழுத்தவனை திரும்பிபார்த்து ஏதோ கத்தினார் . கண்ணன் அவர்முன்னே வர பவ்யமாக வழிவிட்டு விலகிவிடுவார்  என்கிற காட்சியை நான் எதிர்பார்க்க .அவர் கண்ணனை பார்க்காதவர் போல் முகம் திருப்பி வேறுயாரோ ஒருவரை நோக்கி கூவினார் . எனக்கு அதிர்ச்சியாக இருந்தது . ஏனெனில் அன்றைய அரசியல் சூழலில் அவர் ஒரு தவிற்க இயலா சக்தியாக உறுவெடுத்திருந்தார். மிக வசீகரிக்கும் தலைவரும் கூட

கண்ணனுக்கு பின்னால் இருந்த அவரது ஆதரவாளர் கண்ணனுக்கு முன்பாக வழிவிட மறுத்தவரை திரும்ப பிடித்திழுக்க . அவர் வேகமாக திருப்பி அவரை பிடித்து தள்ளினார் . எனக்கு என்ன நடக்கிறது எனப் புரியவில்லை . அதன் பிறகு அங்கு நிகழ்ந்தது வார்த்தைகளுக்கு அப்பார்பட்டது. அவ்வளவையும் எழுத்தில் கொண்டுவருவது எனக்கு சாத்தியமில்லாதது .

நாலாப்பக்கத்திலிருந்தும் பெரும் கூச்சலுடன் மையப்பகுதியை நோக்கி பலர் ஒரே சமயத்தில் பாய்ந்தனர். ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளுவதும் கீழேவிழுவதுமாக தொடங்கியுடன் நீண்ட போலீஸ் விசில் சப்தம் கேட்டது. காவல்துறை உள்ளே பாய்வார்கள் என எதிர்ப்பார்க்க . வயிற்றில் இனம்புரிய சூடு பரவி வாயில் புளிப்பாக ஏதோ உணர்ந்தேன் .பயத்தில் அப்படி ஆகும் என பிற்பாடு தெரிந்தது.

நான் அப்போது பயத்தில் உச்சத்தில் இருந்தேன் . என்ன இது என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது . ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் ஒன்றும் புரியவில்லை . கூர்ந்து பார்ததில் அனைவர் கையில் வைத்திருந்த கொடிகள் அனைத்தும் திருப்பி பிடிக்கப்பட்டு ஆயுதம் போல நாலுபக்கமும் சுழன்று கொண்டிருந்தது .


யார்யாரை தாக்குகிறார்கள் , யார் அடிபடுகிறார்கள் யார் பார்வையாளர்கள் என்கிற பாரபட்சமில்லாது எல்லோரும் எல்லோரையும் அடி பிண்ணியெடுத்துக் கொண்டிருந்தனர் . யுத்தகளமென்பார்களே அது இது போலிருக்கும்.அனைவரும் கிடைக்கும் எல்லாவழிகளினாலும் அலறி தெறித்து ஓடிக்கொண்டிருக்க , வெள்ளை சட்டையெல்லாம் ரத்த விளறாக இருந்தது . அதன்பின் காட்சி மாற பலர் வரவேற்பு நிகழ இருந்த இடத்திலிருந்து வெளியேறி பிய்த்துக்கொண்டு  ஓடுவதையும் அவர்களை பலர் கொலைவெறியுடன் துரத்தி அடித்து வெளுத்தபடி ஓடினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்