https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 28 மே, 2017

அடையாளமாதல் - 83 *காலத்தை பொருத்திப் புரிதலின் விபரீதம்*

ஶ்ரீ:

அடையாளமாதல் - 83
காலத்தை பொருத்திப் புரிதலின் விபரீதம் *
இயக்க பின்புலம் - 10
அரசியல் களம் - 25


பாலன் கிளம்பி சென்ற பிறகு , நடந்தவைகளையும் பாலன் பேசியதையும் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன் . பாலன் அவ்வளவு நிஜமாக அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தாரா . நான்தான் சரியாக புரிந்துகொள்ளவில்லையா . மனு தாக்கல் அன்றே தோல்வியையே பற்றி பேசியது மிக வருத்தமாக இருந்தது . நான் வருத்தப்பட வேண்டும் என்றே அப்படி  சொன்னாரா . பின்னல் என்னை தொடர்ந்து வந்த சுப்பாராயன் என்னிடம் கிளம்பலாம் என்றார் . நான் சுயநினைவு திரும்ப அவருடன் என்னுடைய கார் நிறுத்தியிருந்த இடத்தை அடைந்தேன்.எங்கள் முன்னாலும் பின்னாலும் பல்வேறு கட்சியின் தொண்டர்கள் கத்திக்கதறியபடி இருந்தனர் அவர்களை மிகப் பொறுமையாக கடந்து வெளியேறினோம்.

அதுவரை சுப்பையனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை . காரில் ஏறிய பிறகு . நான் தான் பேசினேன் , என் வருத்ததையும் , பாலன் என்னிடம் சொன்னதையும் அவரிடம் கூறினேன் . அதற்கு அவர் சற்று நேரம் ஒன்றும் பேசாது இருந்தார்  , ஒரு அடைப்பு குறிக்குள் மௌனம் பருப்பொருள் போல, கிழிக்க முடியாததை போல் இருந்தது . சுப்பாராயன் என்னிடம் நீ பாலன் காரில் போயிருக்க வேண்டும் என்றார் . இருக்கும் சூழலில் பொருந்தாது எதையோ உளறுவது போல தோன்றியது . என்னால் யோசிக்கவே முடியவில்லை .இவர் என்ன சொல்ல வருகிறார் என புரியாது அவரை ஏறிட்டதற்கு . சிரித்தபடி" ரொம்ப அப்செட்டாகிவிட்டான் போல " என்றார் .  நிலைமை மெதுவாக மாறிக்கொண்டேவந்தது . 

நான் சகஜநிலைக்கு திரும்பி "ஏன் நான் அவருடன் காரில் சென்றிருக்க வேண்டும் என சொன்னீர்கள்" என்றதற்கு , "அநேகமாக பாலன் மரைக்காரை பார்க்க செல்லுவார் நீ கூட இருந்தால் நன்றாக இருந்திருக்கும்  " என்றார் . எனக்கு அவர்." வேட்புமனு தாக்கல் செய்த பிறகு மரைக்காரை மட்டுமல்ல சண்முகத்தையும் பார்க்கவேண்டும்" என்றேன் . அவர் புரியாது "ஏன்" என்றார் . நான் நேற்று இரவு பாலனிடம் சொல்லியதை சொன்னேன் . அதற்கு சுப்பாராயன் என்னை வினோதமாக பார்த்து "உனக்கு ஏன் அப்படி தோன்றியது" என்றார் . நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை . பிறகு அவர்" பாலன் என்ன சொன்னார் "எனக்கேட்டார் . பாலன் சொன்ன அரசியல் கணக்குகளை அவரிடம் சொன்னேன் . சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு . என்னிடம் டீ சாப்பிடலாமா என்கிறார் எனக்கும் அது தேவையாய் இருந்தது மேலும் அவர் என்னவோ சொல்ல விரும்புகிறார் . அதை காரில் டிரைவர் வைத்துக்கொண்டு சொல்ல விருப்பவில்லை என புரிந்துகொண்டேன் 

அவர்கள் மரைக்காரை சந்திக்கும் போது நான் ஏன் அங்கு இருக்கவேண்டும் என யோசித்த படி , வழியில் ஒரு டீ கடையை பார்த்ததும் வண்டியை நிறுத்தச்சொன்னேன் . டீ சொல்லிவிட்டி சுப்பாராயன் பேசுவதற்கு காத்திருந்தேன் . சுப்பாராயன் நேரடியாக விஷயத்திற்கு வந்தார் , எனக்கு ஏன் அப்படி தோன்றியது என்று கேட்டுவிட்டு . தனக்கும் அப்படி ஒரு எண்ணமிருப்பதாக சொன்னார். அனேகமாக நான் பாலனிடம் பேசிவிட்டு கிளம்பிய பிறகு பாலன் சுபராயனிடம் பேசியிருக்கவேண்டும், என்று நினைத்துக்கொண்டேன் . நான் நினைத்தது போல நடக்கும் வாய்ப்புகள்தான் அதிகம் என்றார்

வைத்திலிங்கம் முதல்வரானால் அடுத்து என்ன என்பதுதான் கேள்வி . சண்முகம் எதிர்காலம் கேவிக்குறியாகும் . இது பலவித அரசியல் அனர்த்தத்திற்கு வழி வகுக்கும் என்றெல்லாம் ,அவரது அரசியல் கோணத்தை பேசியபடி இருந்தார் . நான் எரிச்சலுடன் அவரிடம் "என்ன நடக்கலாம் என்பதுதான் என் யூகம் . விதி  அது தன் சமன்பாடுகளை எப்படி கொண்டுபோகும் என்று யார் பதற இயலும் நீங்கள் பேசுவது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா " என்றேன் .

சரி நீயே சொல்லு என்னவெல்லாம் நிகழக்கூடுமென என்றார். வைத்திலிங்கதிற்கு கை கொடுத்துவிட்டு திரும்பும் போது எனக்கு தோன்றியதை சொன்னேன் . இப்படி ஒரு கோணத்தை நான் யோசனைக்கே எடுக்காத போதும் , இது என் தலைக்கு வெளியே துருத்திநின்றது . அதை உங்களிடம் சொன்னேன் , அவ்வளவுதான்  நாளை அது போல ஒன்று நிகழ்ந்தால் , இதுபற்றி நான் முன்பே யோசித்திருந்தேன் என்றால் , எப்படி சரியாக வரும் , இனி அவ்வாறு நடந்தால் இதோ உங்களுக்களிடமும், பாலனிடமும் , நான் இது பற்றி பேசியிருக்கிறேன் . என்னை பொருத்தவரை இது அதைத்தாண்டி எனக்கு ஒன்மில்லை . சரி கிளம்பலாம் என்று முதலியார்பேட்டைக்கு வந்து சேர்ந்தபோது , பாலன் எங்களிருவரையும் வீட்டிற்கு வரச்சொல்லி இப்போதுதான் புறப்பட்டார் என்கிற தகவல் கிடைத்தது . அதற்குள்ளாகவா மரைக்காரை சந்தித்து விட்டார் , ஆச்சர்யமாக இருந்தது. இருவரும் பாலனை சந்திக்க சென்றோம் .

தொகுதி முக்கியஸ்தர்களுடன் பேசிக்கொண்டிருந்தவர் , என்னை பார்த்து தலையணைத்தார் . அது ஒரு சமிக்ஞை நான் அவரிடம் ஒன்றும் பேசாமல் அவர்வீட்டிற்குள் சென்றுவிட்டோம் . சிறிது நேரத்தில் பாலன் உள்ளே வந்ததும் வராததுமாக என்னிடம் , இந்த தகவல் யார் கொடுத்தது என்றார் . நான் சற்று காட்டமாக "நேற்றிலிருந்து இது எனக்கு தோன்றியது என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு , சற்று எரிச்சலுடன் அவர் வீட்டிலிருந்து வெளியேறினேன் . பாலன் என்னை ஏதோ சமாதானப்படுத்தும் வார்த்தைகளை சொல்லிக்கொண்டே இருப்பது என் முதுகில் கேட்டது . நான் காரிலேரி வீடு திருப்பினேன் .

இரவு பத்துமணிக்கு மேல் சுப்பராயன் என்னை போனில் கூப்பட்டார் . அவர் என்னுடன் போனில் பேசுவது அபூர்வம் . ஆர்வத்துடன் நான் "என்ன " என்றதும் " பாலனிடம் மரைக்கார் நீ சொன்னது போலே ஏதோ ஒரு கணக்கை சொல்லியிருக்கிறார் , அதன் தொடர்ச்சியாகத்தான் உன்னிடமிருந்து வேறு ஏதாவது தகவல் கிடைக்கலாம் என பாலன் நினைக்கிறார் . உனக்கு திடீரென தோன்றியது என்பதை நம்ப மறுக்கிறார்கள் . உனக்கு தகவல் சொன்னவரை காப்பாற்றும் முயற்ச்சியாக பார்கிறார்" என தான் நினைப்பதாக கூறினார் . அதுபற்றி மீண்டும் பேச விரும்பாததால் . நான் "பாலன் அப்படி நினைப்பது ஆச்சர்யமில்லை அது எனக்கே புரிகிறது " என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன்.

இது போன்ற ஒரு அனுபவத்தை பிற்காலத்தில் நான் பல முறை சந்தித்துள்ளேன் . ஒருவகையில் சொல்லப்போனால் , என் வாழ்கையின் பல முக்கிய தருணங்களில் என்னுடைய பெரிய முடிவுகள் பெரும்பாலும் இந்தகைய ஒரு உணர்வின் உந்துதலின் அடிப்படையிலேயே அமைந்தன . இன்று பல வருடங்கள் கழித்து அந்த முடிவுகளை திரும்பப் பார்க்கையில் , அவை மிகச்சிறந்த முடிவுகளாக இருந்திருக்கின்றன. நான் அப்போது அவற்றை மிகச் சரியாக எடுத்ததாகவே எப்பொதும் உணர்ந்திருக்கிறேன்.

இப்போது நினைத்தாலும் உடலே நாவாகி கசந்தது போல , கசப்பை மனமாக கொண்ட ஒரு பூவை முகர்வது போல .ஒரு வித இறப்பின் நொடிகளைப் போல வலிமிகுந்தவைகளாக அப்போது இருந்திருக்கின்றன . உடலில் ஆழப்பாய்ந்த இரு எதிர்முனை கூர்கொண்ட முள்ளை பிடித்திழுப்பது போல, குத்திநின்றிருப்பதை விடவும்  நீக்க முயற்ச்சிப்பது, வேதனையை பெறுக்குவது .

அன்று நான் உறங்க நெடுநேரமானது . நான் நிகழ்த்தாத அந்த சிந்தனைப் புரிதல் தொடங்கிய இடமடைய அதை நோக்கி என்னை தள்ளக்கொண்டேயிருந்தேன். என்னால் அந்த கணத்தை அடையவே இயலவில்லை , மேலும் சோர்ந்து போனதைத்தவிர . அப்போதெல்லாம் நான் எனக்கான அறையில் படுப்பதில்லை . வீட்டின் தளம் , அப்பா நவீன சிந்தனையில் அவற்றை என்ன காரணத்தினாலோ பத்தடி உயரமாக அமைத்திருந்தார் . அதனால் கோடையில் எனது அறை மிக காட்டமாக இருக்கும் . வீதியை ஒட்டி இருந்தமையால் எல்லா சமயமும் ஏதாவதொரு சப்தம் கேட்டபடி  இருக்கும்

நான் ஹாலில் தரையில் படுப்பது வழமை , கோரைப்பாய் தலையனை சகிதமாக ஒருவித ஏகாந்த நிலை . அனேகமாக படுத்தவுடன் தூங்கிவிடுவேன். அன்று ஹாலை விட்டு வெளியே, பால்கனியில் இரவு முழுவதும் உட்கார்ந்திருந்தேன் . அன்று முழு இரவும்  தூங்கவில்லை . என்ன முயற்சித்தும் என்னால் அந்த எண்ணம் எழுந்த இடத்தை கண்ணடையமுடிவில்லை . 


அதிகாலை 4:30 மணிக்கு மேல் என்னையறியாமல் தூங்கியிருக்க வேண்டும் . ஏதோ வண்டி சபதம் கேட்டு எழுந்தேன் . விடியற்காலை நல்லக்குளிர் கண்கள் எரிந்தபடி இருந்தது நான் ஒரு முடிவிற்கு வந்தேன் .அதுவரை விளையாட்டு போல இருந்த அரசியலை பின் தொடர நினைதேன்  . இப்போதைக்கு எனக்கு தோன்றிய அந்த புரிதல்நிஜம் . ஆனால் அது எப்படையெல்லாம் உருமாறி  அந்த இடத்தை அடைகிறது என்பதை , ஒவ்வொரு கணமும் அறிந்துகொள்ள முடிவ செய்த்தேன் . அது எனக்கு விரிக்கப்பட்ட வலை என்பதை அப்போது அறியவில்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

மறைக்க இயலாத காதல்

மறைக்க இயலாத காதல் பெண்களின் கண்களில் இருந்து காதலர்கள் தப்பிப்பதல்லை . என் மனைவி என்னிடம் கேட்டார் “ அது தான் அஜி திருமணம் செ...