https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 31 மே, 2017

நாறாச்சடலம்

ஶ்ரீ:






நாறாச்சடலம் 





"கோருவன அனைத்தையும் அளிக்கும் தெய்வம் அது
ஆனால் முழுமுதல் தெய்வம் அல்ல
பெருவெளியின் வெறுமையை நிறைத்துள்ளது 
சொல்லப்படாத சொல்
அச்சொல்லில் ஒரு துளியை அள்ளி 
பொருளும் உயிருமாக்கி அளிக்கின்றனர் 
பிரம்மனும் விண்ணோனும் சிவனும் அன்னையும்

கலியால் அவ்வண்ணம் சொல்லள்ள இயலாது
இங்குள்ள ஒன்றை எடுத்து உருமாற்றி 
நமக்களிக்கவே இயலும்
துலாவின் மறுதட்டிலும் 
நம்முடையதே வைக்கப்படும் "

என்கிறது வெண்முரசின் " நீர்கோலம் "
நான் விண்ணளந்தானை தானே
தொழுது நின்றேன்
அவனிடமே கெஞ்சுவது 
இழுக்கென இருப்பவன் ,
பிறிதொருவர் கருணை கொள்கிறாரா?

பசியென்றேன் 
என்னுடலிலிருந்து அறுத்து கொடுத்து 
உண் என்கிறது
இங்கிருந்து உருமாற்றி கொடுக்கிறதே 
அது என்னை கலியிடம் விட்டதா.

"பெருந்தெய்வங்கள் அருந்தவம் பொலிந்த பின்னரே 
கனிபவை
அத்துடன் நம் ஊழும் 
அங்கு வந்து கூர்கொண்டிருக்கவேண்டும்"
ப்ரபத்திக்கும்   பொருந்தும்  போலும்  இது .

பருபொளின் மீது நிழலென தெரிந்து
அதிலிருந்து புடைத்தெழுந்து 
முற்றிலுமாக தன்னை 
அதிலிருந்தை உருவி எடுத்து 
உருக்கொண்டு நிற்கும் 
தன்மையை போல
அனைத்திலும் நான் நான் 
என்றவன்

இன்று நான் அமைதியாய் 
என்னைச் சுற்றி பரபரப்புடன் 
எனக்கு உதவுகிறவர்களை பார்த்தபடி இருக்கிறேன்
இதுவும்கூட  இறப்பின் தருணமே.
அசைவற்றிருக்கிறேன்
உதிர்ந்து சிதறுகிறேன் 
நாறாச் சடலமென .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்