https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 11 மே, 2017

ஶ்ரீ:


அடையாளமாதல் - 61
*எதிர்மறை ஆளுமைகள்  - 1
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 34
அரசியல் களம் - 18




சண்முகத்திடமிருந்தும் கண்ணனிடமிருந்தும் நான் கற்றுக்கொள்ளக்கூடிய அரசியில் எப்போதும் இருப்பதை இப்போதும் உணர்கிறேன். முன்னவரும் , பின்னவரும் செய்கூடுவதற்கும் , செய்திருக்க கூடாமை என முன்னனவர் சிலவற்றை விட்டுச்சென்றார் . பின்னவர் அதை தொடர்ந்தபடி இருக்கிறார். இதில் வினோதமானதாக ஒன்று இனி அவர் ஆற்றக்கூடியதெல்லாம் ஆற்றக்கூடாமையே.

சண்முகம் பற்றிய பதிவுகள் எத்தனை எழுதப்போகிறேன் எனத் தெரியவில்லை ஆனால் அவற்றில் பாதியாவது இவருக்கும் அதில் இடமுண்டு. நிகழரசியலில் இன்று இருவரையும் நினைத்துப் பார்க்கையில் இன்னும் சிலவற்றை ஆற்றியிருக்காலம் எனத்தோன்றுகிறது . ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம் சண்முகம் அற்றியதற்கு ஈடில்லை கண்ணன் ஆற்றியது. எக்காலத்தும் இரண்டும் நிகர்நிலை ஆளுமையல்ல. சண்முகத்திற்கு ஈடு ஒருவர் புதுவை அரசியலில் இருந்ததும் இல்லை இருக்கப்போவதுமில்லை.

  1. இது ஒரு திறானாய்வு கட்டுரைப் போல எழுத நினைப்பது பல நிகழ்வுகள் ஊடுபாவக ஒன்றோடுறொன்று பிண்ணிய படி உள்ள ஊழின் ஆடல் . என்னை எங்கு கொண்டு நிறுத்தியது என்தைப் பற்றி சொல்லவந்தது.

  1. இந்தப்பதிவு இதில் பேசப்படுகிற பல விஷயங்கள் முக்கிய தலைவர்களின் நேரடி பதிவு , மற்றும் அதைச் சுற்றி நிகழ்ந்ததை நான் தொகுத்தது. அவற்றை நேர்மையாக சொல்ல முயல்கிறேன் .

  1. இந்தப் பதிவு கண்ணனின் அரசியல் முடிவுகள் ரங்கசாமியை பதவியில் அமரவைத்தது என்பதற்கான தொடகப்புள்ளியாக 1980 நிகழ்வை கருதுகிறேன்.

  1. ரங்கசாமியின் கைக்கு வந்த மக்களின் எழுச்சி  ஏன் நீர்த்துப்போனது .

  1. அதை ஏன் ரங்கசாமி கிடைத்தை வீணடித்தார் . என்பது மிக வேதனையான நிகழ்வு.

  1. இதை இப்படி எடுத்துச் செல்வதற்கு காரணம் என் அடையமாதலின் எல்லை அடையாளமழிதலே. நான் என்னையும் முற்றாக இழந்தாலொழிய இன்று நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்க முடியாது . அதன் உச்சத்தை நோக்கி நகர்வதை பற்றி மற்றொரு பதிவில் தொடங்கியிருக்கிறேன். இரண்டையும் ஏக காலத்தில் சொன்னால் செறிவாக இருக்கும் எனக் கருதுவதால்

கண்ணன் . அவர் ஒரு வசீகரமான தலைவர் . அவரைசுற்றி ஒரு மின்காந்தமிருப்பது போல எப்போதும் ஏதோ ஒன்று அதிர்ந்தபடி இருக்கும். அவர் பார்வைபட்டவர்கள் பரவச சிரிப்பும் , கைப்பட்டவர் கூனிக்குறுகியும், அனைக்கப்ட்டவர் சாபவிமோசன விடுதலையிலும் , சிலர் வளர்ப்பு பிராணிப் போல உரசியபடியும் என கட்டுண்டு கிடப்பார்கள் . ஒருவரை பேர் சொல்லி அழைக்கும் அவரது முறை பலரை அவர் பிண்ணால் அணித்திரள வைத்த ஒரு நல்ல நகர்வு.

வாழ்வியலில் முன்னகர விழையும் ஒரு சமூகம் தங்களுக்கான ஒரு தளத்தையும் அதை கண்டடையும் ஒருதலைவனையும் எப்போதும் தேடியபடி இருந்திருக்கிறது . வெகு அபூர்வமாக சேராதன சேர்வதுண்டு . புதுவை அரசியலில் அது ஒரு முறை நிகழ்ந்தது

நிச்சயமாக அது கண்ணன்

ஆனால் அந்த மாபெரும் விசையின் எழுச்சியை வெற்றியாக  அடைந்தது ரங்கசாமி என்பது வினோதம் . யாரும் மறுக்கமுடியாதது கனவிலும் நினையாத வெற்றி. அது போல் பிறிதொருவருக்கு, பிறிதொரு முறை நடக்க வாய்பேயில்லை என்பது மட்டுமல்ல அவருக்கே அதை மறுமுறை நிகழ்த்த இயலாது . ஒரு கால் அதற்காக நாராயணசாமி பெரும் முயற்சி எடுக்கலாம் என்பது மற்றொரு நகைமுரண்.

ரங்கசாமிக்கு நிகழ்ந்தது .அது மாபெரும் மக்கள் எதிர்பார்பினால் நடந்தது . அது யாருடைய நிலமோ , எவரோ பயிரிட்டது . ஆனால் அதிர்ஷ்டமாசமாக ரங்கசாமி

அறுவடையை செய்தார் . அது தற்செயலாக நிகழ்ந்தது. அதன் பிண்ணனியை அறியாது , எதிர்பார்த்ததை நிகழ்த்தாது கண்மூடித்தனமாக எதை எதையோ கற்பனை செய்து. கையில்  கிடைத்ததை கோட்டைவிட்டதுடன். மறுபடி மனிதக்கணக்கிற்கு எட்டாத ஒரு புது கோணத்ததில் நகரத்தொடங்கியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்