https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 9 மே, 2017

அடையாளமாதல் - 55 குறுங்குழு அரசியல் - 3

ஶ்ரீ:





அடையாளமாதல் - 55
குறுங்குழு அரசியல் - 3
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 28
அரசியல் களம் - 16





இயற்கையாகவே அரசியில் இல்லாத  இடம் என்ற ஒன்றில்லை . மாற்றங்களின் வழியாக தன்னை நிறுவியபடியே அது வளர்ந்திருக்கிறது . அமைப்பு ரீதியாக கட்சி நிர்வாகத்துள் நுழைந்தால் அங்கிருந்து தேர்தலரசியலில் பங்கு பெறுவதை யாராலும் தடுக்க இயலாது

மரைக்காருக்கு கட்சி நிர்வாகத்தில் நுழைவது ஒரு பெரிய விஷயமல்ல , ஆனால் அதில் அவருக்கு விருப்பமில்லை. அது தேவையற்று எளியவர்களுக்கு முன் மண்டியிட்டு பதில் சொல்லிறுக்கும் பதவி. அதற்கான வழிமுறைகள் ஆயாசமளிப்பவை . பொறுமையும் நிதானமும் தேவைப்படுவை . கட்சியைக் கட்டி மேய்ப்பதென்பது யானைகட்டி தீனியிடுவது . ஜனநாயகப்போக்கில் நம்பிக்கையுள்ளவர் செய்வது , ஆனால் அது எதுவரை ஒருவரை இட்டுச்செல்லும் என்பற்கு அவரின் சூழியல் நிலையழிதலின் தாங்கு திறன் பொருத்தது.

சண்முகத்தால் பதவிபெற்றதினாலேயே அவருக்கு எதிராக திரும்புபவர்களுக்கு மரைக்கார் ஒரு பாலைவனச்சோலை . அவர்கள் பதவியில் இருக்கும்வரை அங்கு தங்கி இளைப்பாற இயலும் அவரகளின் பணி சண்முகத்தை திட்டித் தீர்ப்பது ஆனால் அவர் அரசியலில் ஒருவரை வளர்த்து தெடுத்தார் என்பது எனக்குத் தெரிந்தவரை இல்லை.

கண்ணன் தலைமைத்துவம் அரசியல் பார்வையுள்ளது அடுத்த தலைமுறைக்கானது . காத்திருப்பது அதன் முதல் கடமை. அவர் நிலையழிந்து இந்தத் தாக்குதலுக்கு உடண்பட்டதால் அவரது கனவுகள் கலைந்து போனது . கட்சியரசியலில் உள்ள பதவிகள் சோர்வை ஏற்படுத்துபவை ஆனால் வளிமைமிக்கவை. ஆட்சியின் போக்கை நிர்ணயிப்பவை . அதைவிட மிக சொற்ப இடங்களுக்கேயான போட்டி நிறைந்தது தேர்தலரசியல் . அதில் மரைகாருக்கு கடுமையான சாவாலாக வளர்ந்திருக்க  கூடிய வளமான வாய்பிருந்தும், கண்ணனின் அமைப்பு கடைசீவரை மோதல் போக்கைமட்டுமே கையில் வைத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது . போராடியே ஓய்ந்தும் போனது

இது மரைக்காரின் சாமர்த்தியமாக பார்க்கப்படுகிறது. கண்ணன் தோற்றது இங்குதான்.பல முறை காங்கிரஸ் மாநில தலைவர் சண்முகத்தை மாற்ற 1980 அந்த கணம் முதல் 2001 வரையில் முயற்சிகள் மரைக்கார் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது . அவரால் அதில் கடைசீவரை வெற்றிபெற இயலவில்லை  . சண்முகம் தன் தவறினால் நாராயணசாமியிடம் அதை இழந்தார்.

கண்ணனின்  இயக்கத்திலிருந்த பலர் இன்று தனி நபர் பொருளியல் வளத்துடன் இருப்பதை, அரசியலில் அவர்கள் அடைந்த வெற்றியாக சொல்லப்படுவதுண்டு . அரசியல் வெற்றிகள் பொருளியலால் அளக்கப்படுவதில்லை . அப்படியே ஒரு வாதத்திற்கு எனினும் அது இரண்டு சதவீததுக்கும் குறைவு . அரசியலை விடுத்து ஒருவர் நுழைந்தால் அவரின் தொழில்துறை வெற்றி எழுபது சதவீதம் .


1994 ஒரு பெரிய முயற்சியாக வைத்தியலிங்கம் முதல்வராக இருந்த காலத்தில் கண்ணன் மற்றும் மரைக்கார் அணி உள்பட முயற்சித்தது ஏறக்குறைய நிஜம் போலயிருந்தது . மற்றைய தாக்குதல் எல்லாம் அவரை ஒரு பேரத்திற்கு , ஒரு உடண்பாட்டுக்கு இழுத்துவர மட்டுமே . என்பதாக எனக்கு ஆழமான சந்தேகமுண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக