https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 20 மே, 2017

அடையாளமாதல் - 76 * மாற்று வழி *

ஶ்ரீ:





அடையாளமாதல் - 76
*  மாற்று வழி  *
இயக்க பின்புலம் - 3
அரசியல் களம் - 22



பாலனுக்கு சுப்பராயன் மைத்துனரான பிறகு , ஒருகட்டத்தில் பச்சைமுத்து பாலனை முழுவதிலும் கைவிட்டு விலகி சபாபதியினுடனேயே இருந்துவிட்டார். பாலன் தன்னை பச்சைமுத்து சந்திப்பதை தவிற்க துவங்கியதும் முதலில்  வீம்பாக அவனே வரட்டும் என் இருந்துவிட்டார். அது வழமையாக அவர்களுக்குள் சகஜமாய்  நிகழ்வது .ஆனால் சில நாட்களில் புரிந்தது இந்தமுறை அப்படி நடக்கப்போவதில்லையென . தன்னிடமுள்ள நம்பிக்கை, எதிர்காலம் எல்லாவற்றையும் மறந்துவிட்டானா. இல்லை தனக்கு அரசியலில் எதிர்காலமில்லை  என கணிக்கிறானா.தனது எதிர்காலத்திற்காக சபாபதியையும் எதிர்க்க துணிந்து அவன் பேசியது , அதற்கு திறந்த மனதுடன் தான் பேசியது . அதை சபாபதியிடம் விற்கத்துணிவானா.

இந்த எண்ணம் பெருகியதும் சபாபதியின் இயல்புகளை, சகஜமாக பேச்சிற்கு, அர்த்தம் பல மடிப்புகளை கொண்டதாக தோன்றி .... பெரும் வதையிது.   பச்சைமுத்து , பாலன்  இருவரிடையே பரஸ்பரம் சந்தேகம் ஒருவரை ஒருவர் பழி தீர்த்து கொள்ள முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கி, சரி செய்யமுடியாத கசப்பாக பெறுகி வளர்ந்து விட்டது .

இருவருமே சபாபதியின் கீழ் இருந்ததால் , சாதாரண நிகழ்வுகளில் கூட அவர் பாலனை உதாசீனப்படுத்துவதாக தோன்றி , இவற்றுக்கெல்லாம் பச்சைமுத்து காரணம் என , சரி செய்ய இயலாத வன்மம் நாளும் பெருகியது . அது நிஜமா ப்ரமையா என பிறித்தறிய இயலாது பல்கிப்பரவியது . ஒரு கட்டத்தில் சபாபதியே பச்சைமுத்துவை ஊக்கப்டுத்துகிறார் என்கிற எண்ணம் உறுதிபடத் துவங்கியது .

அது ஒருவித உளவியல் பிறழ்வு . தனக்குள்தானே உரையாடிக்கொள்கிறது . அது சதா நிகழ்ந்து  கொண்டேயிருப்பது. ஆழ்மனப்படிமம் தனது தனிப்பட்ட விழைவுகளை பெருக்காதிருக்க , நட்பு ரீதியான "நெறி " என புறவயமாக தடை ஒன்றை கற்பித்து, தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கிறது . அகமோ அது விழைந்ததை நோக்காகக் கொண்டு பயணப்பட்டபடி இருக்கிறது . இதில் இரண்டிற்கும் இல்லாது தான் தனித்திருப்பதாக ஆழ்மனம் சொல்லியபடி இருக்கும். ஒரு கட்டத்தில் நம் மனம் ஒரு அனுபவமிக்க விலைமகளைப் போல தன்னிடமே தளுக்கி பொய்யுரைக்கும் , தான் உண்மையென நடிக்கும்.

ஒரு தருணத்தில் தான் நெறிசார்ந்து நிகர்நிலை பேனுவதை, பிறர் பலகீனமாக நினைக்கிறார்கள் எனத் தோன்றிய மறுகணம், அது உருவாக்கி வைத்த அனைத்து கட்டுபாடுகளையும் உடைத்து கடந்து செல்லத்துவங்கும் . அனேகமாக அதுவே பாலனுக்கு நிகழ்ந்திருக்கலாம்.

எல்லாம் கடக்கப்பட்டு , அதனால் பெற்ற வெற்றியால் தருக்கி நிமிரும் ஒரு கணம் ,ஒரு நொடி யாருக்கும் வந்தே தீரும் . அதுவரை கைக்கொண்ட அனைத்து நடிப்பும் இல்லாமலாகி . போர்வை விலகும் தருணமென்ற நிஜம்.

அது பாலனை பச்சைமுத்துவின் வடிவில் இம்சித்துக் கொண்டேயிருந்தது . அவன் பார்க்க சபாபதியின் பாதம் தொட்டு சென்னிசூடுதலா , அது இறப்பின் கணம் அல்லவா, வாழ்நாள் முழுவதிலும் முதுகின் பின்னால் கேட்டுக்கொண்டே இருக்க போகும் இளிவரல் நகைப்பு , விதிர்கச்செய்வது . சில தருணங்கள மரணத்திலும் கொடிது. இஃது அதற்கு ஒப்பு.

வண்டியில் பாலன் புதுவை நுழைந்த போது இரவு மணி 1:40 எப்படியும் முதலியார்பேட்டை போய் கொம்பாக்கம் சேர 2:00 மணியாகிவிடும் , திட்டமிட்டபடி இரவு சந்திப்பதுதான் உகந்தது .காலை அனைவரும் கூடி விடுவர் , அசந்ர்பமாகிவிடும் , வாய்பை விடக்கூடாது . ஆனால் எப்படி அர்த்தராத்திரியில் ஒருவரின் வீட்டைதட்டி எழுப்பமுடியும். பார்த்தவுடன்  கதறிடவேண்டும் , இல்லை வேண்டாம் செயற்கையாக தெரியும். இல்லை ஒன்றும் யோசிக்கவேண்டாம் , அங்கு சென்ற பிறகு என்ன தோன்றுகிறதோ அதைப் பேசவிடலாம் . இப்படி சிந்தனைக்குள் ஏதோ ஒன்று திட்டமிட்டபடி இருந்தது.

முதலியார்பேட்டையை தாண்டி கொப்பாக்கம் நுழைந்து கொண்டிருந்தனர் . மார்பின் ஒலி காதில் கேட்டது
சபாபதியின் வீடு முனையில் ஒரு சிறு பாலம் மாதிரி கழிவுநீர் செல்ல சற்று உயர்தி கட்டியிருந்தது .அதை தாண்டும் போதுதான் அதன் பக்கவாட்டு கைப்பிடி சுவரில் குளுருக்கு போர்தி அமர்ந்த பீடி புகைத்தபடியிருந்தவரை இருவரும் பார்த்தனர் .

முதலில் சுப்பராயனுக்குதான் புரிந்தது . புரிந்ததும் சொரேல மண்டையை தக்கியது, பலமிழந்தது போல  வெலவெலத்தார். ஏதோ யோசனையாக இருந்த பாலன் , என்ன என்பது போல சுப்பராயனை ஏறிட்டு பார்க்க , சுப்பராயன் " பச்சைமுத்து" என்றார்

பாலனுக்கு பின்கழுத்தில்  மின்னலை சொடுக்கியது போலிருந்தது . மின்சாரம் அதிர்ச்சியாய் முதலில் தலை அதன்பின்  முதுகையும் தாண்டி குதிகால்வரை பரவியது. அந்த ஒரு நிமிடம் அனைத்தையும் புரட்டிப்போட்டது . காதை அடைத்தது போல் , காரவையாய் ஏதோ ஒன்று.

ஊழென்பார்களே அது இதுதானா . அதுதான் அவனை அர்தராத்தரிக்கு இங்கு கொண்டு வந்து விட்டிருக்குமா . இது தற்செயாலா. எல்லாம் சகஜம் என சபாபதியை சென்று  பார்த்துவிடுவிவோமா . இவனென்ன பெரிய மயிராண்டி . இவனித்தில் எதை ஆஞ்சுகிறேன் . என்ன புடிங்கிவிட முடியுமா அவனால் . தில்லிவரை சென்றவன் இந்தத்தருணத்தை பலமுறை கனவுகளாக தாண்டியிருக்கிறேன் . இந்த சீட்டு அடுத்த விஷயம் , யாருடைய அப்பன் வீட்டு சொத்தல்ல . இனி சபாபதியுடன் தன்னால் இருக்கவியலாது . தன்னனை விட அவன் எப்படி அவருக்கு முக்கியமாக பட்டான் . பாரத்தாயா நான் யார் என்று காட்டிவாட்டேன். இது உங்கள் தப்பு . அதனால் நான் செய்தது சரியே . ஆனால் , ஏனோ கால் பிடறி படும்படி ஓடிகிறேனே .

அப்படி என்ன நிகழ்ந்துவிடும் அதையும் பார்த்துவிடுவோமே இப்படி பலவித எண்ணங்கள் , அனால் வண்டி சபாதியின் வீட்டுக்கு செல்லும் பாதையிலிருந்து தரும்பி பாலன் வீடு நோக்கி போய்க்கொண்டு இருந்தது  . பாலன் காரை திருப்ப சொன்னதற்கு சுப்பராயன் ஒன்றும் சொல்லவில்லை . நல்லவேளை வண்டியில் இருக்கிறான் . நான் எடுத்த முடிவு அவனையும் கட்டுப்படுத்தும் . இதை சொல்லி என் வாழ்நாள் முழுக்க கழுத்தில் அவனால்  கல்லை கட்டமுடியது . அதுவே பெரிய விடுதலையாக பாலன் உணர்திருக்கலாம்.


ஆணவம் அது ஒருபோதும் மனிதனை விட்டுவைக்காது , சில நேரங்களில் எடுக்கு எல்லாவற்றையும் சிறந்த முடிவாக தோன்ற வைக்கும் . அது ஊழின் ஆடல் அன்றி பிறிதொன்றில்லை . வழமையாக கருத்துக்களை வர்ஷிக்கும் சுப்பாராயன் , எனோ அமைதியாய் முன் சீட்டில் ஒரு சவம் போல உட்கார்ந்து மௌனமாய் வருகிறான் . பாலனுக்கு சிரிக்கவேண்டும் போல இருந்தது. என் மனக்கணக்கை  படிக்கிறானா . பாலன் பலவாறாக சிந்தித்தபடி இருக்க வண்டி இரவை கிழித்தபடி பாலன் வீட்டை நோக்கி போய்க்கொன்டே இருந்தது . நாளை ......... அதை விடிந்தபின் பார்க்கலாம்....சீட்டு வாங்கியாகிவிட்டது . சற்று மகிழ்ந்திரு என்றது மனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்