https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 30 டிசம்பர், 2022

அடையாளமாதல் * விரும்பாத நுழைவு *

 ஶ்ரீ:பதிவு : 655  / 845 / தேதி 30 டிசம்பர்  2022* விரும்பாத நுழைவு *


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 50 .


பின்னால் அமரலாம் என நான் சொன்னதை மறுத்து காரின் முன் சீட்டில் அமர்ந்து கொண்டார். அழைத்துக் கொண்டு புதுவை கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் ஏதோ சரியில்லை என தோன்றிஏன் காற்று நேரடியாக உள்ளே வருகிறதுஎன்றார். நான் விபத்தில் கண்ணாடி உடைந்ததை சொன்னேன். அவர் விமான பயணத்தில் முழு அளவு குளிரூட்டப்பட்டிருந்ததால் அவருக்கு அந்த மேலதிக இரவு குளிர் தாங்கவில்லைகாரை சற்று நேரம் நிறுத்தி பெட்டியை திறந்து தனது வேட்டி ஒன்றை எடுத்து தலையை சுற்றிக் காதை மறைத்து கட்டிக் கொண்டார். பயணம் தொடர்ந்தது. தலைபாகையுடன் அவரை பார்க்க வேடிக்கையாய் பொருத்தமாய் இருப்பதாக தோன்றியது . வண்டி சென்னையின் முக்கிய பகுதிகளை தாண்டுவதற்குள் என்னையும் மாறனையும் சாப்பிட இறங்கச் சொன்னார். எனக்கு நல்ல பசி. சம்பிரதாயத்தற்கு மறுத்தேன். ஆனால் உறுதியாக நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என சொல்லி ஒட்டுனரிடம் தனியாக 200 ரூபாய் கொடுத்து அவரையும் சாப்பிட சொன்னார். எனக்கு சில வாரங்களுக்கு முன் நடந்த அந்த நிகழ்வு அவரையும் நாராயணசாமியையும் இணைத்து நினைவிலாடியது


தில்யில் இருந்து புதுவைக்கு வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மோதிலால் ஓராவை அழைக்க சென்னை விமானநிலையைம் சென்று அவரை வரவேற்கும் போதுதான் தெரிந்தது உடன் நாராயணசாமியும் வருவது. பின் எங்களை எதற்கு அனுப்பினார் என்கிற கேள்வி எழாமல் இல்லை. என்னைக் கண்டதும் அவர் உள்ளே ஓடுவதை வெளியே கண்ணாடி போல தெரிந்தது.உடன் கலியனும் இறங்கினார். அவரைக் கண்டதும் நான் உஷ்ணமானேன் அவர் புதுவையின் இடைத் தரகர்களில் ஒருவர். அமைச்சர் கண்ணனின் கட்சி பொருளார் மாணிக்கசாமி அனுககர். மாணிக்கசாமி பல பெரிய நில ஊழல்களின் வழக்கில் பெயர் அடிபடுபவர். காங கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவருடன் வருகையில் அவருடன் கலியன் போன்ற வருவரை அழைத்து வருவது அரசியல் நெறிகளுக்கு எதிரானது. கண்ணன் மற்றும் மாணிக்கசாமியின் ஊழலகளை பெரிதாக இளைஞர் காங்கிரஸ் எடுத்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அந்த சூழலில் அதில் சம்பந்தப்பட்ட ஒருவருடன் தில்லியில் இருந்து வருவது நாராயணசாமியின் போக்கை என்னால் எதிர்க்காமல் இருக்க முடிநவில்லை. என்னை அவர் அங்கு எதிர் பார்ககவில்லை. முகத்தை கடுமையாக்கிக் கொண்டு என்னை வெறுமனே கடந்து சென்றார்


இரவு 9:00 மணி. விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நாராயணசாமியின் கார் சட்டென கிழக்கு கடற்கரை சாலை நோக்கி வேகமெடுத்தது. உடன் வந்திருந்த விநாயகமூர்த்திக்கு தாங்கவில்லை. என்ன அரி சாப்பிட்டாயா என கேட்க வேண்டாம் ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் விருட்டென கிளம்புவதற்கு நாம் எதிற்கு பாண்டியில் இருந்து வர வேண்டும். புலபம்பித் தள்ளினார். வண்டி போக்குவரத்து நெரிச்சலில் சிக்கி கிடைத்த சிறிது நேரத்தை பயன்படுத்தி பிஸ்கெட் மற்றும் பழங்களை வாங்கி வந்தேன். அன்று இரவு ஏகாதசி.


எனக்கு அந்த தேர்தல் மிக முக்கியமான ஒன்று. அதிகாரபூரவமற்று செயல்பட்டுக் கொண்டிருந்த இளைஞர் காங்கிரஸ் அமைப்பை வெளிப்படையாக களமிறக்க நேரம் பார்த்துக் கொண்டருந்தேன். இறுதிவரை அதற்கான வாய்ப்பு அமையவில்லை. சண்முகத்திற்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது அவருக்கு மிகப் பெரிய பின்னடைவு அரசியல் ரீதியாக தற்கொலை. கட்சித் தலைவராக அவர் எல்லா வாய்ப்புகளையும் கொண்டு முட்டி மோதிக் கொண்டிருந்தார். முதல் முறையாக அனைத்து உப அமைப்புகளும் அவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என ஏக மனதான தீர்மாணம் நிறைவேற்றியிருந்தன. சண்முகம் மிகவும் பலவீனமடைந்திருந்ததை அது வெளிப்படுத்தியது. கட்சி சார்பாக பிறருக்கு வாய்ப்பளிப்பவரை மறுத்து அவரது அரசியலில் அவரை முட்டு சந்தில் கொண்டு நிறுத்திவிட்டது. அவர் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து வெளியேறுவது மட்டுமே அன்று அவர் செய்யக்கூடுவது. கட்சி தலைவராக  அந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு சில நாட்கள் பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து பின்னர் நாங்கள் திரளாக அவரிடம் சென்று பேசி சமாதானமடைந்தது எல்லாம் பிறகு நிகழ்ந்தது


வேட்பாளராக சண்முகம் மேலிடத்தால் மறுக்கப்பட்டது எனக்குள் உஷ்ண் அலையை கிளப்பியது. அதிகாலை அவரை சென்று சந்திக்கும் வரை என்னிடம் எந்த திட்டமும் இல்லை. ஆனால் எதிர்ப்பை மிகத் தீவிரமாக பதிவு செய்ய நினைத்தேன். அவரை சந்தித்த போதும் பெரிதாக எதுவும் பேசி விரும்பவில்லை. “செத்தவரிடம் என்ன துக்க விசாரிப்புஎன்பது போல பட்டது. செய்தி அறிந்து மெல்ல எனது நண்பர்கள் கூடத் துவங்கினர். காலை பத்து மணிக்கெல்லாம் முழு அமைப்பு கூடிவிட்டது. மெல்ல தீவிர எண்ணம் வெளிப்பட , நான் மூத்த தலைவர்களுக்கு முன் கட்சி மேலிடத்திற்கு எங்கள் எதிர்ப்பை காட்ட அவர்கள் அனைவரையும் புறக்கணைக்க முடிவு செய்தேன். எங்கிருந்தோ கொண்டு வரப்பட்ட பூட்டும் சங்கிலியையும் கொணடு அவரது வீட்டி நுழைவாயில் இரும்பு கிராதிக் கதவு இழுத்து பூட்டப்பட்டது. யாரை உள்ளே விட வேண்டும் எனகிற அதகாரம் மெல்ல என் கைகளில் வந்தது. காலை 9:30 மணி அதற்குள் 600 பேருக்கு மேல் கூடிவிட்டார்கள். கூட்டம் கட்சி மேலிடத்திற்கு எதிராக கோஷமிட ஆரம்பித்ததும் சண்முகம் பதற ஆரம்பித்தார் . பல வகையில் வெளிய வர முயறசித்தவரை எனது நண்பர்கள் கடைசீவரை விட வில்லை. கம்பி கதவிற்கு உள் பக்கம் நின்று கொண்டு உரத்த குரலில் என்னை எச்சரித்தார். நாங்கள் எதுவும் கேட்பதாக இல்லை. ஒரு கூட்டம் மரைக்காயரை காட்டமாக எதிர்த்து கோஷமிட ஆரம்பித்தது. பின்னர் அது மெல்ல நாராயணசாமிக்கு எதிர்பான அலையாக மாறத் துவங்கியது. துவக்கத்தில் நான் அதை இயல்பாக எடுத்துக் கொண்டேன். பலர் கூடிய இடத்தில் ஆரம்பத்தில் அதன் மீதிருக்கும் கட்டுப்பாடு நேரம் கடக்க கடக்க மெல்ல இழந்து போவதையும் புரிந்து கொள்ளக் கூடியது. உணர்ச்சி மயமாக சிலர் அதன் தீவிரத்தை உயர்த்தும் போது அதை தடுப்பது முட்டாள்தனமானது. அது நமக்கு எதிராக திரும்பிவிடும். கொண்டாட்ட மனநிலைக்கு வந்து அதில் திளைக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டு அவிழ்ந்து போகும் மீறல் அனைவரையும் களிவெறி கொள்ளச் செய்யும். தன்னிலை மறந்தநிலை புத்திபூர்வமான எதுவும் அதன் முன் எடுபடாது. நான் அதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த நினைத்து செய்த சில முயற்சிகள் பலனளிக்கவில்லை. அந்த தீவிரத்தை நான் ஓரளவிற்கு தேவை என நினைத்தேன். உடன் இருந்த நண்பர்கள் சண்முகம் இல்லத்தில் நாராயணசாமிக்கு எதிர்பான குரல் எழுவது நடந்தாக வேண்டும்.இருவருக்குமான பிளவை சில மாதங்களுக்கு முன்பாக நாராயணசாமி வெளிப்படுத்த துவக்கி இருந்தார். நாராயணசாமி அங்கு திடீரென வந்த து மொத்த கூட்டத்தையும் வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதன் பின் அங்கு வரும்பத் தகாத நிகழ்வுகள் நிகழ்ந்தது.

வியாழன், 22 டிசம்பர், 2022

அடையாளமாதல் * காலமில்லை *

 


ஶ்ரீ:பதிவு : 654  / 844 / தேதி 22 டிசம்பர்  2022* காலமில்லை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 49 .
அதிகாலை செய்தி சூர்யநாராயணனிடம் இருந்து . அவர் அலைபேசியில் தொடர்பு கொண்டு சொன்னது 1999 தேர்தலில் சண்முகத்திற்கு சீட் மறுக்கப்பட்டு மரைக்காயர் தேர்வாகி இருப்பதாக . அது மாதிரி ஒன்றை ஊகித்திருந்தேன். சீட் விஷயமாக தில்லியில் சண்முகம் தங்கி இருந்தவரை அழைத்து வரச் சென்னை சென்றபோது நிகழ்ந்த விபத்து அப்போதே ஒரு துர்நிமித்தமாகப் பட்டது.ஜெயலலிதா கும்பகோணம், நாகப்பட்டினம் தேர்தல் பிரசாரத்தில் காரைக்கால் தாண்டி சீர்காழி செல்ல வேண்டி இருந்ததால் அவரின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சண்முகத்தை தொடர்பு கொண்டு காரைகால் பிரசாரத்திற்கு ஜெயலலிதாவுடன் வர இயலுமாக என கேட்டுக் கொண்டார். புதுவை சுற்றுப்பயண திட்டத்தை பிறதொரு தேதி வைத்துக்கொள்ளலாம் என அவருக்கு சொல்லப்பட்டது. காங்கிரஸில் அதுவரை தனது வேட்பாளர் தெரிவு செய்யப்படவில்லை. மேலும் கட்சித் தலைவராக சோனியா காந்தி புதிதாக பொறுப்பில் வந்திருந்தார். அரசியல் தலைமை பொறுப்பிற்கு புதியவர் என்பதால் தங்களை அரசியல் வித்தகர்களாக அவர் முன் திரள வேண்டுய கட்டாயம் பலருக்கு. அது வழக்கமான குழப்பத்தை நீண்ட இழுபறியாக மாற்றி இம்முறை மேலும் மேலுமென நீடித்தது. காரைக்கால் சுற்றுப் பயணத்தை தவிற்து ஜெயலலிதா தனது பயணத்தை முடித்துவிட்டு போன பிறகு மீண்டும் இன்னொரு நாள் காரைக்காலுக்கு அழைத்து வர முடியாது என்கிற சூழல். காரைக்கால் ஆறு சட்டமன்றத் தொகுதியை கொண்டது. மேலும் அது தமிழக தேர்தல் பாணி மனச் சாய்வு கொண்டது. தமிழகத்தில் அடித்த அதே அதிமுக அலை காரைக்காலிலும் வீசிக் கொண்டிருந்தது. காரைக்காலின் அதன் புதுவை சட்டமன்றத்தில் 25% பங்கை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது . புதுவையில் ஒரு சட்டமன்ற உறுப்பினரே சில சமயம் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற நிர்ணயம் செய்யும் வல்லமை கொண்டவராக இருந்து விடுவதுண்டு . வாய்ப்பை இழக்காமல் சண்முகம் வேட்பாளராக இல்லாமல் கட்சித் தலைவராக ஜெயலலிதாவுடன் பிரச்சாரப் பயணம் செல்ல முடிவெடுத்தார்.


அன்று மதியம் தில்லயில் இருந்து என்னை தொடர்பு கொண்டு தான் இரவு சென்னை விமானநிலையம் வருவதாக சொன்னார். நான் எனது காரில் அவரை அழைக்க சென்னை கிளம்பினேன். எதிர்பாராமல் கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் அருகே சாலையில் குறுக்கே வந்த சைக்கிளில் மோதி எனது கார் விபத்துக்குள்ளானது. நல்லவேலையாக சைகிளில் வந்தவருக்கு பெரிய அடி ஒன்றுமில்லை. ஆனால் கார் கண்ணாடி சிலந்தி வலைப் போல சிதறி முழுவதுமாக விரிசல் விட்டிருந்தது . தொடர்ந்து ஓட்டுவது இயலாது. அடிபட்டவருக்கு மருத்துவ உதவி மற்றும் காவல்துறையில் இருந்து விபத்து பற்றிய குறிப்பு ஆகியவற்றை பெற்றுக் கொண்டு மகாபலிபுரம் நோக்கி பயணத்தை தொடர்ந்தேன். இடையில் மூன்று மணி நேரம் கடந்துவிட்டிருந்தது. வழி முழுவதும் கண்ணாடி உடைந்த சம்பவத்தை துர்நிமித்தம் என மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. எனக்கு அந்த தேர்தலில் சண்முகத்திற்கு வாய்ப்பு கிடைக்க வேண்டியது முக்கியமானது. அதற்கு பின்னால் எனது அரசியல் திட்டங்கள் மிக விரிவானவை.

நான் என்னை ஒரு போதும் அமைப்பின் மையத்தில் வைத்துக் கொள்ளவதில்லை . மையத்தை வலுப்படுத்துவதன் வழியாக ஓர் அமைப்பை உறுதியாக நிலைநாட்டமுடியும் என்று நம்பிக்கைகள் எனக்கில்லை . அனைவரையும் இணைக்கும் வல்லமை அதன் வலுவாக இருக்கவேண்டும் என்றால் அதன் அத்தனை உறுப்புகளும் சுதந்திரமாக செயல்படுவதை அனுமதிக்க வேண்டும் என நினைத்தேன். மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை என்னால் மாற்றிருக்க முடியுமானால் தொகுதி அமைப்பற்றியும் அது செயல்பட வேண்டிய விதம் பற்றி எனது எண்ணத்தை மாற்றிக் நான் கொண்டிருக்கலாம். அப்போது அவர்களை நிர்வகிக்க மாநில தலைவர்களே எனக்கு போதுமானவர்களாக இருந்திருப்பார்கள் . அது ஒரு இடைவெளியை உருவாக்கி கொடுத்திருக்கும் . அந்த இடைவெளி அனைத்தையும் மிகச் சரியானதாக அனைவரையும் அவரவர் இடத்தில் வைத்திருக்கலாம் . மாநில அமைப்பு நிர்வாகிகளிடம் நான் தொடர்ந்து நிகழ்த்திய உரையாடல் எடுபடவேயில்லை. ஒவ்வொரு முறையும் அவர்கள் நான் பலவீனமடைந்திருப்பதாக கற்பனை செய்து கொண்டு என்னை நிராகரித்தனர்இப்போது இயந்து இணக்கமாக செயல்படாது போனால் நமக்கான எதிர்காலம் இல்லை என்கிற ஒன்றை அவர்கள் புரிந்து கொள்ள முயலவில்லை. காரணம் அரசியல் குறித்த எந்த கருத்துருவும் அவர்களிடம் இல்லை. அவர்கள் தங்கள் தலைவர்களை திருப்தி படுத்தும் எளிய தொண்டர்களாக அவர்கள் கொடுக்கும் பதவிக்காக இடத்திற்காக காத்துக் கிடந்தனர். சிலர் தங்களுக்கான இடம் உருவாகாது என தெரிந்து கொண்டு காழ்பினால் என் பாதையில் தொடர்ந்து தடைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அது அரசியலில் அங்கீகரிகப்பட்ட குறைந்தபட்ச விளையாட்டு. துரதிஷ்டவசமாக அவர்களை அந்த இடத்திற்கு கொண்டு வந்தவர்களுக்கு சில தெளிவான கணக்குகள் இருந்தன. அவர்கள் சொல்லுவதை அல்லது சொல்ல விரும்புவதை அவர்கள் சொல்லுக்கு முன்பாக செய்து முடிக்க முண்டியடித்தனர் . அதை கடந்து அரசியலை பற்றி எந்த கனவு இல்லதது அதற்கு முதன்மையான காரணமாக இருந்திருக்க வேண்டும். காலம் கடந்து கொண்டிருந்தது அவர்களிடம் மன்றாடுவதில் எந்த பயனும் இல்லை என்பது திட்டவட்டமான் போது நான் அந்த அபாயகரமான அடுத்த நகர்வை திட்டமிட்டேன். அது முற்றாக மாநில நிர்வாகிகளை நிராகரித்து தொகுதி தலைவர்களை உருவாக்கி முன்நிறுத்துவது. அதற்கு எந்த கேள்வியையும் எழுப்பாத தேர்தல் அவசரம் மிகச் சிறந்த வாய்ப்பு.

மகாபலிபுரத்தில் இந்த இரவு திறந்திருந்த ஒரு ஒர்க்‌ஷாப்பில் உடைந்த கண்ணாடியை முழுவதுமாக கழற்றிவிட்டு பயணத்தை தொடர்ந்தேன். காரின் முன் கண்ணாடி இல்லாமையால் மொத்த கடற்கரை காற்றும் வண்டிக்குள் புகுந்து பீறிட்டு வெளியேறிக் கொண்டிருந்தது. கண்ணாடி துகள் கண்களைத் தாக்கும் அச்சத்தினால் நான் கண்ணடி அணிந்து கொண்டேன். இரவு பத்து மணிக்கு சென்னை விமான நிலையத்தை அடைந்த போது மாறன் அங்கு என்னைக் காத்து நின்றிருந்தான். காரை  அதன் நிறுத்துமிடத்தில் இருக்க சொல்லிவிட்டு விமான நிலைய நுழைவுவில் நின்றிருந்த மாறனை பார்த்து கையசைத்தேன். விபத்தில் சிக்கி காரின் கண்ணாடி உடைந்த சேதியை சொல்லவில்லை. தலைவர் கேட்டால் அதை சொல்லலாம் என நினைத்தேன். அவரும் அதை துர்நிமித்தமாக அவர்கள் நினைக்கக்கூடும். எப்படியும் தெரிந்து போகும் கேட்ட பிறகு சொல்லலாம் என நினைத்தேன். பதினோறு மணிக்கு சண்முகம் வந்தார் அப்போதெல்லாம் விமான நிலையத்தின் உள்ள சென்று அழைத்து வரலாம். நான் தலைவரிடம் இரவு உணவு பற்றி கேட்டேன். விமானத்தில் சாப்பிட்டதே போதும் என்று சொல்லிவிட்டார். வழக்கம் போல முன் சீட்டில் சென்று அமர்ந்து கொண்டவரை தடுக்க மனமில்லாமல் விட்டு விட்டேன்