https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 15 டிசம்பர், 2022

மணிவிழா - 39

 



ஶ்ரீ:


மணிவிழா - 39


15.12.2022





பிறர் முனையாத புதிய முயற்சிகள் எப்போதும் என்னை உந்துகின்றன. நான் என்னை கண்டடைவது அந்த சூழல்களில். பின்னர் அது கற்றல் மற்றும் அடையாளமாக உருவாகிவிடுகிறது. நான் ஈடுபட்ட அனைத்து துறைகளிலும் அதுபோல முயன்றிருக்கிறேன். அவை பெரிய வெற்றிகளை எனக்கு கொடுத்திருக்கின்றன. முதலில் அது உருவாக்கி தரும் கௌரவமும் அதை பின் தொடரும் தருணம் கொண்டுவரும் பங்கமும் என்னை சமன்படுத்தி விடுகின்றன என்பதால் எனது வெற்றிகளை விளம்பரப்படுத்த விரும்பியதில்லை . ஒன்றில் வென்றதும் அதிலிருந்து விலகி வேறொரு தளத்திற்கு சென்று சேர்ந்து விடுவேன். அது எப்போதும் நான் திட்டமிட்டு செய்வதில்லை. மிக இயல்பாக அவை அப்படித்தான் நடந்திருக்கின்றன. வெற்றிகளும் தோல்விகளும் அவை தொடர்ந்து உருவாகும் புரிதல்கள் பெரும்பாளும் நான் தனியே உணரும் என் எண்ணங்கள் மட்டுமே . முயற்சிகளின் போது ஏற்படும் எதிர்மறைப் பலன் என்னுள் எவையும் காலத்தில் வருத்தமாக நீடித்திருப்பதில்லை. உருவாகும் அனைத்தும் ஒரு காலத்திற்கு பிறகு இல்லாமலாகின்றன. ஏன் ஒட்டு மொத்த வாழ்வில் கூட அர்த்தமின்மை உணர்ந்திருக்கிறேன் என்பதால் தருக்கிக் கொள்ள ஒன்றுமில்லை. ஒரு முயற்சி அதன் வெற்றி அப்போதைய தேவைஅதற்கு எதிராக நிற்பவர்களை கடந்து அதை அடைய முயற்சிக்கிறேன். அவர்களை வென்று என்னை நிருவிக் கொண்ட பின்னர் அதை விரோதமாக தக்க வைத்துக் கொள்வதில்லை. பிறர் என் மீது காழ்ப்பாக முனைவது குறித்து கவலை கொள்வதில்லை. வாழ்வின் ஒவ்வொரு பெரு முயற்சியின் போதும் நான் மட்டுமேயாக உணர்ந்த ஒன்று


எண்ணங்கள் எனக்கு வார்தைகளாக வெளிவருவதில் உள்ள சிக்கல் காரணமாக திட்டங்களை சொற்காளால் பிறரிடம் அளக்க என்னால் இயலுவதில்லை. என் வரையில் திட்டமென்பது ஒரு துவக்கத்தை நோக்கி நகர்வது. அது முழுமையடைவது களத்தில் நிகழும் முரணியக்கத்தால். அது உருவாக்கும் இடம் பற்றிய அவதானிப்பு இருப்பதால் அங்கு நிகழும் சிறு சிறு மாற்றங்களை உள்வாங்கி அடுத்தடுத் இடங்களை அடைந்தபடி நகர்ந்து கொண்டிருக்கும். ஆழ்மனம் உணரும் ஒன்று களத்தில் எழுந்து வருவதை பல முறை பார்த்ததினால் களம் என்னை கைவிடாது என உறுதியாக இருப்பேன்


ஆயிரமாவது ஆண்டு விழாக் குழு துவக்கம் மிக பிரமாண்டமாக உருவெடுத்திருந்தது. அதுவரை நிகழ்ந்த வைணவ சம்பிரதாய நிகழ்வுகளில் அது புதிய உச்சம். மரபு சாராத ஆன்மீக நிகழ்வுகள் பல நிகழ்ந்திருந்தாலும் மரபான அமைப்பு அதன் மொத்த விழுமியத்தில் இருந்து விலகாமல் கறாரான பார்வையை முன் வைத்த இடமாக அது இருந்தது. அதன் முதல் சிக்கல் மரபான செயல்பாடுகளில் இருந்த யாரையும் நான் தொடர்பு கொள்ளவில்லை அவர்களின் உதவியை கோரிப் பெறவில்லைவிதிவிலக்கு பெருமாள் ராமாநுஜம். அவரிடம் கூடதிறந்த அரங்கம்பற்றிய கருதுகோளை தெரிவிக்கவே அவரை சந்திக்க சென்றேன.  


துவக்க விழாவிற்கு மூன்றில் இருந்து நான்காயிரம் பேர் கலந்து கொள்ளக் கூடும் என அவதானித்திருந்தேன். விளம்பரம் மிக விரிவாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேடை சுமார் ஆயிரத்தி இருநூறு சதுரடியில் நாற்பது அடிக்கு முப்பது அடி மற்றும் உயரம் ஐந்தடி என தூக்கப்பட்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மைதான நுழைவியிலில் இருந்து யார் பார்த்தாலுத்  மேடையும் அதன் பின்னணியில் உள்ள ராமாநுஜர் முப்பதடி உயர உருவப் படமும் விழாவின் பிரமாண்டத்தை சொல்லுபவை . நகர் முழுவதும் விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. செய்தித்தாள்களில் விளம்பரம் மற்றும அதனுள் அனைவரையும் சென்று சேரும் படி அழைப்பிதழ்கள் வைக்கப்பட்டிருந்தன


துவக்க விழாவன்று மாலை வேளுக்குடி ஸ்வாமி புதுவை வருவது உறுதி செய்யப்பட்டு அவரை அழைத்து வரும் வண்டி காலையிலேயே ஶ்ரீராங்கம் சென்றுவிட்டது. மாலை புதுவை வரும் அவரை லாஸ்பேட்டையில் உள்ள செல்வகணபதி அவர்களின் வீட்டில் தங்க வைக்க ஏற்பாடாகி இருந்தது. அவரை வரவேற்க விழாக்குழுவின் முக்கியஸ்தர்களுடன் காத்திருந்தேன். மாலை நான்கு மணிக்கு அவர் புதுவை வந்தார். அவரை வரவேற்று அவருக்கு ஒருங்கி இருந்த அறைக்கு அழைத்து சென்றேன் உடன் அனைத்து நிர்வாகிகளும் வந்திருந்தனர்முதல் சிக்கலாக உருவெடுத்தது வீட்டிற்குள் வேளுக்குடி ஸ்வாமியை அங்கு அமர்ந்து கொண்டு ராம நமத்தை ஜெபித்துக் கொண்டிருந்த விழாக் குழுவின் முக்கிய உறுப்பினரான ஆடிட்டர் கணேசன் ஏதோ ஒரு வகையில் சீண்டியிருக்க வேண்டும் . என்னைக் கண்டதும் அவரது முகம் மலர்ந்திருந்தவரின் முகம் மாற்றமடைந்து.பிறர் அணிவித்த சால்வையை ஏற்றவர் நான் அவருக்கு அணிவிக்க முயன்ற போது அதை விலக்கிஎதற்காக இவ்வளவு பிரமாண்டமாக மேடை இடம் என்ன காரணம் என கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக