https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 10 டிசம்பர், 2022

அடையாளமாதல் * சில காலம் ஒளிர்பவை *

 


ஶ்ரீ:



பதிவு : 652  / 842 / தேதி 10 டிசம்பர்  2022



* சில காலம் ஒளிர்பவை  * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 47 .






1999 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி நாராயணசாமிக்கும் எனக்கும் உருவான மோதல் என் அரசியலை முற்றாக திசை திருப்பி முட்டு சந்திற்கு கொண்டு விட்டது . “வில்லங்கம்அதற்கு முதன்மை காரணம். நாராயணசாமிக்கு எதிராக மேலிடத்திற்கு புகார் அளிக்கச் தலைவர் என்னிடம் சொல்லச் சொன்னதாக வில்லங்கம் என்னிடம் கூறிய போதுஅதை தலைவர் நேரடியாக என்னிடம் சொல்ல என்ன தயக்கம் அவருக்குஎன்றேன். அரசியல் இதை போல உருவாகும் இடைவெளிகளை பயன்படுத்தி அதன் திசையை திருப்புவதை அறிந்திருக்கிறேன். வில்லங்கம் அதில் நிபுணர்.


சண்முகம் நாராயணசாமிக்கு எதிராக தனது கருத்தை வெளிப்படையாக முன்வைக்க வேண்டும் என மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கிறேன். நானே நாராயணசாமி இளைஞர் காங்கிரஸ் அமைப்பை பாண்டியனைக் கொண்டு சிதைக்கிறார் என்கிற எனது மன வருத்தத்தை அவரிடம் பகிர்ந்த போது கூட பொருத்திருக்க சொன்னார். நான் நாராயணசாமிக்கு எதிரான மனநிலை கொண்டவன் என்பதும் வாய்ப்பு கிடைத்தால் அதை வெளிப்படையாக காண்பிக்கவும் அவரை எதிர்க்கவும் நிற்கவும் எனக்குத் தயக்கமில்லை என்பதையும் அறிவார். நாராயணசாமி சண்முகம் மோதலில் முதலில் பாதிப்படைந்தவன் நான் என்கிற வருத்தம் அதற்கு காரணம். இந்த மக்களவை தேர்தலில் பர்வையாளரிடம் சண்முகம் நாராயணசாமிக்கு எதிராக என்னை புகாரளிக்க சொன்னால் அதை செய்வதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை ஆனால் அது சண்முகம் நேரடியாக என்னிடம் சொல்லக்கூடியவர். அரசியலில் இந்த இடத்திற்கு வில்லங்கத்தை அவர் ஒரு போதும் பயன்படுத்த மாட்டார். நான் வெளிப்படையாக வில்லங்கத்தை மறுதளித்தது அவரை சீற்றம் கொள்ள செய்தது. மறுநாள் அதை வேறு வகையில் தீர்த்துக் கொண்டார்.


அதை ஊழின் தருணம் என்று சொல்வதைத் தவிற அங்கு வேறு எந்த சொல்லும் அங்கு வந்து உட்காராது. தில்லியில் இருந்து  1998ல் நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு வேட்பாளரை தெரிவு செய்யும் பார்வையாளரை சென்னையில் இருந்து புதுவைக்கு அழைத்து வரும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது. காரில் வரும் அந்த 3:00 மணி நேரத் தனிமை புதுவை குறித்து அனைத்து உள்விஷயங்களையும் அவருக்கு சொல்லும் வாய்ப்பைத் தருவது. என்ன காரணத்தினாலோ நான் அமைதி இழந்திருந்தேன். இது போல மேலிட பார்வையாளர்கள் பலரை பார்த்தாகி விட்டது. ஒரு மன்றாட்டு போல ஒவ்வொரு முறையும் முன்வைக்கப்பட்டு சரி செய்து விட போவது போலவும் இனி எல்லாம் சுகம் என்கிற பரபரப்பு எனக்குள் முற்றாக அடங்கி பல காலமாகிறது. அடுத்த நாள் அவருடன் புதுவை நோக்கிய பயணம் எனக்குள் எந்த ஆர்வத்தையும் உருவாக்கவில்லை. அரசியல் முடிவுகள் எங்கோ எவராலோ என்ன காரணத்திற்காகவோ எடுக்கப் படுகிறது. அதை புரிந்து கொள்ள முடியாது என்பதால் அதன் அதீத உள் விளையாட்டால் நம்பிக்கை இழந்திருந்தேன்


முதல் நாள் இரவு சென்னையில் நான் நாராயணசாமியை சந்தித்துவிட வேண்டும் என்பதில் மாறன் தீவிரமாக இருந்தான். திடீரென நான் ஏன் அவரை சந்திக்க வேண்டும் என சொல்லுகிறன் எனத் தெரியவில்லைஒரு வகையில் அவன் சென்னையில் என்னுடன் தங்கியது இதை சொல்வதற்காக என நினைத்தேன்அதன் பின்னணி என்னவாக இருக்கக் கூடும் என இதுவரை அவதானிக்க முடியவில்லை. இங்குமங்குமாக சில விடுபட்ட தகவல்களை ஒருவாறு அன்று தொகுத்துக் கொண்டேன். சண்முகம் அறியாத நாராயணசாமியுடனான தனது நல்லுறவை அவன் உத்தேசிக்கிறான். அது விபரீதமான ஒன்று என்னாலும் அவன் அரசியல் நீதியாக இழக்க ஒன்றுமில்லை. இதன் விளைவாக சண்முகம் மாறனை புதுவையில் இருந்து வெளியேற்றினால் கூட அவன் அதுவரை பெற்ற லாபங்கள் போதுமானவை என்கிற இடத்திற்கு வந்து சேர நினைத்தான். தன் முன் திறந்து வைத்திருக்கும் அனைத்து அரசியல் கிறுக்குத்தனங்களையும்  சேரவே இயலாத சிலவற்றை பொருத்தி பலன் பெறுவது பற்றிய கற்பனையில் இருந்தான். பெருளியல் உதவி நீதியாக நாராயணசாமியிடம் ஏதாவது பேசியிருக்கலாம். அரசியலுக்கு சம்பந்தமில்லாத சிலர் தங்களுக்கான இடைவெளிகளை உருவாக்கி அதில் புகுந்து தங்களை முக்கிய இடத்திற்கு கொண்டுவந்து விடுவார்கள். நாராயணசாமி மறனை உபயோகப் படுத்திக் கொள்ளும் இடத்தில் இல்லை என்றாலும் தானகா வந்து விழும் கருவிகளை அவர் தடை செய்ய நினைக்காத து அரசியலில் புரிந்து கொள்ளக் கூடியது. நாராயணசாமி தான் புதுவையில் இல்லாத சந்தர்பங்களில் இங்கு நிகழ்பவை பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதில் எப்போதும் ஆர்வமுள்ளவர். அவரது அரசியல் தகவல்களினால் ஆனது. அதை ஒட்டி தனது கருக்களை அவர் எப்போதும் உருவாக்கிக் கொள்வார். யாருடனும் தனிப்பட்ட நட்ப வளையத்தை அது உருவாக்க விடாது என்பதால் அவர் யாருடனும் தன்னை உணர்வுபூர்வமாக இணைத்துக் கொள்வதில்லை. அதனால் யாருடன் இருந்தும் எந்த தயக்கமும் இன்றி தனது அரசியல் கணக்கின் பொருட்டு துண்டித்துக் கொள்ளவும் கூச்மில்லாமல் யாருடனும் இணைந்து கொள்ளவும் முடிவது அவரது அரசியல் வெற்றியாக அவரால் கருதப்பட்டிருக்க வேண்டும்.


நாராயணசாமியின் போக்கையும் அவரது அரசியல் தந்திரங்களை நான் மாறனுக்கு பல முறை சொல்லியிம் அவன் என்னை பொருட்படுத்தவில்லை. அவனை முட்டாள் என சொல்லமாட்டேன். அவனுடைய கணக்கில் நான் சொன்ன அனைத்தும் பொருளற்றவையாக அவன் நினைத்தான். தனது விளையாட்டில்  அவன் தரப்பு சீட்டாக என்னை அன்று இறக்க தீர்மானித்திருக்க வேண்டும். இரவு உணவிற்கு முன்பு நாராயணசாமியுடன் பேசியதை சொன்னான். தில்லியில் இருந்து நாராயணசாமி சென்னைக்கு வருவதாக சொல்லியிருந்ததையும் விமான நிலையத்தின் பக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் சந்திக்க ஏற்பாடாகியிருந்தது. அந்த விடுதியில் எங்களுக்கு இரவு உணவும் தங்கும் அறையும் ஏற்பாடாகி இருப்பதாக மாறன் சொல்லியிருந்தான். நான் அங்கு தங்குவதை விரும்பவில்லை. மேலும் என்னுடன் வந்திருக்கும் மூத்த நிர்வாகி விநாயகமூர்த்தியை உடுப்பி பவனில் தனியாக வட்டு செல்ல முடியாது. ஏன் அந்த விடுதி என நினைத்துக் கொண்டேன். அன்று இரவு அவர் அந்த விடுதியில் தங்க ஏற்பாடாகி இருக்கலாம். எனக்கும் அவரை சந்திப்பதில்  மனத்தடை இருந்தாலும் சந்திப்புகளை நான் எப்போதும் தவிற்த்ததில்லை. நிரந்தர விமான பயணத்தில் இருக்கும் அவருக்கு கால நேரம் கணக்கில்லாமல் பயணிக்கும் போது

ஒவ்வொரு முறையும் புதுவை செல்ல அங்கு தங்கிச் செல்வது வழக்கம் இருக்கலாம். அந்த விடுதியில் சந்திப்பது பிறரை பலவீனர்களாக்கும் என அறிந்திருக்கலாம். அரசியலில் சட்டென கொண்டு வைக்கப்படும் தேவையற்ற ஆடம்பர சொகுசு மற்றும் கேளிக்கை ஒருரை அடிமையாக்க வல்லது என்கிற எண்ணம் எழுந்த போது அவரை அங்கு சந்திக்க வேண்டாம் என முடிவு செய்நிருந்தேன்


இரண்டு நாட்களுக்கு முன்பு மாறன் நாராயணசாமியிடம் பேசிய போது என்னைக் குறித்தும் பேசியதாக சொன்னான். புதுவை அரசியல் பலவாறு பிரிந்து கிடப்பதை குறித்து அனுடன் பேசியிருக்கிறார் . தலைவருக்கும் அவருக்கும் இடையே உறவு சீர்கெடுக்க சிலர் தீவிரமாக முயற்சித்துக் கவண்டிருப்பதாக சொல்லியிருக்கிறார். இந்த தகவலை அவன் என்னிடம் சொன்ன பிறகு அவருடன் பேசுவது குறித்து நான் ஆர்வமிழந்தேன். நாராயணசாமி சண்முகத்திடன் மோதல் போக்கை நீண்டகாலத்திற்கு முன்பே துவங்கி இருந்தார்  அவருக்கு எதிராக யாரும் எதுவும் செய்ய முயற்சிக்கவில்லை என்பது சிறிது அரசியல் தெரிந்த யாருக்கும் புரியும் எளிய கணக்கு. மாறனை அவர் திசை திருப்புகிறார் அதற்கு மாறன் இரையாகிறான். அல்லது அவன் அவருக்கு சாதகமாக சிவற்றை நிகழ்த்த விரும்புகிறான். அதில் ஒரு முணை என்னை அவருடன் பேச வைப்பதாக இருக்கலாம். ஆனால் அன்று இரவு மாறன் நாராயணசாமியை தொடர்பு கொண்ட போது அவர் ஹைதராபாத்தில் இருந்தார் முக்கிய கட்சிப்பணி தவிற்க இயலவில்லை நாளை புதுவையில் சந்தித்து பேசிக் கொள்வோம் என்றார். அதற்குள் எனக்கு புதுவையில் இருந்த நாராயணசாமி குறித்து எதிர்மறை செய்திகள் வரத் துவங்கி இருந்தன. அன்று அவரை சந்திக்காமலானது ஊழின் கணக்கு அவை அனைத்தையும் அந்த அடுத்த நாள் மாற்றித் துவக்கி வைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்