https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 1 டிசம்பர், 2022

மணிவிழா - 36

 



ஶ்ரீ:


மணிவிழா - 36


01.12.2022



*  *







கிருஷ்ணப்பிரமி ஸ்வாமி கேட்ட ஒரு கேள்வியையும் அது கொடுத்த புரிதலையும் வைக்க நினைக்கிறேன். உலகம் பிரம்மத்தால் படைக்கப்பட்டது. அது அழிவை நோக்கி செல்வதாக நம்பப்பட்டால் பிரம்மமும் எளிய மானுடனைப் போல உலகை செய்து சிக்கலை எதிர் கொண்டு பின் திருத்திக் கொள்கிறதா? என்கிற கேள்வி எங்கிருந்து எழ முடியும். சாங்கிய தரிசனம் சொல்லும் எங்கோ ஒரு புள்ளியில் நிகழும் முக்குண சமநிலை குலைவு உருவாக்கிய இந்த பிரபஞ்சம் மீண்டும் தனது சரி நிலைக்கு திரும்புவது உலகியலில் இன்று காணும் சீரழிவின் வழியாகவா?. 


உலகியல் மாற்றங்கள் திவிர்க்க இயலாதவை. அவை நம்மால் காணமுடியாத பிறிதொரு தேவையை உலகிற்காக நிவர்த்தி செய்ய உருவாகி வருகிறது. நிச்சயமாக நேற்றைய விட நாளை நம்பிக்கை தருவதாக இருக்கிறது. என் தந்தைக்கு போதுமானதாக இருந்த நேற்றைய உலகம் இன்று எனக்கு போதுமானதாக இருக்கவில்லை. அது எனக்கான புதிய ஒன்றை நிர்வகிக்க கொடுத்திருக்கிறது. ஒரு பத்து வருட இடைவெளியில் இது நிகழ்கிறது என்றால் இன்னும் இருபத்தி ஐந்து அல்லது ஐம்பது  வருடம் கழித்து உருவாகி நிற்கும் உலகிற்கு இதுவும் போதாமலாகும். அதை உணராது நடைமுறை சிக்கலை அறியாது பல நூற்றாண்டிற்கு முந்தைய ஆச்சார அனுஷ்டானங்களே பிரபஞ்ச மார்க்கத்திற்கு உகந்தது என இன்று உபதேசித்து தனிமைபடுகிறார்கள்


தத்துவங்களுக்கு அழிவில்லை .ஆனால் ஒன்றில் இருந்து பிறிதொன்றாக அது வளரும்போது அதை அனுசரித்து அல்லது மறுத்து கையாளும் பிற சம்பிரதாயங்கள் அவற்றின் சில கூறுகளை எடுத்து அவற்றை தனக்கானதாக மாற்றி அமைத்துக் கொள்கிறது. இதில் காலம் என்கிற கருதுகோளின் முரணியிக்கம் வழியாக அது நிகழ்கிறது என்பதை மறுத்தால். நிறுவப்பட்ட தத்துவத்தின் தவறுகள் கண்டையப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது என பொருள் கொண்டுவிடும். சங்கரரின் அத்வதை சித்தாந்தத்தை மறுத்து உருவானதில்லை ராமாநுஜரின் விசிஷ்டாத்வைதம்.அது அத்வைதத்தை விசேஷித்து சொல்ல வந்தது. அவற்றை எளிமைபடுத்த அல்லது விசேஷித்து சொல்லுவதற்கு அன்றைய சமூகத்தின் மனநிலை காரணமாக இருந்திருக்க வேண்டும். அல்லது இன்றைய தேவை இது மட்டுமே என்கிற எளிமை படுத்துதலாக இருக்க்லாம்


பிற சமயத்தை மறுத்தல் வாதம் பக்தியின் மேலுள்ள நிஷ்டையை கறார் படுத்தி சொல்ல வந்தவை . பரம்பொருள் நிர்ணயக் கொள்கை சர்ச்சயாக உருவெடுத்த காலத்தில் அவை சொல்லபட்டன. இந்த காலகட்டத்தில்பிரம்ம விசாரம்நடப்பதாக தெரியவில்லை. இந்த காலகட்டத்திற்கு அதற்கான தேவை யாரோ சிலருக்கு. பிறர் தங்கள் அன்றாடங்களின் தேவைகளை ஒட்டிய எதிர்பார்ப்பும் நேர்ச்தையும் கொண்டவர்கள்


ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு துவக்கம் பற்றி பெருமாள் ராமாநுஜத்திடம் சொல்ல வந்தபோது அவர் வழமையாக வைக்கும் அதே கேள்விகளை அவரிடம் எதிர் கொண்டேன். ஆனால் எங்கோ ஒரு புள்ளியில் அவர் இப்போது முன்வைப்பவைகளில் அவரது இயல்பான அடர்த்தி குறைந்ததாக இருந்ததை அறிய முடிந்தது. வழமையான அவரது அறிவுரையும் எச்சரிக்கையும் கடந்து நான் எனது நிறைவு கேள்விக்கு வந்து நின்றேன். “பிரமாண்ட விழா என ஆயிரமாவது ஆண்டை கோவில் மண்டபத்தில் நிகழ்த்துவதில் உள்ள தடையை உங்களால் எப்படி கடக்க முடியும். வைணவ தலைமை பீடம் என சொல்லப்படுகிற ஶ்ரீரங்க முதல் பிற கோவில் நிர்வாகம் இப்போது யார் வசத்தில் உள்ளது. நீங்கள் நின்றிருக்கும் தென்கலை பீடமான வானமாமலை மடத்தின் இன்றைய நிலை என்ன. எங்கு இதை விழாவாக கொண்டாட இயலும். கோவில் என வந்தாலே அரசாங்கம் வந்து அங்கு உட்கார்ந்து கொள்ளும். அரசிற்கு இந்த விழாவை கொண்டா வேண்டிய தேவை என்ன. எல்லாவற்றிலும் மிக முக்கியமானது. வட,தெண்கலை சிக்கல். அதை முன்வைத்தால் வடகலை அமைப்புகள் இன்று பிரமாண்டமான பொருளியல் பலத்துடனும் ஆதரவுடன் விளங்குகிறது. இப்போது எதற்கு அவர்களிடம் மீளத சர்சசையை தொடர விரும்புகிறீர்.நான் அவர்களை உள்ளடக்கி குழுவை அமைக்க விரும்புகிறேன் என்றேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக